Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
எரிக் சொல்கயிம் இரகசிய பயனம் ஒன்றை சவுத் ஆபிரிக்காவிற்கு மேற்கொன்டுள்ளார். தற்போது சவுத் ஆபிரிக்காவில் தங்கி நிக்கிறார். இவரின் பயனம் மிகவும் இரகசியம் வாய்ந்ததாக தெரியவருகிறது. தற்போது சொல்கயிமுடன் கிடைத்த சில தொடர்புகளை வைத்து அவர் தற்போது சவுத் ஆபிரிக்காவில் தங்கி நிற்பது கன்டறியப்பட்டுள்ளது.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
தனது பயனத்தின் உன்மைத்தன்மையை அவர் எனக்கு வெளியிட விரும்பாதபோதும் அவரின் பயனத்தின் உண்மை காரனத்தை வெளியே தற்போது வெளியிடமுடியாத நிலை இருக்கிறது.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
கருணா குழுவினுள் கருத்து வேறுபாடுகள்
செஞ்சுடரின் வீரச்சாவைத் தொடர்ந்து தமது குழுவினுள் இருந்து விலகிச் செல்ல முற்படுபவர்கள் மீது தாக்குதல் நடாத்துவது சரியா பிழையா என்ற காரசாரமான விவாதம் கருணா அம்மான் குழுவினுள் தலையெடுத்துள்ளது.
தப்பிச் செல்பவர்கள் மீது தாக்குதல் நடாத்துவது பிழை என்ற கருத்தை முன்வைத்தவர்கள் சிலரின் தனிப்பட்ட ஆயுதங்கள் (பிஸ்டல்) களையப்பட்டதாகவும் பின்னர் மீளக் கையளிக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது.
பிரிந்து சென்ற போராளிகள் குழுக்களாக திக்குத் திக்காகத் தங்கியிருக்கின்றனர். எவரின் கட்டுப்பாட்டிலும் நிலைமைகள் இல்லாததுபோன்ற ஓர் உணர்வே பல இடங்களிலும் நேற்று மாலை தென்பட்டது.
விடுதலைப் புலிகளின் அரசியல் துறையினர் அண்மையில் விடுத்த அறிக்கையைத் தொடர்ந்து பெரும்பான்மையான போராளிகள் பிரிந்து செல்வதற்கான அறிகுறிகளே தென்படுகின்றன.
போராளிகளின் தாய் தந்தையர் முகாம்களில் தமது பிள்ளைகளைத் தேடி
ஏக்கத்துடன் சென்று வருவதையும் பரவலாகக் காணக்கூடியதாகவுள்ளது.
நேற்று வியாபார நிறுவனங்களில் கருணா அம்மானின் குழுவைச் சேர்ந்த சிலர் மிரட்டிப் பணம் சேகரிக்கும் முயற்சிகளில்
புலம் பெயர் உறவுகளிடமும் ஊடகங்களிடமும் ஒரு வேண்டுகோள்
கருணா அம்மான் மீதும் அவர்சார்ந்த கூட்டத்தினர் மீதும் நீங்கள் வெளிப்படுத்தும் கோபத்தை மட்டு அம்பாறை பிரதேசத்தின் மீதான காழ்ப்புணர்ச்சியாக மாறிவிடவோ மாற்றிவிடவோ இம்மியளவும் இடமளிக்கவேண்டாம்.
காதாற்கேட்பதும் பொய், கண்ணாற் காண்பதும் பொய், தீர விசாரித்து அறிவதே மெய்யாகும் என்பதற்கிணங்க மேலோட்டமான முடிவுகளுக்கும் உணர்வுகளுக்கும் இடமளிக்காது ஊடகங்களுக்கேயுரிய பத்திரிகைத் தர்மத்தை மறவாது செயற்படுமாறு தமிழ் அலை நிழற்பதிப்பின் ஆசிரியர் குழு அனைவரையும் வேண்டிநிற்கிறது.
இவ்வாறான வேளைகளில் தான் எரியும் தீயில் எண்ணெய் வார்த்து, போலி விசுவாசத்தை வெளியிடுபவர்கள் பற்றி அவதானமாக இருக்கவேண்டும். இவர்களின் எழுத்துக்களை உன்னிப்பாக ஆராய்ந்து வெளியிடுங்கள் வாசியுங்கள்.
