Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
[b]யாழ் எட்டாவது அகவையை முன்னிட்டு யாழ் கள உறவுகளால் பெருமையுடன் வழங்கும் பட்டிமன்றம்
நடுவர் இளைஞன்
பிள்ளைகள்
சாத்திரி - அணித்தலைவர்
ரமா
சோழியன்
நாரதர்
பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கு இடையேயான இடைவெளி உருவாதற்கு ????
பெற்றோர்
தல - அணித்தலைவர்
சுஜீந்தன்,
புயல்,
ஈஸ்வர்,
சூழல்
நிதர்சன், - அணித்தலைவர்
சுடர்
குருக்ஸ் ,
சாணாக்கியன்
அணி பிரித்துவிட்டேன் அவர்கள் அந்த அணியில் வாதாட சம்மதம் என நினைக்குறேன். 30 திகதி நடுவர் இளைஞன் அவர்கள் பட்டிமன்றத்தை ஆரம்பித்து வைப்பார். அதற்கிடையில் யாராவது ஏதும் மாற்றம் செய்ய விரும்பினால் அறியத் தரவும். 30ஆம் திகதி இளைஞன் அவர்கள் ஆரம்ப உரை வைத்தவுடன் பிள்ளைகள் அணித்தலைவர் சாத்திரி அவர்கள் அன்றே தனது தலைவர் கருத்தை வைக்க வேண்டும் ஆகவே அவரை தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
பட்டிமன்றம் சம்பந்தமான அரட்டைகளை மற்றும் பட்டிமன்றம் சம்பந்தமான பார்வையாளர்கள் கருத்துக்களை பட்டிமன்றம் தொடர்வோமா என்ற தலைப்பில் வைக்கவும். இங்கு வாதம் மட்டுமே வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கே உங்கள் வாதங்களை ஆரம்பியுங்கள் பார்ப்போம்.
விதிகள் சில
(1). பட்டிமன்றம் ஆரம்பமாகுமுன்னர் கொடுத்த ஒழுங்கின்படியே அனைவரும் பங்குபற்றவேண்டும்.
(2). ஒவ்வெருவருக்கும் அவரது வாதங்களை முன்வைக்க இரண்டு நாட்கள் மட்டுமே கொடுக்கவேண்டும். கொடுக்கப்பட்ட நாட்களுக்குள் அவர் வந்து வாதத்தை வைக்கவேண்டும்.
<b> .. .. !!</b>
Posts: 1,053
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
<b>அன்பு வணக்கம் கள உறவுகளே...</b>
யாழ் இணையத்தின் 8 ஆவது அகவையை முன்னிட்டு இந்தச் சிறப்புப் பட்டிமன்றம் நிகழ இருக்கிறது. உங்கள் அனைவரோடும் - உங்கள் கருத்துக்களோடும் இணைந்துகொள்வதில் மகிழ்ச்சி. யாழ் கருத்துக்களத்தில் இடம்பெற்ற பட்டிமன்றங்களில் இது கொஞ்சம் வித்தியாசமானது. ஒரு தலைப்பை மூன்று வெவ்வேறு கருத்தியல் நிலைப்பாடுகளிலிருந்து விவாதிக்க மூன்று அணிகளாக - தயாராக இருக்கிறார்கள். இதுவரை நடந்த பட்டிமன்றங்களிலிருந்து அனுபவங்களைப் பெற்று, தொடர்கின்ற இந்தப் பட்டிமன்றத்தை ஒழுங்கமைப்பதிலும் ஒருங்கமைப்பதிலும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.
என்னை நடுவராக இணைத்திருக்கிறீர்கள். நேரம் ஒத்துழைக்குமா என்பது சிக்கலான விடயம். எனவே முடிந்தளவு சிறப்பாக உங்கள் கருத்துக்களை வாசித்து தொகுத்தளிக்க முனைகிறேன். தவறுகள் நேர்ந்தால் பொறுத்தருள்க.
சரி. முதலில் - யாழ் இணையத்தின் எட்டாவது அகவையில் யாழ் இணையத்தையும், அதன் நிர்வாகத்தையும், கள உறவுகளையும் மனதாற வாழ்த்துகிறோம். அத்தோடு இந்தப் பட்டிமன்றத்தை ஒழுங்குபடுத்துவதில் மீண்டும் தனது பங்களிப்பை நல்கிய தோழி இரசிகைக்கும், ஏனையவர்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்.
தொடர இருக்கிற இப் பட்டிமன்றத்தின் கருப்பொருளாக அல்லது விவாதப்பொருளாக முன்வைக்கப்பட்டிருக்கிற விடயம்: "பெற்றோர்களுக்கும் இளம் பிள்ளைகளுக்குமிடையே உருவாகி, விரிவடைந்து வருகிற இடைவெளி" ஆகும். இதனை அடிப்படையாகக் கொண்டு "இவ் இடைவெளிக்குக் காரணம் பெற்றோரா? பிள்ளைகளா? சூழலா?" என்று மூன்று கருத்தியல் நிலைப்பாடுகளிலிருந்து கேள்வி எழுப்பப் பட்டிருக்கிறது.
தலைப்பில் எந்தவித எல்லைகளும் விதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. எனவே "ஈழத்து மண்ணிலிருந்து புலம்பெயர் ஈழத்து சமூகம்" வரைக்குமாக விவாதத்தை விரித்துக்கொள்ள முடியும் என நம்புகிறேன். காலம் காலமாக பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமான இடைவெளி இருந்துகொண்டுதான் இருக்கிறது. அது எமது சமூகமாக இருந்தாலென்ன, ஏனைய சமூகங்களாக இருந்தாலென்ன. ஆனால், இங்கு முன்வைக்கப்பட்டிருக்கிற விடயம் யாதெனின்: இடைவெளி விரிவடைகிறது என்பதுதான். எனவே விவாதத்தில் பங்கேற்கிற கள உறவுகள் இதனையும் முக்கிய கவனத்தில் கொள்ளவேண்டும்.
"தொழில்நுட்பப் புரட்சி, யுத்தசூழல், புலம்பெயர் வாழ்வு, கலாசார அதிர்வு, உலகமயமாதல்" போன்ற விடயங்களும் "சமூகத்திலும் அதன் உறவுநிலைகளிலும்" பாரிய மாற்றங்களை உருவாக்கும் காரணிகளாக அமைகின்றன என்பதை நாம் மறுத்துவிட முடியாது. அந்தவகையில் சூழல்தான் இந்த "இடைவெளி விரிவடைவுக்கு" காரணம் என்று வாதாட வந்திருக்கிற அணியினரையும், அவ்வணிக்கு தலைமையேற்றிருக்கும் நிதர்சனையும் வாழ்த்தி வரவேற்கிறோம்.
"வழிநடத்தல், நெருங்கிப் பழகல், விட்டுக்கொடுப்பு, அன்பு பகிர்தல், குடும்பத் தலைமைத்துவம், சுதந்திரம், வீடு, புரிந்துணர்வு" போன்றவற்றில் பெரும் பங்கு வகிப்பவர்கள் பெற்றோர்கள். வாழ்வியல் அனுபவங்களூடாக வளர்ந்து வந்தவர்கள். காலத்தின் சுழற்சியில் "பிள்ளைகளின்" வயதுநிலையைத் தாண்டி வந்தவர்கள். அந்தவகையில் "இடைவெளி விரிவடைவில்" ஆதிக்கம் செலுத்துபவர்களாக பெற்றோர்களே இருக்கமுடியும் என்று தமது வாதத்தை முன்வைக்க வந்திருக்கும் அணியினரையும், அவ்வணிக்குத்து தலைமையேற்றிருக்கும் தல அவர்களையும் வாழ்த்தி வரவேற்கிறோம்.
"துடிப்பு, வேகம், சுதந்திரம், அனுபவமற்ற தன்மை, நவீனத்துவத்தோடு உறவு, மாற்றம் வேண்டுகிற மனசு, புதிதை விரும்புகிற குணம்" என்று பல்வேறு குணாம்சங்களைக் கொண்டுள்ளவர்களாக - சமூகத்தில் தாக்கம் செலுத்தக்கூடியவர்களாக இருக்கிறவர்கள் பிள்ளைகள்(இளைஞர்கள்). அந்தவகையில் "பிள்ளைகளே இடைவெளி விரிவடைந்துகொண்டு செல்வதற்கு" காரணமானவர்கள் என்று தமது தரப்பு வாதத்தை வழங்க இணைந்திருக்கிற அணியினரையும், அவ்வணிக்கு தலைமையேற்றிருக்கிற சாத்திரி அவர்களையும் வாழ்த்தி வரவேற்கிறோம்.
