04-11-2006, 12:35 AM
<b>தமிழன் !!
ஒருவன் உழைப்பில்
ஒன்பது பேர் உண்பான்
தள்ளாடி அவர் விழும்வரை
தந்தை உழைப்பில் வாழ்வான்!
காதோரம்
நரைமுடி தெரிகையில்தான்
வேலை செய்ய நினைப்பான் !
காதலித்த பெண்ணை கூட
கைபிடிக்க சீதனம் கேட்பான்!
வெற்றிலை கடை யாரும்
யாரும் திறந்தால் - தானும்
அதையே செய்வான் - !
பாக்கு விற்க நினைக்கான் - !
செய்தால் இருவருக்கும் நன்மை ..
என்று எண்ணான் - அவன்
அழிந்தால் மட்டும் போதுமென்றே
அசிங்கமாய் ஒரு
சிந்தனை கொள்வான்!
வீதி போட குவித்த - கல்லை அள்ளி
தன் வீட்டுக்கு -வெள்ளம்
வராமல் செய்வான் !
பள்ளம் வருமே - விழுவானே
யாரும் என்றால் .......
எவனாவது செத்து போகட்டும்
எனக்கென்ன என்பான்!
பச்சை குழந்தைக்கு
இவன் இன்ன சாதியென்றே
சொல்லி வளர்ப்பான் !
தன் பிள்ளை கால் முறிந்து
அந்த மனிதரே தூக்கி
வந்தால் - மனிதர் - எல்லாம்
ஒன்றே என்று கதை அழப்பான்!
மறுநாள் - முருங்கை மரமேறும்
வேதாளம் என்றாவான்!
சாவு வீட்டில் நின்று கொண்டு
சத்தமாய் ........
கல்யாண வீடு பற்றி பேசுவான்!
பரீட்சைக்கு முதல் நாள்தான்
மேசைக்கு அடியில் புகுந்து
பாட புத்தகம் தேடுவான்!
புலி கூடாது என்றே
எம்மிடையே வீரம் காட்டுவான்
புலி வீரம் வேற்றினத்தவர் - புகழ்ந்தால்
நானும் புலி என்றே -
தானும் புலி வீரத்தில் பங்கு கொள்வான்!
புரியாது தமிழனை!
தமிழன் - தன்னினத்தவருடனும்
வேற்று நாட்டு நாட்டவர் பாசையில்
பேசி வெட்டி வீராப்பு கொள்பவன்
அது சரியா தெரியலை என்றாலும்!!
[b]</b>
ஒருவன் உழைப்பில்
ஒன்பது பேர் உண்பான்
தள்ளாடி அவர் விழும்வரை
தந்தை உழைப்பில் வாழ்வான்!
காதோரம்
நரைமுடி தெரிகையில்தான்
வேலை செய்ய நினைப்பான் !
காதலித்த பெண்ணை கூட
கைபிடிக்க சீதனம் கேட்பான்!
வெற்றிலை கடை யாரும்
யாரும் திறந்தால் - தானும்
அதையே செய்வான் - !
பாக்கு விற்க நினைக்கான் - !
செய்தால் இருவருக்கும் நன்மை ..
என்று எண்ணான் - அவன்
அழிந்தால் மட்டும் போதுமென்றே
அசிங்கமாய் ஒரு
சிந்தனை கொள்வான்!
வீதி போட குவித்த - கல்லை அள்ளி
தன் வீட்டுக்கு -வெள்ளம்
வராமல் செய்வான் !
பள்ளம் வருமே - விழுவானே
யாரும் என்றால் .......
எவனாவது செத்து போகட்டும்
எனக்கென்ன என்பான்!
பச்சை குழந்தைக்கு
இவன் இன்ன சாதியென்றே
சொல்லி வளர்ப்பான் !
தன் பிள்ளை கால் முறிந்து
அந்த மனிதரே தூக்கி
வந்தால் - மனிதர் - எல்லாம்
ஒன்றே என்று கதை அழப்பான்!
மறுநாள் - முருங்கை மரமேறும்
வேதாளம் என்றாவான்!
சாவு வீட்டில் நின்று கொண்டு
சத்தமாய் ........
கல்யாண வீடு பற்றி பேசுவான்!
பரீட்சைக்கு முதல் நாள்தான்
மேசைக்கு அடியில் புகுந்து
பாட புத்தகம் தேடுவான்!
புலி கூடாது என்றே
எம்மிடையே வீரம் காட்டுவான்
புலி வீரம் வேற்றினத்தவர் - புகழ்ந்தால்
நானும் புலி என்றே -
தானும் புலி வீரத்தில் பங்கு கொள்வான்!
புரியாது தமிழனை!
தமிழன் - தன்னினத்தவருடனும்
வேற்று நாட்டு நாட்டவர் பாசையில்
பேசி வெட்டி வீராப்பு கொள்பவன்
அது சரியா தெரியலை என்றாலும்!!
[b]</b>
-!
!
!


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->