எல்லா மனிதர்களும் அழுத்தங்களுக்கு ஒரே விதத்தில் முகம் கொடுப்பதில்லை.
எனவே, அழுத்தங்களுக்குள் ஊமைகளாய் இருப்பவர்களை எல்லாம் துரோகிகள் என்பதான தொனியில் முடிவுகட்டிவிடவேண்டாம்.
மட்டு அம்பாறை மக்கள் தெளிவாகவே உள்ளார்கள். தற்காலிக அழுத்தங்களினால் உண்மையின் குரல்கள் ஓங்கி ஒலிக்காவிடினும் இன்று எமது தெருக்களில் தேசியத்தைப் பறைசாற்றும் சுவரொட்டிகளும் விளக்கமளிக்கும் துண்டுப்பிரசுரங்களும் வெளியாகியுள்ளன. இதைக் கண்டு எமது மக்கள் ஆறுதலடைகிறார்கள்.
காற்றிற்கென்ன வேலி
கருணா அம்மானோடு நின்று உண்மைகளைத் திரையிட்டு மறைக்கும் போராளி நண்பர்களே உங்களுக்கு ஒரு வார்த்தை...
தமிழ் தேசியத்திற்கு எதிரான ஒரு தர்மயுத்தத்தில் உண்மையினதும் நீதியினதும் பக்கத்தில் நிற்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்குடனேயே நாம் தமிழ் அலையிலிருந்து பிரிந்து இந்த நிழற் பதிப்பை வெளியிடத் துணிந்தோம். இந்தப் பணி மிகுந்த உயிராபத்து நிறைந்தது என்றபோதும்கூட இதனை எமது தேசியத்தின் உயிர்த்துடிப்பை தக்கவைக்கும் போராட்டத்தின் ஒரு அங்கம் என்ற தெளிவில் இந்தப் பாதையை விரும்பியே ஏற்றுக் கொண்டோம்.
இந்தப் பாதையில் வரும் தடைகளையும் உயிராபத்தையும் பற்றி கவலையின்றி களப்பணி செய்யவே விரும்புகிறோம். ஏனெனில் மரணத்திலும் மகிழ்வு தரும் நீதியும் தர்மமும் எங்கள் பக்கமே உள்ளது. ஆதலால் உண்மைகளை வெளிக்கொண்டுவர எம்மோடு உடன்பாடு கொண்ட அனைவரையும் அழைக்கிறோம்.
கருணா அம்மான் முன்னெடுத்துள்ள தேசியத்திற்கு எதிரான நிலைப்பாட்டை ஆதரித்து நிற்போரே உண்மையும் தர்மமும் உங்கள் பக்கமிருந்தால் எதற்காக பத்திரிகைகளைக் கண்டு இப்படிப் பயப்படுகிறீர்கள். கொழுப்பிலிருநு;து வெளிவரும் தினக்குரல், வீரகேசரி, சுடரொளி போன்ற நடுநிலையான பத்திரிகைகளை எதற்காக தடைசெய்கின்றீர்கள். உண்மைகளைத் திரையிட்டு மறைத்து எத்தனை நாளைக்கு இருட்டில் இருக்கப் போகின்றீர்கள்
சிந்தியுங்கள்
காற்றிற்கு வேலிபோடும் உங்கள் முயற்சிகண்டு சிரிக்கிறோம்
மட்டக்களப்பு வாழ் தமிழ் மக்களே!
கருணா அம்மான் குழுவினரால் தடைசெய்யப்பட்டள்ள கொழும்புப் பத்திரிகைகளின் பிரதி வேண்டுவோர் எம்முடன் தொடர்பு கொண்டால் அதனை நேரடியாகவோ அன்றி தபால் மூலமோ அனுப்பி வைக்கத் தயாராக உள்ளோம். பாதுகாப்பு காரணங்களால் நேரடியாக கையளிப்பது சாத்தியமின்றிப் போகலாம். எனினும் உங்களுக்கு அறிமுகமான எமது தமழ் அலை நிழல் உறுப்பினர்களை தொடர்புகொண்டு நேரடியாகவும் பெற்றுக் கொள்ளலாம்.
கருணா அம்மானே, நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்!
