Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழீழக் காணிச்சட்டமும் புலம்பெயர் மக்களின் காணிகளும்:
#41
Jude Wrote:
தூயவன் Wrote:எனது கழுத்துக்கு சுறுக்கே விழாது. அது ஏன் என்று களத்தில் உள்ள பல உறுப்பினர்களுக்குத் தெரியும். அது ஏன் என்று வெளிப்படுத்தவும் தேவையில்லை.

ஓகோ!! நீங்கள் தான் தலைவருக்கு அடுத்தவரோ??? இவ்வளவு நாளும் தெரியாமல் போச்சே. அடுத்த கருணாவாக வராமல் இருந்தால் சரி.

என்ன புழுகு!!. இப்படி எத்தனை புழுகர்கள் இந்த களத்தில் இருக்கிறார்களோ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ஆகா என்ன அறிவு!! உடனே தங்களின் மேதாவித்தனத்தைக் காட்டிக் கொள்கின்றீர்களே!! மற்றது தலைவருக்கு அடுத்த நிலை என்று யாரும் இல்லை. அது கூட உங்களுக்கு தெரியாமல் பேச்.....சீசீ

நான் சொல்வது என்னவென்றால் காணிப் பிரச்சரன தொடர்பாக எனக்கு எவ்வித சுருக்கு கயிறும் விழாது என்பதே!!அதை மட்டும் யதார்த்தமாக. யோசியுங்கள்.
[size=14] ' '
Reply
#42
sOliyAn Wrote:
Quote:எனது பாட்டன்,பூட்டனது நிலம் என்று கூறுபவர்கள் ஏன் வெளிகிட்டீர்கள் அங்கயே இருந்திருக்கலாமே,உங்கள் நிலத்தை மீட்க போராடி இருக்கலமே? இல்லை உங்கள் மண் மீது உங்களுக்கு பிணைப்பு வேண்டும் என்றால் மீண்டும் செல்வது தானே? நீங்கள் செல்லும் போது உங்களுக்கு அந்தக் காணிகள் வழங்கப்படும்.

ஓம் நாரதரே! உப்பிடி கேள்வி கேட்க எனக்கும் வரும்.. ஆனா, உதுக்கு மேலயும் நிறைய கேட்கலாம்.. ஆனா. அது நானே என்னைக் கொச்சைப்படுத்துவதுபோல..
இன்றைக்கு மேடைகளிலே முன்னுக்கு நிற்பவர்கள் அந்தந்த நாட்டு பிரசைகளாக இருக்கலாம்.. ஆனால் நான் 22 வருடங்களாக ஏன் இலங்கை கடவுச்சீட்டில் இருக்கவேணும்.. காரணம் இங்கே அவசியமற்றது.
பிருந்தன் கூறியவாறு சுதந்திர தமிழீழத்தில் இப்படியானதொரு சட்ட அமுலாக்கம் ஏற்படின் வரவேற்கத்தக்கதே! நாரதரே.. இன்னும் ஒரு கேள்வி.. 84ம் ஆண்டளவில் எந்த அப்பன் ஆச்சி தமது பிள்ளைகளை மனமுவந்து போராட்டத்துக்கு அனுப்பினார்கள்? அப்பு ராசா.. இதுகளுக்கால நீயாவது ஓடித் தப்படா என்று சொல்லி வெளியேற்றியதுதான் உண்மை.. அப்படி வெளியேறியவர்களில் பலர்.. 10 வீதமல்ல.. பலர் இன்றும் தாயகப் பற்றுடன் வாழ்கிறார்கள். தாயகத்துக்கு தங்களாலான பங்களிப்புகளை வழங்குகிறார்கள் என்பதுதான் உண்மை. சொத்து இன்று வரும்.. நாளை போகும்.. அது பெரிய விடயமல்ல.. அன்று 100 டொலருடன் புலம் பெயர்ந்தவர்கள்தான் தங்களது திறமையால் பல்வேறு துறைகளிலே குறிப்பிடக்கூடிய வகையில் முன்னேறியுள்ளார்கள்.
எனது கருத்தாடலின் முக்கிய பொருள்.. புகலிட தமிழர்களதும் தாயகத்துக்குமான ஒரு உரிமைப் பிணைப்பாக உள்ள சொத்து ஏன் கைமாற வேண்டும்.. அதற்கு என்ன அவசியம் இப்போது.. அதுதான்.
மற்றும்படி.. சொத்தின் பெறுமதிய புகலிடத் தமிழர்கள் உயர்த்துகிறார்களாம்.. யதார்த்த உண்மை தெரியாத அலம்பல் இது.. தாயகத்திலுள்ள உறவுகளை விசாரியுங்கள்.. போராட்டம் வெடிக்கப் போகிறது என்ற பயத்தில் சொத்துகளை வாங்க அங்கே ஆட்களில்லை.. அதனால் சொத்தின் பெறுமதி குறைந்துகொண்டு போகிறது என்பதுதான் உண்மை.





