Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழர் தாயகச் செய்திகள்
#1
பாத்தியளே ரணிலாருக்கு நன்கொடையாயில்ல கடனாத்தானாம் காசு தாரதெண்டு சொல்லியிருக்கு அத்தோட வட்டியும் முதலுமா கொடுக்கவேணுமாம்....அதுக்க காசு தாரத்துக்கு பல நிபந்தனைகளுமாம்...... இப்படிச் சொல்லுறா அம்மா!

அப்ப இனி சிறிலங்கா ஆருக்குச் சொந்தம்......?!
:twisted: :roll: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
Tokyo donors' conference will not benefit Sri Lanka' -PA

[TamilNet, June 10, 2003 20:06 GMT]
Sri Lanka’s main opposition People’s Alliance (PA) led by President Ms Chandrika Kumaratunge Tuesday said ninety percent of aid pledged at the Tokyo donors' conference are loans and not grants. "Majority of the aid given at the donors' conference are on various interest rates with several conditions attached," said People’s Alliance media spokesman Mr.Sarath Amunugama at a press briefing held Tuesday at the office of the Leader of the Opposition.
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
நிபந்தனைகள் பிரச்சனையில்லை .சமாதானமும் ஒரு நிபந்தனைதானேன..
Reply
#3
'புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது" என்பது பழமொழி. வி.புலிகளைப் பொறுத்தளவிலும் இராசதந்திரம் என்ற போர்வையில் வளைந்து கொடுத்தல், நெகிழ்ந்து போதல், சமரசம் செய்தல் என்பதில் நம்பிக்கை இல்லாதவர்கள். எப்போதுமே சொல்ல வேண்டியதை வெட்டொன்று துண்டு இரண்டாக ஒளிவு மறைவின்றிச் சொல்லி விடுபவர்கள்.

வெற்றி தோல்வியைக் கணக்கில் எடுக்காமல் அநீதியை எதிர்த்துப் போராடு மாறு தள்ளப்பட்டால் வி.புலிகள் போராடியே தீருவார்கள்.

யப்பான் கொடையாளிகள் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்று யப்பான், அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம் விடுத்த காலக் கெடுக்கள், கொடுத்த அழுத்தங்கள் போன்றவற்றுக்கு வி.புலிகள் சற்றும் அசையவில்லை.

முதற் கட்டப் பேச்சு வார்த்தையிலேயே தனித் தமிழீழ கோரிக்கையை கைவிட்டு அதற்கு ஈடாக உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் தமிழர்களின் தாயக மண்ணில் தமிழ்மக்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழக்கூடிய ஒரு தன்னாட்சி அரசியல் அமைப்பை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாக வி.புலிகள் அறிவித்தார்கள்.

இடைக்கால நிர்வாக சபையை உருவாக்குவதில் சட்டச் சிக்கல் இருப்பதாக அமைச்சர் ஜி.எல். பீரிஸ் கூறியபோது அதனையும் விட்டுக் கொடுத்தார்கள். வட-கிழக்கு தமிழர்களது தாய கம் என்பதற்குப் பதிலாக தமிழர்களது வரலாற்று வாழ்விடம் என்ற வரை விலக்கண மாற்றத்தையும் ஏற்றுக் கொண்டார்கள்.

இவ்வாறு வி.புலிகள் செய்த விட்டுக் கொடுப்புக்களுக்கு ஈடாக ரணில் விக்கிரமசிங்கா அரசும் சில விட்டுக் கொடுப்புக்களை செய்யும் என்று வி.புலிகள் எதிர்பார்த்தார்கள். ஆனால் அப்படி ஒன்றும் நடைபெறவில்லை.

அ) போர் நிறுத்த ஒப்பந்தத்தில் சொல்லப்பட்டது போல இராணுவம் தமிழர்களது வீடுகள், பள்ளிக்கூடங்கள், வழிபாட்டுத் தலங்கள், பொதுக் கட்டிடங்கள் போன்றவற்றில் இருந்து முற்றாக விலகும்.

ஆ) இடம் பெயர்ந்து அகதி முகாம்களிலும், நலன்புரி இல்லங்களிலும், உறவினர்கள் வீடுகளிலும் வாழும் ஒரு இலட்சத்து முப்பதினாயிரத்துக்கும் மேலான மக்கள் தங்கள் சொந்த வீடு வாசல்களில் மீள் குடியேறும் பொருட்டு யாழ்ப்பாணக் குடாநாட்டை ஆக்கிர மித்துக் கொண்டிருக்கும் இராணுவம் அதிவுயர் பாதுகாப்பு வலையத்தில் இருந்து பின்வாங்கும்.

இ) இராணுவத்தினால் தமிழ் மீனவர்கள் மீது போடப்பட்ட நேரக் கட்டுப்பாடுகள், தூரக் கட்டுப்பாடுகள், 'பாஸ்" வழங்கும் முறை போன்ற கெடுபிடிகள் நெருக்குவாரங்கள் முற்றாக அகற்றப்படும்.

ஈ) வி.புலிகளுக்கு சாப்பிட இடியப்பம் கொடுத்தார்கள், குடிக்கத் தேநீர் கொடுத்தார்கள் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஆண்டுக் கணக்காக சிறையில் நீதி விசாரணையின்றி அடைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்படுவார்கள்.