பெரும் மனக்குழப்பங்கள் நிறைந்த காலம் நேற்று முன்தினத்தோடு முடிவிற்கு வந்தது மகிழ்ச்சியைத் தருகிறது. நமது இயக்கத்தில் இணைந்தபோது அடைந்த அதேயளவு சந்தோசம் உங்களைவிட்டு வெளியேறியபோதும் கிடைத்தது.
மனதில் நிம்மதியிருந்தாலும் இன்று சாப்பிடமுடியவில்லை
கேள்விகள். மனம் முழுக்க கேள்விகள்
எங்கே தவறு நடந்தது. ஏனிப்படி மாறினீங்கள்?
எங்கள் முதுகில் குத்த எப்படி உங்களுக்கு மனது வந்தது?
தலைவரைப் போல உங்களையும் என்ன விலை கொடுத்தும் வாங்க முடியாத ஒரு தலைவனாகத்தானே நினைத்திருந்தோம்.
யாருடைய சாபம் இது? எங்கே பிளை நடந்தது?
என்னை அரசியல் வகுப்புகளுக்கு போகும்படி கட்டளையிட்டபோது என்ன கூறினீங்கள் என்று ஞாபகம் இருக்குதா? எமது போராளிகளில் இருந்து பத்திரிகையாளர்களும், தொழில் நுட்ட ஆக்களும், அரசியல் தெரிந்தர்களும் குறைவு. அந்த குறையை சமாதான காலத்தில் களைய வேண்டும் என்று சொல்லித்தான் அனுப்பினீங்கள். அரசியல் வகுப்புகளில் கற்றது எதுவும் இன்று உங்களுக்குப் பொருந்தாமற் போனது ஏன்?
வேறென்றுமில்லை. நீங்கள் மாறிவிட்டீங்கள்
திசை மாறி விட்டீங்கள்
அப்படி என்ன நிர்ப்பந்தம் உங்களுக்கு
சண்டைகளில அடைந்த காயங்கள் சுகமடைந்து மீண்டும் ஒரு போராளியாக உங்கள் முகாம் வந்தபோது எனது காயம் பற்றி நீங்கள் மறக்காது விசாரித்தபோது நான் அடைந்த மகிழ்ச்சி காலத்திற்கும் மறக்காது. எனது சகபோராளிகளுக்கு உங்களைப் பற்றி பெருமையாகச் சொன்னேன்.
nஐயசிக்குறு சண்டைக்கு முன் அதைப்பற்றி கதைப்பதற்கு கரடியனாற்றில் எல்லோரையும் கூட்டினீங்கள். nஐயசிக்குறு தாக்குதலின் நோக்கம், தலைவரை காக்க வேண்டிய தேவை பற்றி சொன்னீங்கள். தலைவரைக் காக்கும் சண்டைக்கு மட்டக்களப்பு படையணி முன்னிற்க வேண்டும் என்று சொன்னீங்கள். நாட்டை நேசித்த அளவு பிரதேசத்தையும் நேசித்தனால் அப்படி சொன்னீங்கள்
வடக்கு, கிழக்கு, வன்னி, மட்டக்களப்பு என்ற பிரதேச அழுக்கு எதுவும் உங்களில் ஒட்டாத அந்த நாட்களில் எவ்வளவு அழகாக இருந்தீங்கள்.
பேச்சுவார்த்தைகளுக்கு நீங்கள் போய்விட்டு வரும் ஒவ்வொரு முறையும் கதை கேட்பதற்கும் உங்களை காண்பதற்கும் கூடுவமே.
இனி காலம் கடந்து விட்டது.
பழையது பேசு மகிழ்வடைய முடியாதளவு எங்கள் பிரதேசத்தை படுகுழியில் தள்ளி விட்டீங்கள்.
கருணா அம்மானே நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள். நீங்கள் ஒரு பிரதேச வாதியல்ல என்பது எனக்கு நன்றாகவே தெரியும். பின்னர் எதை மறைப்பதற்கு இந்த துவேசத்தை கையில் எடுத்தீங்கள்?
ஏனிப்படி சதோதர போராளிகளை ஏமாற்றுகிறீர்கள்.
போராளிகளை மட்டுமன்றி மாவீரர்களையும் சேர்த்து எதற்காக முதுகி;ல் குத்துகிறீங்கள்?
எங்கள் தேசியத்தை இவ்வளவு மலிவாக ஏன் விற்கத் துணிந்தீர்கள்?
