Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வைரமுத்துவுக்கு ஒரு விருது...
#1
<b>சாகித்ய அகாடமி விருது பெற்றார் வைரமுத்து</b>

<img src='http://thatstamil.com/images20/cinema/vairamuthu-300.jpg' border='0' alt='user posted image'>

கள்ளிக்காட்டு இதிகாசம் நாவலுக்காக கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுக்காக நாடு முழுவதும் 22 மொழிகளில் இருந்து கவிதை, நாவல், சிறுகதை, நாடகம், விமர்சனம் ஆகிய பிரிவுகளில் படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அதில் ஆனந்த விகடன் இதழில் வைரமுத்து தொடர்கதையாக எழுதிய கள்ளிக்காட்டு இதிகாசம் நாவல் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

விருதுடன் நினைவுப் பரிசையையும், ரூ.50,000 ரொக்கப் பணத்தையும் சாகித்ய அகாடமி தலைவர் கோபிசந்த் நாரங் வைரமுத்துக்கு வழங்கினார்.

பின்னர் வைரமுத்து கூறுகையில், வட்டார மொழி வழக்கைப் பயன்படுத்தியதுதான் நாவலின் சிறப்பாகும். விருது வழங்கப்பட்டபோது, எனக்கு மாலை அணிவிக்கப்பட்டது. டெல்லிப் பூக்கள் என்னை அலங்கரித்தன. அப்போது நான் கள்ளிப்பூக்களைத்தான் நினைத்தேன். அந்தப் பூக்கள் இல்லாமல் இந்த டெல்லிப் பூக்கள் இல்லை.

இன்னொரு முறை இப்படி எழுத முடியுமா என்று கேட்கிறார்கள். இதுதான் என் நாவலுக்குக் கிடைத்த உண்மையான விருதாகும். இன்னொரு இதிகாசம் படைப்பதற்கான கரு கிடைத்துள்ளது. அது என்னவென்று இப்போது சொல்ல மாட்டேன் என்றார் வைரமுத்து.

கலைஞர் வாழ்த்து:

இந் நிலையில், திமுக தலைவர் கருணாநிதி முரசொலியில் வைரமுத்துவை வாழ்த்தி எழுதியுள்ளார். அவர் தனது வாழ்த்தில், நடந்த கதையை நடமாடும் தமிழில் நனைத்துக் கொடுத்துள்ள திறமையை நினைத்து இந்த விருது போதுமானதல்லவே என்ற மனக்குறையுடன் தம்பியை வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

-------------
thatstamil.com

<b>விருது பெற்ற கவிஞனுக்கு எங்கள் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்...!</b>
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
ம் வாழ்த்துக்கள் கவிப்பேரரசே !

இவ்விருது தமிழிற்கு கிடைத்த விருது
உன் தாய் மண்ணிற்கு கிடைத்த விருது
உனக்கு முலைப்பால் ஊட்டி தமிழ்ப்பாலாய் ஓடவைத்த தாயிற்கு கிடைத்த விருது
விருதுபெற்றவன் நீ நெஞ்சை நிமிhத்தி நடைபோடுகின்றது தமிழ்
வாழ்க தமிழ்
வளர்க உன் பணி

காவியத்திற்கு இந்த கரவைப்பூவின் வாழ்த்துக்கள்


சமீபத்தில் வாசித்த புத்தம் கள்ளிக்காட்டு இதிகாசம்

காசித்திய அகடாமி விருதுபெற்ற கள்ளிக்காட்டு இதிகாசம். புலம்பெயர்ந்த கரைபுரண்டோடிய தண்ணீர் பல கண்ணீர் சுமந்த கதை.

வாசிக்கும்போது எம் முன்னே நாம் அனுபவித்த கிராமிய வாசம். நாம் அனுபவித்த தோட்டக்காற்று. என் கால் அணிந்த வயல்ச்சேறு. எல்லாமே எமக்கு நடந்து போல ஓர் ஈர்ப்பு. ஒவ்வொரு தமிழ் மகனும் கட்டாயம் வாசிக்கவேண்டிய ஓர் புத்தகம். புத்தகம் என்று சொல்வதிலும் பார்க்க ஒர் உண்மைவிளம்பி என்று சொல்லிக்கொள்ளலாம். பேயத்தேவர் என்ற முதியவர் என்முன்னே தாய்வழிப்பாட்டனராய் வந்து செல்கின்றார். எத்தனை செல்வங்கள் கிடைக்கப்பெற்றலாம் எத்தனை இன்பங்கள் பெற்றுக்கொண்டாலும் தாய்மண் என்பது எமக்கு தனித்து கிடைத்த ஓர் இன்பம். அதன் பாசத்தை ஈர்ப்பை என்றுமே வார்த்தைகளால் புரிய வைக்கமுடியாது. எத்தனையோ புத்தகங்கள் வாசித்திருக்கின்றேன் .இருந்தும் இந்த இதிகாசம் என் இதயத்தை ஒர் உலுப்பு உலுப்பிச்சென்றுள்ளது

திருணம் செய்து வைத்துக்கொள்வதால் தாய் பிள்ளை உறவு அறுவதில்லை. அது காலம் காலமாய் தொடரும் என்பதற்கு பேயத்தேவர் ஒர் உதாரணம்.

சின்ன வயது காதல் அதுவும் முதல் காதல் என்றுமே யாராலும் மறைக்கமுடியாது என்பதற்கும ;பேயத்தேவர்தான் உதாராணம். சாதிப்பிரச்சினை தீண்டார் தீயலார் என பேதம் காட்டி இரு உள்ளங்களை சிறிய வயதில் பிரித்த போதும் காலம் அவர்களை இணைத்தது விந்தை.

இதிகாசத்தை வடித்துவிட்டு வைரமுத்து அவர்கள் எப்படி இளைத்துப்போயிரப்பாரோ அதைவிட நான் அதை வாசித்து இளைத்தேன். கண்முன்னே அதில் வரும் காட்சிகள் தோன்றி மறைகின்றன.

அந்த மாபெரும் கவிஞனுக்குள் இப்பயொரு கதாசிரியன் இருப்பது ஆச்சரியம்.

புலம்பெயர் உறவுகள் எல்லோரும் கட்டாயம் வாசிக்கவேண்டிய புத்தகம் கள்ளிக்காட்டு இதிகாசம்.

[/color]

http://www.yarl.net/?q=paranee
[b] ?
Reply
#3
எங்கள் வாழ்த்துக்களும் அவரை சென்றடையட்டும்.
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)