Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கருணா என்கின்ற கண்கட்டு வித்தை
#1
<span style='color:red'>\"கருணா என்கின்ற கண்கட்டு வித்தை\"


[size=16]தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு, கருணா என்கின்ற தமிழன் இழைத்த, இழைத்து வருகின்ற துரோகச் செயல்கள், ஒட்டுமொத்தத் தமிழீழ நெஞ்சங்களையும் பதறச் செய்துதான் விட்டது! அதிலும், குறிப்பாகப் புலம்பெயர்ந்து வாழும் தமிழீழ மக்கள் பட்ட வேதனை அளப்பரியது. பல்லாயிரக்கணக்கான மைல் தொலைவிற்கு அப்பால், தாய் மண்ணைத் தம் உடலால் மட்டும் பிரிந்து வாழுகின்ற இந்த உள்ளங்கள் உள்வாங்கிய சோகத்ததைச் சொல்லில் வடிப்பதும் எளிது அல்ல!

இந்த நெருக்கடி தோன்றியுள்ள காலகட்டத்தில், எம்மவரில் பெரும்பான்மையோரின் எண்ணத்தில் எழுகின்ற கேள்விகளும் ஒரே விடயத்தை சுற்றியே அமைவதை நாம் காணக்கூடியதாக உள்ளது. 'எப்போது இந்த நெருக்கடி நிலை தீரும்? 'இந்தத் துரோகச் செயல் எவ்வாறு முடிவுக்குக் கொண்டு வரப்படும்?" எப்போது எமது நெஞ்சங்களில் பால்வார்க்கும் செய்தி வரும்?". என்பது போன்ற கேள்விகளே கரிசனை கொண்ட நெஞ்சங்களில் எழுந்த வண்ணம் உள்ளன.

நாட்டுப்பற்றுள்ள எந்த உள்ளங்களிலும், இயல்பாக எழக்கூடிய எண்ணங்கள் தாம் இவை! ஆனால், இங்கே ஒரு முக்கியமான - மிக முக்கியமான - விடயத்தைச் சுட்டிக்காட்ட வேண்டிய கடமை எமக்குண்டு. தமிழீழ மக்களின் தார்மீகச் சிந்தனைகளை, இன்றைய தினம், இந்தப் புதிய நெருக்கடியில் மட்டுமே குவித்து வைபதற்கான முயற்சிகளைத்தான், தமிழ்த் தேசிய விரோத சக்திகள் முயன்று வருகின்றன. அதில் ஓரளவு வெற்றியும் கண்டுள்ளன என்பதும் வேதனையான உண்மைதான் இது ஒரு கண்கட்டு வித்தை!

இந்தக் கண்கட்டு வித்தை குறித்துச் சற்று விரிவாகவும் விளக்கமாகவும் தர்க்கிப்பது, இந்த வேளையில் முக்கியமானதொன்றாக நாம் கருதுகின்றோம். இந்தக் கருணா என்கின்ற முன்னை நாள் தமிழ்ப்போராளி, இன்றைய தினம் பேசுகிற விடயங்கள் குறித்தும், காட்டுகின்ற காட்சிகள் குறித்தும் சில ஊடகங்கள் ஊதிப் பெருப்பித்து உற்சாகமாக செய்தி வெளியிட்டு வருகின்றன. சிங்கள பேரினவாத ஊடகங்களும், தமிழ் தேசிய விரோத தமிழ் ஊடகங்களும் இதில் பெரும் பங்கினை வகிப்பதில் முன்னிற்கின்றன. கருணாவின் காரணமாக எழுந்துள்ள இந்தத் தற்காலிக நெருக்கடி குறித்துப் பூதாகரமான செய்திகளை வெளியிட்டு வரும் இந்தத் தமிழ் விரோத சக்கிகளின் ஆழ் மனத்து ஆசைதான் என்ன?

தன்னுடைய தனிப்பட்ட நலனுக்காகவும், தன்சுயநலத்தால் விளைந்திட்ட தவறுகளை நியாயப்படுத்துவதற்காகவும் பிரதேசவாதத்தை முன்னிறுத்தி, இன்று முன்னிற்குப் பின் முரணாகப் பேசியும், செயல்பட்டும் வருகின்ற கருணா என்கின்ற தமிழினத் துரோகி, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிரான வலிமையான சக்தியாக எதிர்காலத்தில் உருவெடுக்கக் கூடும் என்று, இந்த விரோத - துரோக சக்திகள் நம்புகின்றனவா?

இல்லை - இல்லவே இல்லை

ஈழத் தமிழினமும், புலம்பெயர்ந்த தமிழினமும், இந்தக் கருணா என்பவரின் கீழ் அணிவகுத்து ஆதரவு நல்கும் என்று, இந்த தமிழ் விரோத - துரோக சக்திகள் எண்ணுகின்றனவா?

