Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தளபதிகள் தலைமைப்பீடத்தைச் சந்திக்கின்ற போதுதான் அடுத்த கட்டம
#1
தளபதிகள் தலைமைப்பீடத்தைச் சந்திக்கின்ற போதுதான் அடுத்த கட்டம் குறித்த தீர்மானத்தை எடுக்கமுடியும்: அரசியல்துறை பொறுப்பாளர்
கிழக்குத் தளபதிகள் தலைமைப்பீடத்தைச் சந்திக்கின்ற போதுதான் அடுத்த கட்டம் குறித்த தீர்மானத்தை எடுக்கமுடியும் என்று அரசியல்துறை பொறுப்பாளர் தெரிவித்திருக்கின்றார். இன்று இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்தபோதே இவ்வாறு குறிப்பிட்டார். தளபதிகளின் போக்குவரத்து தொடர்பாகவோ, கள நிலவரம் தொடர்பாகவோ சாதகமான வெளிப்பாடுகள் எவையும் அரசினால் காட்டப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

சந்திப்பின் நிறைவில் தமிழீழ அரசில்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய நேர்காணல்:-

கேள்வி:- இணைத் தலைமை நாடுகளின் து}துவர்களின் கிளிநொச்சி பயணத்தின் நோக்கம் என்ன?

பதில்:- உதவி வழங்கும் இணைத் தலைமை நாடுகளின் து}துவர்களை சந்தித்து தற்போதைய கள, அரசியல் நிலவரம் தொடர்பாக கலந்துரையாடியிருக்கின்றோம். முக்கியமாக nஐனீவாப் பேச்சுக்குப் பின்னர் ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடி நிலைமைகள் பற்றி தெளிவாக எடுத்து விளக்கியிருக்கியுள்ளோம்.

அடுத்த கட்ட பேச்சுக்கு செல்ல முடியாத சூழலை அரசாங்கம் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது என்பதை சுட்டிக்காட்டினோம். nஐனீவாவில் இடம்பெறப் போகின்ற பேச்சுக்கு முன்னால் ஏற்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் எந்த முயற்சிகளும் எடுக்காத தன்மைகள் தொடர்பாகவும் இன்றைய சந்திப்பில் எடுத்து விளக்கியுள்ளோம். இன்றைய சந்திப்பு சர்வதேச சமூகத்திற்கு எமது நிலைப்பாட்டை எடுத்து விளக்கக்கூடிய நல்ல சந்திப்பாக அமைந்தது.

கேள்வி:- பேச்சுக்கு செல்ல வேண்டுமென்று அழுத்தம் எதுவும் பிரயோகிக்கப்பட்டதா?

பதில்:- சர்வதேச சமூகம் குறிப்பாக இணைத் தலைமை நாடுகள் பேச்சுக்களில் கலந்து கொள்ளுமாறு வலியுறுத்தினார்கள். ஆனால், இலங்;கை அரசாங்கம் எவ்வாறான தடைகள், தடங்கல்கள் என்பவற்றை ஏற்படுத்தியுள்ளது என்பதை விளக்கினோம். குறிப்பாக nஐனீவா உடன்பாட்டுக்குப் பின்னர் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. போராளிகள், மக்கள் உயிரிழந்த சம்பவங்கள், அதன் தொடர்ச்சியாக திருகோணமலையில் மக்கள் பேரவைத் தலைவர் விக்கினேஸ்வரன் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு என்பவற்றை எல்லாம் சுட்டிக்காட்டியுள்ளோம்.

முக்கியமாக பேச்சுக்குச் செல்ல முதல் எமது தென்தமிழீழத் தளபதிகள் வருகை தந்து எமது தலைமைப்பீடத்தை சந்திக்க வேண்டியுள்ளது. தலைமைப்பீடம் கூடி சில முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. இச்சந்திப்புக்குப் பின்னர் தான் உறுதியான முடிவுகளை எடுக்கக் கூடியாத இருக்கும்.

நான்கரை ஆண்டுகளுக்கு மேலாக போராளிகளின் போக்குவரத்திற்கு இருந்த நடைமுறைகளை மாற்றி புதிய கட்டுப்பாடுகளையும் நிபந்தனைகளையும் விதித்து ஒரு பாரிய நெருக்கடியை ஏற்படுத்த முனைகின்றார்கள். இச்செயற்பாடுகள் யுத்த நிறுத்த செய்ற்பாட்டை இல்லாதொழிக்கின்ற சூழலை உருவாக்கி வருகின்றது என்பதை இன்றைய இணைத்தலைமை நாடுகளின் து}துவர்களின் சந்திப்பில் தெரியப்படுத்தியிருந்தோம்.

