Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலிகள் மீதான தடைக்கு புலம்பெயர் தமிழர் பரப்புரையின் பலவீனமே
#1
புலிகள் மீதான தடைக்கு புலம்பெயர் தமிழர் பரப்புரையின் பலவீனமே காரணம்: பேராசிரியர் கா.சிவத்தம்பி வருத்தம்

[சனிக்கிழமை, 22 ஏப்ரல் 2006, 05:55 ஈழம்] [ச.விமலராஜா]

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான சர்வதேச நாடுகளின் தடைகளுக்கு புலம்பெயர் வாழ் தமிழர்கள் மேற்கொண்டிருக்க வேண்டிய பரப்புரையின் பலவீனம்தான் காரணம் - Lobby எனப்படுன்கிற கருத்தாதரவு தேடுதலை செய்யவில்லை என்று ஓய்வுநிலைப் பேராசிரியர் கா. சிவத்தம்பி மனம் திறந்து வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.


அவுஸ்திரேலிய இன்பத் தமிழ் ஒலி வானொலியில் நேற்று வெள்ளிக்கிழமை (21.04.06) ஒலிபரப்பாகிய "செய்திக்குவியல்" நிகழ்ச்சியில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பேராசியர் கா.சிவத்தம்பி இக்கருத்தை வெளிப்படுத்தினார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நகர்வுகள் ஒவ்வொன்றிலும் புலம்பெயர் வாழ் தமிழர்களின் பாரிய ஒத்துழைப்பை எவருமே மறுப்பதற்கில்லை. புலம்பெயர் வாழ் தமிழர்கள் மீதான தமிழீழத் தேசியத் தலைமையினது மதிப்பை புலம்பெயர் வாழ் தமிழீழ மக்கள் அனைவருமே அறிந்த ஒன்றாகும்.

இருப்பினும் தனிநபர்களினது பங்களிப்புகளாக இருப்பதனூடே மட்டும் விடுதலைப் போராட்டத்தை நகர்த்திவிட முடியாது.

தமிழீழத் தேச விடுதலைப் போராட்டம் சர்வதேச மயப்படுத்தப்பட்டு உள்ளது.

சர்வதேசத்தின் நியாயக் கோட்பாடுகளுக்கும் நிர்பந்தங்களுக்குள்ளும் உள்ளாகி உள்ளது.

சிங்களவர்களோடு மட்டுமே நாம் போராடிக் கொண்டிருந்தால் போதுமெனில் எந்த ஒரு தமிழீழக் குடிமகனும் அந்நிய தேசத்தில் அகதியாக இத்தனை காலம் வாழ்ந்திருக்க வேண்டியதில்லை- நம் காணிகள் செழித்திருக்க- நம் முன்னையர் காலம் மீண்டும் பூத்திருக்க சுதந்திரத் தமிழனாய் திருமலை கோணேஸ்வரர் ஆலயத்துக்கும் நல்லூர் கந்தன் கோவிலுக்கும் பங்குனி உத்திர பாதயாத்திரையும் போய்க்கொண்டிருப்போம் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இப்போது தமிழீழ விடுதலைப் போராட்டம் முதிர்வடைந்து சர்வதேசத்தின் முன்னால் நிற்கிறது. அதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

சமாதானம், அமைதிப் பேச்சுக்கள் என்ற அழுத்தங்களினூடே தமிழீழ விடுதலைப் போராட்டம் நகர்ந்து கொண்டிருக்கிற வேளையில் தாயகத்தில் நமக்கிருக்கிற வலிமை சர்வதேச தளத்திலும் இருக்க வேண்டும்.

அதை புலம்பெயர் தமிழர்களால் மட்டுமே செய்ய முடியும்.

உயிரைக் கொடுத்த மாவீரர்களுக்கு உயிரைக் கொடுக்க உள்ள போராளிகளுக்கு உந்துசக்தியாக- உயிரோட்டமாக புலம்பெயர் தமிழர்கள்தான் இருக்கிறார்கள்.

கொட்டும் பனியிலும் உறங்கா இரவுகளிலும் கடன்பட்டு செந்நீரைப் போல் உடல் உழைப்பைச் சிந்தி அள்ளி அள்ளி கொடுத்து அரும்பாடுபட்டு வளர்த்த விடுதலைப் பயிரின் அறுவடைக்கு முன்னராக புலம்பெயர் தமிழர்களின் பரப்புரை பலவீனம் எனும் களை இருக்கிறதுதான் என்பது புலம்பெயர் தமிழரது மனசாட்சிக்குத் தெரியும்.

இந்தக் களைக்கு யார் காரணம் என்பது விவாதிக்கப்பட வேண்டியது அல்ல.

களையைக் களைந்து கதிர் முற்ற மகிழ்வோடு அதனை அறுத்து ஒன்றாய் நின்று விடுதலைப் பொங்கலிடுவதற்கான வழி என்ன என்பதைத்தான் புலம்பெயர் தமிழர் செய்ய வேண்டும்.

இதை வலியுறுத்தும் விதமாக புலம்பெயர் தமிழர் செய்ய வேண்டிய கடமையின் அவசியம் உணர்ந்து பேராசிரியர் கா.சிவதம்பி தெரிவித்துள்ள கருத்துக்களின் தொகுப்பைத் தருகின்றோம்<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

ஐரோப்பிய பயணத் தடையையும் கனேடியத் தடையையும் ஒன்றொன்றுக்கொன்று தொடர்புடையதாக கருதமாட்டேன்.

ஐரோப்பிய பயணத் தடைக்கான காரணம் பேச்சுவார்த்தை தொடர்பிலானதும், சிறிலங்கா அரசாங்கத்தினது பரப்புரைகள் அல்லது எடுத்துரைப்புகளுக்கான சந்தர்ப்பங்களாலும் ஏற்பட்டது எனக் கருதலாம். அதிலும் நோர்வே போன்றவற்றில் இது விடயத்தில் ஒரு தளர்ச்சி உள்ளது. அதனால் நோர்வேத் தரப்பை சிங்களத் தரப்பு கடுமையாகத் தாக்குகிறார்கள்.

கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் சம்பவங்களைப் பார்க்கும் போது-

நோர்வே அல்லது மூன்றாவது நாடாக ஒரு மேற்கத்தைய நாட்டின் தலையீடு இல்லாமல், அனுசரணை இல்லாமல் சமாதானம் நடைபெறுவதற்கான சாத்தியம் இல்லை என்கிற உண்மையும்

அப்படியான நேரத்தில் நோர்வேயை வேண்டாம் என்று சொல்வது எப்படிப் புத்திசாலித்தனதமாகும் என்று சிங்கள மக்களைச் சிந்திக்க வைக்கிற ஒரு சந்தர்ப்பமாகப் பார்க்கிறேன்.

இலங்கையில் தமிழரது நிலைப்பாடு பற்றி வெளிநாடுகளில் எடுத்துச் சொல்லப்பட்டு வந்த சில பரப்புரைகள்தான் கனேடியத் தடைக்குக் காரணம்.

குறிப்பாக சர்வதேச நிறுவனங்களிடத்தில் தமிழர் தரப்பானது நன்மதிப்பைப் பெறுவதற்கான பரப்புரைகளைப் புகலிடத் தமிழர்கள் வேண்டிய அளவு செய்யவில்லை. அதற்கு மாறான செயற்பாடுகளையே செய்து வந்துள்ளதாக எமக்குப்படுகிறது.

கனேடியத் தடையை விதித்தது ஒரு கன்சர்வேட்டிவ் கட்சி. அரசாங்கத்துக்கு வந்தும் சிறுபான்மை அரசாங்கமாகவே இருக்கிறது. கனேடியப் பண்பை பாதுகாப்பாகச் சொல்கிறார்கள்.

தமிழ் உரிமைப் போராட்டம் பற்றிய ஒரு கருத்தாதரவு தேடும் கூடம்- கருத்தாதரவு தேடுகிற ஒரு தொழில்முறையாளர்களை- மருத்துவர்கள்-பொறியியலாளர்கள்-வல்லுநர்களைக் கொண்ட குழுமம் கனடாவில் இயங்கவில்லை.

தமிழ் மக்களால் சிங்கள மக்களுக்கு பிரச்சனைகள் ஏற்படுகின்றன என்று கனேடிய அரசாங்கத்திடம் சொல்வதற்கான வலுவான சிங்களக் குழு கனடாவில் உண்டு.

கனடாவில் Lobby எனச் சொல்லப்படுகிற கருத்தாதரவு தேடும் குழுமம் ஒன்று உள்ளதா?

இங்கிலாந்தில் ஒருகாலத்தில் இருந்தது- இப்போது அங்கும் குறைந்து விட்டது. அவுஸ்திரேலியாவிலும் கூட இல்லை என்றுதான் நம்புகிறேன்.

தமிழர் உரிமைப் போராட்டம் தொடர்பாக புலம்பெயர் தமிழர்கள் தங்களை ஒழுங்குப்படுத்திக் கொள்ளுதலில் காணப்படுகிற பலவீனங்களின் வெளிப்பாடாகவும் குறைபாடுகளின் வெளிப்பாடாகவுமே கனேடியத் தடையை நான் பார்க்கின்றேன்.

