04-16-2006, 08:40 AM
அமைச்சர் சிறிபால டி சில்வா புதுடில்லிக்கு அவசர பயணம் -திருமலை வன்முறைகளையடுத்து இந்தியா விடுத்த `செய்தி'
[16 - April - 2006] [Font Size - A - A - A]
திருமலை நகரில் புதன்கிழமை இடம் பெற்ற குண்டுத் தாக்குதலையடுத்து, தமிழ் மக்கள் மீது மோசமான முறையில் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையை உடனடியாக கட்டுப்படுத்துமாறு வலியுறுத்தியிருக்கும் இந்தியா, கொழும்புக்கு கடுமையான தொனியில் `செய்தி' ஒன்றையும் விடுத்திருப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் புதன்கிழமை மாலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு திருமலை வன்முறைகளையிட்டு கவலையையும் கண்டனத்தையும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா குறுகிய கால பயணத்தை புதுடில்லிக்கு அவசரமாக மேற்கொண்டதாக தெரிய வருகிறது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடனான உரையாடலின் போது நிலைமையை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை எடுக்குமாறும் நோர்வே அனுசரணையுடனான சமாதான நடவடிக்கைகளை முன்னெடுக்க இந்தியா முழுமையாக ஆதரவு வழங்குமெனவும் தெரிவித்ததாக `ஐ.ஏ.என்.எஸ்.' செய்திகள் தெரிவித்தன.
இதேவேளை, இந்த தொலைபேசி உரையாடல் தொடர்பாக இந்தியா உத்தியோக பூர்வமான அறிவிப்பை வெளியிடவில்லை. மாறாக அறிக்கையை வெளியிட கொழும்புக்கு அனுமதியளித்திருக்கிறது.
திருகோணமலையில் மோசமான முறையில் வன்முறைகள் வெடித்ததையடுத்தே இந்தியப் பிரதமர் உடனடியாக ஜனாதிபதி மகிந்தவுடன் தொடர்பு கொண்டதாக மன்மோகன் சிங்கின் பேச்சாளர் கூறியுள்ளார்.
இதேவேளை, அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா வியாழக்கிழமை டில்லிக்கு மேற்கொண்ட திடீர் பயணம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெனீவாவில் நடைபெற்ற புலிகளுடனான பேச்சுவார்த்தையின் போது அரசாங்க தூதுக்குழுவுக்கு தலைமை தாங்கிச் சென்ற அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவின் இந்திய விஜயத்தை அவரது உதவியாளர்களும் உறுதிப்படுத்தினர்.
எனினும், அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இந்திய அதிகாரிகளை சந்தித்து ஏதேனும் பேச்சுவார்த்தைகளை நடத்தினாரா அல்லது திருகோணமலை சம்பவங்கள் பற்றிய விடயங்கள் மற்றும் தற்போது எழுந்துள்ள நெருக்கடி நிலைகள் குறித்து ஆராய்ந்தாரா அல்லது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் விசேட செய்திகளேதேனும் கொண்டு சென்றாரா என்ற விபரம் தெரியவரவில்லை.
இந்நிலையில், திருகோணமலைச் சம்பவம் பற்றி இந்தியப் பிரதமர் தெரிவித்த கருத்துகளுக்கு விளக்கம் அளிப்பதற்காகவே அவர் இந்தியா சென்றிருக்கலாமென அரசியல் வட்டாரங்களில் ஊகங்கள் தெரிவிக்கப்படும் நிலையில், அமைச்சர் வியாழக்கிழமை இரவு நாடு திரும்பவிருந்தார்.
http://www.thinakkural.com/news/2006/4/16/...ews_page550.htm
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&