Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
செய்தியில் திருத்தம்
#1
வவுனியா மாவட்டம் வேப்பங்குளம் பகுதியில் கடந்த சனியிரவு 8.00 மணியளவில் இராணுவத்தினரின் உளவுத்துறையைச்சேர்ந்த நால்வரால் தமிழ் வர்த்தகர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். வேப்பங்குளம் பகுதியில் மடுமாதா களஞ்சியம் என்ற வணிக நிலையத்தை நடத்திவரும் பற்குணராஜா இராஜபத்மன் (வயது 31) என்பவராவார். இவரின் வர்த்தக நிலையத்திற்கு முன்பாக 17.04.2006 அன்று நடைபெற்ற கிளைமோர் தாக்குதலின் பின் தன்னை இராணுவ உளவுத்துறையைச்சேர்ந்த நால்வர் தொடருவதாகவும், தனக்கு என்ன நடைபெறப்போகின்றது என்பது பற்றித்தெரியாதென்றும் தனது நெருங்கியவர்களுடன் தொலைபேசியில் சொல்லியுள்ளார்.

மரணமான அன்றும் இதுவிடயமாக தனது நண்பர்களுடன் கதைத்துள்ளார். இவரின் கொலை நடைபெற்ற இடத்திலிருந்து பதினைந்து மீற்றர்து}ரத்திலும், எழுபத்தைந்து மீற்றர் து}ரத்திலும், இராணுவ காவல் நிலைகளும், நு}ற்றியம்பது மீற்றர் து}ரத்தில் இராணுவ முகாமும் அமைந்திருப்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இவர் தமிழ்த் தேசிய நிகழ்வுகளில் ஏற்பாட்டாளராக செயற்பட்டு வந்தவர் மற்றும் கடந்த மாவீரர் நாளில் வவுனியாவில் தமிழீழ தேசியக் கொடி ஏற்றப்பட்டபோது அதற்கெதிராக படையினர் செயற்பட்டபோது படையினருடன் இவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர் என்பதும் குறிப்பிட்டத்தக்கது.

மலரவன்
www.tamilkural.com

Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)