கேள்வி:- பேச்சு நடைபெறுவதற்கு குறுகிய நாட்களே இருக்கின்ற நிலையில் அரசாங்கம் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் பேச்சுக்கு செல்ல முடியுமென நம்புகின்றீர்களா?

இன்றுவரை அந்த நம்பிக்கை ஏற்படுத்தப்படவில்லை. எமது தளபதிகளின் போக்குவரத்து தொடர்பாகவோ, கள நிலவரம் தொடர்பாகவோ சாதகமான வெளிப்பாடுகள் எவையும் அரசினால் காட்டப்படவில்லை. அண்மையில் சிறிலங்காவினுடைய சனாதிபதி ஆயுதக் குழுக்களின் ஆயுதங்கள் களையப்படுமென வாக்குறுதி அளித்திருக்கின்றார். இதில் எவ்வளவு உண்மை இருக்கின்றது என்பதை நம்பமுடியாதுள்ளது.

சர்வதேச அரங்கில் நின்றுகொண்டு ஒரு உறுதிப்பாட்டை தெரிவித்து விட்டு அதன் பின்னர் நடந்துகொண்ட இலங்கை அரசாங்கத்தின் முறைகளும் வெளிப்பாடுகளும் அனைவரும் அறிந்ததே. முக்கியமாக எமது தளபதிகள் எமது தலைமைப் பீடத்தைச் சந்திக்கின்ற போதுதான் அடுத்த கட்டம் குறித்த தீர்மானத்தை எடுக்கமுடியும்.

கேள்வி:- போக்குவரத்து ஒழுங்குகளை அரசு செய்யாவிட்டால் தங்களின் கடற்படையின் உதவியோடு பயணம் செய்வீர்கள் என கூறியிருக்கின்;றீர்கள். இது தொடர்பாக இணைத் தலைமை நாடுகளிடம் ஏதாவது தெரிவித்தீர்களா?

பதில்:- யுத்த நிறுத்த உடன்படிக்கை தோற்றம் பெறுவதற்கு முன்னால் தரை, கடல் என பெருமளவு பகுதி எமது கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்தது. இப்பகுதிகளில் சுதந்திரமான நடமாட்டங்கள் இருந்தது. தென்தமிழீழத்திற்கு நாம் பயணம் செய்கின்ற போது இலங்கைப் படைகளால் தடுக்க முடியாத சூழல் இருந்தது. அவ்வாறு தடுக்கப்பட்டால் அத்தடைகளை உடைத்துக் கொண்டு பயணங்கள் செய்வது வழமை.

தொடர்சியாக நாம் செய்த பயணங்களுக்கு தற்போது இடையுூறு ஏற்பட்டு தற்போது தடுக்கும் நிலைமை வந்துள்ளது. யுத்த நிறுத்த உடன்பாட்டு காலப்பகுதியில் தான் ஒரு நடைமுறை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவால் கொண்டுவரப்பட்டது. எமது கடற்படைக் கலங்களில் எமது தளபதிகள், போராளிகள் போக்குவரத்துச் செய்வதெனவும் எமது போராளிகளின் தரைவழிப் போக்குவரத்தும், எமது அவசரப் பயணங்களுக்கு தளபதிகளின் பயணங்களுக்கும் வான் வழிப் பயணங்களும் ஏற்கனவே நடைமுறையில் இருந்தது.

இவையெல்லாவற்றையும் தற்போது நிராகரித்து பழைய சூழலுக்கே தள்ளுகின்ற நிலையினை உருவாக்குவதிலேயே அரசும் படைகளும் ஈடுபட்டு வருகின்றன. முற்;றுமுழுதாகவே தற்போதுள்ள அமைதி முயற்சிகளை சீர்குலைத்து பழைய நிலைக்கே எங்களை தள்ளுகின்ற நிகழ்வாகத்தான் அரசின் செயற்பாடுகளை பார்க்க முடியும்.

கேள்வி:- இணைத் தலைமை நாடுகள் சிறிலங்கா கடற்படைக் கலம் மூழ்கடிக்கப்பட்டது தொடர்பாக இன்றைய சந்திப்பில் கண்டனம் தெரிவித்துள்ளதாக தெரிவித்துள்ளனரே?