சோழியன்,

சொத்து கைமாறுவதாக எங்கே அந்த செய்தியில் கூறப்படுள்ளது.உங்களுடய சொத்து உங்களுடனயே இருக்கும்.அதைப்பராமரிப்பது ,வளப்படுதுவது தமிழ் ஈழ அரசைச் சாரும்.அரசென்பது மக்களுக்கு ஆனது,அது தனி நபர்களின் சொத்து அல்ல.குடியிருக்க காணி இன்றி,அல்லலுறும் மக்களுக்கு அந்தக் காணிகள் பயன் பெற்றால், அல்லது தருசு நிலங்களாக கவனிப்பாரற்றுக் கிடக்கும் நிலங்கள் பயிர் செய்யப்பட்டு பாவனைக்கு வந்தால் தமிழ் ஈழத்திற்கும்,உங்களுக்கும் பயன் பெறும் தானே.அதைதானே இந்த சட்டம் வழி விடுகிறது.மேலே காவடி கேட்டது போல் நீங்கள் கிலேசம் அடைவதற்கான காரணம் என்ன?

மேலும் இன்று எம்மில் பலர் எங்களுக்கு என்று ஒரு சேதாரம் வரப் போகுது என்றவுடன் மட்டுமே போரட்டத்தை விமர்சிகிறோம்.இது முற்றிலும் பிழையானது.இப்படி பார்த்தால் ஒருவருமே போராடி இருக்கக் கூடாது.அப்படியானல் தமது உயிரைக் கொடையாகக் கொடுக்கும் போராளிகளும்,தமது இன்னியிரைக் கொடுத்த மாவீரரும் என்ன இழிச்சா வாயரா?அவர்கள் ஏன் தமது உயிரைக் கொடுத்தனர்?அவர்களுக்குப் பெற்றவர்கள் இல்லயா?உறவுகள் இல்லயா? அவர்கள் அழுது குளறி இருக்க மாட்டார்களா?இப்படி மனசாட்சி இன்றிக் கதைக்க எனக்கு உள்ளம் வரவில்லை.எனக்கும் சொத்துக்கள் உண்டு ,அவை பற்றிக் கவலைப் பட்டு நான் தேசிய விடுதலைப் போரட்டதிற்கு எதிராக எனக்கு ஒரு சுய பாதிப்பு வருகிறது என்பதாற்காக எனது நிலயை மாற்றப் போவதில்லை.

மேலும் தமிழ் ஈழ தனி யரசு என்பது ஒரு இரவில் ஏற்பட்டு விடாது.அது இப்படியான தொடர் படிகளினாலயே நிதர்சனமாகும்.அந்த இலக்கை அடைவதற்கான ஒரு படியே இது.
Reply
#43
Vasampu Wrote:சட்டங்கள் என்பது மக்களுக்காக உருவாக்கப்படுவதே. சட்டங்களுக்காக மக்கள் இல்லை. புலம் பெயர்ந்த நாரதர் காணிகளை விட்டுவிட்டு ஏன் புலம்பெயர்ந்து வந்தீர்கள் அங்கேயே இருந்து அதை காப்பாற்றி இருக்கலாமென கேட்பது வேடிக்கை. இன்று இவ்வளவு மக்கள் புலம்பெயர்ந்து வந்ததினால்த்தான் போராட்டம் இவ்வளவு வளர்ச்சியடைந்துள்ளது. எல்லா மக்களும் அங்கிருந்திருந்தால் செம்மணிகள் தான் மிஞ்சியிருக்கும். அத்துடன் இப்படியான சட்டங்களினால் எதிர்காலத்தில் தாயகத்தில் தமது முதலீடுகளைப் போட எண்ணியிருந்தவர்களும் அதனை வேறு இடங்களுக்கு மாற்றவே இது இடம் அளிக்கும். இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் நிச்சயம் புலிகளுக்கும் புலம் பெயர் மக்களுக்கும் இடையில் இடைவெளி அதிகரிக்கவே இது வழி வகுக்கும்.



ஆகா வசம்பரே,

சட்டங்கள் என்பது மக்களிற்க்கானது என்று கூறிக் கொண்டு என்ன எழுதுகிறீர்.தமிழ் ஈழத் தனியரசு காணிகளை எடுப்பது தனியாரிடம் இருந்து.அரசென்பது மக்களிற்கானது,அது பரந்து பட்ட மக்களின் நலனுக்காக இயங்குவது.அதனாலயே புலத்தில் உள்ள அரசுகளுக்கும் எவரது காணியையும் சுவீகரிக்கும் அதிகாரம் இருக்கு.ஒரு தேசிய பாதுகாப்பிற்குத் தேவயான காணியை சுவீகரிக்க எந்த அரசிற்கும் உரிமை உண்டு.மேலும் என்னைப் பற்றிக் கதைதீர் ஓம் நான் புலம் பெயர்ந்தவன் தான் அதற்காக எனது சுய நல நோக்கில் இருந்து சிந்திப்பதுவோ ,செயற்படுவதோ கிடயாது.இதை முன்னரும் பல முறை சொல்லி இருகிறேன்,அது தான் உமக்கும் ,எனக்கும் உள்ள வித்தியாசம்.எனக்கு ஒரு பாதிப்பு வருகிறது அதற்காக நான் தமிழ் ஈழ தனியரசின் நலங்களுக்கு எதிராக சொல்லவோ செயற்படவோ மட்டேன்.ஊரோடு ஏற்பட்ட இழப்பு எனக்கும் ஏற்படுகிறது என்றே எண்ணுவேன்.

தமது இன்யிரைத் தானமாகக் கொடுப்பவர்களுக்கு ஏற்பட்ட இழப்பிலும் எனது இழப்பு என்பது ஒரு துரும்பே.அவர்களே போராட்டதின் பலன்களை பெறுவதற்கு முதலில் உரித்தானவர்கள்.

முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள் நாங்கள் எல்லோரும் புலம் பெயர்ந்தது எமது சுய நலங்களைப் பாதுகாக்க,போராட்டதுகு உழைதுக் கொடுக்க என்று பொய் சொல்லதீர்கள்.போராட்டதிற்குக் கொடுத்தோம் தான் ஆனால் முதலில் எம்மது சொந்த நலங்களைப் பாது காத்தோம்.

ஆனால் தமது உயிரைக் கொடுத்தவர்கள் தமது வாழும் உரிமையை,போராட்டதிற்காக கொடுத்தார்கள்,இன்றும் கொடுப்பதற்குத் தயாராக இருகிறார்கள்.அவர்களை இழந்தவர்கள் நிலயை யோசித்துப் பாருங்கள்?இவர்கள் எதற்காக இதனைச் செய்தனர்?இவர்களின் இறப்புக்கு அர்த்தம் இல்லயா?தமிழ் ஈழ அரசை மற்றவன் போராடி அமைக்கட்டும்.அதன் பயனை நாம் பின்னர் வந்து அனுபவிப் போம் என்பது கடைந்தெடுத்த போக்கிரித்தனம் இல்லயா?உங்கள் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்.
Reply
#44
மேலும் இசுரேலிரைப்பற்றி நல்லயன் சொல்லி இருந்தார்,
இசுரேல் என்ற யூதர்களுக்கான பாதுகாகப் பட்ட பிரதேசம் அன்றய வல்லரசான பிரித்தனியாவாலும்,அமெரிக்காவாலும் உருவாக்கப்பட்ட போது, பாலைவனமாக இருந்த பிரதேசத்தை வளம் கொழிக்கும் பிரதேசமாக உருவாகியவர்கள் அங்கு சென்று குடியேறிய யூதர்கள்.பின்னர் இந்தப் பாதுகாப்பு விலக்கப் பட இருந்த சமயம், சுற்றவர இருந்த எட்டு அரபு நாடுகளும் படயெடுக்க இருந்த தருணம், சில ஆயிரமாக இருந்த இசுரேலியப் படயணியை வல்லமை பொருந்திய இராணூவமாக மாற்றி லட்சக் கணக்காக்கியவர்கள் அங்கே புலம் பெயர்ந்த யூதர்கள்.இவர்கள் ஐரோப்பிய நாடுகளில் இருந்து அங்கு சென்று குடியேறினார்கள்.கிபுட்டுக்கள் என்னும் கூட்டுப் பண்ணைகளை அமைத்து நகரங்களை,பண்ணைகளை அமைத்து ,தமது கடும் உழைப்பை தமது நாட்டிற்காகக் கொடுத்தார்கள்.அவர்கள் இருந்த நிலமோ,பண்ணயில் இருந்த உடமைகளோ அரசிற்க்கே சொந்தமாக இருந்தது.இப்படியான பங்களிப்பயே புலம் பெயர்ந்த யூதர்கள் வழங்கினார்கள்.

இங்கே நாம் பல ஆண்டுகளாகக் காணாத ,கவனிக்காத நிலத்தை ,தாயகத்தில் போராடி,உதிரம் சிந்தியவர்கள் பாவிப்பதற்கு , கவலை கொள்கிறோம்.புலம் பெயர்ந்த யூதர்கள் எங்கே? நாம் எங்கே?
Reply
#45
என்னப்பா நடக்குது இங்க.?

புலம் பெயர்ந்த எவரும் புலத்தில் சொந்தமாக காணிகள் வைத்திருக்க கூடாதா எண்று சட்டம் வந்திருக்கிறது.?? புலத்தில் இருக்கும் புலம்பெயர்ந்தவர் காணிகள் அவர்கள் புலம் வரும் வரை பொதுப்பயன் பாடுக்காக நாட்டு வளர்ச்சிக்காக பயன் படுத்தபடும் என்பதே.! அந்தக்காணிகள் திரும்ப அவரகளிடம் வளங்கப்படும் என்பதே.

இங்கு சிலர் அலறுவது போல காணிகள் கையகப்படுத்தல் சட்டமூலம் கிடையாது.

எதையாவது விளங்கி கருத்து போடுங்கப்பா.
:::::::::::::: :::::::::::::::
Reply
#46
Vasampu Wrote:சட்டங்கள் என்பது மக்களுக்காக உருவாக்கப்படுவதே. சட்டங்களுக்காக மக்கள் இல்லை. புலம் பெயர்ந்த நாரதர் காணிகளை விட்டுவிட்டு ஏன் புலம்பெயர்ந்து வந்தீர்கள் அங்கேயே இருந்து அதை காப்பாற்றி இருக்கலாமென கேட்பது வேடிக்கை. இன்று இவ்வளவு மக்கள் புலம்பெயர்ந்து வந்ததினால்த்தான் போராட்டம் இவ்வளவு வளர்ச்சியடைந்துள்ளது. எல்லா மக்களும் அங்கிருந்திருந்தால் செம்மணிகள் தான் மிஞ்சியிருக்கும். அத்துடன் இப்படியான சட்டங்களினால் எதிர்காலத்தில் தாயகத்தில் தமது முதலீடுகளைப் போட எண்ணியிருந்தவர்களும் அதனை வேறு இடங்களுக்கு மாற்றவே இது இடம் அளிக்கும். இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் நிச்சயம் புலிகளுக்கும் புலம் பெயர் மக்களுக்கும் இடையில் இடைவெளி அதிகரிக்கவே இது வழி வகுக்கும்.

