Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சகிக்க முடியாத கொடூரம்!!!
#1
<b>
கொழும்பில் கைது செய்யப்பட்ட 5 தமிழர்களின் தலை துண்டிப்பு</b>

சிறிலங்கா தலைநகர் கொழும்பில் தேடுதல் நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டு காணாமல் போன 5 தமிழர்களது தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.


அவிசாவளை சிறிலங்கா காவல்துறை பிரிவுக்குட்பட்ட புவாக்பிட்டிய மற்றும் தெகியோவிட்ட ஆகிய இடங்களில் இந்த தலையில்லாத உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த சடலங்கள் தமிழ் இளைஞர்களது சடலங்களாக இருக்கலாம் என்று கருதுவதாக அப்பிரதேச சிறிலங்கா காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அனைத்தும் ஆண்களின் சடலங்கள் என்றும் அவர்களது உடைகள் பெரும்பகுதி களையப்பட்டும் பாரிய வெட்டுக் காயங்களும் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் தொடர்பாக சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு மலையக மக்கள் முன்னனியின் தலைவர் பெரியசாமி சந்திரசேகரன் கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.

மேலும் திருகோணமலையிலிருந்து கொழும்பு செல்லும் பல பயணிகள் கைது செய்யப்பட்டு அதன் பின்னர் காணாமல் போய் வருவதாகவும் அந்தக் கடிதத்தில் சந்திரசேகரன் கூறியுள்ளார்
[size=14] ' '
Reply
#2
இப்படியே போனால் எங்க போய் தமிழன் நிக்கப்போறான். இது ஏன் உலகின் கண்களுக்கு தெரியவில்லை? ஏன் உலகம் மௌனமாக இருக்கின்றது என வினவி வினவியே தமிழன் காலம் போகும்போல.... :roll:
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)