இல்லை - இல்லவே இல்லை!

'இராணுவப் படைப்பல ரீதியாக, கருணா என்கின்ற இந்தத் தவிர்கப்பட்ட மனிதன், தமிழீழ மக்கள் சக்திக்கு எதிராக தனித்து நிற்க முடியும், என்று இந்த தமிழ் விரோத - துரோக சக்திகள் சிந்தித்து செயல்படுகின்றனவா?

இல்லை - இல்லவே இல்லை !

இன்றைய காலகட்டத்தில், கருணாவின் செயல்களையும், பேச்சுக்களையும் பூதாகரமாக்கி காட்டுவதன் மூலம், நாளை - கருணா என்கின்ற இந்தத் தமிழன், தமிழீழத்தை இராணுவரீதியாக, பிரதேச ரீதியாக கூறுபோட்டு விடமுடியும் என்று இந்த தமிழ் விரோத - துரோக சக்திகள் மனப்பால் குடிக்கின்றனவா?

இல்லை - இல்லவே இல்லை!

இப்படிப்பட்ட விசப்பிரச்சாரம் காரணமாக, உலக நாடுகள் யாவும் திரண்டு எழுந்து, கருணா என்பவருக்கு ஆதரவாக, தமிழீழ வீடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் என்று இந்த தமிழ் விரோத - துரோக சக்திகள் நம்புகின்றனவா?

இல்லை - இல்லவே இல்லை!

எதிர்வரும் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கக்கூடிய எந்த சிங்களப் பேரினவாதக் கட்சியும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் புறந்தள்ளி, கருணாவோடு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் என்று இந்த தமிழ் விரோத சக்திகள் உண்மையாகவே எண்ணுகின்றனவா?

இல்லை - இல்லவே இல்லை!

சிந்தித்துப்பார்த்தால், - அதுவும் ஆற அமர இருந்து சிந்தித்துப்பார்த்தால், - இந்தத் தமிழ் - விரோத துரோக சக்திகளின் உண்மையான குறிக்கோள் எதுவென்று புரியக்கூடியதாக இருக்கும்!

கருணா என்கின்ற தமிழினத் துரோகியின் சுயநலத்தின் பின்னே ஒளிந்து கொண்டு, இந்தத் தமிழ் விரோத துரோக சக்திகள் எய்கின்ற அம்புகள், எதனை நோக்கிப் பாய்கின்றன என்ற உண்மையை அப்போதுதான் புரியக் கூடியதாக இருக்கும்!

இந்த அம்புகள் தமிழ்த் தேசியத்தை நோக்கிக் குறிவைக்கப்பட்டு, ஏவப்படுகின்றன. தமிழீழ மக்களின் தேசியப்பிரச்சனையை குறிவைத்து ஏவப்படுகின்றன. தமிழீழ மக்களின் அபிலாசைகளுக்கு - வேட்கைக்கு - எதிராக இந்த அம்புகள் ஏவப்படுகின்றன.

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள், தன்னுடைய தன்னலமற்ற தியாகப்போராட்ட வரலாற்றில் வலியுறுத்தி, வழிகாட்டி வந்துள்ள தமிழீழத் தேசியம் குறித்து இவ் வேளையில் குறிப்பிடுவது பொருத்தமானதாகும்.

'பாரம்பரிய தாயக பூமியையும், தனித்துவமான மொழியையும், பண்பாட்டையும் கொண்டுள்ள எமது மக்கள் ஒரு தேசிய இனத்தவர்கள் ஆவார்கள். அந்தத் தேசிய இனம், தமது அரசியல் பொருளாதார வாழ்வைத் தாமே தீர்மானிக்கும் உரிமை கொண்டவர்கள். அந்த உரிமைக் கோட்பாடுதான் சுய நிர்ணய உரிமையாகும். தமிழ் மக்கள் தமது சொந்த மண்ணில், வரலாற்று ரீதியாகத் தாம் வாழ்ந்து வந்த பாரம்பரிய மண்ணில், அந்நிய சக்திகளின் தலையீடு ஆதிக்கம் இன்றிச் சுதந்திரமாக - கௌரவமாக வாழ விரும்புகிறார்கள். தமது மொழியை வளர்த்து, தமது பண்பாட்டை பேணித் தமது பொருளாதாரத்தை மேம்படுத்தி, தமது அடையாளத்தைப் பாதுகாத்து வாழ விரும்புகின்றார்கள். தமது தாயக மண்ணில் தம்மைத்தாமே ஆளும் சுயாட்சி உரிமையோடு வாழ விரும்புகின்றார்கள். இதுவே எமது மக்களின் அபிலாசை வேட்கை."