என்ன நாட்டு மக்களின் வளங்களை நாட்டுக்காக பயன் படுத்துதல் இடைவெளியை அதீகரிக்கும் ஆக்கும்.

தாயகத்தில் முதலீடு போடுபவர் நாட்டில்கால் பதிக்காமல் முடியாது அங்கு உங்களின் முதலீடு இருக்குமானால் நீங்கள் அங்கும் வாழ்வதாகவோ இல்லை குடியாக கொள்ளப்படும்.

10 வருடங்கள் பராமரிப்பு இல்லாமல் இருக்கும் காணிகள்தான் தனீட்சையாக கையகப்படுத்தபடும் என்பதுதான் சட்டம்.

உங்கள் காணிகள் உங்களால் பாவனைப்படுத்தபடுவதாக இருந்தாலும் கையகப்படுத்தப்படும் எனும் புதிய சட்டம் இயற்றாமல் இருந்தால் சரி. அது வரை உங்கள் காணிகளுக்கு ஆபத்து கிடையாது.
:::::::::::::: :::::::::::::::
Reply
#47
sOliyAn Wrote:எனது கருத்தாடலின் முக்கிய பொருள்.. புகலிட தமிழர்களதும் தாயகத்துக்குமான ஒரு உரிமைப் பிணைப்பாக உள்ள சொத்து ஏன் கைமாற வேண்டும்.. அதற்கு என்ன அவசியம் இப்போது.. அதுதான்.
மற்றும்படி.. சொத்தின் பெறுமதிய புகலிடத் தமிழர்கள் உயர்த்துகிறார்களாம்.. யதார்த்த உண்மை தெரியாத அலம்பல் இது.. தாயகத்திலுள்ள உறவுகளை விசாரியுங்கள்.. போராட்டம் வெடிக்கப் போகிறது என்ற பயத்தில் சொத்துகளை வாங்க அங்கே ஆட்களில்லை.. அதனால் சொத்தின் பெறுமதி குறைந்துகொண்டு போகிறது என்பதுதான் உண்மை.

உங்களுக்கு மட்டும் அல்ல எல்லாருக்கும் இங்கு இருக்கும் பிரச்சினை என்ன எண்றால் புலிகள் யார் எமக்கு சட்டம் போட என்பதுதான்.

ஒருகாலத்தில் நில உச்சவரம்பு சட்டத்தை இலங்கை அரசு கொண்டு வந்தபோது கைகட்டி வாய் பொத்தி இருந்த சனம் தான் நாங்கள்.

ஆனால் பாவனையில் இல்லாமல் தரிசாகி கொண்டிருக்கும் பயிர் நிலங்கள் வாழ்நிலங்கள். நாட்டு வளர்ச்சிக்காய் நீங்கள் வரும் வரை பயன் படுத்தப்படும் என்பது இப்போ கசக்கும். அதை எதிர்க்க எங்களுக்கு எல்லாம் திரணி வந்திட்டுது. காரணம் சண்டைபோடுறது பழக்கமாகீட்டுது இல்லையா. :roll:
:::::::::::::: :::::::::::::::
Reply
#48
[quote=Jude]தமிழீழ நீதி நிருவாகத்தின் முடிவுகளுக்கு எதிராக எழுதுபுவர்கள் துரோகிகள். இந்த சட்டங்களை விடுதலைப்புலிகள் தான்தோன்றித்தனமாக அமைப்பதில்லை. சட்டவல்லுனர்கள், சமுககட்டமைபபில் அனுபவமும் ஆற்றலும் உள்ளவர்கள், இடம்பெயர்ந்த மக்களின் தேவைகள் பற்றி நன்கு அறிந்தவர்கள் போன்றவர்களின் ஆலோசனைகளின் அடிப்படையிலேயே இந்த சட்டங்கள் இயற்றப்பட்டிருக்க கூடும்.
நாட்டின் தேவைகருதி விடுதலைப்புலிகளின் உலகம் போற்றும் நிருவாகம் எடுத்த முடிவை விமரிசிக்கும் உரிமை வேற்றுநாட்டில் வாழும் ***களுக்கு இல்லை.

இப்படியாக விடுதலைப்புலிகளின் சட்டம் நீதி அமைப்பை விமரிசிப்பவர்கள் இந்திய இலங்கை ஒட்டுப்படைகளின் கைக்கூலிகளாகவே இருக்க வேண்டும்.


மேற்குறிப்படவாறு யாராவது இங்கே எழுதி உள்ளனரா?
இதைப் போன்ற உண்மைகள் அற்ற வரிகளை ,தங்களை மாற்றுக் கருத்தாளர்கள் என்று சொல்லிக் கொள்ளும் ,பணத்திற்கு விலை போன இணயத் தளங்களில் தான் பார்த்திருக்கிறேன்.தன்னை ஒரு தமிழீழ ஆதரவு நல்கும் செயற்பாட்டளராக காட்டிக்கொள்ளும் ஒருவரிடம் இருந்து வருவதை இப்போது தான் பார்க்கிறேன்.

நிதானம் இழந்து தங்களைத் தாங்களே யார் என்று காட்டிக் கொள்ளும் பொய்கள் இவை.