வி.புலிகளின் இந்த எதிர்பார்ப்புக்களில் ஒன்றுமே நடைபெறவில்லை. போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டதால் துப்பாக்கிச் சத்தங்கள் கேட்கவில்லையே ஒழிய தமிழ் மக்கள் வாழ்வில் இயல்பு நிலை திரும்பவில்லை. மூச்சு விட முடிந்ததேயொழிய சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியவில்லை.

எனவேதான் வி.புலிகள் தங்கள் விட்டுக் கொடுப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு இனச் சிக்கலுக்கு ஒரு நிரந்தர தீர்வு ஏற்படும் வரை விடுதலைப் புலிகளின் பரந்தளவிலான பங்கேற்புடன் வடக்கு, கிழக்கிற்கான ஒரு அரசியல் நிர்வாகக் கட்டமைப்பை, இடைக்கால நிர்வாகம் ஒன்றை உருவாக்குமாறு கோரியுள்ளார்கள்.

ஆனால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா யப்பான் மாநாட்டில் அரசாங்கமோ வடக்கு, கிழக்கின் அபிவிருத்திக்கான ஏற்பாடுகளுடன் கூடிய ஒரு சபையையே வழங்க முன் வந்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா எதற்கெடுத்தாலும் குழுக்கள் உப-குழுக்களை அமைப்பதில் மிகவும் கெட்டிக்காரராக இருக்கிறார். கடந்த பத்து மாதங்களில் குறைந்தது முப்பது குழுக்காளாவது உருவாக்கி இருப்பார். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நான்கு குழுக்கள் அமைக்கும் யோசனையை தெரிவித்திருக்கிறார்.

எப்போது ஒரு சிக்கலுக்கு முகம் கொடுக்க விரும்பம் இல்லையோ, இழுத்தடிக்க வேண்டுமோ அல்லது கிடப்பில் போட வேண்டும் என்று நினைத்தாலோ அப்போது ஒரு குழுவை அமைத்துவிடுவது அரசுகள் கையாளும் தந்தி;ரமாகும்.

தனியே முடிவு எடுக்க முடியாதவர்கள் குழுவாகக் கூடி தங்களால் ஒரு முடிவும் எடுக்க முடியாது எனத் தீர்மானிக்கிறார்கள்! வி. புலிகள் கேட்ட இடைக்கால நிர்வாகம் வேறு. ரணில் விக்கிரமசிங்கா கொடுக்க முன்வந்த உச்ச சபை, அபிவிருத்தி சபை வேறு. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா அறிவித்த வட-கிழக்கின் அபிவிருத்தி சபை முன்னைய மாவட்ட சபை போன்றது.

இந்தக் குழுவை வி.புலிகள் நிராகரித்தது வியப்பளிக்கவில்லை. அதன் வேகந்தான் வியப்பளிக்கிறது. பேச்சு வார்த்தையின் ஆரம்பக்கட்டங்களில் செய்யப்பட்ட விட்டுக் கொடுப்புக்களுக்கு இனி இடம் இல்லை என்பதையே இந்த வேகம் எடுத்துக் காட்டுகிறது.

வட-கிழக்கின் சிதைந்துபோன கட்டுமானத்தை மீள் கட்டியெழுப்ப, மக்களை மீள் குடியமர்த்த, மக்களது வாழ்வில் இயல்பு நிலையைத் தோற்றுவிக்க ஒரு இடைக்கால நிர்வாகத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவால் கொடுக்க முடியவில்லை என்றால் உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் ஒரு இணைப்பாட்சியை எப்படித் தரப்போகிறார்? எப்போது தரப்போகிறார்?

இந்தச் சூழ்நிலையில் ''விடுதலைப் புலிகள் பேச்சு மேசைக்கு திரும்ப வேண்டும். ஜனாதிபதி, பிரதமர், அரசதரப்பினர், புலிகள் அனைவரும் துணிவுடன் முடிவுகளை எடுத்துச் செயற்பட வேண்டும். பேச்சு மூலம் அமைதித்தீர்வு காணவேண்டும். இதுவே டோக்கியோ மாநாட்டுச் செய்தி"" என்று அமெரிக்க இராசாங்க துணை அமைச்சர் றிச்சார்ட் ஆர்மிடேஜ் மாநாட்டு முடிவில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது கூறியிருக்கிறார்.

பேச்சு வார்த்தை மேசையில் பேசப்படும் விடயங்கள், எடுக்கப்படும் முடிவுகள் நடைமுறைப் படுத்தப்படுவ தில்லை என்பதைக் காரணம் காட்டியே வி.புலிகள் பேச்சு வார்த்தையில் கலந்து கொள்வதை இடைநிறுத்தம் செய்துள் ளார்கள். அதன் பின் வடக்கு, கிழக்கிற் கான ஒரு அரசியல் நிர்வாகக் கட்ட மைப்பு, இடைக்கால நிர்வாகம் ஒன்றை உருவாக்குமாறு வி.புலிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவை கோரியுள்ளார்கள்.