இவ்வாறு எமது தலைவர் கட்டிக்காத்து வந்துள்ள தமிழ்த் தேசியத்திற்கு எதிராக வைக்கப்படும் இந்த துரோக சிந்தனைகளுக்கு நாம் இடங்கொடுக்காத வகையில் எமது சிந்தனைகளை ஒருங்கிணைக்க வேண்டிய வேளை, இந்த வேளையாகும். இன்று கருணாவை முன்வைத்துக் கொண்டு - அவருடைய பிரதேசவாத்தின் ஊடாக, தமிழ் தேசியத்திற்கெதிரான செயற்பாடுகளை, இத்தீய சக்திகள் மேற்கொண்டு வருகின்றன. விரைவில் முடியப்போகும் இந்தக் கருணாவின் கண்கட்டுவித்தையைப் பார்த்த எம்மவர் மனம் சஞ்சலப்பட்டுக் கொண்டிருக்கையில், தமிழ் விரோத சக்திகளோ சத்தமில்லாமல் கொள்கை ஊடுருவல்களைச் செய்ய ஆரம்பித்துள்ளார்கள்.

'தமிழீழ விடுதலைப்போராட்டம் என்பது ஓர் ஆயுதப் போராட்டம் மட்டும் அல்ல" - என்பதை நாம் பலதடவைகள் வலியுறுத்திச் சொல்லியே வந்துள்ளோம். ஒரு இனவாதப் போரின் அடக்குமுறைக்கு முகங்கொடுத்து போராடி வந்துள்ள அதேவேளையில், தனது இனத்துக்குள்ளே புரையோடிப்போயிருந்த சாதிக்கொடுமைக்குச் சாவுமணி அடிக்கும் செயற்பாட்டையும் தமிழ்த் தேசியத்தலைமை வெற்றிகரமாகச் செய்து வந்துள்ளது. இன்று உலகமே மத ரீதியாகப் பிரிந்து நின்று, மதவெறி கொண்டு வன்முறையில் ஈடுபடுகையில், தமிழ்த் தேசியத்தலைமையோ மத வேறுபாடற்ற நிலைப்பாட்டின் ஊடாக, தனது போராட்டத்தை நகர்த்திச் சென்றுள்ளது.

தமிழீழத் தேசிய நலன் என்பது, பரந்துபட்ட அளவில் விரிந்து செயல்பட்டு வருகின்றது என்பதே உண்மையாகும். சாதி, மத, வர்க்க, பிரதேச வேறுபாடுகள் எதும் இன்றி, தமிழீழ தேசிய விடுதலைக்கான போராட்டத்தை கொண்டு செல்வதற்காகத் தேசியத் தலைவர் அவர்கள் எவ்வளவு சிரமப்பட்டிருப்பார்? - என்பதை இந்த வேளையில் எண்ணிப் பார்த்து வியக்கின்றோம், அதுமட்டுமா, பெண்ணின அடிமைத்தனத்தை உடைப்பதற்கு, திருமதி பார்வதி வேலுப்பிள்ளையின் மகன் மேற்கொண்ட நடவடிக்கைகளையும் மறக்கத்தான் முடியுமா? சீதனப்பிரச்சனை என்பது, பெண்களுக்கு எதிரான சமூக ஒடுக்குமுறையின் ஒரு வெளிப்பாடு என்ற காரணத்தால், மணக்கொடைத் தடைச்சட்டத்தை தலைவர் தமிழீழத்தில் அமுலாக்கியமை ஒரு முன்மாதிரியான சட்ட விதியல்லவா? ஒரு சமூகத்தின், சமூக - பொருளாதார அடிப்படைகளையும்புரிந்து கொண்டு, அதேசமயம் பெண்ணினத்திற்கு எதிராக விளங்கிய சமூக மரபுகளுக்குச் சாவுமணி அடிக்கும் வகையில் மரபுச் சட்டம் தமிழீழத்தில் திருத்தி அமைக்கப்பட்டது, சரித்திரத்தில் இடம்பெறக் கூடிய விடயமாகும்.

ஆகவே தமிழ் தேசிய விடுதலைக்கான போராட்டம் என்பது, மண் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மட்டுமல்ல! சாதி ஒடுக்குமுறை, மதவேறுபாடு, பிரதேசவாதம், வர்க்க வேறுபாடு போன்ற குறைபாடுகள் அற்ற தேசியத்தை கட்டி எழுப்புவதும் விடுதலைப் போராட்டத்திற்கு அவசியமாகின்றது.