இவர்கள் அனைவரும ஆக்கபூர்வமான விவாதத்தை நிகழ்த்தப்போகிறார்கள் - நிகழ்த்துவார்கள். எனவே இவர்களுடைய கருத்துக்களை, கருத்தாடல்களை கவனமாக அனைத்து கள உறவுகளும் வாசித்து உற்சாகமளிக்க வேண்டும். ஒவ்வொரு அணியினரும் பட்டிமன்ற சிறப்பு விதிமுறைகளையும் கவனத்தில் கொள்க.
பட்டிமன்றம் தொடங்குகிறது. முதலாவதாக "பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் உருவாகி விரிவடைந்து வருகிற இடைவெளிக்கு பிள்ளைகளே காரணம்" என்று தனது அணியின் வாதத்தை முழங்க அணித்தலைவர் சாத்திரி அவர்களை அழைக்கிறோம். <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Posts: 870
Threads: 22
Joined: Apr 2005
Reputation:
0
எங்கள் குழந்தை யாழிற்கு வயது எட்டு என கேட்கும் போது ஆச்சரியமாகதான் இருக்கிறது அதை கட்டி தழுவிகொண்டிருந்ததில் காலம் போனது தெரியவில்லை.
யாழை பலர் பலமாதிரி உருவகித்து கவிதைகள் எழுதினார்கள் ஆனால் எனக்கு அது ஒரு குழந்தை போல காரணம் அதனிடம் அன்புசெலுத்தியிருக்கிறோம் அரவணைத்திருக்கிறோம் அதட்டியிருக்கிறோம் ஏன் சிலரால் அது அடிகூட வாங்கியிருக்கிறது ஆனாலும் அது அடித்த தாயிடமே அழுது கொண்டு ஓடும் குழந்தையை போல எழுந்து எழுந்து எம்மை நோக்கியே ஒடிவருகின்றது அதை தாலாட்டி சீராட்டி வளர்க்க வேண்டியது ஒவ்வொரு யாழ்உறுப்பினரின்கடைமையாகும்
ஆகவே அதனை பலசிரமங்களிற்கு மத்தியிலும் தொடர்ந்து இயக்கும் மோகன் மற்றும் அதன் மட்டிறுத்துனர்களிற்கும் நன்றி கூறிக்கொண்டு அதன் எட்டாவது அகவையை முன்னிட்டு இந்த பட்டி மன்றத்தை ஒழுங்கு செய்த ரசிகாவிற்கும் மற்றும் தலைமை தாங்கும் இளைஞனிற்கும் இங்கு வாத கருத்துகளை வைக்கும் எனது மற்றும் மற்றைய அணியினரிற்கும் யாழ் வாசகர்களிற்கும் எனது அன்பார்ந்த வணக்கங்களுடன் பட்டி மன்றத்தினுள் நுளைகிறேன்.
இங்கு பட்டி மன்றத்தின் தலைப்பு தற்சமயம் பெற்றோர்களிற்கும் பிள்ளைகளிற்கும் இடையில் ஓர் இடைவெளி காலப்போக்கில் விரிவடைந்து வருகிறது காரணம் பிள்ளைகளா? பெற்றோரா? சூழலா?,
இது புலத்திலா அல்லது நிலத்திலா (தாயகம்)என்று இல்லாமல் பொதுவான தலைப்பாக இருப்பதால் பொதுவாகவே வாதங்களை வைத்தாலும் இந்த யாழ்களத்தை புலத்திலேயே அதிகம் பேர் படிப்பதால் புலத்து பிள்ளைகளை பற்றியே அதிகம் தொட்டு செல்லலாம் என எண்ணுகிறேன்.
இந்த தலைப்பை பற்றி இந்த பட்டிமன்றத்தை ஒழுங்கு செய்த ரசிகா என்கிற இளையவருக்கும் அதற்கு தலைமைதாங்கி கொண்டு இளைஞன் என்று பெயரையும் வைத்துகொண்டுள்ள இளையவருக்கும் மற்றும் எனக்கு முன்னால் உள்ள இரண்டு அணியினருக்கும் குழப்பம்.
இதனை பட்டி மன்றம் வைத்துதான் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லையென்று அந்த பிள்ளைகளிற்கே அதாவது இளையவர்களிற்கே தெரியும் தங்களால்தான் இந்த இடைவெளி வருகின்றது என்று ஆனாலும் அதனை சரியாக உறுதி செய்ய இந்த பட்டிமன்ற தலைப்பை தேர்வு செய்திருக்கலாம்.
காரணம் பாருங்கள் பிள்ளை ஏதோ படித்து வருங்காலத்தில் ஒரு பெரிய தொழில் நுட்பவியலாளராக ஒரு மேதையாக வரும் என்கிற ஒரு நப்பாசையுடன் தங்கள் சிரமங்களையெல்லாம் ஒருபக்கம் தள்ளிவிட்டு அந்த பிள்ளை விரும்பிய கலைகல்லூரியில் விரும்பியபடி படிக்க எல்லா வசதிகளையும் செய்து விட்டு அதன் பரீட்சையின் நல்ல பொறு பேறுகளின் செய்தியை மட்டுமே செய்தியாய் தங்கள் காதுகளில் கேட்க காத்திருக்கும் பெற்றொர். பிள்ளை என்னடா எண்டால் இங்கு பல்கலைகழகத்திலிருந்து பட்டிமன்றம் நடத்திகொண்டிருக்கிறார் இடைவெளி யாரால் பிள்ளையாலா பெற்றோரா சூழலா எண்டு.
அடுத்தது பிள்ளை கணணியில் ஏதொ பாடம் சம்பந்தமா தான் பாவம் கணணியை போட்டு உருட்டிகொண்டிருக்கு அதற்கு எந்த தொந்தரவும் குடுக்க கூடாது என்று பெற்றோர் அவருக்கு தனியறை குடுத்து விடிய விடிய எரியிற மின்விளக்கு கணணிக்கு எண்டு கரண் பில்லும் கட்டி கொண்டிருக்க அந்த பிள்ளை பட்டிமன்றத்திற்கு தலைமை தாங்கி கொண்டிருக்கிறார் தலைமை தாங்கும் இளைஞனைதான் சொல்லுறன்.
என்னடா பட்டி மன்றம் தொடக்கின பாவத்திற்கு தலைமை தாங்கினதிற்கும் தங்ககடை தலையையே சாத்திரி போட்டு உருட்டுறார் எண்டு யோசிக்கிறிங்களா? அதை சொல்ல வாறன் வாழ்க்கை என்பதே ஒருநம்பிக்கையின் அடிப்படையில் தானே அமைகிறது ஒரு பிள்ளை குழந்தையாக இருக்கும் போது அது கேட்காமலேயே அதன் தேவைகளை அதன் விருப்பங்களைபெற்றோர் பூர்த்தி செய்கின்றனர் அது கொஞ்சம் வளர்ந்ததும் அது விரும்பி கேட்கின்ற பொருட்கள் எல்லாமே முடிந்தவரை வாங்கி கொடுக்கின்றனர். அது கேட்கும் அம்மா எனக்கு அந்த உணவு வேண்டும் அப்பா எனக்கு அந்த சட்டை வேணும் என்று கேட்கும்.
அதே போல பாடசாலையில் இருந்து வந்ததும் அம்மா எனது நண்பி இந்த கலர் சட்டை போட்டு வந்தாள் . அப்பா எனது நண்பன் புதிதாய் ஒரு பேனா கொண்டு வந்தான் அது போல எனக்கு வேணும் இப்படி சின்னவயதில் சின்ன சின்ன தேவைகள் எல்லாத்தையும் பெற்றோர்களிடம் கேட்டும் சின்ன சின்ன விடயங்களை கூட அவர்களிடம் பகிர்ந்து கொண்ட குழந்தை பெரியவர் ஆனதும் பெரிய பெரிய விடயங்களை மறைக்க தொடங்குகின்றனர்.