புலம்பெயர் வாழ் நாடுகளில் உள்ளவர்கள் சரியான வகையில் இந்தப் பரப்புரையை அங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் அரசாங்கங்களிலும் நியாயப்பாடுகளை வெளிக்கொணரத் தவறிவிட்டார்கள் என்று அடித்துச் சொல்கின்றேன்.

நீங்கள் நேர்காணல் எடுக்கும் அவுஸ்திரேலியாவில் நீங்கள் வசிக்கும் மாநிலத்தில் உள்ள பிரதான தேசிய நாளிதமிழில் இலங்கைத் தமிழர் உரிமைப் போராட்டம் பற்றி எத்தனை அங்குலச் செய்தி கடந்த 6 மாத காலத்தில் வெளியாகியிருக்கின்றது?

ஒன்றுகூட வரவில்லை என்று நீங்கள் கூறுகின்றீர்கள். அப்படியானால் நீங்கள் என்னுடன் பேசவேண்டியதும் இல்லை. என்னைப் போன்ற அப்பாவிகளைப் பிடித்து ஏன் கேள்வி கேட்க வேண்டும்?

இங்கிலாந்து- கனடா-ஐரோப்பாவில் உள்ள புலம்பெயர் தமிழர்களை விட அவுஸ்திரேலியாவில் உள்ள தமிழர்கள் ஆங்கிலம் படித்தவர்கள்- அடி நிலை ஊழியராக இருந்தாலும் அரச உத்தியோகத்தில் இருப்பவர்கள். உங்களால் இதை ஏன் செய்ய முடியவில்லை? அவர்களைப் போல் நீங்கள் உடல் உழைப்பாளர்கள் அல்ல என்பதை நான் நன்கறிவேன்.

உங்களுக்குள் குழு மோதல்களை ஏற்படுத்திக் கொண்டு இரண்டு வருடத்துக்கு ஒருமுறை இங்கு வந்துவிட்டு மகிழ்கின்றீர்கள்.

கோவில்களுக்குச் செலவிடுவது போன்ற உங்களது சொந்த ஆத்மார்த்த திருப்திக்கான செயற்பாடுகளைப் போல் இந்த கருத்தாதரவு தேடுதல் எனப்படுகிற Lobby யை ஏன் நீங்கள் செய்யவில்லை?

யார் தலைவர்-செயலாளர் என்கிற வகையிலும் யார் பூனைக்கு மணி கட்டுவது என்கிற வகையிலும் அங்கு நிலைமைகள் இருப்பதாகக் கூறுகின்றீர்கள்.

நீங்கள் மாநாடுகள்-பட்டிமன்றங்கள்- கருத்தரங்குகள்- குத்துவிளக்கேற்றுதல்களை செய்வதற்குத்தான் இவை தேவை.

அதைவிட எல்லா விடயமும் நன்கு அறிந்த 4 பேர் இணைந்து இந்த Lobby யைச் செய்யலாமே.

உண்மையில் Lobby செய்வதற்கான ஒழுங்குமுறைகளை நீங்கள் அறிந்திருக்கவில்லை என்பது துரதிர்ஸ்டம்.

Lobby யை அறிந்தவர்களும் அதைச் செய்யவில்லை என்பதும் உன்மை.

அப்படியான நிலையில் தடைவிதித்து விட்டார்கள் என்று வயிற்றலடித்துக் கொண்டால் எப்படி?

இங்குள்ள தமிழர்கள், புலம்பெயர் தமிழர்களிடம் நிறைய எதிர்பார்க்கின்றனர். இங்குள்ள தமிழர்களால் எதுவும் செய்ய முடியாது. நிலைமை அப்படி உள்ளது.

இலங்கையில் தமிழ் மக்களுக்கு என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை கால வரிசைப்படியாக நீங்கள் வெளியீட்டுள்ளீர்களா? அப்படி இருந்தால் அது எவ்வளவு தூரம் சென்றடைந்திருக்கின்றது? வீடுகளில் எழுதிவைத்துக் கொண்டால் போதுமா?

இந்த விடயங்களைச் செய்வதற்கு எல்லோரும் இணைய வேண்டும் என்பதில்லை.

சிறிது பேர் இந்த விடயங்களைச் செய்ய முன்வருவார்கள். மற்றவர்கள் அவர்களுக்கு உதவ முன்வர வேண்டும். அவர்கள் மறுதலிக்கக் கூடாது.

கனடாவில் அப்படித்தான் நடந்தது என்று கேள்விப்படுகிறேன். கனடாவில் உள்ள சிலர் அவர் அப்படிச் சொல்லிவிடுவார்-இவர் எப்படிச் சொல்லிவிடுவார் என்று சொல்லிக் கொண்டு பேச விரும்புகிறவர்களையும் பேசவிடாமல் செய்திருக்கிறார்கள்.

யாழ்ப்பாணத்தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அங்கு ஒன்றுபட்டுத்தான் இருக்கின்றீர்கள். பக்கத்து கிராமத்துக்காரன் சண்டை போட்டால் அங்கேயும் நீங்கள் ஒன்றாக இணைந்து கொண்டு சண்டை போடுகின்றீர்கள். அந்த ஒற்றுமை எல்லாம் உங்களிடம் இருக்கிறது.

ஆனால் ஒட்டுமொத்தமாக இலங்கைத் தமிழர் உரிமைப் போராட்ட விடயத்தில் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். அதுதான் பிரச்சனையே.

இன்றுள்ள சிறிலங்கா யாப்பு நிலையில் ஒரு தேசத்தின் அலகு என்கிற வகையில் தேசக் குழுமம் என்கிற வகையில் ஆட்சியில் தமிழர்களினது பங்கு என்ன? என்பது வரைவிலகணக்கப்படுத்தப்படவில்லை.

சிங்களவன் சொன்னதற்குப் பின்னர்தானே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று தமிழ்ப் பத்திரிகைகள் வலிந்து எழுதுகின்றார்கள்.

விடுதலைப் புலிகளைக் காரணம் காட்டிக் கொண்டு சிலர் செயற்படுகின்றனர்.

அவர்களுக்கு நான் சொல்வது இலங்கைத் தமிழர் உரிமைப் போராட்டத்துக்கு விடுதலைப் புலிகள் தலைமை தாங்க வேண்டிய நிர்பந்தச் சூழல்களை நீங்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

முதலில் இதை இலங்கைத் தமிழரது உரிமைப் போராட்டமாகத்தான் நாம் பார்க்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகின்றேன்.

நீங்கள் புலிகள் பக்கமா? எதிரா நிற்கீர்களா என்பது அல்ல.

நீங்கள் வாழ்கின்ற புலம்பெயர் நாடுகளில் உள்ள வாழ்க்கை முறைக்கும் இங்குள்ள தமிழர்களது வாழ்க்கை முறைக்கும் வேறுபாடு உண்டு.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு மருமகன் புறப்பட்டுவிட்டான், பேரன் புறப்பட்டுவிட்டான் எனில் அவன் கொழும்பு வந்து சேருவானா இல்லையா என்கிற பிரச்சனை ஒருதரப்புக்கு மட்டுமேயானது அல்ல. எல்லோருக்கும் பொதுவானது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அதாவது

"வேரோடு கோபித்துக்கொண்டு கிளைகள் வெள்ளத்தில் போயின" என்கிற உவமையைத்தான் இங்கே சொல்ல வேண்டும் என்றார் ஓய்வுநிலைப் பேராசிரியர் கா.சிவத்தம்பி.

http://www.eelampage.com/?cn=25668
Reply
#2
[size=18]அரோகராவெண்டானாம் .....

<b>அய்யோ! உந்தச் சீரளிவை பேராசிரியர் சிவந்தம்பி சொன்னால் மட்டும்தான் உந்த புதினத்தார்கள் போடுவினம் போல???? மற்றும்படி இவர்களுக்கு உந்த உண்மைகள் தெரியவராது!!! ... ம்ம்ம்ம்ம்ம் ....