இந்தத் தர்க்கத்தை இன்னெரு வகையாலும் சிந்தித்து பார்க்கலாம். ஈழத்தமிழன் மீது, சிறீலங்கா அரச பயங்கரவாதம் திணிக்கப்பட்டதன் காரணம் அவன் யாழ்பாணத் தமிழன், மட்டக்களப்பு தமிழன் என்பதாலோ, அல்லது அவன் மன்னார் - வன்னித்தமிழன் என்பதாலோ அல்ல ! அவன் தமிழன் என்பதால் மட்டுமே, அவன் மீது சிறீலங்கா அரச பயங்கரவாதங்கள் அவிழ்த்து கட்டவிழ்த்து விடப்பட்டன. தமிழன் தமிழனாக வாழ்வதாலும் அவன் பேசுவது தமிழ் மொழியாக இருப்பதனலாலும் அவனுக்கு மதங்களை கடந்த தனித்துவமான பண்பாடும் - நாகரீகமும் இருப்பதாலும், அவனுக்கென்று ஒரு பாரம்பரிய பூமி வாழ்விடமாக இருப்பதாலும் அவனுடைய இனம் ஒரு தேசிய இனமாக இருப்பதனாலும்.

அவனை - அந்தத் தமிழனை - அவனது மொழியை - அவனது பண்பாட்டை - அவனது நாகரீகத்தை -அவனது பாரம்பரிய மண்ணை, அவனது இனத்தை ஒழிப்பதற்காக, அழிப்பதற்காக, தமிழ் தேசிய விரோத சக்திகள் எப்போதும் முயன்றே வந்துள்ளன.

ஆகவேதான், தமிழீழத் தேசியத்தலைவர் அவர்கள் மண்மீட்புப்போரை நடாத்தி வருகின்ற அதே வேளையில், தமிழ்த் தேசியத்தை கட்டி எழுப்புகின்ற மகத்தான பணியையும் புரிந்து வந்தார். ஆக்கிரமிப்புப் போரில் அவரை வெல்ல முடியாத தமிழ் விரோத சக்திகள், இன்று தமிழ்த் தேசியத்தின் மீது குறிவைத்துள்ளன. கருணா என்கின்ற கண்கட்டு வித்தை நடைபெறுகின்ற இந்த வேளையில், தமிழ்த் தேசிய ஒருமைப்பாட்டை அசைத்துப் பார்க்கின்ற முயற்சிகள் மேற்கொள்ளப்டுகின்றன.

அன்புக்குரிய நேயர்களே! கருணாவின் கூத்து விரைவில் முடிந்து விடும். கூத்தைப் பார்க்கும் வேளையில், கூரையை பிரிக்க முனையும் திருடர்களுக்கு இடங்கொடக்கும் நேரமல்ல, இது! கருணா ஏற்படுத்திய இந்த நெருக்கடி விரைவில் தீர்க்கப்பட்டுவிடும், அல்லது தீர்ந்துவிடும். இந்த வேளையில் நாம் கரிசனை கொள்வதற்கு வேறு முக்கிய விடயங்கள் உள்ளன. எமது மக்களின் அபிலாசைகளை - வேட்கையான, தாயகம் - தேசியம் - தன்னாட்சி - சுயநிர்ணய உரிமை. என்பன அங்கீகரிக்கப்பட வேண்டியதற்கான செயல்பாடுகளில், புலம்பெயர்ந்த தமிழீழத்தவர்களாகிய நாம் இறங்க வேண்டும். தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின்மீது தடை விதித்திருக்கும் சில நாடுகள், அத்தடையை நீக்க வேண்டியதற்கான கோரிக்கைகள் வலுவாக முன்வைக்கப்பட வேண்டும். புலம்பெயரந்த நாடுகளில் வாழுகின்ற தமிழர்களும் அவர்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற சங்கங்களும் கழகங்களும், கூட்டமைப்புக்களும், இந்த முக்கிய செயற்பாடுகளை தனியாகவும், கூட்டாகவும் மேற்கொள்ள வேண்டும் என்று, இவ்வேளையில், உரிமையோடு கேட்டுக்கொள்கிறோம்.

<img src='http://www.tamilnet.com/img/publish/2002/06/pongutamil_trinco_3_190202.jpg' border='0' alt='user posted image'>

இவ்வேளையில் எதிர்வரும் ஏப்பிரல் 5 ஆம் திகதியன்று சுவிஸ் நாட்டில் நடைபெற இருக்கின்ற பொங்கு தமிழ் நிகழ்வு, தமிழ் மக்களின் வேட்கைக்கு உரிய அங்கீகாரத்திற்கான ஆதரவை திரட்டுவதில் பெரு வெற்றி பெற்றிட தமிழ்க்குரல் சார்பில் நாமும் வாழ்துகிறோம்!</span>



நன்றி தமிழ்நாதம்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)