04-11-2006, 05:17 PM
கட்டுநாயக்க தாக்குதலில் சார்ள்ஸ் அன்ரனி படைப்பிரிவு பாரிய பங்களிப்பு செய்தது: பொட்டம்மான்
[செவ்வாய்க்கிழமை, 11 ஏப்ரல் 2006, 20:28 ஈழம்] [ம.சேரமான்]
சிறிலங்காவின் கட்டுநாயக்க விமான நிலையத் தாக்குதலில் சார்ள்ஸ் அன்ரனி படைப்பிரிவு பாரிய பங்களிப்பு செய்தது என்று விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மான் பாராட்டியுள்ளார்.
சார்ள்ஸ் அன்ரனி படையணியின் 15 ஆம் ஆண்டு நிறைவையொட்டி விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ வானொலியான புலிகளின் குரலில் நேற்று திங்கட்கிழமை பொட்டு அம்மான் ஆற்றிய உரை:
சார்ள்ஸ் அன்ரனி படையணி உருவான வரலாறும் சார்ள்ஸ் அன்ரனி என்ற மகத்தான போர் வீரன் தலைவரின் மனதில் இடம்பிடித்த வரலாறும் எல்லோருக்கும் தெரிந்தது.
சார்ள்ஸ் அன்ரனியுடன் பழகுகிற வாய்ப்பைப் பெற்ற அதிர்ஸ்டசாலிகளில் நானும் ஒருவன். அவரது தொடக்க நாட்களில் விடுதலைக்கான வேட்கையை எந்த அளவு கொண்டிருந்தார் என்பதை நேரில் கண்டிருக்கிறேன்.
எங்களுடன் ஒன்றாக தங்கியிருந்த போது மிகவும் அன்பு காட்டியவர். எங்களுடன் பல விடயங்களை கதைத்து கருத்துகளைப் பரிமாறிக்கொண்டவர்.
அவரது சொல்லுக்குக் கட்டுப்படக்கூடியவர்களாக எம்முடன் உறவை அவர் வைத்திருந்தார்.
சார்ள்ஸ் அன்ரனி என்ற மகத்தான சிறந்த போர் வீரன் பெயரில் இந்தப் படையணி உருவாக்கம் அமைந்துள்ளது.
இந்த இயக்கத்தின் முதலாவது படையணிக்கு தனது பெயரை வைக்கும் அளவிற்கு தலைவரின் மனதில் சிறந்த இடம்பிடித்திருந்தார். சார்ள்ஸ் அன்ரனியின் பெயருக்கு பெருமை சேர்க்கும் வகையில் படையணியினது செயற்பாடுகளும் அமைந்துள்ளன.
சார்ள்ஸ் அன்ரனி என்ற முன்னுதாரணமான போர் வீரனுடன இணைந்து நாங்கள் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த தொடக்க நாட்களில் ஒருநாள் எல்லோருக்கும் வேலைகள் பகிரப்பட்டுக் கொண்டிருந்தன.
அப்போது என்னை அரசியல் பணிக்காகத் தெரிவு செய்திருந்தார்கள். சந்தோசம் மாஸ்டருடன் திருகோணமலையில் பணிபுரிய வேண்டி தெரிவுக்குள்ளாகி இருந்தேன். அப்போது எமக்கிருந்த தெளிவின்மை காரணமாக அவ்வாறான பணிக்கு விருப்பமற்றவனாக இருந்தேன்.
சார்ள்ஸ் அன்ரனி அவர்கள் என்னைக் கூப்பிட்டு, அரசியல் பணிதான் முதன்மையானது. நீங்கள் செல்ல வேண்டும். அதுவும் எனது சொந்த மாவட்டத்திற்குச் சென்று நீங்கள் ஆட்களை எடுக்க வேண்டும். அங்குள்ள மக்களுக்குப் போராட்டத்தை விளங்கப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
போராட்டம் சார்ந்த தெளிவுக்கு மேலாக அவரது அன்பான வேண்டுகோளை தட்டமுடியாது திருகோணமலைக்குச் சென்றேன். திருகோணமலையில் நான் இருந்தபோது சார்ள்ஸ் அன்ரனி வீரச்சாவு செய்தியை கேள்விப்பட்டோம்.
அவரிடமிருந்த போராட்ட பற்றுணர்வு, விடுதலை பற்றிய தெளிவு இன்று சார்ள்ஸ் அன்ரனி படையணி போராளிகளுக்கு முன்னுதாரணமாகத் திகழும்.
சார்ள்ஸ் அன்ரனி படைப்பிரிவு உருவாக்கிய நாளில் தமிழீழத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் போராளிகள் இணைந்தார்கள். எமது புலனாய்வுத்துறை நடவடிக்கைகளிலும் கூட சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணிப் பிரிவு போராளிகள் இணைந்து செயற்பட்டுள்ளனர். தேவைக்கேற்ப அவர்களது பங்கும் பணியும் எமது வெற்றிகளில் பேருதவியாக அமைந்துள்ளன.
எமது மறைமுக நடவடிக்கையில் குறிப்பாக கட்டுநாயக்க விமான நிலையத் தாக்குதல் நடவடிக்கையில் சார்ள்ஸ் அன்ரனி படையணியைச் சேர்ந்த மூன்று கரும்புலிகள் அந்த வெற்றியில் பங்களிப்பை வழங்கியிருந்தனர். வேறு கரும்புலி நடவடிக்கைகளிலும் எமது பொதுவான நடவடிக்கைகளிலும் கூட சார்ள்ஸ் அன்ரனி படையணி போராளிகளும் பங்கும் பணியும் பெரும் உந்துதலாக அமைந்துள்ளதாகக் கூறுவேன் என்றார் பொட்டம்மான்.
நன்றி:
புதினம் புதினம் புதினம்

[b]