Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மௌனத்திற்கு அர்த்தம் என்ன ?
#1
மௌனத்திற்கு அர்த்தம் என்ன ?


வார்த்தைகள் விழுங்கி
பார்வைகள் புதைக்கும்
மௌனத்திற்கு அர்த்தம் என்ன ?

இதயத்தினுள்ளே ஒரு
புூ விழும் உணர்வுகள் தோன்றும்
மௌனத்திற்கு அர்த்தம் என்ன ?

இதழ்கள் மூடி புன்னகைத்து
செவிமடல் சிவக்க நாணி நிற்கும்
மௌனத்திற்கு அர்த்தம் என்ன ?

மண்ணின் மார்பில் கோலம்போட்டு
பாதம் தேய மண்ணை நோக்கி
கவிழ்ந்து நிற்கும் பெண்மையின்
மௌனத்திற்கு அர்த்தம் என்ன ?

கண்கள் செருக
கரங்கள் பிணைய
இதழ்கள் இணையும்
முத்தத்தின் போது தோன்றும்
மௌனத்திற்கு அர்த்தம் என்ன ?

வானின் மஞ்சத்தில் பள்ளிகொள்ளும்
பளிங்கு நிலாவை பார்வை வெறிக்க
தலையை வருடி உறங்க மறுக்கும்
விடலையின் மௌனத்திற்கு அர்த்தம் என்ன ?

விசையின் மீது கரம்வைத்து
இருளை வெறித்திருக்கும்
போராளியின் மௌனத்திற்கு அர்த்தம் என்ன ?

கடலின் மீது து}ண்டில் வீசி
அலையை ரசித்துக்கொண்டே
து}ண்டில் அசையும்வரை காத்திருக்கும்
மீனவனின் மௌனத்திற்கு அர்த்தம் என்ன ?

மண்ணின் மார்பில் முக்குளித்து
மூச்சுத்திணற வெளிவரத்துடிக்கும்
விதையின் மௌனத்திற்கு அர்த்தம் என்ன ?

மலர்களுடன் பேசிப்பார்த்தேன்
அர்த்தம் கிடைக்கவில்லை
நிலவிடம் இரந்து கேட்டேன்
விடை பகரவில்லை
உன்னிடம் கேட்கின்றேன்
மௌனத்தின் அர்த்தம் என்ன ?

கொலுசினால் பேசுகின்றாய்
கைவளையல்களால் மொழிகின்றாய்
மௌனத்தின் அர்த்தம் கேட்டேன்
மௌனத்தினால் கொல்கின்றாயே !

கரவை பரணீ
26-06-2003
[b] ?
Reply
#2
நீ மௌனமாகவே இருந்து விடு
அழுவதாக
சிரிப்பதாக
சிந்திப்பதாக
நாணுவதாக
உனக்குள் நீயே
பேசிக்கொள்வதாக.
அடடே எத்தனை
அர்த்தங்கள் எனக்குள்.

உன் மௌனங்களுக்குள்
மூழ்கி எழும்போது
தினம் தினம்
நான் புதிதாய் பிறக்கிறேன்.

நளாயினி தாமரைச்செல்வன்.
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#3
வாயால் பேசு
மெளனத்தால் மொழி
வெறும் பேச்சும் வேண்டாம்
வெறும் மெளனமும் வேண்டாம்
நீ சிலையல்லவே
எப்போதும்
சிங்காரியாயிரு
அதுதான் உன்னை
உலகுக்கு
அடையாளம் காட்டும்!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
ஏன் பிறந்தோம் என்கிறாயா ?
இல்லை ஏன் அமைதியானோம்; என்கிறாயா ?

நிஜம்தான் இப்போதைக்கு நாங்கள்
விடை காணாத புதிர்கள் தான்..

ஆனால்

நாளையொரு நாள் விடையும்
விடுதலையும் கண்ட சுதந்திரப்
பறவைகளாய் நிச்சயம் உதிப்போம் !
அப்போது கேட்கிறேன் - நீ உன்
மௌனத்தைக்கலைத்து எமக்காக
வாழ்த்தி நிற்பதற்கு.......... -

அதுவரை
நீ மௌனமாகவேயிரு !

உன் மௌனத்திற்கு ஆயிரம் அர்த்தங்கள் இருந்துவிட்டுப்போகட்டும்.

மறந்து விடாதே......

நாளையொருநாள் விடுதலையின்
களிப்பில் உன்னையொருமுறை
உசுப்பிப்பார்ப்பேன் !

எனக்காக உன் மௌனத்தை
கலைப்பாய் என்று நினைக்கின்றேன்.

மௌனமாய் வீற்றிரு !
காலம் கை கூடும் வரை.

அதுவரை........
அன்போடு - வை-யா-புரியிலிருந்து ஒரு மனிதன் வையாபுரியாக !
Reply
#5
அனைத்துக்கவிகளின் உணர்வுகளுக்கும் பாராட்டுக்கள்.
Reply
#6
மௌனமாய் இருந்தவரை தமிழனை
உலகுக்குத் தெரியவில்லை
தமிழனவன் எப்போ மௌனம் கலைத்தானோ
உலகம் அவனைக் கண்டு கொண்டது
ஆயுதம் தமிழனை இன்னும் உறுதியாக்கியது
மௌனம் என்பது புரட்சியின் வெளிப்பாடோ?
இன்றும் அன்னியனின் அட்டாகாசத்துக்கு
அண்ணணின் அடக்கமான மௌனம் ஏனே?
மௌனம் என்ற பொறுமை அது வெடிக்கும் போது
புரட்சியின் புூரணம் புரியும் உலகை ஆழும்
புத்தியீவ அரசுகளும் அறியும் பார்
. . . . .
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)