வெறுமனே தாய்லாந்து, யப்பான், நோர்வே போன்ற நாடுகளுக்குப் பறந்து சென்று மேசையில் இருந்து கொண்டு அமைதிப் பேச்சுக் கச்சேரி வைப்பதால் மட்டும் புண்ணியம் இல்லை. மாநாட்டில் எடுக்குப்படும் முடிவுகள் தளத்தில் நிறை வேற்றப்பட வேண்டும். இல்லை என்றால் மீண்டும் அதே மேசைக்குப் போவதில் பொருள் இல்லை.

வி.புலிகள் மீண்டும் அமைதிப் பேச்சு வார்த்தை மேசைக்குப் போக வேண்டும் எனக் கேட்கும் அமெரிக்க துணை அமைச்சர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவையும் சனாதிபதி சந்திரி காவையும் பார்த்து ''வி.புலிகள் இடைக் கால நிர்வாக சபை கேட்பதில் நியாயம் இருக்கிறது. ஒரு நிரந்தர தீர்வை எட்டுவதற்கு முதல்படியாக அப்படியான ஒரு சபையை உருவாக்க தீவிர முயற்சி செய்யுங்கள்"" என்று கேட்டிருக்கலாம். அதுதான் நியாயம். ஆனால் அப்படி அவர் கேட்கவில்லை. அவர்களுக்கு ஒரு நியாயம் வி.புலிகளுக்கு இன்னொரு நியாயமா?

பேச்சு வார்த்தைக்குப் போகுமாறு துணை அமைச்சர் கேட்கிறாரே அமெரிக்கா மட்டும் ஐக்கிய நாடுகள் சபையை ஓரங்கட்டிவிட்டு இராக்மீது அனைத்துலக சட்டத்துக்கு முரணாக தாக்குதல் நடத்தி இன்று அந்த நாட்டை தனது இராணுவப் பிடிக்குள் வைத்திருக்கிறதே இராக் நாட்டின் சனாதிபதி சதாம் குசேனோடு ஏன் பேச்சு வார்த்தை நடத்தி அமைதியான முறையில் சிக்கலுக்கு தீர்வு காணவில்லை? இந்தக் கேள்வியை எங்களாலும் கேட்க முடியும்!

இராக் ரசாயன, உயிரியல் அணுக்குண்டு போன்ற பேரழிவாயுதங்கள் வைத்திருப்பதாகச் சொல்லி இராக் நாட்டின் மீது அமெரிக்கா படையெடுத்தது. இன்று போர் ஓய்ந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால் இ.ன் னும் அந்தப் பேரழிவாயுதங்களை கண்டு பிடிக்க முடியவில்லை!

இராக் நாடு மீது கொத்துக் குண்டுகள், மினி அணுக்குண்டுகள் போட்டதில் 5,000 பொது மக்கள் கொல்லப்பட்டார்கள். அதற்கு அமெரிக்க தரப்பில் ''ஒரு யுத்தத்தில் இப்படிப் பொதுமக்கள் கொல்லப்படுவது தவிர்க்க முடியாது'' என்றுதானே திமிராகப் பதில் சொல்லப்பட்டது?

''எல்லாம் ஊருக்குச் சொன்னேனடி பெண்ணே உனக்கில்லையடி என் கண்ணே"" என்று சொன்ன பாதிரியார் மாதிரி வி.புலிகளுக்குத்தான் அமெரிக்கா வின் துணை அமைச்சர் உபதேசம் செய்கிறார்.

வி.புலிகளை வெளிநாட்டுப் பயங்கரவாதிகள் பட்டியலில் அமெரிக்கா சேர்த்து இருக்கிறது. அமெரிக்காவின் சனாதிபதி புஷ் பிரித்தானியாவின் பிரதமர் பிளேயர் இவர்களைவிட அதிபயங்கரவாதிகள் வேறுயாராவது இந்த உலகில் இருக்கிறார்களா?

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா வி.புலிகள் அமைதிப் பேச்சு வார்த்தையில் இருந்து விலக்கிக் கொண்டால் சிறீலங்காவின் உதவிக்கு அமெரிக்கா, இந்தியா, யப்பான், ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகள் வரும் என அடிக்கடி மேடைகளில் சொல்லி வருகிறார்.

இந்தப் புூச்சாண்டிக்குப் பயப்படுபவர்கள் வி.புலிகள் அல்ல. பயம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள் வி.புலிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவின் சொல்லைக் கேட்டு அப்படியான பிழையை அமெரிக்கா செய்யமாட்டாது என நாம் மனதார நம்புகிறோம். இந்தியா அந்தப் பிழையை விட்டு விட்டு பட்ட பாடு எல்லோருக்கும் தெரியும்.

தமிழ் மக்கள் அமைதி வழியில் ஒரு நியாயமான நீதியான தீர்வையே எதிர்பார்க் கிறார்கள். தமிழ் மக்கள் போரை வெறுக்கிறார்கள். அவர்களே போரினால் ஏற்பட்ட உயிர் இழப்பையும் உடமை இழப்பையும் நேரடியாக தாங்கிக் கொண்டவர்கள்.