புலிகளின் நிர்வாகத்திறனை உலகம் போற்றுகிறது என்றும் இவர் முன்னர் எழுதி உள்ளார் என்பதுவும் இங்கே கவனிக்கப்படத் தக்கது.
Reply
#49
narathar Wrote:.

புலிகளின் நிர்வாகத்திறனை உலகம் போற்றுகிறது என்றும் இவர் முன்னர் எழுதி உள்ளார் என்பதுவும் இங்கே கவனிக்கப்படத் தக்கது.

விடுதலைப்புலிகளின் நிர்வாகம் உலகம் போற்றும் நிருவாகம் என்று நான் திரும்பவும் திரும்பவும் எழுதும் இடம் எல்லாம் எழுதுவேன். உமக்கு அது பிடிக்காவிட்டால் படிக்காதேயும். ஆனால் நான் இதை எழுதுவதை உம்மால் தடுக்க முடியாது.

உமக்கு விடுதலைப்புலிகளின் நிருவாகத்தை நான் போற்றி எழுதுவது எரிகிறது என்றால் நீர் குறிப்பிட்டது போன்ற "மாற்றுக்கருத்து" களங்களில் போய் குளிர்காயும்.
''
'' [.423]
Reply
#50
Jude Wrote:
narathar Wrote:.

புலிகளின் நிர்வாகத்திறனை உலகம் போற்றுகிறது என்றும் இவர் முன்னர் எழுதி உள்ளார் என்பதுவும் இங்கே கவனிக்கப்படத் தக்கது.

விடுதலைப்புலிகளின் நிர்வாகம் உலகம் போற்றும் நிருவாகம் என்று நான் திரும்பவும் திரும்பவும் எழுதும் இடம் எல்லாம் எழுதுவேன். உமக்கு அது பிடிக்காவிட்டால் படிக்காதேயும். ஆனால் நான் இதை எழுதுவதை உம்மால் தடுக்க முடியாது.

உமக்கு விடுதலைப்புலிகளின் நிருவாகத்தை நான் போற்றி எழுதுவது எரிகிறது என்றால் நீர் குறிப்பிட்டது போன்ற "மாற்றுக்கருத்து" களங்களில் போய் குளிர்காயும்.


நாட்டின் தேவைகருதி விடுதலைப்புலிகளின் உலகம் போற்றும் நிருவாகம் எடுத்த முடிவை விமரிசிக்கும் உரிமை வேற்றுநாட்டில் வாழும் ***களுக்கு இல்லை.

இப்படியாக விடுதலைப்புலிகளின் சட்டம் நீதி அமைப்பை விமரிசிப்பவர்கள் இந்திய இலங்கை ஒட்டுப்படைகளின் கைக்கூலிகளாகவே இருக்க வேண்டும்.

இல்லை ஜூட் ,

உமது இரட்டை நாக்குத் தனமும், புலிகளைப்பற்றிய நக்கல் கலந்த விமரிசனமும், எனக்கு விளங்காது என்று நினத்தீரா?

நீர் எவ்வறானவர் என்பது சிலருக்கு விளங்காதபடியாலயே உமது நக்கல், நளினங்களை குறிப்பிட்டுச் சொல்ல விழைந்தேன்.அது சரி இங்கே துரோகிப் பட்டம் எந்த அடிப்படயில் வழங்குகிறீர்?ஒரு ஜன நாயக வாதியாகா, அதி உயர் ஜன நாயகப் பண்புகளை உள்ளடக்கிய அமெரிக்க நாட்டின் ஒரு நற்பிரசை ஆன நீர் ஏன் இங்கே கருத்து எழுதுவோரை
துரோகி என அழைக்கிறீர்? இவ்வாறு வேறு எவரும் கருதுத் தடையைக் கோரவில்லயே? உமது ஜன நாயக முகமூடிக்கு என்ன நடந்தது?
Reply
#51
கொஞ்சம் அங்கால இஞ்சால போய்வந்தா அதுக்கிடையில எவ்வளவு மாற்றங்கள்?
ஏதோ யாழ்க்களத்திலயும் புலிகளை விமர்சிக்கிற அளவுக்கு முதிர்ச்சி வந்திருக்கெண்டது ஆச்சரியமாத்தானிருக்கு.

"தனக்குத் தனக்கெண்டா சுளகு படக்குப் படக்கெண்டு........"
Reply
#52
narathar Wrote:[quote=Jude] நாட்டின் தேவைகருதி விடுதலைப்புலிகளின் உலகம் போற்றும் நிருவாகம் எடுத்த முடிவை விமரிசிக்கும் உரிமை வேற்றுநாட்டில் வாழும் ***களுக்கு இல்லை.

இப்படியாக விடுதலைப்புலிகளின் சட்டம் நீதி அமைப்பை விமரிசிப்பவர்கள் இந்திய இலங்கை ஒட்டுப்படைகளின் கைக்கூலிகளாகவே இருக்க வேண்டும்

இல்லை ஜூட் ,

உமது இரட்டை நாக்குத் தனமும், புலிகளைப்பற்றிய நக்கல் கலந்த விமரிசனமும், எனக்கு விளங்காது என்று நினத்தீரா?

நீர் எவ்வறானவர் என்பது சிலருக்கு விளங்காதபடியாலயே உமது நக்கல், நளினங்களை குறிப்பிட்டுச் சொல்ல விழைந்தேன்.

