Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ரஹ்மான்-வைரமுத்துவை மீண்டும் இணைத்த மணிரத்னம்
#1
<img src='http://thatstamil.com/images20/cinema/manirathnam-290.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://thatstamil.com/images20/cinema/vairamuthu-320.jpg' border='0' alt='user posted image'><img src='http://thatstamil.com/images20/cinema/rahman-400.jpg' border='0' alt='user posted image'>


சில வருடங்களாகவே பிரிந்திருந்த ரஹ்மான்வைரமுத்து ஜோடியை கன்னத்தில் முத்தமிட்டால் மூலம் மீண்டும் சேர்த்தார் மணிரத்னம். இதைத் தொடர்ந்து மீண்டும் பிரிந்தனர். அவர்களை ரஜினி தனது பாபா மூலம் ஒன்றாய் சேர்த்தார்.

ஆனால், லண்டனில் உட்கார்ந்து கொண்டு டெலிபோனில் டியூன் சொல்லி பாடல் கேட்டார் ரஹ்மான். இது எனக்கு ஒத்துவராது என வைரமுத்து விலக, வாலி மட்டும் அட்ஜஸ்ட் செய்து பாட்டெழுதித் தந்தார். இதையடுத்து ரஜினி தலையிட்டு சமாதானம்பேசி டெலிபோனில் வந்த ரஹ்மானின் டியூனுக்கு வைரமுத்துவை பாட்டெழுத வைத்தார்.

இந்தப் படத்தில் ரஹ்மானும், வைரமுத்துவும் இணைந்து பாடலை வெளியிட்டாலும், இருவருக்கும் இடையிலான கசப்புணர்வு மேலும் அதிகரித்தது. இதனால் மீண்டும் இருவருமே விலகியே நின்று கொண்டனர். ரஹ்மான் தமிழில் மியூசிக் போடுவதே அரிதானது.

கே.பாலசந்தர் இயக்கிய பார்த்தாலே பரவசத்துக்கு பாட்டெழுத வைரமுத்துவை ரஹ்மான் சேர்க்கவில்லை. அதே போல ஷங்கரின் பாய்சிலும் வைரமுத்துவுக்கு நோ சொன்னார். தனது கண்களால் கைது செய் படத்தில் வைரமுத்து பாட்டெழுத வேண்டும் என்று அதன் இயக்குனர் பாரதிராஜா வைத்த வேண்டுகோளையும் ரஹ்மான் நிராகரித்தார்.

இப்படி ரஹ்மான்வைரமுத்து லடாய் தீவிரமாக இருந்த நிலையில் தான் ஆய்த எழுத்தைத் தொடங்கினார் மணி ரத்னம். இந்தப் படத்துக்கு ரஹ்மான் தான் இசை என்று முடிவு செய்த மணி, பாடல்களை வைரமுத்து தான் எழுத வேண்டும் என்பதிலும் தீர்மானமாக இருந்தார். இருவரும் அதற்கு இசைய மறுத்தாலும், மணியின் அன்புக் கட்டளைக்கு இருவருமே பணிந்துவிட்டனர்.

பொதுவாக மணிரத்னம் படம் என்றாலே ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தனி குஷி பிறந்து விடும். இந்தப் படத்திலும் தனது ராஜ்ஜியத்தை அவர் நிலைநாட்டியுள்ளாராம். வைரமுத்து கூட்டணியில் 5 பாடல்கள் மிகச் சிறப்பாக வந்துள்ளனவாம்.

ரஹ்மான் வீட்டுப் புல் வெளியில் நடுநிசியில் மணியுடன் உட்கார்ந்து வைரமுத்து எழுதிய ஒரு பாடல் ரொம்பவே பேசப்படும் என்கிறார்கள்.

''ஜன கண மன

ஜனங்களை நினை

கனவுகள் வெல்ல

காரியம் துணை

ஒளியே வழியாக

மலையே படியாக

பகையோ பொடியாக

இனி ஒரு 'இனி ஒரு' விதி செய்வோம்

விதியினை மாற்றும் விதி செய்வோம்

ஆயுதம் எடு

ஆணவம் சுடு

தீப்பந்தம் எடு

தீமையை சுடு

ஆயிரம் இளைஞர்கள் துணிந்து விட்டால்

ஆயுதம் எதுவும் தேவையில்லை

அச்சத்தை விடு

லட்சியம் தொடு

வேற்றுமை விடு

வெற்றியைத் தொடு.....''

இப்படிப் போகும் பாடலை ரஹ்மானே பாடியுள்ளார்.

இந்தப் படத்தில் சூர்யா, மாதவன், சித்தார்த் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்க அவர்களுக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மின், த்ரிஷா, இஷா தியோல் நடிக்க, விறுவிறுப்பாய் ஒரு இளமை கலாட்டாவை படமாக்கிக் கொண்டிருக்கிறார் அதிகம் பேசாத மணி ரத்னம்.

'விருமாண்டி' படத்தையடுத்து இப்படத்திலும் வசனங்களை டப்பிங் இல்லாமல் நேரடியாக ஒலிப்பதிவு செய்கிறார்கள். இதற்காக ஹாலிவுட்டின் முன்னணி ஆடியோகிராபர் ராபர்ட் டெய்லரின் உதவியை நாடியுள்ளார் மணி.

<img src='http://thatstamil.com/images20/cinema/trisha-40.jpg' border='0' alt='user posted image'>
த்ரிஷா (kuruvikal's favourite actress...currently)


thatstamil.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)