இன்று வி.புலிகளை போருக்கு நிர்பந்திப்பதும் நிர்பந்திக்காது விடுவதும் பிரதமர் ரணில் விக்கிரம சிங்காவின் கையிலேயே இருக்கிறது. ஒன்று மட்டும் நிச்சயம். புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது.


கனடா ~நம்நாடு| (13-06-03)
Reply
#4
http://www.virakesari.lk/20030617/headline_news.htm#H1
Reply
#5
சேது வருக களத்திற்கு..துன்னாலையா ..கொக்கா..ஒருவாறு இடம் கண்டுபிடித்துவிட்டீர்கள்
Reply
#6
கண்டு பிடpச்சேன் கண்டு பிடpச்சேன் நண்றி மோகன் தங்களின் பாரிய உதவிக்கு. எனது சேவை தொடரும்.
Reply
#7
எந்த இடத்தில் அடித்தால் எங்கு வலிக்கும் என்பதை புரிந்துகொண்டு அங்கு அடிக்கின்றார்கள் அரசாங்கம் என்று ஓரு பத்திரிகை குறிப்பிடுகின்றது. அது உண்மைதான். இடம் பார்த்து அடித்துக்கொள்வதால் பலதை சாதிக்கலாம். ஆனாலும் அந்த அடி இங்கு செல்லுபடியாகவில்லை. சினக்கின்றார்களேயொழிய இன்னும் சீறவில்லை. சீற மாட்டார்கள்.
[b] ?
Reply
#8
கப்பல்கதையும் புஸ்வானமாகப்போக்குறதுக்கு அரசு முயற்சிக்குது
Reply
#9
<img src='http://www.tamilcanadian.com/eelam/eelam_images/PEACE-2002/rally/jaffan_u_eng.gif' border='0' alt='user posted image'>
Reply
#10
இலங்கையில் நடைபெறுவதெல்லாம் இனத்துவமோதலே தவிர விடுதலைப் போரால்ல என்று வர்ணிப்பவர்கள் ஒருபக்கமிருக்க. இதுவரை தமது மண்மீட்புப் போருக்காக 17600 க்கும் மேற்பட்ட மாவீரர்களை இழந்துவிட்ட நிலையில் சுமார் 20 வருடங்களுக்குப் பின்னர் ஒரு நிரந்தர அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு உறுதிப்பாடு கொண்டு உள்ளனர் என்பது அதன் பலதரப்பட்ட நகர்வுகளிலிருந்து புலப்படுகின்றது.

இதற்கு ஒரு உதாரணமாக கடந்த 24ம் திகதி மட்டக்களப்பில் வெளிநாடுகளில் புலம் பெயர்ந்து வாழுகின்ற எம் உறவுகளுக்கு வசதிகளை ஏற்படுத்தும் வகையில் அவர்கள் திறந்து வைத்துள்ள புலம்பெயர்ந்தோர் தொடர்பகத்தினைக் குறிப்பிடலாம்.




ஆங்கிலேயர்களது கால கட்டங்கள் முதல் கொண்டு இன்றுவரை எத்தனையோ முரண்பாடுகளினை எதிர்கொண்டு வாழ்ந்த தமிழினம் அமைதிவழிப் போரை அளவிலாதளவு நடாத்தி இறுதியில் ஆயதப்போரால் இன்று சர்வதேச உலகில் ஒரு தனித்துவ அரசாக நிமிர்ந்து நிற்கக்கூடிய நிலை உருவாகியுள்ளது.

இத்தனைக்கும் மிகுந்த உறுதுணைகளைச் செய்த மக்களை என்றும் விடுதலைப்புலிகள் மறந்துவிடவில்லையென்பது அவர்கள் செயற்பாடுகள் மூலம் தெளிவாகின்றன. அதில் முக்கியமாக புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்பவர்களைச் சுட்டி மேற்கொள்ளப்;படும் செயற்பாடுகள் குறிப்பிடத்தக்கன.

விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலங்களில் எமது விடுதலைப் போராளிகள் மிகக் குறைந்தளவு வசதிப்பாடுகளுடன் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதற்கான உறுதிப்பாடு அவர்களிடம் தொடர்ந்து இருந்து வந்தது என்பதால் அவர்களால் அதனைக் கொண்டு செல்ல முடிந்தது.

பாரிய ஆயுதப் போராட்டமாக தமிழர் மீதான போராட்டத்தை சிங்கள அரசுகள் முடுக்கிவிட்டவேளை பல்வேறு இடர்பாடுகளைச் சந்தித்த விடுதலைப் புலிகள், தமது தமிழ் உறவுகளையே முற்றுமுழுதாக நம்பி போராட்டத்தை நடத்தி வந்தனர்.

இதனைப் பல்வேறு வழிகளிலும் விடுதலைப்புலிகள் உறுதிப்படுத்தியுள்ளார். அதற்கு அண்மையில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இவ்வருட மாவீரர் தின உரையில் உறுதியுரை கூறியுள்ளார். மக்களின் உரிமையொன்றே எமது நோக்கம் இங்கு நடைபெறும் மண்மீட்புப் போர் வடிவ மாற்றத்தால் அழிந்து விடாது இன்றும் திடமான வளர்ச்சியுடன் தொடரும் என்று பலமாகக் கூறியுள்ளார்.