உங்களிடம் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்
எங்களை ஒரு சகோதர யுத்தத்திற்;கு தள்ளாதீங்கள். மாவீரர்களின் ஆன்மா உங்களை சும்மா விடாது.
- போராளி அறிவொளி
போடா போ நீயும் உன்ரை பொய்யும்
வாகரைப் பகுதிகளில் கடந்த வியாழக்கிழமை தமிழலை நிழற்பதிப்பினரால் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டதுடன் சுவரொட்டிகளை ஒட்டியவர்கள் என்ற சந்தேகத்தில் அப்பாவி இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது.
|போடா போ நீயும் உன்ரை பொய்யும்| என்ற தலைப்பில் இடம்பெற்ற இக்கவிதைச் சுவரொட்டிகளில் வீட்டிற்கு ஒரு போராளி நாட்டைக்காக்க வேண்டும் என்று பரப்புரை செய்;து இயக்கத்தில இணைக்கப்பட்ட போராளிகளை வெற்று பிரதேச வாத விசம்பரம்பி பிரிக்க நினைக்கும் கருணா குழுவினரை கண்டிக்கும் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.
வீட்டுக்கு ஒரு வீரர் நாட்டைக்காக்க வேண்டுமென்றாய்
தலைவரின் காலத்தில் தமிழீழம் கிடைக்கு மென்றாய் - இன்று
பதவிக்கும் பணத்திற்கும் மட்டுநகரை விற்பவனே
போடா போ நீயும் உன்ரை பொய்யும்
120க்கும் மேற்பட்ட மீனகப் போராளிகள் இருள் குழிகளுக்குள் அடைப்பு
வெருகல் பகுதிச் சென்றிகளுக்கு என்று அழைத்துச்செல்லப்பட்ட மீனகப்போராளிகளில்120க்கும் மேற்பட்டடோர் குப்பிகள் பறிக்கப்பட்ட நிலையில் ---- முகாமை அண்டிய காட்டுப்பகுதியின் வெளிச்சமின்றிய இருட்டுக் குழிகளில் அடைத்துவைக்கப்பட்டுள்ளார்கள்.
இவர்களில் இருவரைத் தப்பியோட உதவிசெய்ததாகக் கூறி காவல் புரிந்துவந்த காவலாளி ஒருவரும் இருண்ட குழிகளுக்குள் தள்ளப்பட்டுள்ளார் என அங்கு வேலை செய்துவந்த ஒரு போராளி நேற்று முன்தினம் எமக்குத் தெரிவித்தார். (அவர் தப்பிச் சென்றுவிட்டதற்கான தகவல் கிடைத்ததும் இந்தச் செய்தியை வெளியிடுகிறோம்).
மக்களே, ஒருபுறம் மட்டக்களப்பான் தட்டிக்கேட்டான் என்றும், மட்டு, அம்பாறை அபிவிருத்தி என்றும் கிராமங்கள் தோறும் பறை தட்டிக் கொண்டு மறுபுறம் மட்டக்களப்பானையே இருட்டறைகளில் தள்ளி மொட்டையடிக்கும் கூட்டத்தை இனம் கண்டுகொள்ளுங்கள்!
பெற்றோர்களே உங்கள் பிள்ளைகள் எங்கே என்று வினவுங்கள்!
போராளிகளே, காணாமற்போனோர் என்று நீங்கள் கருதும் போராளிகளின் பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும் அவர்களின் விபரங்களைத் தெரியப்படுத்துங்கள்.
இருண்ட குழிகளுள் வீழ்வதை விட அநீதியை எதிர்த்து மறம் செய்து வீழ்வதே மட்டு அம்பாறை வீரத்தை நிரூபிக்கும்.
நம்பிக்கைத் துரோகத்துக்கு இடம் கொடுத்த பழி எமக்கு வேண்டாம்!
(சகபோராளிகளுக்கு எழுதும் மடல்)
அன்பின் உடன்பிறப்புகளே,
நாம் தமிழீழ விடுதலைப் போராளிகளாக விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்தது எமது தாயகமான தமிழீழம் சிங்களப் பேரின ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெறச் செய்வதற்கே.
