Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Freeky Friday
#1
Freeky Friday நல்ல Comedy படம். இது வந்து ரொம்ப நாளாயிருச்சு அதனால CDல தான் பாக்கலாம். கீழ விமர்சனம் இருக்கு பாருங்க.

<span style='font-size:25pt;line-height:100%'>காதல் காமெடி!</span>

ஒரு மாஜிக் பிஸ்கட்தான் திருப்புமுனையே! ரெஸ்ட்டா ரெண்டில் அதைச் சாப்பிட்ட அம்மா மகளாகவும் மகள் அம்மாவாகவும் மாறிவிடுகிறார்கள். அதன்பின் நடக்கும் காதல், ரொமான்ஸ், காமெடி குழப்பங்கள்தான் ஃப்ரீக்கி ஃப்ரைடே படத்தின் கதை.

காதலர்தினக் கொண்டாட்டங்களுக்காக வால்ட் டிஸ்னி நிறுவனம் தயாரித்து இருக்கிற படம் இது.

அம்மா|மகளாக நடித்து இருக்கும் ஜெமி லி குர்ட்டிஸ் | லிண்ட்ஸே லோகன் ஜோடி அடிக்கிற லூட்டி தான் படம் முழுக்க! செம மாடர்ன் டைப் மகள். அவளுக்கு நேரெதிர் குணங்கள் கொண்ட அம்மா! கணவனை இழந்து மூன்று வருஷம் கழித்து வேறொருவருடன் அவருக்கு மென்மையான காதல் அரும்பி, திருமணத்தை நோக்கிச் செல்கிறது. அதே நேரம் மகள், தன் காதலனுடன் மேலும் நெருக்கமாகிறாள். அந்த வேளையில்தான், அம்மா உடம்பில் மகளும் மகள் உடம்பில் அம்மாவும் கூடுவிட்டுக் கூடு பாயும் உடல் மாற்றம்! மகளின் அருகே அம்மாவின் வருங்காலக் கணவன் வரும்போதும் அம்மாவின் அருகே மகளின் காதலன் வரும்போதும் இருவ ருக்கும் ஏற்படும் பதைபதைப்பு இருக்கிறதே... சூப்பர் கலகல! ஹாலிவுட் கிரேஸி கதை!


சுட்ட இடம்: விகடன்
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)