எனது கருத்துக்கள் வெளிப்படையானவை. அவை உமக்கு புரியாவிட்டால் அது உமது பிரச்சினை.

மற்றவர்களை கீழ்த்தரமாக மதித்து அப்படியே மற்றவர்களும் மதிக்க வேண்டும் என்று நீர் முயற்சிப்பது தெரிகிறது. உமது பண்பாடு எனது பண்பாடு அல்ல.

narathar Wrote:அது சரி இங்கே துரோகிப் பட்டம் எந்த அடிப்படயில் வழங்குகிறீர்?ஒரு ஜன நாயக வாதியாகா, அதி உயர் ஜன நாயகப் பண்புகளை உள்ளடக்கிய அமெரிக்க நாட்டின் ஒரு நற்பிரசை ஆன நீர் ஏன் இங்கே கருத்து எழுதுவோரை
துரோகி என அழைக்கிறீர்? இவ்வாறு வேறு எவரும் கருதுத் தடையைக் கோரவில்லயே?

விடுதலைப்புலிகள் தமது நாட்டுக்கு தேவையான சட்டங்களை இயற்றும் போது அது பற்றி விமரிசித்து, அதையும் "ஆதரவு குறையும்", "குழப்பம் வரும்" என்று பிரச்சினை கிளப்ப முயல்வது துரோகத்தனமான செயலாகும். இது எனது அபிப்பிராயம். வேறுயாரும் அதற்கு ஆதரவளிக்கவேண்டும் என்று நான் எதிர்பார்க்கவும் இல்லை.

narathar Wrote:உமது ஜன நாயக முகமூடிக்கு என்ன நடந்தது?


ஜனநாயக முகமூடியை நான் அணிந்து இருக்கவில்லை. நீர் தான் அணிந்திருக்கிறீர்.
''
'' [.423]
Reply
#53
இங்கே தங்கள் காணிகள், சொத்துக்கள் மட்டில் பலருக்கு இருக்கும் "ஈர்ப்பை" நான் கொச்சைப்படுத்தவில்லை. பலர் விசயம் புரியாமல் சகட்டு மேனிக்கு எதிர்ப்பதாகவும் தெரிகிறது.

நிற்க,
போராட்டத்தேவைக்காக எதையும் செய்தே ஆகவேண்டிய நிலை அவ்வப்போது வரும். கடந்த காலங்களில் புலிகள் எடுத்த தீவிரமான (கவனிக்க இப்போது வந்த காணிச்சட்டம் அப்படியானதன்று) நடவடிக்கைகளில் மக்கள் பாதிக்கப்பட்டாலும் அது தேச விடுதலைக்குத்தான் என்ற புரிதல் இருந்தது. இந்தக் காணிச் சட்டத்தால் புலம்பெயர்ந்தவர்கள் எதை இழக்கிறார்கள் என்பது எனக்கு இன்னும் புரியாமலுள்ளது. ஆனால் களத்தில் வாழ்ந்த மக்கள் இப்படியான நடவடிக்கையினால் தமது வாழ்வாதாரத்தைக்கூட அர்ப்பணித்தார்கள்.

ஜெயசுக்குறு தொடங்கியபோது பல உழவு இயந்திரங்கள் புலிகளால் எடுத்துச் செல்லப்பட்டன.( கவனிக்க, வாங்கிச் செல்லப்படவில்லை). முத்தையன்கட்டுப்பகுதியில் மட்டும் பதினாறு உழவியந்திரங்கள் இவ்வாறு புலிகளால் கொண்டுசெல்லப்பட்டன. அவையனைத்தும் விவசாயத்துக்கான உழவுஇயந்திரங்கள். ஆறுவருடங்களின்பின்தான் அவற்றுக்கான பணம் (வட்டியுடன்) கொடுக்கப்பட்டது. அக்குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்து சடுதியான பின்னடைவைச் சந்தித்தன. ஆனால் அது தவிர்க்கவே முடியாத நிலை. யுத்தத்துக்கு வாகனங்களற்ற நிலையில் அதுதான் செய்யப்பட வேண்டியது.

இதைப்போல தனியார் வாகனங்கள் கொண்டு செல்லப்பட்டன. வாகனச்சாரதிகள் கட்டாயம் முன்னணிக் களப்பணி செய்தாக வேண்டும். (இதில் பல வாகனச்சாரதிகள் வீரச்சாவடைந்தார்கள்). மக்களின் வாகனங்கள் களப்பணியில் சிதறிப்போகும் அல்லது சேதமாகும். பல வீடுகள், காணிகள் கூட புலிகளின் முகாம்களாக இருக்கத்தக்கதாக அதற்குச் சொந்தமான நிறையப்பேர் வாடகை வீட்டில் குடியிருந்தார்களே? இவற்றிலெல்லாம் போராளி - மாவீரர் குடும்பங்களென்று கூட பார்ப்பதில்லை.

அந்தச் சந்தர்ப்பத்திலெல்லாம் புலிகள் விமர்சிக்கப்பட்டதில்லை. அங்கிருந்த மக்கள் அதைச் செய்யப்போவதுமில்லை. அவர்கள் புலிகளை வெருட்டியதுமில்லை. நீ ட்றக்ரறைப் பறிச்சா எங்கட பிள்ளையள் சண்டைபிடிக்க வராதுகள் எண்டு சொல்லியதில்லை.