கடந்த 50 வருட கால சிங்கள பேரினவாத ஆதிக்கத்தில் நாங்கள் பட்ட அவலங்களை கடந்த இரண்டு வருட சமாதான காலத்தில் மறந்துவிடுவதற்கு நாம் சுயபுத்தி அற்றவனுகள் அல்ல் சமாதான காலத்தில் ஏற்பட்ட தற்காலிகமான சுகபோகங்களைக் கண்டு ஏமாறுவதற்கு ஏமாளிகளும் அல்ல.
நாங்கள் தமிழீழத்திற்கு எம்முயிரையும் கொடுப்பதற்கு துணிந்த சுதந்திரப் போராளிகளாக உறுதியுடனேயே இருக்கிறம்.
கருணா அம்மானும் (சொல்லிப் பழகிவிட்டது) அவரைச் சுற்றியுள்ள ஒரு சிலரும் எப்படி இவ்வாறு மாறினார்கள்? அவர்களின் உறுதி எப்படிக் குலை(ற)ந்தது?
இதைப் பற்றி ஆராயவேண்டிய தேவை இல்லை. ஏனெனில் எதுவித ஐயத்துக்கும் இடமின்றி தங்கள் துரோகத்தனத்தைக் காட்டிவிட்டார்கள்.
கருணா அம்மான் தனது கொள்கைள் பற்றுறுதிகளை இயக்க வரன்முறைகளுக்கு அப்பாற்சென்று காற்றில் பறக்கவிட்டுவிட்டார்.
தான் தடுமாறியநிலையில் பிரதேசவாதக் கொள்கையை முன்னெடுத்து எங்களயும் எங்கட மக்களயும் தடுமாறச் செய்யுள்ளார். ஆரம்பத்தில் தடுமாறிய மக்கள் தற்போது உண்மை நிலைகளை உணர்ந்து வருகின்றனர்.
எங்கட மக்கள் அம்மானிடம் இருந்தும் அவரை வழிபடும் பிற்போக்குக் கூட்டத்திடம் இருந்தும் விலக ஆரம்பித்திருக்கிறார்கள். இது இன்னும் விரைவாக நடக்கவேண்டும்.
இதைத் தடுக்கத்தான் இவங்கள் கிராமங் கிராமமாக கூட்டம் வைத்து மக்களுக்கு பிரதேசவாதத்தை கிளப்பலாம் என்று பார்ப்பது போலத் தெரிகிறது.
இவரின் ஆட்கள் கடந்த சில வாரங்களாக எங்கட பகுதி மக்களுக்கு செய்திகள் சென்றடைவதைத் தடுத்துவருகிறார்கள் என்பது நீங்கள் அறிந்த விடயம். வெளியிடங்களில் இருந்து வரும் பத்திரிகைகளை இவர்கள் கைப்பற்றி எரித்துவிடுகின்றனர். இதற்கு இலங்கை இராணுவமும் காவல் துறையும் துணை நிற்கின்றது.
பல படைகளை நடாத்தியவர் தான், ஆனாலும் அவரது தற்போதைய நடவடிக்கைகளால் கீழ்த்தரமானவராகிவிட்டார். எங்கள் மட்டு அம்பாறைத் தமிழீழப் பற்றுறுதிக்கும் போராட்டத் து}ய்மைக்கும் மாசு கற்பிக்க கோடரிக் காம்பாக வெளிக்கிட்டுவிட்டார்.
பற்றுறுதியும் தமிழீழ விசுவாசமும் கொண்ட மட்டு அம்பாறைப் போராளிகளாகிய நாம் இதற்கு ஒரு போதும் அனுமதிக்கக்கூடாது.
ஒவ்வொரு முறையும் நாங்கள் கருணா அம்மானை வெளிநாடுகளுக்குப் பேச்சுவார்த்தைக்கு அனுப்பும் போது எவ்வளவு பெருமை கொண்டோம். நாங்களே அவருடன் போவது போன்ற உணர்வுகள் எம்மிடம். எங்களுக்குள் எவ்வளவு புல்லரிப்பு. சர்வதேச நாடுகளெல்லாம் சென்று எமது சுதந்திரத்திற்காகப் பேச்சுப் போராட்டம் நடாத்துவார் என்றல்லவா நினைத்தோம், தான் பெறும் அனுபவங்களையும் வளர்ச்சியையும் எமது போராளிகளுக்கும் மக்களுக்கும் பகிர்ந்துகொள்வார் என்றல்லவா நினைத்தோம். அவருக்குக் கொடுக்கப்பட்ட அருமையான சந்தர்ப்பத்தை மக்களைக் குழப்புவதற்கும் போராட்டத்தை எதிரிகளுக்குக் காட்டிக் கொடுப்பதற்கும் பயன்படுத்துவார் என்று நாம் கனவிலும் நினைக்கவில்லை. அவர் தமிழினத்திற்கும் எமது போராட்டத்திற்கும் நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டார். துரோகங்களிலேயே நம்பிக்கைத் துரோகம் தான் பாரிய துரோகம்.