மற்றும் பேராசிரியர் சும்மா எல்லா புலத்தமிழர்களையும் குற்றம் சாட்டுவதில் எந்த அர்த்தமுமில்லை!!! இவற்றிற்கான தார்மீகப் பொறுப்பை புலத்தில் தேசியத்திற்காக தொழிற்பட்ட/தொழில்படும் "பூசாரிகளே" ஏற்க வேண்டும்!! புலத்தில் தேசியத்திற்கான செயற்பாடுகள் முடக்கப்பட்டதில் பூசாரிகளின் "பதவிப்போட்டிகள்/ குழிபறிப்புகள்/தேசியத்திற்கான செயற்பட்ட நிறுவனங்களை தங்களது கட்டுப் பாட்டில் வைத்திருக்க முயன்றது/ ..... யாருக்குச் சொல்லி உதுகள் புரியப் போகின்றது!!! ... இந்தப் பூசாரிகள் எம்மினத்தின் சாபக்கேடுகள்!!!</b>

அரோகரா!!!!
Reply
#3
இல்லை எல்லாருமே அது புலிகள் பார்ப்பார்கள் என்று சொல்லிவிட்டு தங்கள் பணப்பையை நிரப்ப அலைந்தவர்கள் தான் நாங்கள் முழுபேரும். .
அதை விட்டுவிட்டு இப்போ மாத்திரம் செய்கிறவனை குறை சொல்வது எந்த வகையில் சரி...
.
ஒரு ஊர்வலத்திற்கு வா என்றால் ஒளிச்சோடுகிற தன்மானம் கெட்ட தமிழன் 80% வீதம் இருக்கிறார்கள்.
ஆக ஏதோ எங்களால் இயன்ற மட்டும் அவர்களுக்கு செய்வோம் என்று சொல்கின்ற தமிழர்கள் தான் இந்த தேரை வடம் பிடித்து இவ்வளவு தூரம் கொண்டு வந்து விட்டவர்கள்
Reply
#4
வெளிநாட்டில் மேற்கொள்ளப்படும் பரப்புரைகளை சாடி வெப்ஈழத்தில் வெளிவந்த கட்டுரை


ஐரோப்பிய ஒன்றியத்தை எழுப்பாத "எழுக தமிழ்"(பாகம் 1)
(25.10.2005)

எழுக தமிழ் எழுச்சிப்பேரணி பெல்யியம் நாட்டில் நடைபெற்றது. பத்தாயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் பல நாடுகளிலும் இருந்து பல்லாயிரம் மைல்கள் பயணம் செய்து வந்திருந்தார்கள். குழந்தைகள் தொடக்கும் பெரியவர்கள் வரை ஆறு மணித்தியாலங்கள் கொட்டும் மழையிலும் குளிரிலும் கால் கடுக்க நின்றார்கள். அவர்களெல்லாம் ஒரு நோக்கத்தோடும் நம்பிக்கையோடும் மழையையும் குளிரையும் பொருட்படுத்தாது நின்றார்கள். அவர்களுக்கெல்லாம் சாதிக்க வந்திருக்கும் உணர்வு. இவ்வளவு பேர் வந்திருக்கின்றோமே, எப்படியும் எங்கள் பக்கம் உள்ள நியாயத்தை ஐரோப்பிய ஒன்றியம் புரிந்துகொள்ளும் என்கின்ற நம்பிக்கை அவர்களின் முகங்களில். நிகழ்ச்சியை உணர்ச்சி பொங்க தொகுத்து வழங்கியவரும் ஒரு பதிலோடுதான் இன்று வீடு செல்வோம் என்று கூறி மக்களை உசுப்பேற்றிக்கொண்டிருந்தார்.


ஆனால் ஐரோப்பிய ஒன்றிய பாரளுமன்றத்துக்குள் மனுக் கொடுத்துவிட்டு வந்த நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் உள்ளே நடந்ததைப் பற்றி எதுவுமே பேசாது வேறு விடயங்களயே பேசினார். அவரால் பேசவும் முடியாது. உள்ளே மனுவை வாங்கிவிட்டு நன்றி சொல்லி அனுப்பினார்கள் என்று பனியிலும் மழையிலும் காத்திருக்கும் மக்களிடம் சொல்லமுடியாது.

என் அன்புக்குரிய தமிழ் உள்ளங்களே! ஒன்றை தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள். எங்கள் பக்கம் நியாயம் உண்டு என்பது ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மாத்திரம் அல்ல, இந்தியா தொடக்கம் அமெரிக்கா வரை எல்லோருக்கும் தெரியும். விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அல்ல என்பதும் அவர்களுக்கு தெரியும். தொலைத்தொடர்புத்துறையின் அபரித வளர்ச்சியில் உலகம் ஒரு கிராமம் ஆகிய பிறகு எல்லோருக்கும் எல்லாம் தெரியும்.

பிறகு எதற்கு தடை போடுகிறார்கள்? யார் தடை போட்டாலும் அதற்கான ஒரே காரணம் விடுதலைப் புலிகளை முடிந்தளவு பலவீனப்படுத்துவதே. விடுதலைப் புலிகள் வெல்வதை உலகின் பணக்கார நாடுகள் எதுவுமே விரும்பவில்லை. அண்மைக் காலங்களில் எரித்திரியா நாட்டை தவிர வேற எந்த நாடோ அல்லது இனமோ யுத்தம் மூலம் தங்களின் விடுதலையை அடையவில்லை. பல நாடுகளில் உள்ள விடுதலை இயக்கங்கள் தங்கள் இலக்கை அடைகின்ற பலத்தோடு இல்லை. கடந்த இருபது வருடங்களாக முதலாளித்துவ நாடுகளில் விடுதலை கோரி போராடும் இனங்களை சில சலுகைகளை கொடுத்து அடங்கிப் போக செய்வதுதான் உலக ஒழுங்காக இருக்கின்றது. இன்று உலகிலேயே எதிரியை விட மேலோங்கிய பலத்தோடு இருக்கும் ஒரே ஒரு இயக்கமான விடுதலைப் புலிகள் இந்த உலக ஒழுங்கை சிதைத்து விடுவார்களோ என்கின்ற அச்சம் இந்த நாடுகளுக்கு உண்டு. அதுவும் தற்கொடைப் போராளிகளை ஒரு முக்கிய பலமாக கொண்ட ஒரு இனம் போரில் வெல்லுமானால் அது பல இனங்களுக்கு ஒரு முன்னுதாரணம் ஆகி விடும் என்கின்ற அச்சமும் அவர்களுக்கு உண்டு. உலகிலேயே விடுதலைப்புலிகளே அதிகமான தற்கொடைத்தாக்குதல்களை நடத்தியவர்கள் என்பதையும் அமெரிக்கா தன்னுடைய தடையை நீக்குவதற்கு விடுதலைப்புலிகள் தங்களின் கரும்புலி அணியை கலைக்கவேண்டும் என்கிற நிபந்தனையை விதிப்பதையும் நினைவில் கொள்க. இந்தக் காரணங்களை விட பூகோள நலன் சார்ந்த காரணங்களாலும் இந்த நாடுகள் விடுதலைப் புலிகள் வெற்றி பெறுவதை விரும்பாது.


இதன் காரணமாகவே யுத்தம் மூலம் எமை வெல்வதற்கு முதலில் உதவி புரிந்தவர்கள், எம்மை வெல்ல முடியாதபோது பேச்சுவார்த்தை மூலம் பலவீனப்படுத்த முயற்சிக்கிறார்கள். ஆரம்ப காலத்தில் கருணாவின் பிளவு, மக்களிடம் எழுச்சி குன்றியமை போன்ற சில வெற்றிகளை கண்டவர்கள் அதன் பிறகு இன்று தமிழினமே தன்னை யுத்தத்திற்கு தயார்படுத்தி பயிற்சி எடுக்கின்ற பொழுது ஒரு தற்காலிக தடையை போட்டிருக்கிறார்கள். ஈழத்தில் யுத்தம் மூளும் பொழுத தடை நிரந்தரம் ஆக்கப்படும். காரணம் நடக்கப்பொவது கடைசி யுத்தம். உலகிலே உள்ள அடக்கப்படும் இனங்களின் சார்பாக நடக்கப்போகும் யுத்தம். உலக நாடுகள் எம்மை தோற்கடிப்பதற்கு நேரடித் தலையீட்டை தவிர மற்ற அனைத்தையும் செய்யும். நாங்கள் ஒரு கடினமான அரசியல் போருக்கும் முகம் கொடுக்கவேண்டி வரும்.


இப்பொழுது நாங்கள் என்ன செய்ய வேண்டும்? இரண்டு கட்டிடங்களுக்கு நடுவில் யாரும் இல்லாத ஒரு வீதியில் நின்று பேரணி செய்வதால் நாங்கள் பெரிதாக எதையும் சாதிக்க முடியாது. ரி.ரி.என் தொலைக்காட்சியும் ஐ.பி.சி வானோலியும் புருஸ்ஸில் நகரின் உள்ள+ர் பத்திரிகையும் செய்தி போடுவதால் எந்த பலனும் ஏற்படப் போவதில்லை. வருடா வருடம் தொழிலாளர் தினத்தன்று நூற்றுக் கணக்கிலும் ஜெனிவாவில் ஆயிரக்கணக்கிலும் ஊர்வலம் போவதால் ஏற்படும் பலனே பெல்ஜியம் போவதாலும் ஏற்படும். ஆகவே ஓரளவாவது பலன் ஏற்படுவதற்கு என்ன செய்ய வேண்டும்??
(தொடர்ச்சி பாகம் 2இல்)


-சபேசன்
Reply
#5
-குற்றச்சாட்டு நேரடியாக புலம்பெயர்வாழ் தமிழர்களாகிய எம்மைச் சுட்டி நிற்கிறது. முதற்கட்டமாக தவறை ஏற்றுக்கொள்வோம். மாற்று வழிகளைக் காண்போம்.
தனிப்பட்ட வாழ்க்கையின் இருப்பில் மட்டும் தீவிரமாகச் செயற்படும் நாம் நம் பொதுவாழ்வின் இருப்பிரலும் மிகத் தீவரமாகச் செயற்படவேண்டிய காலகட்டமிது.
1. சென்ற தினக்குரல் வார இதழிலும் " கனடாவில் நடந்ததென்ன? -பீஷ்மர்- கட்டுரையும் தெளிவாக ஆராய்துள்ளது.
2. நாம் வாழும் தேசங்களிலுள்ள மொழிகளில் ஈழப்பிரச்சினை தொடர்பான உண்மைத் தகவல்களை அறியச்செய்தல் -அதாவது தொடர் பிரச்சாரம்- இதற்கு இணையங்களை இலகுவில் பயன்படுத்தலாம்.
இவ்வகை முயற்சிகள் இனிவரும்காலங்களில் தமிழில் மட்டுமானதாக குறுக முடியாது. தமிழர்கள் மியெங்கும் பரவி வாழும் இந்தப் புதுவுலகு யதார்த்ததிற்கேற்ப உலகின் முக்கிய மொழிகளனைத்திலும் வெளிவர வேண்டும். செய்திகளும், செய்தி ஆய்வுகளும் உடனுக்குடன் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜேர்மன், இத்தாலி, ஸ்பானிஸ், அரபு, ஹிந்தி, சிங்களம்..... எனப் பாகுபாடற்றவகையில் உடனுக்குடன் வெளிவருதல் வேண்டும்.

