03-28-2004, 11:31 AM
எனது உயிருக்கு அச்சுறுத்தல் கூடுதல் பாதுகாப்பு வழங்குங்கள் மட்டு.பிரதி பொலிஸ்மா அதிபரிடம் ஜோசப் வேண்டுகோள்
(தெய்வீகன் ,வோஷிங்ரன்)
இனந்தெரியாதோரால் தொலைபேசி மூலம் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் ஜோசப் பரராஜசிங்கத்தின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதையடுத்து அவர் தனக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்குமாறு மட்டக்களப்பு பிரதி பொலிஸ் மா அதிபரிடம் வேண்டுகோள் விடுத்திருப்பதாகத் தெரியவருகிறது.
""நான் உயிர்வாழப்போவது சிறிது காலம் தான். ஆனாலும், இதுவரை காலமும் முன்னெடுத்து வந்த தமிழ்மக்களின் தேசியக்கொள்கையை எந்தக் காரணத்திற்காகவேனும் தியாகம் செய்ய மாட்டேன்.''
தேர்தல் பிரசாரங்களின் போது தமிழ்த்தேசிய கொள்கையை வலியுறுத்தக்கூடாது என்றும் மட்டக்களப்பை விட்டு வெளியேறி விடுமாறும் கருணா தரப்பினர் அச்சுறுத்தல் விடுத்திருக்கும் இந்நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தொலைபேசி மூலம் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்க அடியோடு மறுப்புத் தெரிவித்திருக்கும் ஜோசப் பரராஜசிங்கத்தை மட்டக்களப்பில் இருந்து வெளியேறுமாறு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலுடனான கோரிக்கை நேற்று முன்தினம் மாலையுடன் முடிவடைந்தது.
ஆனால், அவரை அங்கிருந்து வெளியேறக்கூடாது என்று இளைஞர்களும், பொதுமக்களும் அன்புக்கட்டளையிட்டுள்ளனர். அவரது உயிருக்கு வரும் எந்தவொரு அச்சுறுத்தலையும் அவருக்குப் பக்க பலமாக நின்று எதிர்கொள்ளத் தயாராக இருப்பது என்றும் அவர்கள் சபதம் பூண்டுள்ளனர் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
""மிரட்டலுக்கு பயந்து தேர்தலில் இருந்து ஒருபோதும் வாபஸ்பெறமாட்டேன். ஆனால் தேர்தல் பிரசாரக்கூட்டங்களை நிறுத்தியிருக்கின்றேன்.
எனது நீண்ட காலக் கொள்கையை எந்தவொரு காரணத்திற்காகவும் நான் விட்டுக் கொடுக்கமாட்டேன். எதிர்வரும் தேர்தலில் கூட்டமைப்பை வெற்றியடையச் செய்வதன் மூலம் மட்டு.அம்பாறை மாவட்ட மக்கள் பிரதேச வாதத்தை விரும்பவில்லை என்பதை நிரூபிக்க வேண்டும். அவர்கள் நிரூபிப்பார்கள்''எனவும் ஜேசப்பரராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.
போராளிகள் வன்னி நகருகின்றனர்
இது இவ்வாறிருக்கையில், புலிகளின் தலைமை மட்டு.அம்பாறை போராளிகளுக்கு விடுத்த அறிக்கையை அடுத்து அங்குள்ள போராளிகள் வன்னிக்கு நகருகின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக போராளிகளின் பெற்றோர்களே தமது பிள்ளைகளை வன்னிக்கு கூட்டிச் செல்கின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
கருணா தரப்பினர் தளம் அமைத்துள்ள தரவைக் காட்டினுள் ஊடகவியலாளர் எவரும் செல்வதற்கு அனுமதி அளிக்கப்படவில்லையென்றும் தெரிவிக்கப்படுகிறது.
நன்றி - வீரகேசரி

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->