நாம் ஆரம்பத்தில் இவரின் பாரிய முடிவுகளின் பாரது}ரமான விளைவுகளை அவருக்கு விளக்க முனைந்தோம். ஆனால் அவர் அதனைக் கேட்கும் நிலையில் இருக்கவில்லை. அவரின் முடிவுகளும் செயல்களும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டவைபோலத் தெரிகின்றது.
சக போராளிகளுக்கு நாம் இத்தால் அறியத்தருவது என்னவென்றால்:
விடுதலைப்போராட்டத்தின் காலம் பொன்னானது. நாம் எம்மோடு வாழ்ந்த பதினேழாயிரத்திற்கு மேற்பட்ட மாவீரர்களின் விடுதலைத் தாகத்தையும் ஒரு லட்சம் வரையிலான தமிழ் மக்களின் உயிர்த்தியாகத்தையும் மதித்து கருணா என்ற தனிமனிதனிடமும் அவரின் கூட்டத்திடம் இருந்தும் வெளியேறி எமது தேசியத் தலைவரின் தலைமையின் கீழ் தமிழீழ விடுதலைப் போராட்டத்தைத் தொடருவோம்.
எமது மட்டு அம்பாறை மண்ணுக்கு ஒரு தனிமனிதனான கருணாவினாலும் அவரைச் சுற்றியுள்ள ஒரு சிலராலும் ஏற்பட்ட களங்கத்தை அகற்றுவோம் எனத் திடசங்கற்பம் புூணுவோம்!
போராட்டத்தின் போக்கில் முளைக்கும் கோடரிக் காம்புகள் விறகாக்கப்படுவது நியதி!
நெஞ்சு பொறுக்குதில்லையே...
தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்திற்காகக் கடுமையாக உழைக்கவேண்டிய ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டத்தில் எமக்குத் தேசியத் தலைமையின் மூத்த தளபதியாய் இருந்து வழிநடத்தவேண்டியவர் எமது அம்மான்.
இவ்வாறான ஒரு செயற்பாட்டில் இவர் இறங்குவார் என்று நாம் கனவில் கூட எண்ணியிருக்கவில்லை.
ஆனால், தற்கால நிகழ்வுகளைச் சீர்தூக்கிப் பார்க்கின்றபோது எம்மால் விளங்கிக்கொள்ள முடியாத பாரது}ரமான முடிவுகளும் அவரைச் சூழ்ந்திருக்கும் சில கடும்போக்காளர்களினது படு மோசமான வார்த்தைப் பிரயோகங்களும் கீழ்த்தரமான செயற்பாடுகளும் எமது தேசிய விடுதலையைக் கொச்சைப்படுத்தும் பாதையில் செல்வதையிட்டு மனக் கிலேசமடைந்துள்ளோம்.
எமது தேசியத் தலைமை இதற்கு ஏதோ ஒரு வகையில் தீர்வுகாணும் என்ற நம்பிக்கை ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் இது ஒரு பெரிய சீரழிவுக்கு வித்திடுகின்ற செயற்பாடாக நிலைத்துவிடுமோ என்ற பயமும் எம்மைக் கவ்வுகிறது.
அதிர்ச்சியில் இருந்து எம்மை விடுவித்துக்கொண்டிருக்கிறோம்.
எங்கள் தளபதி என்று நாம் பெருமை கொண்டிருந்த கருணா அம்மான் இவ்வாறான செயற்பாட்டில் இறங்கியுள்ளார் என்பதை இன்றுவரை எங்களால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை.
இப்படியும் நடக்குமா? இது எமது இனத்திற்கு என்ன சாபக்கேடா என்ற நினைவுகள் மேலெழுந்து எமது நெஞ்சு கனக்கிறது.