இதில் புலம்பெயர்வு வாழ்வில் இருக்கும் பல்மொழி ஆற்றலாளர்கள் பெரும் பங்காற்ற வேண்டிய முக்கிய காலகட்டம் இது.

ஊடகத்துறையின் பெரும் புரட்சிக்காலத்தில் வாழும் நாம் ஆற்ற வேண்டிய பணிகள் பல....
Reply
#6
20 04.2006 வவுனியாவில் இனம் காணப்படாத இரு நபர்கள் கொலை செய்யப்பட்டு இருந்தார்கள். இவர்களது கொலைக்கு தமிழத் தேசியப் படை உரிமை கோரியிருந்தது .அதற்கான உரிமை கோரும் கடிதம் இச் சடலங்கள் அருகில் இருந்துள்ளது. இந்த தமிழ்த்தேசியப் படை என்றால் என்ன என்பது புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள பெரும்பாலான தமிழ் மக்களுக்கு தெரியவில்லை. இந்த தமிழ்த் தேசிய படை கருணா மற்றும் சில ஒட்டுப்படைகளின் கூட்டு இதில் பிரதான பங்கு கருணா ஒட்டுகுழு தான்.

இவர்கள் அப்பாவி பொதுமக்களை தொடர்ச்சியாக கொலை செய்து வருகின்றார்கள். இவர்களின் இவ் நடவடிக்கை தமிழர் தாயகத்தில் மட்டும் இல்லை தமிழர் புலம்பெயர்ந்த
நாடுகளிலும் உள்ளது.

தமிழத்தேசிய படையின் இணைய தளம் இயக்கப்படுவது டென்மார்க்கில் இருந்துதான். இதன் தொடர்பாளர்கள் குமாரதுரை குடும்பத்தை சேர்ந்த மதிஇ வதனன்இ குமாரதுரை ஆகியோரே. இதற்கான ஆதார தகவல்கள் கீழ் தரப்பட்டுள்ளது.

இந்த தமிழத்தேசியப் படையினர் ஜரோப்பாவி்லும் அப்பாவி மக்களை கொலை செய்ய வாய்ப்புகள் உள்ளது.

தமிழ் குழுக்கள் இடையிலான மோதல்கள் கனடாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் தடைக்கு ஓர் காரணம். இவ்வாறான நிலமையினை உருவாக்கியது சிறிலங்கா புலனாய்வுத்துறையும் அதனுடன் சேர்ந்து இயங்கும் ஒட்டுப்படைகளும் ஆகும். அதே போன்ற ஒரு நிலமையினை ஜரோப்பாவில் உருவாக்க தீவிரமான முயற்சிகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே ஜரோப்பாவில் உள்ள ஒட்டுப்படைகளின் விபரங்களை தமிழ் மக்கள் விளங்கிக் கொண்டு இந்த ஒட்டுக் குழுக்களுக்கு எதிரான பரப்புரையினையும் சட்ட நடவடிக்கைகளையும் செய்ய வேண்டும்
http://www.webeelam.com/
vasan
Reply
#7
இப்படியான செய்திகளை வெளிக் கொண்டுவர தமிழ்தேசியத்திர்கு ஆதரவான ஊடகங்கள் பின்னிர்ப்பது பின் இந்ததுரோகிகளினால் பாதிப்பு ஏர்ப்பட்டதின் பின் புலம்புவதில் என்ன பயன்?????
டென்மார்க் விழாவால் விழாது இருப்பீர்!

சில வருடங்களுக்கு முன்பு வரை ஐரோப்பியஇ கனடா நாடுகளில் வாழுகின்ற மக்கள் வாரம் ஏதாவது ஒரு கலை(?)விழாவை நடத்திக் கொண்டிருந்தார்கள். அநேகமான கலைவிழாக்கள் திரையிசை நடன விழாக்களாக இருந்தன. நாடக விழா என்றால் கூட அதில் திரையிசை நடனங்களே அதிகமாக இடம்பெறும். இப்பொழுது இது போன்ற விழாக்கள் வெகுவாகக் குறைந்து விட்டன. இந்த விழாக்களில் வன்முறைகள் பெருகியது இதற்கு ஒரு முக்கிய காரணம். அத்துடன் எமது தமிழர்கள் தொலைக்காட்சி நாடகங்களில் மூழ்கி அறிவை வளர்த்துக் கொண்டிருப்பதும் ஒரு காரணம். ஆனாலும் ஒரு சில விழாக்கள் அங்கும் இங்கும் நடந்தபடிதான் இருக்கின்றன.

விழாக்கள் அதிகரித்திருந்த அன்றைய நாட்களில் பெருவாரியான தமிழர்களுக்கு அதுவே பொழுது போக்காக இருந்தது. அப்பொழுது புலம்பெயர் தமிழர்களுக்குள் ஊடுருவுவதற்கு சிறிலங்கா அரசு பல வழிகளில் முயன்று கொண்டிருந்தது. இதற்கு தமிழர்களால் நடத்தப்படுகின்ற விழாக்களையும் பயன்படுத்த முற்பட்டது. சிறிலங்காவின் தூதரகங்களின் ஊடாக இதற்கான முயற்சிகள் நடைபெற்றன. கொள்கைப் பிடிப்பின்றி வெறும் பொழுது போக்குக்காகவும் பணம் ஈட்டுவதற்காகவும் விழாக்களை நடத்துகின்றவர்களை அணுகிய சிறிலங்கா தூதரக அதிகாரிகள் விழாக்களுக்கு நிதி உதவி செய்யத் தயாராக இருப்பதாக தூண்டில் போட்டனர். ஒரு சில விழாக்கள் சிறிலங்கா தூதரகத்தின் நிதி உதவியுடன் நடந்தன. இது பல பேர் அறியாத ஒரு உண்மை. ஆனால் விழாக்களின் காலம் முடிவடைகின்ற நேரத்திலேயே சிறிலங்கா தூதரகங்கள் இது போன்ற முயற்சிகளில் இறங்கியதால்இ அவர்களால் இந்த ஊடுருவல் முயற்சியில் வெற்றி பெற முடியவில்லை.

இன்று சிறிலங்கா அரசின் ஊடுருவல்கள் ரிபிசி வானொலியிலும் சில இணையத் தளங்களிலும் இருப்பதைக் கண்கூடாகக் கண்டு வருகின்றோம்.

ஆனால் இந்த ஊடகங்கள் மூலமும் சிறிலங்கா அரசு எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்ல. முக்கியமாக இளம் தலைமுறை மீது இந்த ஊடகங்களால் சொல்லிக்கொள்ளும்படியான செல்வாக்கு எதையும் செலுத்த முடியவில்லை. ஆகவே இளம்தலைமுறையினர் மீது ஊடுருவும் வகையில் மீண்டும் விழாக்களை பயன்படுத்து முடிவெடுத்திருக்கிறார்களோ என்கின்ற சந்தேகம் வலுக்கின்ற மாதிரியான சம்பவங்கள் நடைபெறத் தொடங்கி உள்ளன.

டென்மார்க்கில் வரும் 29.04.06 அன்று ஒரு திரையிசை நடன விழா நடைபெற உள்ளது. "கலக்கப் போவது யாரு" என்னும் பெயரில் திரையிசை நடனப் போட்டியோடு வேறு சில நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளதாக விளம்பரங்கள் தெரிவிக்கின்றன. இளைஞர்களைக் கவரும் நோக்கில் கவர்ச்சிகரமான பெண்களின் படங்களோடு இந்த நிகழ்ச்சி விளம்பரம் செய்யப் படுகிறது. வெளிநாடுகளில் இருந்து சில நடனக் குழுக்கள் இதில் பங்கு பற்ற உள்ளன. மிகவும் ஆராவரமாக இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

ஆனால் இந்த விழா தீய சக்திகள் வேறொரு வடிவில் தமிழர்கள் மத்தியில் ஊடுருவுவதற்கான தொடக்க விழா என்பதே உண்மை. இந்த விழாவை நடத்துபவர்களாக அறிவிக்கப்பட்டிருப்பவர்கள் வெளியுலகத்தை பொறுத்தவரை அப்பாவிகள். ஆனால் இந்த "அப்பாவிகளை" இயக்குகின்ற பாவிகள் பலரும் அறிந்தவர்கள். "டென்மார்க் விவகாரங்களின் பின்னணி" என்னும் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தவர்களாகிய மதிஇ வதனன் மற்றும் அவர்களை சார்ந்தவர்களே இந்த விழாவின் பின்னணியில் இருக்கின்றார்கள். இந்த மதிஇ வதனன் போன்றவர்களின் பின்னணியில் யார் இருக்கின்றார்கள் என்பதை யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஏற்கனவே பலமுறை ஆதரங்களுடன் நிரூபிக்கப்பட்ட விடயம் அது.