இப்படி எல்லாச் சந்தர்ப்பத்திலும் அனைத்துச் சொத்துக்களும், (உயிர்களும்கூட) தேசப்பாதுகாப்புக்கென்று பயன்படுத்தப்பட்டன. கட்டாயப்படுத்திக்கூட அவை பெறப்பட்டன. அதற்கான உரிமையும் தார்மீகத் தகுதியும் புலிகளுக்கு முற்றிலுமுண்டு. இப்போது ஏற்படுத்தப்பட்ட காணிச் சட்டம்கூட அப்படியானது தானென்றாலும் அதில் கடுமையான எதுவுமிருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

சரி. இதுவரைகாலமும் இந்தப் புலம்பெயர்ந்தவர்களின் காணியை யார் பார்க்கிறார்கள்?

அவர்களது இரத்த உறவுகள்தான் என்றால் அவர்களே அதைக் கையாழ்வதற்கு இப்போதைய சட்டத்தில் வழியுண்டுதானே? அப்படியில்லாமல் வேறு யாரையாவது வாடகைக்கு விட்டிருக்கிறார்களா? அந்தச்சந்தர்ப்பத்தில் இவர்கள் திரும்பிப்போகும்வரை அவ்வாடகை இவர்களுக்குக் கிடைக்காது என்பதைத் தவிர வேறென்ன சிக்கல்?

காவடி கேட்ட மூன்று கேள்விகள்தான் எனக்கும் தொக்கு நிற்கின்றன.
Reply
#54
இல்லை கெதியா உயர் பாதுகாப்பு வலயத்துக்க இருகிற எங்கட காணியளையும் சண்டை பிடிச்சு உயிரக் குடுத்து மீட்டியள் எண்டா நாங்க இன்னும் கெதியா வந்து உவற்றையும் உரிமை கொண்டாட வசதியா இருக்கும்..கெதியாச் சண்டயத் துவக்குங்கோவன்...
Reply
#55
இந்த தலைப்பை ஆரம்பித்தவருக்கு கோடி நன்றிகள். பல மனிதர்களின் உண்மை வடிவத்தை அறிந்துகொண்டேன்.
.
Reply
#56
அ"றோ"கரா...

வசம்பு, யூட்டு காவடியென்ன, என்னவெல்லாம் ஆடுவியள்!!! உங்களெல்லோருக்கும் எங்கே ஒரு இடம் கிடைக்குதோ, அங்கெல்லாம் முழந்தாளுக்கும் மொட்டந்தலைக்கும் முடிச்சுகளெல்லாம் போட்டுவியள்!!

தமிழீழ காணிச்சட்டம், ஒரு பாரிய நிலப்பரப்பை நிர்வகிக்கும் ஓர் அரசினால் கொண்டுவரப்பட்ட சட்டம்!! அதில் மாற்றங்கள் வரலாம்!!! இங்கு நாமிருக்கும் நாடுகளில் கொண்டுவரப்படாத சட்டங்களா??? திருத்தப்படத சட்டங்களா??? லண்டனில் முன்பு தட்சரின் காலத்தில் "போல் ரக்ஸ்" என்று ஒன்றை கொண்டு வந்தார்கள்!! எதிர்ப்போ உச்சத்தை அடைந்தும், நடைமுறைப்படுத்தினார்கள்!! ஆனால் ஜோன் மேஜர் காலத்தில் அது நீக்கப்பட்டு "கவுன்ஸில் ரக்ஸ்" அறிமுகப்படுத்தப்பட்டது. இது உலகில் நடைபெறாத நாடுகளேயில்லை எனலாம்!! அதை விடுத்து நாம் தேசியத்திற்கு ஆதராவானவர்கள், வளர்பவர்கள், அந்நாட்டின் பிரஜைகள்!! நாங்கள் எங்கள் அபிப்பிராஜங்களை தெரிவிக்க உரிமை உடையவர்கள்!!

ஆனால் ... நீங்கள் ஜனநாயகவாதிகள்!! காட்டிக்கொடுப்பீங்கள், ஒட்டுப்படைகளோடு சேர்ந்து சனங்களை கொல்லுவீங்கள், தூள் கடத்துவீர்கள், கோயில் உண்டியல் அடிப்பீர்கள், கொலை, கொள்ளை, ... இன்னாரன்ன செய்து போட்டு கருத்துச்சுதந்திரம்!!!!!! விடுவியள் ... சந்தர்ப்பம் கிடைத்தால் ... ராக்கட்டும்!!!!
Reply
#57
Nellaiyan Wrote:தம்பி குறுக்காலபோவான் என்னத்தைச் சொல்ல வந்தீரோ தெரியவில்லை? உமக்கு யார் சொன்னது லண்டனில் கிறடிட்காட்டில் அடித்து காசு கொடுக்கப்பட்டதில்லையென்று? உமக்கு தெரியுமா லன்டனில் திறைசேரிக்கு அளிக்கப்பட்ட நிதியின் தொகை? சும்மா விதன்டாவாததிற்கு எழுதாதீர்!