ஆனால் பெற்றோரோ வழைமை போல தங்கள் பிள்ளை சிசன்ன விடயங்களைகூட தங்களிடம் மறைத்தது இல்லையே எனவே எதையுமே மறைக்க மாட்டார்கள் என்கிற நம்பிக்கையிலும் அவர்கள் என்ன செய்தாலும் என்ன தேவைப்பட்டாலும் தங்களிடம் சொல்லும் என்கிற நம்பிக்கையிலும் கண்மூடித்தனமாய் இருந்து விட ஒருநாள் பிள்ளைகள் தங்களிற்கு தெரியாமல் சில காரியங்களை செய்கின்றனர் என தெரியவந்ததும் அவர்கள் நம்பிக்கை தகர்ந்து போகிறபோது
அது அவர்கள் ஆத்திரமாக மாறுகிறது அவர்கள் கண்டிக்க தொடங்க பிள்ளைகளோ பெற்றேருக்கு பணிந்து பக்குவமாய் விடயங்களை எடுத்து கூறாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எதிர்த்து வாதம் செய்ய அது அவர்களின் உறவில் கீறலாகி கடைசியில் கிட்டாத உறவாகவே போய்விடுகிறது.
இப்படி சில இளையவர் என்றால் இன்னொரு விதமாய் சிலர் அவர்கள் இதோ எதிர் பக்கம் இடைவெளிக்கு காரணம் பெற்றார்தான் என்று கூறிக்கொண்டுசினிமாபின்னாலும் அதன் கதா நாயக நாயகிகளை பார்த்து அவர்களை போலவே முடியலங்காரம் உடையலங்காரம் என்று ஒழுங்காய் உள்ள தலையை கலர் அடித்துமொட்டையடித்து காசு குடுத்து வாங்கிய காற்சட்டையை கிழித்து போட்டு கொண்டு தங்களையும் ஒரு கதா நாயகர்களாக கற்பனை பண்ணி கற்பனையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
அந்த அணித்தலைவரின் பெயரை பாருங்கள் (தலை ) பக்கத்திலை நிப்பவருக்கு பெயர் புயல் ஈஸ்வரும் சுஜுந்தனும் பேசாமல் தங்களது பெயரையும் மாற்றி எதாவது கில்லி மாஜா என்று வைத்தால் கூட்டணி நன்றாக இருக்கும் .சிறுவயது முதல் தலைசீவ அம்மாதான் வேண்டுமென்று அடம் பிடித்த குழந்தைக்கு இப்போ அம்மா தலையில் தொட்டாலே அலர்ச்சி. காற்சட்டை போட்டுவிட அப்பா தேவைப்பட்ட பிள்ளைக்கு இப்போ அப்பா காற்சட்டையை ஒழுங்கா போடடா எண்டால் பழசுக்கு நாகரீகம் தெரியாது எண்று பத்திகொண்டு கோபம் வருகிறது
அவர்களிற்கு அதனால் இனி பெற்றோருடன் இருக்கமுடியாது எண்று தனியாக போய் விடுகின்றனர்.இவர்கள் இப்படி பிரிந்து போய்விட இவர்களிற்கு கலர் காட்டின கதா நாயகனும் நாயகியும் கையை காலை ஆட்டிவிட்டு காசை வாங்கி கொண்டு தங்கள் குடும்பத்தோடு போய் விடுகிறார்கள்.
அடுத்ததாய் இங்குள்ள மூன்றாவது அணியினரை போலவே தாங்கள் செய்யிறதெல்லாத்தையும் செய்து விட்டு இந்த வீடு சரியில்லை சுற்றம் சரியில்லை இந்த ஊர் சரியில்லை இந்த நாடு சரியில்லை ஏன் இந்த உலகமே சரியில்லை அதனாலை நாங்களும் சரியில்லை யெண்று சுலபமாய் சூழல் மீதும் சமுதாயத்தின் மீதும் குற்றம் சுமத்திவிட்டு தங்கள் பொறுப்புகள் கடைமைகள் என்பனவற்றைசரியாய் செய்யாமல் தப்பி விடுகின்றனர்.
கேட்டால் ஏதேதோ புரியாதவற்றை தெழில் நுட்ப யுகம் நவ நாகரீகம் இயந்திர வாழ்க்கை தன்னிறைவு சொந்த காலில் நிக்கிறோம் என்று கதை விடுகிறனர்.இவையெல்லாத்தையும் பெற்றோருடன் இருந்து செயல்படுத்த முடியாதா??இவர்களை போன்றவர்கள் தான் சரியான ஆபத்தான பேர்வளிகள் இவர்களாளல் சுயமாக எதையுமே செய்ய முடியாது எல்லாமே மற்றவனை பர்த்து செய்துதான் பழக்கம் அதனால் தங்கள் குடும்பத்தை கெடுப்பது மட்டுமல்லாமல் மற்றவர்களையும் இவர்கள் தவறான பாதைக்கு இட்டு செல்லும் அபாயம் உண்டு எனவே குடும்பத்தில் இடைவெளிஉருவாக பிள்ளைகளே காரணம் என்று கூறி விடை பெறுவதோடு இப்பொழுதே நடுவர் எங்களணிக்குதான் வெற்றி என்று முடிவு செய்திருப்பார் ஆனாலும் மற்றையவரது வாதங்களையும் கேட்டு ஆழமாக சிந்தித்து தீர்ப்பை வழங்கு மாறு கேட்டு கொண்டு
விடை பெறுகிறேன் நன்றி வணக்கம்
Posts: 1,053
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
<b>"பெற்றோர்க்கும், பிள்ளைகளுக்கும் இடையில் தோன்றி விரிவடைந்துவரும் இடைவெளிக்குக் காரணம் பிள்ளைகளே" என முழங்கிச் சென்றார் "பிள்ளைகளே" அணித் தலைவர் சாத்திரி. </b>
யாழிற்கு வயது எட்டு என்று என்றார். யாழைக் குழந்தை என்றார். தாலாட்டி சீராட்டி வளர்க்க வேண்டிய பொறுப்பு எமதென்றார். பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் யாழுக்கும், அதன் நிர்வாகத்துக்கும் கூறிக்கொண்டு, பட்டிமன்றத்தில் பங்குகொள்வோர்க்கும் ஏனையோர்க்கும் வணக்கங்கள் கூறி தனது வாதத்தை தொடங்கினார்.
பட்டிமன்றத் தலைப்பில் "தாய் நிலத்திலா" அல்லது "புலம்பெயர் நிலத்திலா" என்று எதனையும் வரையறை செய்யாவிட்டாலும், புலம்பெயர் மண்ணை மையமாக வைத்தே தனது கருத்துக்களை சொல்வதாக முன்னறிவித்தார்.
"தலைப்பில் எழுப்பப்பட்டிருக்கும் கேள்விக்கு விடை அனைவருக்கும் தெரியும் - அது: இடைவெளிக்குக் காரணம் பிள்ளைகளே என்பது - இருந்தும் நடுவர் தொடங்கி எதிரணியினரும் குழம்பியிருக்கின்றனர்" எனக் கூறினார்.
தொடர்ந்தவர், நடுவர் தலையையே உருட்டத் தொடங்கிவிட்டார். அடடா, ஐயையோ என்று விழிகளை உருட்டி - "மவுசை" உருட்டிப் பார்த்தால்:
பிள்ளைகளின் தேவைகளை அறிந்து, அவர்கள் கேட்பதை, அவர்கள் விரும்புவதை பூர்த்தி செய்கின்றனர் பெற்றோர். தமது பிள்ளைகள் மீது நம்பிக்கை வைத்து தம்மால் முடிந்தளவு அவர்களை மகிழ்விக்கின்றனர். ஆனால், சிறுவயதில் "அம்மா நண்பி கொண்டு வந்த பேனா பிடிச்சிருக்கு அது வாங்கித் தாங்கோ" என்று கேட்கத் தெரிந்த பிள்ளைகளுக்கு, இளவயதை அடைந்ததும் பல விடயங்களை ("அம்மா அந்த நண்பியை பிடிச்சிருக்கு சேர்த்து வையுங்கோ" :wink: என்று கேட்கத் தெரியாமல்) மறைக்கத் தொடங்குகிறார்கள். எனவே, முதலில் பிள்ளைகளே இடைவெளியை உருவாக்குகிறார்கள் என்று தனது கருத்தை அற்புதமாக முன்வைத்தார்.