யாரையும் எதிர்கொள்ளும் சக்தி படைத்த விடுதலைப்புலிகள் அமைப்பின் கட்டமைப்பு இத்தனை பரிணாம வளர்ச்சியை எட்டுவதற்கு முக்கிய பங்களிப்பாகச் செய்தது, செய்து கொண்டிருப்பது தமிழீழப் பிரதேசங்களில் இருந்து வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து அகதிகளாக வாழுகின்ற, தொழில் புரிகின்ற எம் உறவுகள்தான் என்று அவர்கள் தொடர்ந்தும் தெரிவித்து வருகின்றனர்.

புலம்பெயர்ந்து வெளிநாடுகளில்; வாழும் எம் உறவுகளை நினைத்துத்தான் சிங்கள தேசம் மிகுந்த பயம்கொள்கிறது என கடந்த டிசம்பர் 24ம் திகதி மட்டக்களப்பில் புலம்பெயர்ந்தோரின் நலன்களைக் கவனிப்பதற்காகவென்று தொடர்பகம் ஒன்றைத் திறந்து வைத்துப் பேசிய விடுதலைப்புலிகளின் மட்டு-அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் இ. கௌசல்யன் தெரிவித்துள்ளார்.




இதன் உண்மை விடுதலைப் போராட்டத்தின் காலகட்;ட நகர்வுகளின் செலவீனங்களை, மாற்றங்களை, அமைப்புக்களை மீண்டும் மீண்டும் எண்ணிப் பார்க்கையில் புலப்படுவது நிச்சயமானது.

யாருக்கும் அஞ்சாத எம் தமிழ் உறவுகள் இன்றும் தாய்நாட்டை மறவாது வாழ்தலானது நிச்சயமான உண்மை என்பதற்கு அவர்களது நிதி மற்றும் ஏனைய உதவிகளின் மூலம் அனைவருக்கம். தெரிகின்ற விடயம்.

இதனை நினைவு கூர்ந்து இன்று அவர்கள் தம் தாய் நாட்டைப் பார்வையிட ஓடி, ஆடி மகிழக்கூடிய உரிமை புலம்பெயர்ந்தோருக்கும் உண்டு. அவர்கள் தம் தேசத்தில் எவ்வித கூச்சமும் இன்றி உலா வரவேண்டும் என்ற நோக்கில் இத்தொடர்பகம் அமைக்கப்படுகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.


யாரையும் நம்பி எம்மினம் இல்லை என்ற நிலையை உலகில் உருவாக்கிவிட்ட விடுதலைப்புலிகள் இயக்கம் என்றும் மறவாதிருக்க வேண்டும் என்ற எண்ணம் வெளிநாட்டில் தஞ்சம் புரிந்தோரது நெஞ்ச உணர்வுகளில் என்றம் நிலைத்திருக்கும்.

யாருக்கும் பணியாத நம் தமிழினம் மண்மீட்புப் போரில் வெற்றியீட்ட வேண்டும் சுயாட்சி, சுயநிர்ணய உரிமை, தேசிய இறமை என்பவற்றுடன் வாழ வேண்டும் என்பது புலம்பெயர்ந்து அந்நாடுகளில் இம்சைகளை அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே உணர்வு புூர்வம் என சில புலம்பெயர்ந்தோர் புலம்புவது உண்மையானதாகி இருப்பதும் இதனால்தான் என்பது உறுதி.

விடுதலைப்புலிகள் தமது மாற்றீடான, வித்தியாசப்பாடான, மேலான நகர்வுகளில் தான் தமது வெற்றிகளைக்குவித்த வண்ணமுள்ளனர். இதுவரை எந்தவொரு போராட்டத்திலும்; எதிரியின் பலம் தெரிந்திருந்தும் துனிந்து போருக்கு ஓய்வு கொடுத்து அமைதிவழி தேடிய சந்தர்ப்பங்கள் இல்லை.

ஆனால் விடுதலைப் புலிகள் தமக்கு எதிரான சிங்கள அரசாங்கத்தின் சரிவுகளை, நன்கு திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் அவர்களின் யத்த முனைப்புக்களை மிகச் சாதுர்யமாக முறியடித்தனர் அதற்கு எதிராகப் போர் நிறுத்தப்பிரகடனம் செய்தனர்.

போரிட வேண்டியள்ளது போர் நிறத்தமா என திகைத்த சிங்கள அரசு அதனையும் பொருட்படுத்தாது போரிட்டது. தொடர்ந்தும் போர்நிறுத்தத்தை விடுதலைப்புலிகள் அமுல்படுத்திக் கொண்டிருந்தனர்.

காலம் கடந்தது இராணுவம் தமது தற்காப்புக்களைக் கவனிக்காத படிக்கு மீண்டும் சிறிலங்கா அரசு எதிர்பார்க்காதவாறான தாக்குதல் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டது. பல வருடங்களாக ஊர்ந்துசென்று கைப்பற்றிய தமிழீழப் பிரதேசங்களை இராணுவத்தினரிடமிருந்து அவர்கள் தம் வசமாக்கிக் கொண்டனர். இவையெல்லாம் நிச்சயமாக எம் உறவுகளின் உதவு கரங்களால் ஆனது. என புலிகள் அமைப்பு உணரைத்துக் கொண்டிருக்கிறது.