இந்த விழாவை நடத்துவதாக சொல்லிக் கொள்பவர்கள் சில இணையத் தளங்களை நடத்துகிறார்கள். இந்த இணையத் தளங்கள் பதிந்து கொடுத்தவர்கள் மதிஇ வதனன் ஆகியோரின் "தமிழ் ஜனநாயக அமைப்பின்" ஒருங்கிணைப்பாளரே. அது மட்டுமன்றி இந்த விழாவிற்கான ஆலோசனைக் கூட்டத்திற்கு மதி சென்று வந்ததாகவும் உறுதிப்படுத்தப்பட்ட டென்மார்க் செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் விழா மேடையில் இவர்களோஇ அல்லது இவர்களுடைய குடும்பத்தை சேர்ந்தவர்களோ தோன்றுவதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. இவைகளை விட வேறு பல ஆதாரங்களும் உண்டு.

இந்த விழாவில் சேர்க்கப்படும் நிதியில் ஒரு பகுதி அன்னை இல்லத்திற்கு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்கள். இந்த அன்னை இல்லம் கூட குமாரதுரை குடும்பத்தினரால் பராமரிக்கப்படுவதாக டென்மார்க்கில் பேசிக் கொள்வார்கள். ஆனால் பிரச்சனை அதுவல்ல. பிரச்சனை இந்த விழாவின் பின்னணியில் உள்ளவர்களின் உள்நோக்கம் சம்பந்தமானதே. கலையின் பெயரால் இளைஞர்கள் மத்தியில் ஊடுருவதுதான் இவர்களின் நோக்கம். பல நாடுகளிலும் இருந்த வரும் இளைஞர்களுடன் நட்பை ஏற்படுத்திஇ தமது பக்கம் ஈர்த்துஇ பின்பு விடுதலைக்கு எதிராக அந்த இளைஞர்களை பயன்படுத்துவதே இவர்களின் திட்டம். பொய்யான பெயர்களில் விழாவை நடத்திஇ பல பார்வையாளர்களைக் கலந்து கொள்ளச் செய்துஇ அவர்களை தம்முடைய ஆதரவாளர்களாக பிரச்சாரம் செய்கின்ற திட்டமும் உள்ளது.

இந்த திட்டங்களை உணர்ந்து கொண்ட பல டென்மார்க் தமிழர்கள் இந்த விழாவின் பின்னணியில் இருப்பவர்களை அம்பலப்படுத்த தொடங்கி விட்டார்கள். இதையடுத்து அந்த விழாவை தாங்களே நடத்துவதாக சொல்லிக்கொள்பவர்கள் தமது தீய சக்திகளுடனான தொடர்புகளுக்கான ஆதாரங்களை மறைக்கும் வேலையில் இறங்கியுள்ளனர். விளம்பரங்களிலும் சிறிது மாற்றம் செய்துள்ளனர். அத்துடன் இந்த விழாவிற்கும் மதிஇ வதனன் ஆகியோருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று சாதிக்கின்றனர். ஆனால் இவைகள் எல்லாம் இவர்களின் குட்டு வெளிப்பட்டுவிட்டதன் வெளிப்பாடே.

ஆகவே இளம் தலைமுறையே! மிகவும் விழிப்பாக இருங்கள்! தீய சக்திகளை இனம் கண்டு கொள்ளுங்கள்! கலையின் பெயராலும்இ நட்பின் பெயராலும் தவறான பாதைக்கு சென்று விடாதீர்கள்! இது போன்ற கவர்ச்சிகரமான விழாக்களால் விழுந்து விடாமல் இருங்கள்!


- வி. சபேசன் (20.04.06)
http://www.webeelam.com/
டென்மார்க் விவகாரங்களின் பின்னணி! http://www.webeelam.com/TRODenmark.htm
vasan
Reply
#8
சும்மா மற்றவர்களை நம்பியிருக்காமல் நீங்களாகவே எம்நாட்டில் நடப்பவற்றை மற்றவர்களுக்கு எடுத்து கூறுங்கள்.

புலத்தழிழர்கள் முதலில் விழிப்படைய வேண்டியது பூசாரிளிடமிருந்து தான். எனவே புலத்திலுள்ள பூசாரிகளை ஒதுக்கிவிட்டு எமது பிரச்சனைகளை தீர்க்க முயலுங்கள்.
<b> </b>
Reply
#9
ஐயா சிவத்தம்பி. எங்களால் முடிந்தவரை இங்கே செய்யவேண்டிய lobbying செய்துகொண்டுதான் இருக்கிறோம். ஆனால் அரசாங்கத்தின் கை ஓங்கியிருக்கிறதே ஐயா. காரணங்களை சொல்கிறேன் கேளுங்கள்

1. அவர்கள் Embassy அலுவலகங்களை நாட்டுக்கு நாடு திறந்து நாளும் பொழுதும் இதே குறியாக, வேலை¦ºöகிறார்கள். மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெற்றுக்கொண்டு முழுநேரம் வேலைசெய்யும் இவர்கள் எங்கே? அன்றாடம் எங்கள் குடும்பங்களின் சுமையை சுமந்துகொண்டு பகுதிநேரம் மட்டும் ¦¸¡ïºõ ¿¡ð¨¼ì¸ÅÉ¢ìÌõ நாங்கள் எங்கே?

2. அவ்வப்போது ஒவ்வொருத்தன் "இந்த மந்திரி" "அந்த மந்திரி" என்று சொல்லிக்கொண்டு, அரச செலவில் அங்கிருந்து ÌÎõÀò§¾¡Î பறந்துšȡý. þí¸ ÅóÐ மந்திரி பதவியை ¸¡ðÊ, இலகுவாக þí¸ò¨¾ «Ãº À¢Ã¾¢¿¢¾¢¸Ç¢¼õ appointment Å¡í¸¢È¡ý. À¢ÈÌ §ÅðÎ ¨ÅòÐÅ¢ðÎô §À¡¸¢È¡ý. ¿¡í¸û appointment §¸ð¼¡ø ¡÷ ¾Õ¸¢È¡÷¸û?

¦º¡øÅÐ ±Ç¢Ð ¬É¡ø ¬Â¢Ãõ º¢ì¸ø þÕį̀¾Â¡!!!
Reply
#10
தமிழ்மகான் கூறிய கருதுக்கள் கவனிகத்தக்கவை,

நாங்களும் இதை அமைப்பு ரீதியாகச் செய்ய வேண்டி உள்ளது.தமிழ் ஈழத்தில் உள்ளதைப் போல் முழு நேரமாக இயங்குபவர்கள் வேண்டும்.இவர்களின் குடும்பங்களைக் கவனிப்பதற்கு இவர்களுக்கு முழு நேர ஊதியமும் வழங்க்கப் பட வேண்டும்.தமிழ் ஈழ வெளி உறவுச் சேவை ஒன்று அமைக்கப் பட வேண்டிய அவசியத்தயே இது சுட்டிக் காட்டுகிறது.வெறும் நிதி சேகரிப்புக்கு மட்டுமே புலத்தில் அமைப்பு செயற்படுவது இதற்கு ஒரு காரணம்.
பல்வேறு தகமை உடயவர்கள் உள்வாங்கப் பட்டு இதற்கென முழு நேர ஒருங்கமைப்பாளர்கள் அவசியம் தேவை.அனைவரையும் அரவணைதுச் செயற்படக் கூடியவர்கள் பொறுப்பான பதவிகளில் நியமிக்கப் பட வேண்டும்.புலத்தில் உணர்வோடு இயங்கும் இளயவர்கள் ஒருங்கிணைக்கப் பட வேண்டும்.

தலமையகத்தில் பொறுப்பானவர்கள் இது பற்றிச் சிந்தித்து அமைப்பு ரீதியான நிர்வாகக் கட்டமைப்புக்களை பொருதமானவர்களைக் கொண்டு அமைக்க வேணும்.எதிரியிடம் இருந்தும் நாம் இவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும்.சுயாதீனமாக ஒரு வெறியுடன் புலத்தில் இயங்கிய காலம் இப்போது இல்லை.புலத்தவர்கள் தமது சொந்தத் தேவைகளையே தற்போது முன் நிறுத்திச் செயல் ஆற்றி வருகின்றனர்.ஒரு சிலரே உணர்வோடு வேலை செய்கின்றனர் என்பதே இங்குள்ள யதார்த்தம்.ஆகவே அந்த ஒரு சிலரையும் இணைத்து அமைப்பு ரீதியாக இயங்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
Reply
#11
ஐரோப்பிய ஒன்றியத்தை எழுப்பாத எழுக தமிழ் (பாகம் 2)


நாங்கள் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பிய நாடுகளிற்கு வருகின்ற பொழுது சில துணிமணிகளோடும் காலில் வெறும் செருப்போடும் இந்த குளிர்நாடுகளிற்குள் வந்திறங்கினோம். ஆனால் இன்று எங்களின் வளர்ச்சியை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். ஐரோப்பாவில் வாழும் மற்றைய இனங்களை விட நாங்கள் கல்வியிலும் பொருளாதாரத்திலும் நன்றாகவே முன்னேறிவிட்டோம். சொந்த வீடுகள், நிறுவனங்கள், பல்கலைக்கழக படிப்பு என்று எவ்வளவோ முன்னேற்றம்.