"சேர்த்து வையுங்கோ" என்று கேட்டால் போல சேர்த்து வைத்துவிடப் போகிறார்களா என்று மற்றைய அணிகளில் இருக்கிற பிள்ளைகள் குமுறுவது புரிகிறது. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இளவயதையடைந்ததும் பிள்ளைகள் பெற்றோரிடம் பலவிடயங்களை மறைப்பதற்கு காரணம் என்ன? பயமா? அல்லது அலட்சியமா? - இனி வாதாட வருகிற அணியினர் தான் சொல்லவேண்டும்.
பிள்ளைகளின் மீது நம்பிக்கை வைக்கிற பெற்றோரின் நம்பிக்கையைத் தகர்த்து, மனதில் காயங்கள் உண்டாக்கி, இடைவெளியை உருவாக்குவதோடு நில்லாமல் - கண்டிக்கிற பெற்றோரை எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எதிர்த்துப் பேசி மேலும் மேலும் இடைவெளியை விரிவடையச் செய்கிறார்கள் என்று விளக்கமாகச் சொன்னார்.
சிறுவயதில் அம்மா அப்பாவில் தங்கியிருந்தவர்கள், இளவயதை அடைந்ததும் போலியான உலகத்தின் போதைகளில் மயங்கி "பெற்றவரையே" தூக்கியெறியத் துணிந்துவிடுகிறார்கள் என்று சில உதாரணங்கள் மூலம் சிறப்பாகச் சொன்னார்.
"பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு" என்கிற முதுமொழி ஞாபகம் வருகிறது. பார்ப்போம், மற்றைய அணியினர் ஏதும் புதுமொழியுடன் வருகிறார்களா என்று. <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
பெற்றோரை உயர்த்தி உச்சத்தில் வைத்தார் - மெல்ல (தமது)எதிரணி இரண்டையும் நன்றாகவே சாடினார் - "தல" யிலும் கைவத்தார். நவீனம் நவீனம் என்று நவீனம் நோக்கிய பயணத்தில் "பெற்றோரை விட்டு விலகாமல்", பெற்றோருடன் இணைந்து பயணிக்கலாமே என்று நறுக்கென ஒரு கேள்வி எழுப்பினார். :!:
இறுதியாக: (தமது)எதிரணியனரின் வாதங்களையும், நடுவரின் தீர்ப்பையும் கேட்காமலே தமது அணிக்குத்தான் வெற்றி எனக் கூறி நம்பிக்கையோடு விடைபெற்றார்.
சாத்திரியின் கருத்துக்களை வாசித்த "பிள்ளைகள்" எல்லாம் "பொங்கியெழும் பிள்ளைகள் படையாக" புறப்படக் காத்திருக்கிறார்கள். எனவே "இடைவெளி உருவாகி விரிவடைவதற்கு காரணம் பெற்றோர்களே" என்று வாதாட வந்திருக்கும் அணித் தலைவர் "தல" அவர்களை களமேடைக்கு அழைக்கிறோம்.
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
நடுவர் அவர்களே...! எமதணியினரே....! எதிரண்னியினர்....! பார்வையாளர்ராக இருக்கும் உறவுகள் அனைவருக்கும் அன்பான வணக்கம்...! வணக்கம்..!
<b>எட்டு ஆண்டு பூர்த்தியாகி வாழ்ந்துவரும் யாழ் இணையத்துக்கு என் வாழ்த்துக்கள் முதலில் உரித்தாகட்டும்...! </b>
எதிரணி ஒண்றின் உறுப்பினராய் இந்த பட்டி மண்றத்தை ஒழுங்கு செய்த சோழியன் அண்ணாவுக்கு நண்றிகளையும் மறக்காமல் சேர்க்க வேண்டும்..
எதிரணியின் ஒண்றன் தலைவர் சாத்திரியார் அவர்கள் தனது தலைப்புரையை வைத்துவிட்டார்...எனது தலயும் உறுட்டியதை பார்த்தேன்.... ரசித்தேன்.... அதை எதிர்த்து சொல்ல அல்லது மறுத்து பேச எமது அணியினர் காத்திருப்பதால் நான் எம்மணியின் ஆணித்தரமான வாதத்துக்கு அல்லது கருத்துக்கு நேரடியாகவே போய்விடலாம் என நினைக்கிறேன்.....
இளயவர்கள் என்பவர்கள் முகம் பார்க்கும் கண்ணாடி மாதிரி அவர்களிடம் எப்படி உணர்வுகளை பிரதிபலிக்கிறோமோ அப்படியே அவர்களும் தங்களை பிரதிபலிக்கிறார்கள்... உணர்வுகளை உள்வாங்கி பிரதிபலிக்கும் முகத்தில் அன்பை கொண்டுவந்து பிளைகளிடம் அன்பாக பேசாத பெற்றோரிடத்தில் பிள்ளைகள் அன்பாக இருக்காதது அவர்களின் தவறும் கிடையாது....
<b>ஒரு பாடல் எனக்கு ஞாபகத்தில் வருக்கிறது...</b>
<b>எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே
அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே...!</b>
இதில் தீயவராவது மட்டும் அல்ல அன்பானவராக குடும்பத்தோடு ஒத்தவராக பெற்றோரை மதிப்பவராக வரவும் அன்னை அணைப்பு தேவைப்படுகிறது.... அன்பாக வளரும் எந்த குழந்தையும் தன் எதிர்காலத்தை பற்றி கவலை கொள்வதில்லை... அதானால் பிள்ளைகள் எப்போதும் பெற்றோரை மதித்து ஒண்றி வாழ்கிறார்கள்... அன்பு இல்லாத விடத்து அந்தப் பிள்ளை தன் எண்ணப்படி வாழத் தலைப்படுகிறார்கள்.... பெற்றோரையும் மதிப்பது கிடையாது...!
அன்பு மட்டும் பிள்ளைகளுக்கு போதுமா எண்றும் எனக்கு ஒரு கேள்வி எழுகிறது..? அதுக்கு பதிலை சிந்தித்து பார்த்தேன். அதையும் தாண்டி பிள்ளைகளின் விருப்பு ஆர்வம் சிந்தனை என்பன வேறு படும்போது.... அதுக்கு ஒவ்வாத சிந்தனை உள்ள பெற்றோர் தாங்கள் விரும்புவதை திணிப்பதனால் இளையவர் விலகுவதும் ஒண்றும் விளங்காத விடையம் அல்ல..!
தான் பெரிய விளையாட்டு வீரராக வரவேண்டும் என இளயவை ஒருவர் நினைக்கிறார். ஆனால் பெற்றோர் அவர் வைத்தியராகத்தான் வரவேண்டும் என நினைத்தால் எப்படி அவனால் அதை செய்ய முடியும்....??? இயற்கையிலேயே விஞ்ஞானப்பாடம் மண்டக்குள் ஏறாமல் இருந்தால், அவன் படப்போகும் பாடு தான் என்ன...??? விரும்பும் விளையாட்டு ஆசையை படுகுழியில் போட்டு மூடும் கொடுமையை அவனால் சீரணிக்க முடியாமல் பெறோரை வெறுப்பதையோ இல்லை ஒதுங்குவத்தோதானே அவனால் செய்ய முடியும்.... கடைசியில் பரீட்சயில் தோத்துப்போகும் அவனால் எதிர்காலத்தில் என்ன செய்ய முடியும்...??? பின்னர் சூழலின் பிடிக்குள் சிக்கி எதிர்காலத்தை சிதைந்து போக விட்டு விடும் பரிதாபத்தை பெறோரால் தடுத்து நேர் படுத்த முடியாதது அல்லவே...! தங்களின் விருப்பு வெறுப்பை பிள்ளைகள் மீது காட்டும் பெற்றோர் எதை சாதித்து விடுகிறார்கள்... அவர்களை அன்னியபடுத்துவதை விட..???
