04-09-2006, 04:48 AM
லண்டனில் வானொலியொன்றில் திருடர்கள் கைவரிசை.
ஞாயிற்றுக்கிழமை 9 ஏப்பிரல் 2006 ஜோன்
லண்டனில் இயங்கி வந்து பின்னர் மூடப்பட்டிருந்த வானொலியொன்று திருடர்களின் கைவரிசைக்கு உள்ளாகியுள்ளது. லண்டனில் இயங்கி வந்த குறித்த வானொலி பல காரணங்களினால் தற்காலிகமாக தடைப்பட்டிருந்தது. கடந்த வாரம் குறித்த வானொலிக்குள் புகுந்த முன்னை நாள் பங்களாரின் தலைமையிலான திருடர் குழுவினர் வானொலிக் கதவிற்கு போலியான சாவியைப் பயன்படுத்தி அனைத்து வானொலி உபகரணங்களையும் வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளனர். தனது பங்குக்குரிய பணம் தரப்படாததினால் வானொலியை உடைத்து அனைத்துப் பொருட்களையும் அள்ளியதாக குறித்த முன்னை நாள் பங்காளர் தற்போது தெரிவித்து வருகிறார். எனினும் வானொலியின் உரிமையாளர் இது தொடர்பாக பொலிசாருக்கு முறையிட்டுள்ளதாகவும் தற்போது பொலிசாரின் விசாரணைகள் நீதிமன்றம் வரை சென்றுள்ளதாகவும் அறிய முடிகிறது. இது தொடர்பாக வானொலியின் நிர்வாகப் பணிப்பாளரின் தொலைபேசி உரையாடலை சில தொழில்நுட்பத்துடன் ஒட்டுக் கேட்ட போது வெம்பிலி பொலிசாருக்கு முறையிடப்பட்டுள்ளது. பொலிஸ் கேஸ் எப்படி போகிறது என்று பார்த்துத் தான் அடுத்த கட்ட நடவடிக்கையில் ஈடுபட உள்ளேன். கடந்த மாதம் இறுதிப் பகுதியில் இந்தத் திருட்டுச் சம்பவம் நடைபெற்றது என்றும் ஒருவருடன் கதைத்து கொன்டு இருந்ததை அறியமுடிந்தது.
nitharsanam

kaRuppi

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&