Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மறக்கலாமோ சொல் மனமே
#1
மறக்கலாமோ சொல் மனமே

மனம் என்றொன்று இருப்பதால்
ஞாபகங்கள் அங்கே சங்கமம்

வெள்ளையாய் உடை கண்டால்
பள்ளி சென்ற தோழிகளுடன்
அள்ளிச் சென்ற புத்தகங்களுக்குள்
சுமந்து சென்ற ஞாபகங்கள்.....

பட்டாடையுடுத்தி பட்டாம் புூச்சியாய்
வட்டமடிக்கும் திருவிழாக் காலமதில்
கடலை வாங்கி உண்ட
கடந்து போன ஞாபகங்கள்.....

மண் மணக்கும் மழைத்துளிகளினுடே
மனை நோக்கி வருகையில்
அன்னையவளின் தாளித்த சமையலில்
வாசனையாய் போன ஞாபகங்கள்.....

வயதுக்கு வந்த போது
புதுப்புது மாற்றங்களுடே.. முதன் முதலாய்
புதுச் சேலையின் தழுவலில்
அனுபவமாகிப் போன ஞாபகங்கள்....

பருவ வயதில் பருவமான போதே
உருவமாய் உள்ளத்தில் உறைந்துபோன
முதற்காதலின் ஸ்பரிசங்கள்
ரணங்களாகிப்போன ஞாபகங்கள்.....

நடுநிசியில் கடந்து போன ஞாபகங்கள்
மீண்டும் என் நினைவில்.. அவற்றை
மறக்கலாமோ சொல் மனமே….!
25.03.2004
Reply
#2
கடந்த காலம்
நிஜமாகி
நிகழ்காலம்
கனவானால்
கடந்த காலம்
கடந்ததாய் இராது
கலர் கலராய் மனதெங்கும்
மலர்ந்திருக்கும்
முன் சொன்ன கவிபோல...!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
.. நன்றாக இருக்கு ஷன்முகி கவிதை!!
வழ்த்துக்கள்....
<img src='http://images.tamilstation.de/images/mXG80052.jpg' border='0' alt='user posted image'>
[url=http://www.sweetmiche.com/forum/viewtopic.php?t=708][u][b][size=15] :: ::
Reply
#4
பழசை நினைத்து பார்ப்பது எப்போதுமே இனிமையானது தான். நன்றி சண்முகி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#5
ஏதோ ஒரு பாட்டு
என் காதில் கேட்கும்
கேட்கும் போதெல்லாம்-உன்
ஞாபகம் தாலாட்டும்

ஞாபகங்கள் பூப்பூக்கும்
ஞாபகங்கள் மழையாகும் எனக் கேள்வியுற்றுளேன்
ஞாபகங்கள் கவிதையாவதை கண்ணுற்றேன்
\" \"
Reply
#6
ஈழவன் உங்களுடைய தளமா தமிழ்மறவன் (http://www.tamilmaravan.com/)? தமிழ்நாதத்தில் பார்த்தேன்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#7
இல்லை அப்பிடி ஒரு சிறந்த தளத்தை அமைக்கும் ஆற்றல் எனக்கு இல்லை
\" \"
Reply
#8
.... தளம் இல்லை ..? Cry
<img src='http://images.tamilstation.de/images/mXG80052.jpg' border='0' alt='user posted image'>
[url=http://www.sweetmiche.com/forum/viewtopic.php?t=708][u][b][size=15] :: ::
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)