இளையவர் சூழலால் கெட்டு போய்த்தான் குடும்பதில் ஒட்டுவதில்லை எண்றும் பலர் சொல்லலாம் அது உண்மையா எண்றால், இல்லை எண்றே சொல்ல வேண்டி இருக்கிறது.... ஒருவன் கெட்டுப்போகிறானா...??? அதுக்கும் சரியான கவனிப்பு இல்லாமல் அவனுக்கு உறுதுணையாக எப்போதும் இருக்காத பெற்றோரால்தான் அவன் வீதிக்கு வருகிறான்....
இயந்திர வாழ்க்கை கொண்ட தற்கால உலகில் அன்பாக வளர்ப்பதா...??? ரீவி சீரியலும் பக்கத்துவீட்டு புதினமும் கேட்க்கவே நேரம் போதாத உலகில் பிள்ளைகளின் உணர்வை புரிந்து கொள்ள பெற்றோருக்கு நேரம் இருக்கிறாதா எண்று வேறு ஒரு பட்டிமண்றம் வைக்கலாம் அதில் அவ்வளவு சிக்கல்... ஆகவே அதை இப்போ விட்டு விடலாம்...
குடும்பம் என்பது என்ன...??? கணவன் மனவி பிள்ளைகள்.... இதில் ஒருவர் தவறு செய்யும் போது மற்றயவர் அவருக்கு புரிவது போல பேசி தீர்ப்பதுதானே வளமை.... இதில் தகப்பனால் இல்லை தாயாரால் ஒரு பிள்ளை அளவுக்கு மீறி கண்டிப்பதனால் அவனின் தவறு என்ன எண்று சரியாக புரிய வைக்க படாத்ததால்த்தான் அவன் வஞ்சிக்கப்படுவதாக சிந்திக்கிறான்.... விலகி வெளியிலேயே காலத்தை களிக்கிறான்... சூழலின் பிடிக்குள் சிக்கி சின்னா பின்னமாகிறான்... பெற்று வளர்க்கும் பெற்றோரே இளையவரின் வளர்ச்சிக்கும் தாழ்ச்சிக்கும் காரணமானவர்கள்....
அன்பு செலுத்தினால் மட்டும் பிள்ளைகள் சீரளிந்து குடும்மத்தில் இருந்து விலகுவதில்லையா...??? விலகுகிறார்கள்...!
<b>பட்டினத்தார் பாடிய பாடல் ஒண்று ஞாபகத்தில் வருகிறது..!</b>
துள்ளித்திரியும் காலத்திலே என் துடுக்கடக்கி
பள்ளிக்கு அனுப்பிலன் என் தந்தையாகிய பாதகனே...!
எண்று வருகிறது....
இதைத்தான் நானும் சொல்கிறேன்... விடலைப்பருவத்தில் தீயதை எல்லாம் பிள்ளைகளை தீண்டிவிடாது நல்ல அறிவுரையும் அவரது வளர்ச்சிக்கு உறுதியான படிகளை எடுத்து காட்டாத, பிள்ளைகளில் அக்கறைப்படாத பெற்றோரால்த்தான் பிள்ளைகள் சீரளிந்து பெற்றோரை மதிப்பது கிடையாது... அவர்கள் சொல்வது சரியானது என எண்ண தேண்றுவது கிடையாது....! இதை அனுபவத்தில் கண்டவர் பலர் சொல்ல கேட்டு இருக்கிறோமே..!
ஈழத்தில் நடக்கும் சமூகம் சார்ந்த இனப்பிரச்சினையினால் இடம் பெயர வைத்த சூழல் குடும்ப இடைவெளிக்கு காரணம் எண்று சிலர் சொல்ல முற்படலாம்....
ஆனாலும் அங்கு பிரச்சினைக்கு அடிப்படையாய் தோண்றிய நிலைமைய தடுக்காது சமூக அக்கரையோடு செயற்படாத இளயவரின் பெறோரே அல்லது பெற்றவரின் பெறோரே காரணம் எண்று கூறி வாய்ப்புக்கு நண்றி கூறி வணங்குகிறேன்.... வணக்கம்...!
Posts: 1,053
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
<b>"பெற்றோர்க்கும், பிள்ளைகளுக்கும் இடையில் தோன்றி விரிவடைந்துவரும் இடைவெளிக்குக் காரணம் பெற்றோரே" என உறுதிபட எடுத்துக்கூறிச் சென்றார் "பெற்றோரே" அணித் "தல" தல அவர்கள். </b>
தனது "தல" யை உருட்டிய எதிரணித் "தல" சாத்திரியின் "தல"ப்புரை வாதத்தை பார்த்து ரசித்ததாக குறிப்பிட்ட "தல" அவர்கள் அவரை தனது அணியினர் கவனித்துக்கொள்ள காத்திருப்பதாகக் கூறி நேரடியாக விடயத்துக்குள் நுழைந்தார். ("பிள்ளைகளே" அணித் தலைவர் சாத்திரி அவர்கள் "பாதுகாப்பு வலயம்" ஒன்றை ஏற்படுத்திக் கொள்வது நல்லதோ?)
இளையவர்களை அதாவது பிள்ளைகளை முகம் பார்க்கும் கண்ணாடியெனக் குறிப்பிட்டுள்ளார். கண்ணாடிக்கு முன்னால எதை காண்பிக்கிறீர்களோ அதைத்தான் கண்ணாடி பிரதிபலிக்கும் என்று அழகாக தனது வாதத்தை முன் வைத்தார். கண்ணாடிக்கு முன்னால் முள்ளை வைத்துவிட்டு ரோஜாவை காட்டும் என்று எதிர்பார்க்க முடியுமா? அப்படி எதிர்பார்த்தால் அதைப் போல முட்டாள் தனம் இருக்கமுடியுமா? பிள்ளைகளிடம் அன்பைக் காட்டி அன்பைப் பெறவேண்டும் - அரவணைப்பைக் காட்டி அரவணைப்பைப் பெறவேண்டும் என்று பெற்றோரைச் சாடினார். (பார்ப்போம் - தல விரைவில் பெற்றோர் நிலையை அடைந்ததும் எதைக்காட்டி எதைப் பெறுகிறார் என்று <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> )
அழகான, அர்த்தமுள்ள பாடல் வரிகளை எடுத்துக்காட்டி பெற்றவரின் வளர்ப்பில் தான் எல்லாம் தங்கியிருக்கிறது என்று தனது அணியின் வாதப்பொருளுக்கு வலுச்சேர்த்தார். அன்பு, அரவணைப்பு என்கிற ஈர்ப்பு சக்தியால் பெற்றோர் தான் பிள்ளைகளை ஈர்த்து வைத்திருக்கவேண்டும். அவர்கள் அந்த ஈர்ப்பு சக்தியை வெளிப்படுத்த தவறும்போது பிள்ளைகள் விலகிப் போகிறார்கள் - இடைவெளி உருவாகிறது - என சிறப்பாக எடுத்து சொன்னார்.
அடுத்ததாக பிள்ளைகளிடம் அன்பு செலுத்துதல் மட்டும் போதாது - அதனோடு புரிந்துணர்வும் இருக்கவேண்டும் என்றார். கால இடைவெளிகள் சிந்தனை வேறுபாட்டை உருவாக்குவது என்பது இயல்பு - அதனை உணர்ந்து பெற்றவர்கள் செயற்படுவதை விடுத்து - பிள்ளைகள் மீது தமது சிந்தனைகளையும், விருப்பங்களையும் திணிக்க வெளிக்கிடும் போது - பெற்றவருக்கும் பிள்ளைகளுக்குமிடையில் பெரிய ஓட்டை விழுகிறது என்பதை தெளிவாக சொன்னார்.
பெற்றோர்கள் தமது ஆசைகளை, தமது கனவுகளை, தமது எண்ணங்களை எல்லாம் பிள்ளைகளூடாக நிறைவேற்றிப் பார்க்க நினைக்கிறார்கள் - முனைகிறார்கள். பிள்ளைகளின் தனித்துவத்தை, அவர்களின் ஆசைகளை மதிக்கத் தவறிவிடுகிறார்கள் - இதனால் பிள்ளைகள் பெற்றவரிடம் இருந்து அன்னியப்படுத்தப்படுகிறார்கள் என்று கொந்தளிப்புடன் சொன்னார்.