ஆயினும் இந்த 20 வருடங்களுக்குள் எங்களின் விடுதலைப் போராட்டத்தைப் பற்றி இங்கே உள்ளவர்களுக்கு தெரியப்படுத்தினோமா என்றால் இல்லை என்பதே பதில். அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் எமது போராட்டம் குறித்து பரப்புரையில் ஈடுபட்டு சில ஐரோப்பிய மக்களை எம் பக்கம் ஈர்த்திருக்கிறார்கள் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் 20 வருடமாக வாழுகின்ற மூன்னூறாயிரம் தமிழர்கள் எவ்வளவு ஐரோப்பிய மக்களுக்கு எங்கள் போராட்டம் பற்றிய செய்தியை சென்றடைய செய்திருக்கின்றார்கள் என்பதே என்னுடைய கேள்வி. ஐம்பது சிங்களவர்கள் வந்து சாதித்துவிட்டு போவதை எங்களால் ஏன் சாதிக்க முடியவில்லை?


நான் முதலில் கூறியதைப் போல் பணக்கார நாடுகள் தங்களின் நலனுக்காகவே தடை போடுவதால் தமிழர்கள் இங்கே எதற்காக பரப்புரையில் ஈடுபட வேண்டும் என்று கேட்கலாம். ஐரோப்பிய நாடுகள் முடிந்தவரை தங்கள் பக்கமே நிற்கும் என்று தெரிந்தும் சிங்கள அரசு கோடிக் கணக்கில் பணத்தைக் கொட்டி எமக்கு எதிராக பரப்புரை செய்கிறது. காரணம் முடிந்தவரை அதிக அழுத்தங்களை தமிழர்களுக்கு வழங்குவதே. வருகின்ற தடைகளே முன்கூட்டியே வரச்செய்வதற்கே. அதே போன்று குறைவான அழுத்தங்கள் வரச்செய்வதற்கும், தடைகளை பிற்போடுவதற்கும், தடைகள் வரும் போது அது நெகிழ்ச்சியாக இருப்பதற்கும் எங்களின் பரப்புரை உதவும்.


வீதியில் சென்று கோசம் போடுவது எந்தவிதத்திலும் நல்ல பரப்புரை ஆகாது. எங்களின் ஊர்வலங்களும் கோசங்களும் பலருக்கு புரிவதேயில்லை. ஆகவே நாங்கள் பேரணிகளை நடத்துமுன் சில வேலைத்திட்டங்களை செயற்படுத்துவோம். எங்கள் வேலைத்திட்டங்களை உயர்மட்டங்களை சென்றடைவது போல் இருக்கவேண்டும். முதலில் நாங்கள் ஒவ்வொரு நகரங்களிலும் இருக்கும் கட்சிகளின் பொறுப்பாளர்களோடு தொடர்புகளை ஏற்படுத்துவோம். அந்தந்த நகரத்தந்தைகளோடு தொடர்புகளை ஏற்படுத்துவோம். அவ்வாறே பத்திரிகையாளர்களோடு பேசுவோம். இதில் நாங்கள் வாழும் நாடுகளின் மொழியை அறிந்தவர்கள் முழு மூச்சோடு ஈடுபடவேண்டும். இப்படியே நாங்கள் படிப்படியாக மேல்மட்டத்தை சென்றடைய வேண்டும். இதில் பாதி வெற்றியை நாங்கள் அடைந்தால்கூட அது பேரணிகளை விட மிகப் பெரிய பலனை அளிக்கும். தடை வந்தால்கூட அப்பொழுது எமக்கிருக்கும் தொடர்புகள் எமது வேலைகளைச் செய்ய உதவியாகவிருக்கும். அத்தோடு ஆசிரியர்கள்> மாணவர்கள்> பொதுமக்கள்> இடதுசாரிக்குழுக்கள் என்று எங்கள் பரப்புரை விரிவடைய வேண்டும். அவர்கள் மூலமும் நாம் பல உபயோகமான தொடர்புகளை பெறலாம். இவைகளை செய்துகொண்டே நாங்கள் ஊர்வலங்கள்> பேரணிகளை நடத்தவேண்டும். ஐரோப்பிய மக்களையும் எங்கள் பேரணிகளில் இணைத்துக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நாங்கள் ஓரளவாவது பலன் பெற முடியும.


அன்பர்களே! நான் பேரணிகள் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஊர்வலம் போகாதீர்கள் என்று சொல்லவில்லை. செய்வதை சரியாக செய்யுங்கள் என்றே சொல்கின்றேன்.


உதாரணத்திற்கு நாங்கள் எழுக தமிழ் பேரணியில் செய்யத் தவறியவற்றை பார்ப்போம். ஜேர்மனியை எடுத்துக்கொள்வோம். ஜேர்மனியிலிருந்து ஏழாயிரம் மக்கள் ஒரு பேரணியிலிருந்து கலந்துகொள்ளச் செல்கிறார்கள். ஒவ்வொரு நகரங்களிலிருந்து நூறு> இருநூறு என பேருந்துகளில் புறப்படுகிறார்கள். இது ஜேர்மனியப் பத்திரிகளை பொறுத்துவரை ஒரு செய்தி. ஆனால் நாங்கள் யாருமே பத்திரிகைகளுக்கு அதை அறிவிக்கவில்லை. அறிவித்திருந்தால் அவர்கள் காலையில் வந்து எங்களை பேட்டி எடுத்து தங்கள் பத்திரிகைகளில் ஒரு சிறு பத்தியாவது போட்டிருப்பார்கள். ஒரு நோக்கத்திற்காக ஆயிரக்கணக்கில் இன்னொரு நாட்டிற்கு பயணம் போவதென்பது நி;ச்சயமாக பத்திரிகைகளுக்கு ஒரு செய்தி. ஆகக் குறைந்தது நாங்கள் இங்கிருந்து புறப்பட்ட நகரங்களின் பத்திரிகைகளிலாவது இந்த செய்தியை வரச் செய்திருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. அது மட்டுமா? பெல்ஜியத்தின் புருஸ்ஸில் நகரிலும் பேரணியில் எந்த வெளிநாட்டு பத்திரிகையாளர்களையும் காணவில்லை.


ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையென்பது எங்கள் எல்லோருக்கும் ஏற்பட்ட ஒரு தோல்வி. ஐரோப்பிய நாட்டு மொழியை அறி;ந்த என் போன்றவர்களுக்கு ஏற்பட்ட தோல்வி. நாட்டு விடுதலைக்காக அல்லும் பகலும் உழைக்கும் பணியாளர்களுக்கு ஏற்பட்ட தோல்வி.


ஆகவே இளம் சமுதாயமே! புதிய சிந்தனையோடு வாருங்கள். நிச்சயமாக உங்களிடம் மேலும் சிறந்து யோசனைகள் இருக்கும். இந்த ஐரோப்பிய சமூகத்தை நன்கு அறிந்தவர்கள் நீங்கள். உங்களால் முடியும். நெல்சன் மண்டெலாவை விட பிரபாகரன் உயர்ந்தவர் என்று எமக்கு நாமே சொல்வதில் அர்த்தமில்லை. அந்த ஒப்பற்ற தலைவனை வீதியில் செல்லும் ஐரோப்பியன் வரை அறிமுகப்படுத்துங்கள். ஆனால் நாங்கள் மொழியறியாது இலக்கணப்பிழைகளோடு போட்ட கோசங்களை மொழியறிந்த நீங்களும் அதே இலக்கணப்பிழைகளோடு கோசிப்பதைப் பார்க்க வேதனையாக இருக்கிறது. தோற்றுப்போன நாங்கள் செய்ததையே நீங்களும் செய்யாதீர்கள். கிளிப்பிள்ளைகளாக இருக்காதீர்கள். வழி காட்டுபவர்களாக இருங்கள். கிளம்புங்கள்.

-சபேசன் (27.10.2005)

நன்றி www.webeelam.com
Reply
#12
சொன்னலும் சொன்னார் அடித்து சொல்லியுள்ளார். புலம் பெயர் நாட்டில் தேசிய விடுதலைக்குகாக பாடும் பரல் இருக்கிறார்கள். நான் அவர்ககைள குறை சொல்ல முயலவில்லை. இவர்களில் அநேகமானவர்கள் மிகவும் விசுவாசத்துடன் வேலை செய்பவர்கள். ஆனால் இவர்களில் சுயநல விருப்பிகளும் இல்லாமல் இல்லை. இதற்கு மிகவும் முன்னுதாரணம் உண்டியலான் ஜெயதேவன். லண்டனில் புலிகளை இயக்கம் தடை செய்த போது இயக்கத்தில் பொறுப்பான ஒரு பதவியில் இருந்தவர். ஆனால் இன்று?