தெளிவான அரசியல் விளக்கம் கொண்ட போராளிகளுக்கு மட்டுமே இந்தப் பிரச்சனையின் ஆழம் புரியும். தேசியம் என்றால் என்ன, பிரதேசவாதம் என்றால் எவ்வகையானது, எதிர்ப் போராட்ட சக்திகளின் சூழ்ச்சிகளும் தந்திரங்களும் எவ்வாறு அமையும் என்பது போன்ற போராட்டத்தின் பின்னான ஆழமான அரசியலை எல்லாப் போராளிகளும் முழுமையாகப் புரிந்துகொண்டவர்களாக இல்லை.
ஆனால் இதை முழுமையாகப் புரிந்துகொள்ளும் காலம் வரும். ஏனெனில் ஒரு சில மனிதர்களுக்காக தமது பொன்னான வாழ்வை மண்ணாக்கத் துணிந்தவர்கள் அல்ல தென் தமிழீழப் போராளிகள். அறியாமைத் திரை அகலும் போது தேசியத்திற்கு அவர்கள் மீண்டும் வலுச் சேர்ப்பார்கள்.
அது விரைவில் நடக்கவேண்டும், அதுவரை...
பாரதிபாடிய நெஞ்சுபொறுக்குதில்லையே என்ற பாடலின் வரிகளே எம்போன்றவர்களின் நெஞ்சுச்சுவர்களில் பட்டு எதிரொலித்துக்கொண்டிருக்கும்.
பதினேழாயிரத்துக்கு மேற்பட்ட மாவீரர்களினதும், பல்லாயிரம் மக்களதும் கல்லறைகளினதும் அர்ப்பணிப்பினால் வளர்ந்த எமது போராட்டத்திற்கு ஒரு தெய்வீக சக்தி உள்ளது என்று நாங்கள் நம்புகிறோம். அந்தச் சக்தியின் முன் மண்டியிட்டு நின்று கூறுகிறோம்:
தென்தமிழீழத்திற்கு வந்த பழி நீங்க வேண்டும்!
அன்பார்ந்த மக்களே, போராளிகளே
நாம் நேசித்த வெளியீட்டின் நிழற்பதிப்பாக இணையத்தளம் மூலம் உங்களைச் சந்திக்கிறோம்.
இரும்புப் பிடிக்குள்ளிருந்து எமது மன உணர்வுகளை வெளிக்கொண்டுவர இந்த இணையத் தளம் உதவி புரியும் என்று நம்பிக்கையோடு ஊடகத்துறையைச் சேர்ந்த எமது உள்ளக் கிடக்கைகளை இந்த நிழற் பதிப்பில் பகிரங்கப்படுத்துகிறோம். இந்த இணையத் தளம் மூலம் மிகுந்த சிரமங்களுக்கும் முயற்சிகளுக்கும் மத்தியில் வெளிப்படுகிறது. தயவு செய்து எமது கருத்துக்களை மட்டு-அம்பாறை போராளிகளுக்கும் மக்களுக்கும் எடுத்துச் செல்ல உதவுமாறு இதை வாசிக்கும் உங்கள் அனைவரின் உதவியையும் நாடுகிறோம்.
யாரை யார் நம்புவது என்று தெரியாத நிலைமை. இருள் சூழ்ந்து கிடக்கிறது. எமது கருத்துக்களை ஆணித்தரமாகவும் திறந்த போக்கிலும் வெளிப்படுத்த முடியாத நிலை.
அவ்வாறு செய்வதற்கு நாம் ஒன்றும் பிரசித்தமான கட்சியாளர்களோ ஆய்வாளர்களோ அல்ல. எமது குரல்வளை நசுக்கப்படலாம் என்பதால் இணையம் மூலம் எமது கருத்துக்களை முன்வைக்கிறோம். இருண்ட நிலை நீடிக்கப்போவதில்லை. நிலைமை வெளிக்கும் வரை வெளிச்சத்திற்காக நாம் உண்மையின் நிழலாகத் தொழிற்படுவோம்.
கடந்த சில வாரங்களாக கருணா அம்மான் எம்மீது திணித்து வருகின்ற பல பிழையான கருத்துக்களினாலும் அழுத்தங்களின் காரணமாகவும் நாம் அவரின் கட்டளைகளுக்கு அடங்கிநடக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம்.