புலம்பெயர்ந்தோர் சுதந்திரமாக அச்சமின்றிப் பழகி, மகிழ அனைத்து வசதிபாடுகளையும் மேற்கொள்ளவேண்டும் என்பதற்காகத் தமது அமைப்பு இத்தனை காலமும் துன்பங்களை சுமந்த போது தோள் கொடுத்தோரை மதிக்க வேண்டும் என்பதற்காக இந்தத் தொடர்பகம் புலம்பெயர்தோர் நலனுக்காக உதவிகளைச் செய்யவுள்ளது எனத் தெரிகிறது.

மீண்டும் ஒருயுத்தம் வேண்டாம் என்ற நிலைப்பாடு அரச, இராணுவ, மற்றும் மக்கள் தரப்புகளிடையே பெரும்பாலும் மேலோங்கியுள்ள நிலையில் இனத் துவேசச் செயற்பாடுகளில் சில விசமிகள் ஈடுபடுகின்றனர். இது சுயநல நோக்கமேயன்றி வேறில்லை என சமாதான நோக்கர்கள் பலர் வர்ணித்துவரும் இச்சந்தர்ப்பத்தில் இப் புலம்பெயர்ந்தோர் தொடர்பகம் சமாதான நோக்கில் விடுதலைப்புலிகளின் பார்வையை வெளியுலகுக்கு ஒருவழியில் எடுத்துக்காட்டும
Reply
#11
சேது இது சொந்தமா எழுதினதோ இல்ல எங்கயும் சுட்டதோ?

Tell me where it was hacked FROM?
Please please please ......................
Reply
#12
சுட்டதோ பொரிச்சதோ கருத்துக்களத்திற்கு பிரயோசனமானது.
Reply
#13
கொழும்பில் தமிழ் இளைஞர்களின் கைது பற்றி சிறிலங்காவின் உள் துறை அமைச்சர் வெளியிட்ட கருத்தில் தாங்கள் பாதாள உலகக் கோஷ்டியினரைத்தான் தேடி பிடிப்பதாகக் கூறியிருப்பது கொழும்பில் உள்ள தமிழர்கள் என்ன பாதாள உலகத்தினரோ எனக் கேட்க வைக்கிறது! ஏனேனில் அவரின் கருத்தும் நடவடிக்கையின் மையத்தையும் பார்க்கும் போது அப்படிதான் தோன்றுகின்றது! இது தமிழ் மக்களை இழிவு படுத்தும் ஒரு அமைச்சரின் கூற்று ஆகவே கருதப்படவேண்டும்! அத்துடன் பாதாள உலகத்தினர் தமிழர்கள் வாழும் பகுதிகளில் தான் வாழ்கின்றனரோ..? அல்லது என்ன நோக்கம் கருதி இப்படியான அடக்குமுறைகளை அரசு கட்டவிழ்த்துவிட்டுள்ளது. இது தொடர்பில் அமெரிக்க தூதரகமோ அல்லது எந்த ஒரு தூதரகமோ கவனம் செலுத்தாது அரசின் அறிக்கைகளுக்கு தலையாட்டிக் கொண்டு தமிழ் மக்களுக்கு மட்டும் உபதேசம் செய்ய முணைவது என்ன அர்த்தத்தில் என்ற கேள்வியும் எழுகிறது! வேதனைகளை அநுபவிக்கும் மக்களுக்குத்தான் சமாதானமே தவிர அணிலாருக்கும் அம்மையாருக்குமல்ல...அப்பாவி சிங்கள தமிழ் மக்களை ஏமாற்றி இவர்கள் போடும் நாடகம் தான் ஏன்.....?! அணிலார் இறுதிப் பாராளுமன்றத் தேர்தலில் கொழும்பில் கூறியது என்ன இப்பொழுது செய்வது என்ன ....இவரா தமிழ் மக்களுக்கு ஆட்சி அதிகாரம் வழங்கப் போகிறார்...?! இன்று பாதாள கோஷ்டிகளான தமிழர்கள் நாளை என்னவாவார்கள்....?!

இச் செய்தியையும் பாருங்கள்.....