உண்டியலான் ஜெயதேவன் போல இன்னும் எத்தினை பேரோ?
Summa Irupavan!
Reply
#13
மச்சானும் மச்சானும் நடத்துற கூத்துக்குள்ள எதுக்கையா போயத் தலைய விட்டு மூக்கை உடைக்கவேணும். உந்தக் கோயில் காறரைப்பார்த்து வயிறெரியிறத விட்டுப்போட்டு உருப்படியா ஏதாச்சும் செய்யிறதப் பாருங்க. அவையளக் கடவுள் பார்க்கட்டும்.
S. K. RAJAH
Reply
#14
ஒரு வருடத்துக்கு முதல் விடுதலைப்புலிகள் <b>ஐ.நா. சபையாலும் உலக வங்கியாலும் ஆசிய அபிவிருத்தி வங்கியாலும்</b> ஒரு ஆட்சி நிருவாகமாக கருதப்பட்டு நன்கு மதிக்கப்பட்டு இருந்ததற்கு கீழ்வரும் செய்தி உதாரணமாக இருக்கிறது.
<ul>
<li> அன்றைய நிலையில் இருந்து இன்றைய நிலை உருவாக காரணமான மாற்றங்கள் என்ன?
<li> இவை ஏன் சாதகமான விளைவை தரும் வகையில் கையாளப்படவில்லை?
<li> இனிமேலும் இந்த பாதகமான நிலை தொடராமல், மாறாக முன்னர் போன்ற சாதகமான நிலை உருவாக என்ன செய்ய வேண்டும்?
<ul>

இதோ அந்த உதாரணமான செய்தி.

posted February 08, 2005 08:33 PM
UN's Annan Condemns Killing of Senior Tamil Tiger in Sri Lanka
Feb. 9 (Bloomberg) -- United Nations Secretary General Kofi Annan condemned the killing of a senior member of the Liberation Tigers of Tamil Eelam in Sri Lanka, according to the international body's news service.

E. Kousalyan, head of the Tigers' political division in the Batticaloa-Amparai district of the South Asian island, and three Tamil Tigers members were killed late on Feb. 7, the group said on its Web site. He was the most senior rebel leader to be killed since the government and the Tigers signed a truce three years ago.

The Tigers have been fighting for two decades for a separate homeland in the northeast of the country, the second-worst hit nation in the December Indian Ocean tsunami disaster. Peace talks broke down in 2003. The Sri Lankan army called the killing a violation of the truce and said a breakaway rebel faction may have been responsible.

Annan ``urges all parties to exercise calm and restraint so as to avoid actions that could disrupt the ceasefire agreement,'' the New York-based UN news service said on its Web site yesterday.

The Tigers yesterday canceled a meeting with the World Bank and the Asian Development Bank to discuss tsunami reconstruction, the group's Web site said. Tamil flags flew at half-mast in the northeast of the country to mark the killing.

The group blamed ``paramilitary operatives working with the Sri Lankan armed forces'' for the deaths


தமிழாக்கம்
பதியப்பட்ட நாள் பெப்ருவரி 08 2005
<b>ஐ.நா.வின் அன்னான் உயர்தர விடுதலைப்புலிகளின் தலைவர் சிறிலங்காவில் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்</b>

பெப்ருவரி 9 (புழும்பெர்க்) ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம் கோபி அன்னான் உயர்தர விடுதலைப்புலிகளின் தலைவர் சிறிலங்காவில் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் என சர்வதேச செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

இ. கௌசல்யன் மட்டக்களப்பு அம்பாறை பகுதியின் அரசியல் பிரிவு தலைவர் இந்த தென்னாசிய தீவில் மற்றும் மூன்று விடுதலைப்புலிகளுடன் சேர்த்து பெப்ருவரி 7ல் கொல்லப்பட்டதாக அவர்களது இணையத்தளம் தெரிவித்துள்ளது. இவரே போர் நிறுத்தம் கைச்சாத்திடப்பட்ட பின் கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளின் அதியுயர் தலைவராவார்.

............................
...........................

அன்னான் சம்பந்தப்பட்ட அனைவரையும் பொறுமையாக இருக்குமாறும் போர்நிறுத்தத்தை பாதிக்கும் செயல்களை தவிர்த்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார் என ஐக்கிய நாடுகள் சபை இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

விடுதலைப்புலிகள் நேற்று <b>உலகவங்கியுடனும் ஆசிய அபிவிருத்தி வங்கியுடனும்</b> ஆழிப்பேரலையால் உண்டான பாதிப்புகள் மீள்கட்டுமானம் பற்றி நடத்தவிருந்த கலந்துரையாடலை இரத்து செய்துள்ளனர்.

.................................
.................................

சிறிலங்கா அரசின் இராணுவத்துடன் இயங்கும் ஒட்டுப்படை குழுக்களே இந்த கொலைக்கு காரணம் என விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.
''
'' [.423]
Reply
#15
பேராசிரியர் சொன்னதைதான் நானும் பல இடத்திலை எழுதியும் சொல்லியும் கத்திகொண்டும் இருக்கிறன் ஆனால் ஆர் இங்கை கேக்கினம் பலருக்கு பதவியை விட்டாலே உயிர்போன மாதிரி இங்கு ஒரு மாற்றம் தேவை ஒரு ஆளுமை மற்றும் கண்டிப்பான தலைமை தேவை அப்படி ஒரு தலைமை கி;டுவின் அய்ரோப்பிய வருகையின் போது இருந்தது அதற்காகவும் சேத்துதான் இந்திய அதிகார வர்க்கம் கிட்டுவை அழித்துவிட்டதுஅதற்கு பின்னர் இன்னமும் அய்ரோப்பாவில் சரியான ஒரு தலைமை கிடைக்கவில்லை என்னபதே உண்மை ஆனாலும் இதற்கெல்லாம் யுூட்எல்லாம் கருத்து சொல்ல வேண்டிய நிலைமையை பாத்தாலே எமது நிலைமை எவ்வளவுகேவலமா போயிட்டுது எண்று எல்லாருக்கும் விழங்கும்
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
#16
புலத்திலுள்ள மற்றைய நாடுகளில் நடைபெற்றுவரும் தமிழ்த்தேசியத்திற்க்கான செயற்பாடுகள் அவ்வளவாக தெரியாவிடினும், லண்டனில் நடந்தவைகள்/நடப்பவைகள் மூலம் புலத்திலுள்ள மற்றைய நாடுகளிலும் என்ன நடைபெற்றவைகளையும்/நடப்பவைகளையும் ஊகிக்க முடிகிறது.

லண்டனில் தேசியத்திற்கான செயற்பாடுகளின் சிலவற்றை உதாரணத்திற்கு இங்கு தொடராக தர முயல்கிறேன்:

போராட்ட ஆரம்ப காலத்தில் லண்டனில் "புளொட்.ரெலோ.ஈபி.ஆர்.எல்.எப்" கும்பல்களின் செயற்பாடே விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை விட ஓங்கி இருந்தது. அந்நிலைமையை வெற்றிகரமாக சில இளையர்கள் உடைத்தெறிந்தார்கள். அக்கால கட்டத்தில்தான் கிட்டண்ணாவும் லண்டன் வந்து சேர்ந்தார். சிதறிக் கிடந்த தேசியத்திற்கான செயற்பாட்டாளர்களை ஒன்று சேர்த்து தேசியத்திற்கான செயற்பாடுகளுக்கு புத்துணர்ச்சியூட்டினார். கிட்டண்ணாவின் ஆளுமை லண்டனிலிருந்து ஐரோப்பிய தேசமெங்கும் பரந்தது. என்ன சாபமோ தெரியவில்லை கிட்டண்ணா ஐரோப்பாவில் இருந்து மட்டுமல்ல எம்மைவிட்டே நிரந்தரமாகப் பிரிந்துவிட்டார். கிட்டண்ணா லண்டனில் இருந்த காலம் "புலத்தில் தமிழ்த் தேசியத்திற்க்கான பொற்காலம்"!!!

கிட்டண்ணா சென்றதன் பின் லண்டனில் தமிழ்த் தேசியத்திற்கான செயற்பாடுகளுக்கு சில இடையூறுகள் வந்த போதிலும் "கிட்டண்ணா பாச்சிய இரத்தத்தில்" இருந்த இளையர் படை உறுதியுடன் முகம் கொடுத்தது.