அளவுக்கதிகமான கண்டிப்பு விரிசலை உண்டுபண்ணுமென்றார்.
பேசித் தீர்க்க வேண்டிய விடயங்களையெல்லாம் பெருசாக்கி பிள்ளைகளிடம் வெறுப்பை உண்டுபண்ணுகிறார்கள் என்றார்.
முதலாவதாக வந்த "பிள்ளைகளே" அணித்தலைவர் சினிமாவை எடுத்தால் - அடுத்த வந்த "பெற்றோரே" அணித் தலைவர் தொலைக்காட்சி்த் தொடர்களை கையிலெடுத்தார். பார்ப்போம் - "சூழலே" அணித்தலைவர் எதை கையிலெடுக்கிறார் என்று. (கத்தியை எடுக்காமல் இருந்தால் சரி)
பட்டினத்தாரின் பாடலையும் உதாரணம் காட்டினார். அதனை வைத்து தனது வாதத்துக்கு மேலும் வலுச்சோர்த்தார்.
மொத்தத்தில் தனது வாதத்தில் பிள்ளைகள் பக்கம் நியாயம் சேர்த்து, பெற்றோரை கடுமையாகச் சாடியுள்ளார்.
சரி அடுத்ததாக "இடைவெளி உருவாகி விரிவடைவதற்கு காரணம் சூழலே" என்று வாதாட வந்திருக்கும் அணித் தலைவர் "நிதர்சன்" அவர்களை களமேடைக்கு அழைக்கிறோம். வருபவர் நிதர்சனங்களை முன்வைப்பார் என்று நம்புவோம். <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Posts: 700
Threads: 67
Joined: Oct 2004
Reputation:
0
நெஞ்சத்தில் எமது சமூதாயத்தின் மீதான கோபத்துடனும்.. அதை சொல்லிட இடம் கிடைத்த மகிழ்வினாலும் என் உள்ளத்து உணர்வுகளை எடுத்துரைக்க வந்தேன். நடுவிருக்கும் நடுவருக்கும் அருகிருக்கும் அன்புத்தோழர்களுக்கும் முன்னிருந்து பார்த்திருக்கும் வாசகர்களுக்கும் என் இனிய வணக்கங்கள்
பெற்றோர்களுக்கும் இளம் பிள்ளைகளுக்குமிடையே இடைவெளி ஒன்று உருவாகி அது கால வளர்ச்சியில் விரிவடைவதை உணர முடிகிறது. ஆகவே இந்த இடைவெளிக்கு காரணம் பெற்றோரா? பிள்ளைகளா? சூழலா?
காலத்திற்கேற்ற கருத்து மிக்க பட்டி மன்றம் ஒன்றில் கலந்து கொள்வதையிட்டு மகிழ்வடைகின்றேன். இன்று வந்த புலத்தில் என்றால் என்ன சொந்த நிலத்தில் என்றால் என்ன பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையே மிக பெரியதொரு இடைவெளி ஏற்ப்பட்டுள்ளது. இதற்க்கு காரணம் யார்? ஏன் பிள்ளைகள் பெற்றோர் களிடமிருந்து தூரவிலகியிருக்கின்றனர்? அதற்க்கு பிள்ளைகளுக்கு இடையூறாக இருப்பவை எவை? சற்று ஆழமாக நாங்கள் சிந்திப்போமானால்... பிள்ளைகளை சரிவர புரிந்து கொள்ளாத , சமூகமும், பிள்ளைகள், பெற்றேரர்கள் வாழுகின்ற சூழலுமே காரணம். புகலிடத்திலே நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நாடுகளில் மிக மிக அதிகமான கருத்து வேறுபாடுகள் ஏற்ப்பட்டுள்ளமைக்கு காரணத்தை முதலில் பார்ப்போம். அதற்க்கு பிரதான காரணம் வித்தியாசமான சூழல். நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் சூழல். எம் பெற்றோர்கள் வாழ்நத சூழல் முற்று முழுதாக வித்தியாசமான, தமிழ் சமூகத்துடன் ஒன்றித்து போயிந்த சூழல். ஆனால் நாம் வாழும் புகலிடமோ, பல்லின சமூகங்கள் நிறைந்த ஒரு பல் கலாச்சார சூழலாகும். இந்த சூழலில் பெற்றோர் நினைபது போல தமிழ் கலாச்சாரத்தை மட்டும் மனதில் வைத்த வாழ முடியுமா? பெற்றோர் ஒன்றை சொல்லி விட்டு நாம் அங்கு அப்படியா இருந்தோம் அல்லது நாம் படிக்கும் போது அப்படியா செய்தோம் என்று கேட்க்கும் நிலையில் பிள்ளை என்ன செய்ய முடியும்? அந்த காலத்திற்க்கும் அந்த சூழலுக்குமிடையே இருக்கும் வித்தியாசத்தை புரிந்து கொள்ள இந்த சமூகம் தயாராய் இல்லை. இதனால் பிள்ளைக்கும் பெற்றோருக்குமிடையே என்ன புரிந்துணர்வா வரும்? காலாச்சாரத்தின் படி பிள்ளை வாழ முடியாத சூழலை எமது தமிழ் சமூகம் புரிற்து கொள்ளததால் பெற்றோருக்கும் பிள்ளைக்கு மிடையே வாக்கு வாதமேற்ப்படுகின்றது. அந்த வாக்கு வாதம் முற்றி தாய் நாட்டில் இருப்பதாய் நினைத்து கொண்டிருக்கும் பெற்றவர்கள் பிள்ளையை அடிக்கும் போது பிள்ளையே இந்த நாட்டு சூழலில் வாழ்ந்து பழகியவன் இந்த கட்டுப்பாடுகள், மிரட்டல்கள், பேச்சுக்களை பொறுக்க முடியாமல் வீட்டை விட்டு வெளியேற வேண்டி ஏற்ப்படுகின்றது. ஆனாலும் இந்த சூழல் மீண்டும் அவனை பெற்றோரும் இணைய விடாமல் செய்கின்றது. பிள்ளையிடம் ஒன்றையும் பிள்ளையைப்பற்றி பெற்றோரிடம் ஒன்றையும் வம்பு மூட்டி விடுகின்றது இந்த சூழல். அடுத்து இந்த சமூதாயம் காதலை எதிரியாயே பார்க்கும் காலம் இன்னும் மாறவில்லை எனலாம். அப்படியான சூழலில் பெற்றோருக்கு பிள்ளையின் காதல் சரியேனப்பட்டாலும் இந்த பாழாய் போன சமூகம் பல கட்டு கதையை கட்டி அவர்களுக்கும் பிள்ளைக்குமிடையே பிரச்சினையை உருவாக்கி விடும். இப்படியான சூழலை உருவாக்குவது யார்? இந்த சூழல் தானே!
இங்கே வாழும் எமக்கு தமிழ் நண்பர்களை விட வேற்று நாட்டு நண்பர்களே அதிகம் எனலாம். அப்படியிருக்கையில் நாம் எமது வழியில் இருக்க முடியாது சிலவற்றில் விட்டு கொடுத்து ஒரு புதிய கலாச்சார சூழலை நாம் ஏற்ப்படுத்த வேண்டும். அதாவது எமது கலாச்சாரங்களை கைவிடாது அதே நேரம் மற்றவர்களது கலாச்சாரங்களில் உள்ள நல்ல வற்றை உள்ளேடுத்து எமது கலாச்சாரத்திலுள்ள தீயவற்றை வெளியே விலத்தி விட்டு மற்றைய சமூகங்களுடன் ஒன்றித்து வாழ நாம் பழக வேண்டும். பிள்ளைகளை பொறுத்த வரை அவர்கள் அப்படி செய்ய முனைகளில் பெற்றோர்கள் சமூகத்தையும் கலாச்சாரத்தையும் காட்டி அவர்களது விரும்பங்களுக்கு முழுக்கு போட்டு விடுகின்றனர். இதனால் என்ன நடக்கும்? அத்தோடு மற்றைய நாட்டு நண்பர்களோடு பழகும் போது பிள்ளைகள் அவர்களைப் போலவே வாழப்பழகுவார்கள். ஒரு வெள்ளையினத்து இளைஞன் சொன்னான் " நீ எதுக்கு வேலைக்கு போறாய், அதையேன் உன் பெற்றோரிட்ட கொடுக்கிறாய்" என்று கேட்டான் அதே போல ஒரு விருந்துபசாரத்துக்கு அழைத்தான் அதற்க்கு நான் சொன்னேன் " அப்பா அம்மாட்டை கேக்கனும் என்று" அதுக்கு அவன் சிரித்தான். இப்படி நாம் வாழும் சூழல் எம்மை மாற்றும் போது பெற்றோருடுன் நாம் ஒன்றாக குதூகலிக்கவா தோன்றும்?