http://thatstamil.com/news/2003/06/30/lanka.html

இவ்விணைப்பு இக் கைதுகள் மற்றைய தேசத்தவர்களால் பார்க்கப்படும் பார்வைக்கும் சிறிலங்கா ஆட்சிப்பீடம் தரும் விளகத்துக்கும் இடையே உள்ள வேற்றுமையைக் காட்டத்தரப்படுகிறது...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#14
ஆலயத்தில் நின்றுகொண்டிருந்த சிறுவன் கடத்திச்செல்லப்பட்டு பாலி யல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப் பட்டுள்ளான். இது தொடர்பாக இளைஞர் ஒருவர் தேடப்பட்டு வருகிறார். சங்கானை, காளிகோயிலடியைச் சேர்ந்த பத்து வயதுச் சிறுவன் ஒரு வனே நேற்றுமுன்தினம் இரவு 9 மணியளவில் கடத்தப்பட்டு துன்புறுத்த லுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளான். தனது வீட்டிற்கு அருகில் உள்ள ஆலயத் திருவிழாவிற்கு பெற்றோரு டன் சென்ற மேற்படி சிறுவன் ஆலய வீதியில் ஏனைய சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் அங்கு வந்து சிறுவர்களுக்கு குளிர்பானம் வாங்கிக் கொடுத்துள்ளார்.
பின்னர் அந்த இளைஞர் பிரஸ்தாப சிறுவனை மட்டும் விளையாட்டுப் பொருள்கள் வாங்கித் தருவதா கக் கூறி தனியாக அழைத்துச்சென்று வயல் வெளி ஒன்றில் வைத்து சிறுவனை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியுள்ளார்.
நீண்டநேரமாகியும் சிறுவனைக் காணாத பெற்றோர் ஊர் மக்களுடன் சேர்ந்து பல்வேறு இடங்களிலும் தேடியபோதும் சிறுவனைக் காணவில்லை.
நேற்று அதிகாலை 4 மணியளவில் குறிப்பிட்ட ஆலயத்துக்கு சற்றுத் தொலைவில் சனநடமாட்டம் அற்றபகுதியில் அந்தச் சிறுவன் அழுதுகொண்டு நின்றவேளை அப்பகுதி வழியே சென்றவர்கள் சிறுவனை வீட்டுக்கு அழைத்துச்சென்ற னர்.
இச்சம்பவம் தொடர்பாக மானிப்பாய் பொலீஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நன்றி உதயன்
Reply
#15
ஓ..! என்னருமை யாழ் நிலமே எங்கே போகிறது உன் மக்களின் செயல்கள். நாகரிகமாய் வாழ்ந்த ஒரு இனம் இப்படி தறிகெட்டு வாழப்பழகிக் கொண்டுள்ளதே.