அது இருக்க, இஸ்ரவேல் எனும் நாடு மலர்ந்து இன்றுபல வருடங்கள் சென்று விட்டன. ஆனால் இன்றும் இஸ்ரவேலின் பாரிய நிதிப்பிரட்சனைகளை புலத்தில் உள்ள யூத மக்களே கரம் கொடுக்கிறார்கள்! இதை என்னத்திற்குச் சொல்கிறேன் என்றால் நாளை மலரப்போகும் தமிழீழத்தில் முதலிடுவதற்கு வெளிநாடுகளோ அல்லது வெளிநாட்டு நிறுவனங்களோ அடித்துப் பிடித்து முண்டியடித்து வரப் போவதில்லை! புலத்தில் உள்ள நாம்தான் நீண்ட காலத்திற்கு கை கொடுக்க வேண்டிவரும் மட்டுமல்ல கை கொடுக்க வேண்டும்! இது கடந்த காலங்களிலும் கண் கூடு! சுனாமியாகட்டும், வெள்ளப்பெருக்குகள் ஆகட்டும் நாம்தான் கை கொடுத்தோம்! ஒருவரும் வரவில்லை!!!! இன்றைய தேசியத்தின் வளர்ச்சிக்கு களத்தில் உள்ள மக்கள் செய்த தியாகங்கள் கற்பனைக்கு எட்டாதவை! மலரப்போகும் ஈழத்தில் அம்மக்களுக்கே முதலிடம் வழங்க வேண்டும் என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை! ஆனால் புலம்பெயர் மக்களின் பங்களிப்பானது, இன்று பரவி வியாபித்திருக்கும் தேசிய விருட்சத்தில் பாரிய பங்கையும் யாரும் மறுப்பதற்கில்லை!!

அண்ணை நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னான் நீங்கள் ஏன்டென்சன் ஆகுறீங்கள். :?
Reply
#58
ஜெயதேவன் Wrote:அ"றோ"கரா...

வசம்பு, யூட்டு காவடியென்ன, என்னவெல்லாம் ஆடுவியள்!!! உங்களெல்லோருக்கும் எங்கே ஒரு இடம் கிடைக்குதோ, அங்கெல்லாம் முழந்தாளுக்கும் மொட்டந்தலைக்கும் முடிச்சுகளெல்லாம் போட்டுவியள்!!

தமிழீழ காணிச்சட்டம், ஒரு பாரிய நிலப்பரப்பை நிர்வகிக்கும் ஓர் அரசினால் கொண்டுவரப்பட்ட சட்டம்!! அதில் மாற்றங்கள் வரலாம்!!! இங்கு நாமிருக்கும் நாடுகளில் கொண்டுவரப்படாத சட்டங்களா??? திருத்தப்படத சட்டங்களா??? லண்டனில் முன்பு தட்சரின் காலத்தில் "போல் ரக்ஸ்" என்று ஒன்றை கொண்டு வந்தார்கள்!! எதிர்ப்போ உச்சத்தை அடைந்தும், நடைமுறைப்படுத்தினார்கள்!! ஆனால் ஜோன் மேஜர் காலத்தில் அது நீக்கப்பட்டு "கவுன்ஸில் ரக்ஸ்" அறிமுகப்படுத்தப்பட்டது. இது உலகில் நடைபெறாத நாடுகளேயில்லை எனலாம்!! அதை விடுத்து நாம் தேசியத்திற்கு ஆதராவானவர்கள், வளர்பவர்கள், அந்நாட்டின் பிரஜைகள்!! நாங்கள் எங்கள் அபிப்பிராஜங்களை தெரிவிக்க உரிமை உடையவர்கள்!!

ஆனால் ... நீங்கள் ஜனநாயகவாதிகள்!! காட்டிக்கொடுப்பீங்கள், ஒட்டுப்படைகளோடு சேர்ந்து சனங்களை கொல்லுவீங்கள், தூள் கடத்துவீர்கள், கோயில் உண்டியல் அடிப்பீர்கள், கொலை, கொள்ளை, ... இன்னாரன்ன செய்து போட்டு கருத்துச்சுதந்திரம்!!!!!! விடுவியள் ... சந்தர்ப்பம் கிடைத்தால் ... ராக்கட்டும்!!!!

காவடி என்னய்யா தப்பா எழுதி இருக்கிறார்?
Reply
#59
கட்டுவன் பக்கம் கருவாட்டு விலைக்கு வேண்டி விட்டிருக்கிறன். கடவுளே எண்டு உவங்கள் அடிச்சு பிடிச்சுட்டாங்கள் எண்டா 2...3 வருசத்தாலை கண்ணி வெடியள் எல்லாம் எடுத்து முடிய நல்ல விலைக்கு விக்கலாம்.
கதிர்காமத்தானுக்கும் சன்னதிக்கும் நேத்திக்கடன் வைச்சிருக்கிறன் பால்காவடி எடுக்கிறன் எண்டு. எல்லாம் அந்தக் கடவுளின்ரை கிருபை இருக்கவேணும் கண்டியளோ. உவங்களுக்கு ரக்ஸ் குடுக்காமல் உறுதியிலை பெயர் மாத்திறது எப்படி எண்டு யாரும் சொல்லுவியளோ?
Reply
#60
அப்பு குறுக்காலை ... நீங்கள் எல்லாரும் காவடியும் ஆடுவியள், கரகமும் ஆடுவியல்!! ஆனால் காவடியோ, கரகமோ ஆடுகிறியள் என்பது பிடிப்பது கஸ்டம்!!!! எங்கையாவது ஒருக்கால் பிடி கொடுத்துடுவியள், அந்தக் கணத்திலை பிடித்தால் சரி!! கொஞ்சம் மேலே உள்ளவர்களுக்கு விளங்கும்!!!
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)