பக்கத்து விட்டில் இருப்பவனை யார் என்று தெரியாமல் வாழும் இந்த புகலிட வரழ்வில் ஒற்றுமையும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் எப்படி வரும்! எம்மை சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமல் நின்று பேச நிமிடங்கள் இன்றி உழைத்து கொண்டிருக்கும் இந்த சூழலில் என்ன நடக்கும்? <i>மற்றவனை போலவே வாழ வேண்டும் மற்றவனை போலவே இவனும் வைத்தியராக வேண்டும் என்று தங்கள் ஆசைகளை பிள்ளைகள் மீது பெற்றோர் திணிப்பதற்க்கும், அந்த மாணவன் போல் உடையணிய வேண்டும், அவன் படிக்கும் பாடமெல்லாம் படிக்க வேண்டும் என் பெற்றோரை ஆக்கினை படுத்தும் பிள்ளைகளை உருவாக்கியது யார்? இந்த சமூதாயம் தானே! இந்த சூழல் தானே! </i><b> உலக மயமாக்கலில் எல்லாம் இயந்திர மயமாக இருக்கும் போது, பிள்ளை கதைப்பதற்க்கும் இயந்திரமான கணனியே நட்பாகின்ற காலத்தில் பிள்ளைகள் மனதில் என்ன தோன்றும்.</b> இந்த உலக மயமாதலால் குடும்பங்களில் பிள்ளைக்கும் பெற்றோருக்கும் எப்படி சண்டை வருகின்றது என்று கேட்க்கும் பலர் அச்சண்டைகளுக்கு என்ன காரணம் என்றால் வாய் மூடி மெளனிகளாக இருக்கின்றனர். இந்த உலக மயமாக்கல் அனைவரையும் ஒரு பரபரப்பான சூழலில் வைத்துள்ளது. யாரே சொன்னது தான் ஞாபகத்துக்கு வருகின்றது. சூரிய ஒளியில் பிள்ளையின் முகம் பார்த்து காலங்கள் போய் மின்னொளியிலே பிள்ளையின் முகம் பார்க்கும் காலத்தில் நாம் வாழுகின்றோம்" இதலிருந்து நாம் என்ன அறிய முடிகின்றது? பிள்ளைகளை இரவிலே தான் பெற்றோர் சந்திக்கின்றனர் மற்ற நேரமெல்லாம் உழைப்பின் நிமிர்தம் அவர்கள் வீட்டுக்கு வெளியிலே நிற்க்கின்றனர். இது எதனால் இந்த உலக மயமாக்கலால் தான். இப்படியே ஏற்ப்படும் இடைவெளி எங்கே முடிகிறது கூட்டுக்குடும்பத்திலா?
<b>அடுத்து நாம் யுத்த சூழலை நாம் எடுத்து கொண்டால் இவற்றால் பாதப்படைந்தது தாயகத்தில் இருக்கும் எங்கள் சமூதாயமே!</b> தினம் தினம் யுத்தத்தினால் இடம் பெயர்வுகளாலும், உயிர் இழப்புக்களாலும் வறுமையாலும் வாடிய பிள்ளைகளது தேவைகளை பெற்றோர் நிறைவேற்ற முடியாமல் போனதற்க்கு எது காரணம்? அதனால் ஏற்ப்பட்ட பெற்றோர் பிள்ளைகளுக்கிடையிலான நீண்ட இடைவெளி யாரால் ஏற்ப்பட்டது? இந்த யுத்த சூழலால் பிள்ளைகள் உயிரை காக்க பிறருடன் பிள்ளைகளை அனுப்பி விட்டு தனித்திருந்த பெற்றோருக்குமிடையே பிணக்கினை மூட்டியது யார்? இன்றை ய காலத்தில் <b>பெற்றோர் பிள்ளைகளிடையே முரண்பாடு வருவதற்க்கு முக்கிய காரணங்கள் என்ன? காதல், கல்வி, அளவுக்கதிகமான கட்டுப்பாடு, எதை செய்தாலும் குற்றம் கண்டுபிடிக்கும் தன்மை. இவை அனைத்துக்கும் காரணம் சூழல் இந்த சூழலுக்குள் இருப்பது வேறு எதுவுமல்ல எம்மை சுற்றி தினம் தினம் இருப்பவையே. </b>காதலலால் எப்படி இடைவெளி வருகிறது என்று பார்த்தால், காதல் என்பது இரு உள்ளங்களுக்கிடையே உள்ள உணர்வுகளின் சங்கமம் என்பார்கள். ஆனால் இந்த சமூகம் இந்த காதலர்கள் அதாவது பிள்ளைகளை வாழ விட்டதா? பள்ளியில் ஒன்றாக பழகினால், மாலை பிள்ளையின் வீட்டில் பத்தி வைப்தற்கேன்று ஒரு கூட்டமே இருக்கின்றது. ஆனால் அந்த பிள்ளை தனது காதலைப்பற்றி பெற்றோரிடம் சொல்ல முடியாமல் மனதுக்குள் அடக்கி வைக்கவும் இந்த சமூகமே காரணம் என்பதை மறந்து விடுகின்றனர். இப்படி இவர்கள் பெற்றோரிடம் சொல்லும் போது பெற்றோருக்கு பிள்ளைகள் மிது நேசமா உருவாகும்? அதை விட இன்னோன்று பத்து பேர் கொண்ட குழுவில் இரு மாணவர்கள் புகை பிடித்தால் இந்த அதை பார்த்தவர்கள் என்ன சொல்லுவார்கள், அதில் நின்ற பத்து பேரும் புகை பிடிப்பதாய் பத்து பேரின் வீட்டிலும் அதற்க்கு மேலாய் ஊர் எல்லாம் சொல்லி திரிவார்கள். இதை கேட்ட பெற்றோருக்கு பிள்ளை மேல் அன்பா வரும்? குற்றம் செய்யாமல் தண்டனை கிடைக்கும் போது பெற்றோர் மீது பிள்ளைக்கு பாச பிணைப்பா வரும்?