அண்மைக்காலமாக கருணா அம்மான் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் எம்மை ஆழ்ந்த மனவேதனைக்கும் அதிருப்திக்கும் உள்ளாக்கியிருந்தது.
அவரது தேசியத்திற்கு விரோதமான செயற்பாடுகள் மூலம் எமது போராட்டத்திற்கு அவர் களங்கம் ஏற்படுத்திவருகிறார். நாம் இனியும் கைகட்டி வாய்பொத்தி நின்றால் அது நாம் செய்கிற வரலாற்றுத் தவறாகிவிடும்.
மக்களின் நெஞ்சங்களில் இருந்து தேசிய விடுதலை உணர்வை எவராலும் அழித்துவிடமுடியாது என்பதை வரப்போகும் நாட்கள் உணர்த்தும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
சேது இது பிறகு கருணா துதிபாடாதெண்டது என்ன நிச்சயம்....???! :roll:
<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
மட்டக்களப்பில் இருந்து யாழ்மாவட்ட மக்கள் துரத்தப்பட்டுக்கொன்டு இருக்கின்றனர்.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
ஜரோப்பாவிலை அதிகம் பென்னியம் பேசுற வானொலியிலை அதிக ஒளுக்கக்கேடான நிகள்வுகள் நடக்குதாம் பென் சேட்டை அதிகமாம் வானொலி அறிவிப்பாளர் ஒருவர் இந்த தகவலை வெளிவிட்டுள்ளார்.
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
sethu Wrote:ஜரோப்பாவிலை அதிகம் பெண்ணியம் பேசுற வானொலியிலை அதிக ஒழுக்கக்கேடான நிகழ்வுகள் நடக்குதாம் பெண் சேட்டை அதிகமாம் வானொலி அறிவிப்பாளர் ஒருவர் இந்த தகவலை வெளிவிட்டுள்ளார்.
பிரேமானந்தாவையே வாழ வைக்கிறவை....ஐரோப்பாவில சும்மா இருப்பினமே.....!
தங்கட விடுதலையைக் காட வேணாமோ....???!
:twisted: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
யெனிவா எளுச்சி பேரனியில் பங்கபற்ற அரசியல்துறை விசேட பொறுப்பாளர் கரிகாலன் மட்டு அம்பாறை அரசியல் துறை பொறுப்பாளன் கௌசல்யன் உள்ளடங்கலாக 3 பேர் கட்டுநாயக்கா விமின நிலையத்தில் தங்கி நிற்பதாக தெரியவருகிறது இங்கு நான் தரும் பெயரில் கௌசல்யனை என்னால் உறுதிப்படுத்தமுடியவிலை ஆனால் 3 பேர் நிப்பதாகவும் பலர் ஆதரவாளர்கள்போல வளியனுப்ப வந்ததாகவும் வாகனத்தரிப்பிடத்தில் இன்னும் பல நன்பர்கள் தங்கி நிற்பதாகவும் செய்தி ஒன்று தெரிவிக்கின்றது.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
மாஸ்ரர் இப்ப ஏ பீ சிஅதிலை வேலை செய்யுறது இல்லையாம் உன்மையோ? ஆரும் வந்து பதில் சொல்லுங்கோ
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
ஊகம்
ஜகியதேசிய கட்சி படுதோல்வி அடைந்து சமாதான பேச்சுவார்த்தைகள் குளம்பி பாதுகாப்பு அமைச்சராக விமல் வீரவன்சி நியமிக்கப்பட்டால் நாட்டில் என்ன நடக்கும்.
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
ஏன் தான் இந்த விபரீத எண்ணமோ?
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
சரிவந்துட்டுது போல கிடக்கு அதுபோக கட்டாயம் யுத்தம் ஒன்டு உருவாகும் அல்லது சிங்கள பேரினவாதிகள் இரன்டு தரப்பும் பேச்சுவாத்தை மேசைக்கு வருவினம்.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
எரிக்சொல்கைம் தென் ஆபிரிக்கா போனது எல்லாருக்கும் சொன்னனான் இப்ப புலித்தேவன் தென் ஆபிரிக்காவிலை நிக்கிறார். இப்ப சுவிசிலை நிக்கிறவையும் தென் ஆபிரிக்காவரைக்கும் ரிக்கட்போட்டிருக்கினமாம் புரியுதோ?
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
நீக்கப்பட்டுள்ளது - மோகன்