அன்புடன்

சீலன்
seelan
Reply
#16
P.S.Seelan Wrote:ஓ..! என்னருமை யாழ் நிலமே எங்கே போகிறது உன் மக்களின் செயல்கள். நாகரிகமாய் வாழ்ந்த ஒரு இனம் இப்படி தறிகெட்டு வாழப்பழகிக் கொண்டுள்ளதே.
எல்லாம் போராடி வரவழைத்ததுதான்.. பட்டியல் பலதும்.. போட்டாங்கள்.. 83 க்குமுதலும்.. 83க்குப் பிகும்.. ஒப்பிட்டு.. பட்டியல்.. போடுங்கோ.. நிதானமா.. சிந்தியுங்கோ.. பிறகு.. எழுதுங்கோ. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#17
83க்கு முதல் அடிமையா வாழந்தவை எங்கடை மூதாதையர். அதுக்கு பிறகு வந்த சுதந்திரத்துக்கான போரை பற்றி புூரண விளக்கம் அல்லாதவர்கள். இங்கு தேவையில்லாமல் புலம்பிக்கொண்டிருக்கிறார்காள். என்னை உள்வீட்டுகாறர் என்று சொல்லுகிறார்கள் இந்த யாழ்கழத்துக்கு புதியவன் வந்ததும் நன்றாவே எழுதிக் கொண்டிருந்தேன். இடையில் குறுக்கிட்டு என்னையும் குழப்பியிருக்கிறார்கள் கோபத்தை வரச் செய்தார்கள் பின்னர் தமது கோபத்தை யாழ்கள பொறுப்பாளர் மீது பாய்கிறார்கள் அப்போது தான் என்னை உள்விட்டார் என்கிறார்கள். இப்படி புலம்பி மற்றவர்களை குளப்புவர்களுக்கு போரட்டத்தின தார்பரியம் என்னவென்று விளங்கும் நான் பக்க சார்பாக கதைக்க வரவில்லை உள்ளதைத்தான சொல்கிறேன் சின்னவயது போரட்டம் பற்றி என்ன தெரியும் என்ற கேள்வி எழலாம் தமிழீழ போரட்டத்தையோ அல்லது இன்று சுதந்திரம் அடைந்திருக்கும் சிலி மற்ரும் எந்த இனத்தவன் சுதந்திரத்துக்காக போராட்டம் நடத்துகிறானோ அதனை அறிவதற்கு வயது ஒரு மக்கிய காரணம் அல்ல ஆhவம் வேட்கை பக்கசார்பற்ர கொள்ளை இப்பபடியானசில இருந்தால் போதும் இதில் கூட சிவற்ரை கொப்பி பண்ணி அதற்க்கு கூட தேவையில்லாமல் கருத்து எழுதுபவர்களும் இருக்கிறார்கள்.
நான் கூறுவது ஒரு இனம் சுதந்திரத்திற்காக போராடுகிறது என்றால் அந்த போரட்டத்துக்கான எநஇத தலமையும் அந்த இனத்தின் கலை பண்பாடு என்பவற்ரை சிதைக்க எண்ணாது. :twisted: :twisted: :twisted:
. . . . .
Reply
#18
S.Malaravan Wrote:83க்கு முதல் அடிமையா வாழந்தவை எங்கடை மூதாதையர். அதுக்கு பிறகு வந்த சுதந்திரத்துக்கான போரை பற்றி புூரண விளக்கம் அல்லாதவர்கள். இங்கு தேவையில்லாமல் புலம்பிக்கொண்டிருக்கிறார்காள். என்னை உள்வீட்டுகாறர் என்று சொல்லுகிறார்கள் இந்த யாழ்கழத்துக்கு புதியவன் வந்ததும் நன்றாவே எழுதிக் கொண்டிருந்தேன். இடையில் குறுக்கிட்டு என்னையும் குழப்பியிருக்கிறார்கள் கோபத்தை வரச் செய்தார்கள் பின்னர் தமது கோபத்தை யாழ்கள பொறுப்பாளர் மீது பாய்கிறார்கள் அப்போது தான் என்னை உள்விட்டார் என்கிறார்கள். இப்படி புலம்பி மற்றவர்களை குளப்புவர்களுக்கு போரட்டத்தின தார்பரியம் என்னவென்று விளங்கும் நான் பக்க சார்பாக கதைக்க வரவில்லை உள்ளதைத்தான சொல்கிறேன் சின்னவயது போரட்டம் பற்றி என்ன தெரியும் என்ற கேள்வி எழலாம் தமிழீழ போரட்டத்தையோ அல்லது இன்று சுதந்திரம் அடைந்திருக்கும் சிலி மற்ரும் எந்த இனத்தவன் சுதந்திரத்துக்காக போராட்டம் நடத்துகிறானோ அதனை அறிவதற்கு வயது ஒரு மக்கிய காரணம் அல்ல ஆhவம் வேட்கை பக்கசார்பற்ர கொள்ளை இப்பபடியானசில இருந்தால் போதும் இதில் கூட சிவற்ரை கொப்பி பண்ணி அதற்க்கு கூட தேவையில்லாமல் கருத்து எழுதுபவர்களும் இருக்கிறார்கள்.
நான் கூறுவது ஒரு இனம் சுதந்திரத்திற்காக போராடுகிறது என்றால் அந்த போரட்டத்துக்கான எநஇத தலமையும் அந்த இனத்தின் கலை பண்பாடு என்பவற்ரை சிதைக்க எண்ணாது.
இஞ்சாபார்.. முடிச்சுப்போட்ட குரங்கு.. அடிமையில்லாமல்..இருக்கிற குரங்கு.. குய்யோ.. முறையோ.. தினமும்.. கத்தி.. பாயும் விரிச்சு.. எரும்புத்துண்டும்.. பங்கிறைச்சியும்.. நாறவச்சுக்கொண்ட.. வாற குட்டைநாயையும் திரத்திக்கொண்டிருக்கிற பிச்சைக்கு அலையிற குரங்கு.. 83 ஆம் ஆண்டுக்குமுதல் எப்பிடி இருந்தம் எண்டு.. ஒப்பிட்டுப்பார்த்துக் கருத்து எழுதத் தெரியாமல்.. கருத்து எழுத வந்திட்டுது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
சுதந்திரமே தெரியாத குரங்கு.. சென்றி செக்பொயின்ருகள்.. பாஸ்கள்.. தான் சுதந்திரமெண்டு .. சொல்லுற புரங்கு.. கருத்து எழுத வந்திட்டுது.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
கருத்துச்சொன்னால்.. முடிச்சுப்போட்டு முடிக்க வேணும் என்டு சுதந்திரம் பேசிற குரங்கு கருத்து எழுத வெளிக்கிட்டுது.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#19
மதி ஐயா என்ன சொல்லவருகிறீர்கள். குரங்கு என்பது மட்டும்தான் விளக்கமாகவுள்ளது. மற்ற வார்த்தைககள் ஏன் எழுதப்பட்டிருக்கிறது என்பது புரியவில்லையே. புரியும்படியாக எழுதுங்கள். திட்டுதல் மடஇடம் கருத்தாகுமா?
Reply
#20
கபிலன் Kabilan Wrote:மதி ஐயா என்ன சொல்லவருகிறீர்கள். குரங்கு என்பது மட்டும்தான் விளக்கமாகவுள்ளது. மற்ற வார்த்தைககள் ஏன் எழுதப்பட்டிருக்கிறது என்பது புரியவில்லையே. புரியும்படியாக எழுதுங்கள். திட்டுதல் மடஇடம் கருத்தாகுமா?
நன்றி கபிலன்..
உங்களுக்கு விளங்கவில்லை என்பது.. மனவருத்தத்துக்குரியது.. இந்தக் கருத்துக்களத்தில் பலரும் பலவிதமாகக் கருத்து எழுதுகிறார்கள்.. அவரவருக்கு.. அவரவர்.. பாஷையில்; எழுதும்போதுதான்.. புரிகின்றது.. அதனால்த்தான்.. எழுதியவர் பாஷையிலே.. பதிலும் அமைந்தது.. திட்டல் ஒன்றுமில்லை..தமிழீழம்.. கருத்திலுள்ள கருத்துக்களை வாசித்துப்பாருங்கள.. நான் எழுதியிருப்பது.. அவர்களுக்குப் புரிவதுபோல.. உங்களுக்கும் புரியும்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply


Forum Jump:


Users browsing this thread: 3 Guest(s)