மீண்டும் சிங்களப்படைகள் யாழ்நகரைக் கைப்பற்றியபோது, மீண்டும் சில கூலிகள் ஒரு வானொலியின் துணையுடன் களமிறங்கியது. அக்கூலிக் கும்பல்களின் பொய்ப்பிரச்சாரங்களுக்கு உறுதியாகப் பதிலளிப்பதற்காக தமிழ்த்தேசியச் செயற்பாடுகள் லண்டனில் தொடங்கியது. வரலாறு காணாத லண்டன் ஆர்ப்பாட்ட ஊர்வலம், தொப்புள் கொடிகளுக்கு உதவ பாரிய நிதி சேகரிப்புக்கள், தேசியத்திற்க்கான பிரச்சாரங்கள், லண்டனில் தேசிய செயற்பாடுகளை ஒருங்கமைக்கவும்/மக்கள் தொடர்பகமாகவும் "ஈழம் இல்லம்" அமைக்கப்பட்டது. இவ்வாறு செயற்பாடுகள் என்று உச்சத்தை அடைந்தது.

ஆனால் .... தொடரும் ....
" "
Reply
#17
[size=18]அரோகரா....

<b>ம்ம்ம்.. கணொன், நீங்கள் எழுதி ஒண்டையும் கிளிக்கப் போறதில்லை! உதை பூசாரிகள் பார்த்து மாறவா போகிறார்கள்???? ம்ம்ம்...

உது கிடக்க ... கடந்த வருடம் ஜனவரி மாதம் லண்டனில், சுனாமி அழிவுகளுக்குப் பிறகு வடக்கு/கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசங்கள் சிங்கள ஆட்சியாளர்களினால் புறக்கணிக்கப்படுவதை சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டுவரும் நோக்கில் ஓர் ஒன்றுகூடல் "ரவல்கார் சதுக்கத்தில்" ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்டிருந்தது. நானும் குளிரையும் பொருட்படுத்தாது மனுசி, பிள்ளையையும் இழுத்துக் கொண்டு போயிருந்தேன். நூற்றுக்கணக்கான உணர்வுள்ள எம்மவர்கள் வந்திருந்தார்கள்!! ஒன்றுகூடல் ஆரம்பமாகியது ... அன்றுதான் தமிழின் மேன்மையை பூசாரிகள் உலகிற்கு அறிமுகப்படுத்த முயன்றதை பார்த்துப் புல்லரித்துப் போனேன்!! மேடையில் பேச வந்ததுகள் தமிழில்!!! பாடவந்ததுகள் தமிழில்!!! கவிதை பொழிய வந்ததுகள் தமிழில்!!! .... அய்யோ!!!!!! ...

'உதைத்தானே "ரி.ரி,என், ஐ.பி.சி" இல் கேட்டுக் கொண்டிருக்கிறோமே, உங்கு நடப்பைவைகளை ஆங்கிலத்தில் நடாத்தினால்தானே, எதிர்பார்ப்பது வெளியுலகத்திற்கு தெரியும்! என சிலர் போய் பூசாரிகளைக் கேட்டார்களாம்!! ... வந்ததாம் பூசாரிகளுக்குக் கோபம்""" ... கேட்டவர்கள் வழிய வந்தார்களாம்!!!!' ....

"ஒரு பாணை சோற்றுக்கு ஒரு சோறு பதமாம்" ... இதொன்றே .... </b>

அரோகராவெண்டானாம் ....
Reply
#18
தமிழீழ காவல்துறை, நிதித்துறை, மருத்துவத்துறை, உளவுத்துறை, அரசியல்துறை எல்லாம் இருக்கும் போது, ஏன் ஒரு வெளியுறவுத்துறையை அமைத்து புலத்தில் செய்யவேண்டிய வெளியுறவு வேலைகளைச் செய்யக்கூடாது?
பாலா அண்ணையை மட்டும் எல்லாவேலையையும் செய்யச்சொல்லாமல், உலகெங்கும் உள்ள தமிழ்தேசியத்துக்கு ஆதரவானவர்களை ஒன்றுதிரட்டி இயங்கக்கூடாது?
Reply
#19
புலத்தில் உள்ள ஒவ்வொரு தமிழ் மகனும், அமைப்புகள் செய்வினம் என்று இல்லாமல், எங்களுக்கும் சில கடமைகள் உண்டு. எங்களால் முடிந்தவரை சிலவற்றினை செய்யலாம். எமது வேலைத்தளங்களில், பாடசாலைகளில், பல்கலைக்கழகங்களில், அயலவர்களில் உள்ள தமிழர் அல்லாத இனத்தவர்களுக்கு எமது போராட்டத்தின் உண்மையினைச் சொல்லலாம். புலத்தில் எமது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நேரடியாகச் சென்றோ,மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது கடிதமூலமாகவோ எமது போராட்டத்தினத் தெரியப்படுத்தலாம்.எமது போராட்டத்திற்கு எதிரான பொய்ச் செய்திகள் தீய சக்திகளினால் பிரச்சாரங்களினால் தமிழர் அல்லாத உடகங்களில் வருமானால் அந்த ஊடகங்களுக்குத் தெரியப்படுத்தலாம். முன்பு பி.பிஸி ரெல்ரெக்ஸில் மடுத்தேவலாயத்தில் விடுதலைப்புலிகள் தாக்கி மக்கள் இறந்தார்கள் என்ற செய்தி வந்தது. பிறகு லண்டன் வாழ் தமிழர்கள் சிலர் தொலைபேசியில் பி.பி.ஸிக்கு தெரியப்படுத்த ரெல்ரெக்ஸில் மடுத்தேவலாயத்தில் விடுதலைப்புலிகள் தாக்கி மக்கள் இறந்த செய்திக்குப்பின் இச்செய்திக்கு பல நேயர்கள் தவறானது என்று தெரிவித்தார்கள் என்ற செய்தியினையும் வெளியிட்டார்கள். தமிழர் அல்லாத ஊடகங்களில் எமக்கு ஆதாரவான செய்திகள் வரும் போது சிங்களவர்களும், எட்டப்பர்களும் அவ்வூடகங்களுக்கு செய்திகள் பிழை என்று தெரியப்படுத்துவது வழக்கம். ஆனால் நாங்கள் இச்செய்திகளுக்கு நன்றி சொல்லுவது குறைவு. எமக்கு ஆதாரவான செய்திகள் வரும்போதும் கட்டாயம் அவ்வூடகங்களுக்கு நன்றியினை மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்த வேண்டும்
! ?
'' .. ?
! ?.
Reply
#20
ஓய்வு நிலைப் பேராசிரியர் க.சிவதம்பி அவர்களிற்கு!

கடந்த வாரம் அவுஸ்திரேலிய தமிழ் வானொலியில் நீங்கள் புலம் பெயர்ந்த தமிழர் மீது தொடுத்த விமர்சனங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்நிலையில், உங்களது விமர்சனத்தில் உள்ள யதார்த்தங்களை ஆரோக்கியமாக நாம் உள்வாங்குகின்ற அதே வேளை, உங்களது சில வார்த்தைப் பிரயோகங்கள் பற்றியும் அவை கூறும் தவறான செய்தி பற்றியும் உங்களிற்கு உணர்த்தும் நோக்கில் இம்மடல் வரையப்படுகின்றது.
அண்மைக்காலமாக புலம் பெயர்நத தமிழர் பற்றிய இகழ்ச்சிகள் உங்களால் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகின்றன.

உங்களது பீஷ்மர் அவதாரம் வாயிலாக தினக்குரலிலும் இதர ஊடகங்களில் இதர அவதாரங்களிலும் நீங்கள் புலம்பெயர்ந்த உங்களின் உறவுகளைக் காய்ந்து வருகின்றீர்கள். சரி உறவுகள் நாம் நமக்குள் மனந்திறந்து கருத்தாடல்கள் மற்றும் விமர்சனங்களை மேற்கொள்வதில் தவறில்லை.

அத்தோடு உரிமை உள்ளவர் தான் உறைக்கும் படி உண்மை கூற முடியும். அந்த வகையில் உங்களது விமர்சனங்களை நாம் மதிப்போடு ஏற்றுக் கொண்டு எமது செயற்பாடுகள் பற்றிய சுய பரிசோதனையில் ஈடுபடுகின்றோம், தேவை ஏற்படுமிடத்து எமது செயற்பாடுகளில் திருத்தங்களை மேற்கொள்கின்றோம். எனினும் கருத்துப் பரிமாற்றமானது எப்போதும் ஒரு திசையில் இருப்பது ஆரோக்கியமற்றது என்ற அடிப்படையில் அக்குறையினை நிவர்த்தி செய்ய இதோ எங்களிடம் இருந்து உங்களிற்கு.
....
......
...........
முடிக்கு முன்னர், எனது கருத்துக்களை சீனி பூசாது நேரடியாகக் கூறியுள்ளேன். தங்களைத் தாக்குவதோ புண்படுத்துவதோ எனது நோக்கம் அன்று. தாயகம் உதயமாகும் இந்நேரத்தில் நாம் ஒவ்வொருவரும் போறுப்போடு நடந்து கொள்ளல் அவசியம் என்பதனாலும் எமது கருத்துக்கள் செயற்பாடுகள் என்பன எமது தரவுகளைப் பொறுத்தே அமைகின்றன என்பதனாலும் உங்களின் தரவுகளைச் சரி செய்ய இம்மடலினை எழுதியுள்ளேன். புரிந்து கொள்வீர்கள் என நம்புகின்றேன்.


நன்றி.

http://www.sooriyan.com/index.php?option=c...id=3067&Itemid=
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)