பதில்:- இணைத் தலைமை நாடுகள் பொதுவாக இரண்டு தரப்புக்கும் தான் தமது கண்டனத்தை தெரிவிப்பதாகத் தெரிவித்தனர். திருகோணமலையில் விக்கினேஸ்வரன் ஐயா படுகொலை செய்யப்பட்டது, போராளிகள் படுகொலை செய்யப்பட்டதிலிருந்து இரண்டு தரப்புக்கும் தான் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இரண்டு தரப்பும் வன்முறைகளை நிறுத்த வேண்டும். படுகொலைகள், தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும். அவ்வாறு நிகழ்ந்;தால் அவற்றைக் கண்டிப்பதாகவும் தெரிவித்திருந்தார்கள்.

கேள்வி:- கண்காணிப்புக் குழுவிற்கு தாங்கள் அனுப்பிய கடிதத்திற்கு பதில் ஏதாவது கிடைத்துள்ளதா?

பதில்:- எந்தவிதமான பதில்களும் கிடைக்கவில்லை.

கேள்வி:- கனடா அரசாங்கம் விடுதலைப் புலிகளுக்கு எதிராக சட்டம் ஒன்றை கொண்டுவரப் போவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அரசிற்கு எதுவித அழுத்தத்தையும் கொடுக்காது விடுதலைப் புலிகள் மீது கனடா அரசு அழுத்தத்தை கொடுக்க முயல்வதன் நோக்கம் என்ன?

பதில்:- இவ்வாறான அறிவித்தல்கள் என்பது சமாதான முயற்சிகளை முற்றாக பலவீனப்படுத்துகின்ற முயற்சியாகத் தான் அமையும். அப்படியான செய்திகள் தான் வந்துகொண்டிருக்கின்றன இதன் உண்மைத் தன்மை குறித்து எமக்குத் தெரியவில்லை. ஆனால், உண்மையிலேயே சிறிலங்கா அரசாங்கமும் சிங்கள இனவாதிகளும், சிங்களப் படைகளும் மீண்டும் தமிழ் மக்கள் மீது பாரியளவில் இனப்படுகொலைகளைச் செய்வதற்கு து}ண்டுவதற்கான நடவடிக்கைகளாகத் தான் இவ் அறிவிப்புக்கள் அமையும்.

ஏனெனில் இச்சமாதான முயற்சிகளை குழப்புவதற்கு யார் காரணமாக இருக்கின்றார்கள் என்பதை எல்லோரும் அறிவார்கள். அமைதி முயற்சிக்கால நான்கரை ஆண்டுகளில் சிறிலங்கா அரசு எவ்வாறு நடந்துகொண்டுள்ளது என்பதை எல்லோரும் அறிவார்கள். யுத்த நிறுத்த உடன்பாட்டை அமுலாக்கம் செய்வதற்கும் மக்களின் மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்வதற்கும் முட்டுக்கட்டைகளை அரசு போட்டு நெருக்கடி நிலைமைகளை உருவாக்கி இயல்பு நிலைகளை சீர்குலைத்து பாரிய நெருக்கடிகளை உருவாக்கியது யார் என்பது எல்லோருக்கும் தெரியும்.

இவையெல்லாம் நிகழ்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு தலைப்பட்சமாக, இலங்கை அரசுக்கு ஆதரவாக தீர்மானங்களை கனடா அரசு எடுப்பது இனப்படுகொலையில் ஈடுபடுகின்ற சிங்கள இனவாதிகளுக்கும் சிங்கள பயங்கரவாத அரசுக்கும் ஊக்கம் கொடுப்பதாகவே அமையும். இது எமது தமிழ் மக்களின் உணர்வுகளை மோசமாக பாதிக்கும் என்றுதான் நினைக்கின்றேன். கனடாவில் கூட மூன்றரை இலட்சம் வரையான தமிழ் மக்கள் வாழ்கின்றார்கள். எல்;லோருடைய மனங்களையும் புண்படுத்துகின்ற செயலாகத் தான் இது அமையும். ஒரு தலைப்பட்சமான முடிவுகளை எடுக்காதிருப்பதுதான் அமைதி முயற்சிகளின் முன்னேற்றத்திற்கும் வழிகோலும்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)