<b>இந்த சமூகத்துக்கு பயந்த பெற்றோர் தங்கள் பிள்ளைகள் மீது அளவுக்கதிகமான கட்டுப்பாடுகளை விதிக்க முற்ப்படுகின்றனர். எந்த இளைஞனுக்கு தான் கட்டுப்பாடுகளுக்குள் வாழ பிடிக்கும்? எனவே இங்கே உரசல்கள் ஏற்ப்படுகின்றது. இந்த உரசல்களால், அவன் எதை செய்தாலும் குற்றம் கண்டு பிடிக்கும் இந்த சமூதாயம், இதனால் பிள்ளை மீது வெறுப்பு ஏற்படுகின்றது. இது எதனால்? இந்த சமூதாயத்தின் தவறான கண்னோட்டத்தால் தானே? பிரச்சினைகள் எங்கள் சமூதாயத்தின் மீது இருக்கும் போது பிள்ளைகள் மீதும் பெற்றோர் மீதும் வீணாக பழியை போடுவத மடமை என்பதை எதிரணியினர் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதை விடுத்து சும்மா வீம்புக்கு கதைப்பதில் அர்த்தமில்லை.</b><b>அடுத்து நாம் பிள்ளை பராமரிப்பு நிலையங்களை பரர்ப்போமானால்</b>, இங்கே என்ன பழக்க வழக்கங்கள் உருவாகின்றது? வீட்டிலே ஒரு காலாச்சாரத்தை பழகும் பிள்ளை அங்கு ஒரு பல் கலாச்சார சூழலில் எதை பழகும். இங்கு குழந்தைகள் வீட்டிலிருப்பதை விட பராமரிப்பு நிலையங்களில் தான் அதிகம் வளர்கின்றன. இந்த பரமரிப்பு நிலையம் என்கின்ற சூழல் பிள்ளைகளை பெற்றோரிடமிருந்து அன்னியப்படுத்தவே பயன் படுகின்றது. இந்த அன்னிய படுத்தலானது பிள்ளை வளரும் காலத்தில் பெரிய விரிசல்களாக மாறி மிக் பெரும் ஈடு செய்ய முடியாத இடைவெளியை ஏற்ப்படுத்துகின்றது என்றால் அது மிகையாகாது. அதை விட பாடசாலையில் ஆசிரியர்களால் பிள்ளைகள் பெற்றோரிடமிருந்து பிரித்தெடுக்கப்படுகின்றார்கள். கையில் சின்ன காயம் இருக்குமாயின் அப்பா அடிச்சாரா? அம்மா அடிச்சா? என்று கேட்டு கேட்டே நடக்காத விடையங்களை நடந்ததாக காவல் துறையில் செரல்லி பெற்றோரிடமிருந்து பிள்ளையை பிரிக்கின்றது இந்த புலம் பெயர் சூழல். ஒரு குழந்தை தவறி கீழே விழுமாக இருந்தால் உடனடியாக எந்த கருத்துக்களையும் பெற்றோரிடமிருந்து எதிர் பார்காமல் பிள்ளையை எடுத்து கொள்ளும் அதாவது நாகரீக வாதத்தில் அவை சட்டத்தினால் பாது காப்பதற்காக மீட்க்கப்படுகின்றனர். இப்படி எங்கள் சூழல் இருக்கையில் என்ன நடக்கும்? பிள்ளைக்கும் பெற்றோருக்கும் இடையே கொஞ்சல் குலாவலா நடக்கும்,?
எனவே நடுவர் அவர்களே! இதே சூழல் உங்களையும் பாதித்திருக்கலாம். இங்கிருக்கும் அனைவரையும் பாத்திருக்கலாம். முதலில் உன்னை திருத்து என்று சொல்ல பலர் எத்தனிக்கின்றனர் புரிகின்றது. ஆனால் இங்கே என் சமூகம் மாற வேண்டும் இல்லையேல் அது வரையில் பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கு் இடையே இருக்கும் நீண்ட தொரு இடைவெளி பெரிகிக் கொண்டே போகுமே தவிர அவை சுருங்கி சின்னதாக போவதில்லை. நான் சொல்லி முடித்தவை கொஞ்சம்..என் தோழர்கள் சொல்ல இருப்பது அதிகம்.....சூழலால் பெற்றோர் பிள்ளைகளுக்கிடையே பிரச்சினைகள் ஏற்ப்பட்டு அது ஒரு பெரிய இடைவெளியை ஏற்ப்படுத்தி விட்டது என்று மீண்டும் ஆணித்தரமாக கூறி விடைபெறுகின்றேன்,
நன்றி, வணக்கம்
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,053
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
<b>"பெற்றோர்க்கும், பிள்ளைகளுக்கும் இடையில் தோன்றி விரிவடைந்துவரும் இடைவெளிக்குக் காரணம் சூழலே" என உறுதிபட எடுத்துக்கூறிச் சென்றார் "சூழலே" அணித்தலைவர் நிதர்சன் அவர்கள். </b>
சமூகத்தின் மீது கோபம் கொண்ட இளவயதினனாக தனது உணர்வுகளை கொட்டித் தீர்த்தார். புகலிடத்து மண்ணாக இருந்தாலென்ன, தாய்நிலத்து மண்ணாக இருந்தாலென்ன - பிள்ளைகளை சரியாக புரிந்துகொள்ளத் தவறுகிற சமூகத்தால் அதாவது சூழலால் தான் இடைவெளிகள் அதிகமாகிறது என்று சொல்லிச் சென்றார். குறிப்பாக புலம்பெயர்ந்து வாழுகிற எமது தமிழ்ச் சமூகத்தில் பெற்றோர் - பிள்ளை முரண்பாடுகளும், அதனால் உருவாகிற இடைவெளிகளும் எதனால் என்று கேள்வி எழுப்பினார். அவரே அதற்கு அருமையாகப் பதிலும் சொன்னார். மாறுபட்ட புகலிடச் சூழல் தான் ஏற்கனவே இயல்பாக இருக்கிற இடைவெளியை இன்னும் பெரிதுபடுத்துகிறது என்றார். பல்லின சமூகங்களும், பல் கலாச்சாரங்களும் இணைந்த சூழலோடு முரண்பட்டு நிற்கிறது தமிழ்ச் சமூகச் சூழல். இந்த முரண்பாட்டுக்குள் சிக்கித் தவிக்கிறார்கள் பெற்றோர்களும் பிள்ளைகளும் என்று சிறப்பாக தனது வாதத்தை முன்மொழிந்தார். அதற்கு பல உதாரணங்களையும் சுட்டிக் காட்டினார்.
பக்கத்து வீட்டில் வசிப்பவர் யார் என்று அறியாத சூழல், எம்மைச் சுற்றி நடப்பதை அறியமுடியாமல் துரத்துகிற பொருளாதார சிக்கல், அடுத்தவன் போலவே வாழ விரும்புகிற மனோநிலை, இயந்திர மயமாதல், உலக மயமாதல் போன்ற சூழற்காரணிகளை அடுக்கிக் கொண்டே போனார். மிக அழகாக ஒன்றைச் சொன்னார்: "சூரிய ஒளியில் பிள்ளையின் முகம் பார்த்த காலங்கள் போய், மின்னொளியிலே பிள்ளையின் முகம் பார்க்கும் காலத்தில் நாம் வாழுகின்றோம்". மனித உணர்வுகள் எங்கே போயின? அன்பு பாசம் எங்கே போயின? கொஞ்சி மகிழ்தல், கூடி வாழ்தல் எங்கே போயின? இவையெல்லாம் எல்லாமல் புரிதல் எங்கிருந்து வரும்? புரிதல் இல்லாமல் நெருக்கம் எங்கிருந்து வரும்? நெருக்கமில்லாவிடில் இடையில் வெளிதானே தோன்றும்? இந்த நிலையைத் தோற்றுவித்தது என்ன? சூழல்தானே என்கிறார். (--> "இந்த சூழலை உருவாக்கியவர்கள் யார்?" என்று மற்ற இரு அணியினரும் கூட்டணி போட்டு தாக்கப்போகிறார்கள். கவனம்.)
அடுத்து, யுத்த சூழல் பற்றி குறிப்பிட்டார். யுத்த சூழல் தந்த வடுக்களையும் - அவற்றினால் சமூகத் தளத்தில் ஏற்பட்டிருக்கிற முரண்பாடுகளையும் - அவை குடும்பங்களுள் விளைவித்திருக்கிற இடைவெளிகளையும் குறிப்பிட்டார்.
பெற்றோர்-பிள்ளைகள்-முரண்பாட்டிற்கு காரணம் (அல்லது முரண்பாடு தொடங்குகிற இடம்): காதல், கல்வி, (அளவுக்கதிகமான) கட்டுப்பாடு, குறைகூறல் என வரிசைப்படுத்துகிறார். இவற்றுக்கு காரணம் சூழல் என்றும் குறிப்பிட்ட அவர், சூழல் என்பது தினம் தினம் எம்மை சுற்றி நிகழ்பவையை மையமாகக் கொண்டதே என்றும் குறிப்பிடுகிறார். குழுவாக இருக்கிற இளைஞர் கூட்டத்துள் ஒருவன் புகைப்பிடித்தால் ஒட்டுமொத்தமாய் குறைகூறி குடும்பங்கள் மத்தியில் இடைவெளியை உருவாக்குவது யார்? இந்த பாழாய்ப்போன சமூகம் தான் என்கிறார். (--> உண்மையா? சமூகம் குறைகூறுகிறது என்றால், பெற்றோர் பிள்ளைகளிடையே உண்மையான புரிதல் இருந்தால் ஏன் சமூகத்தைப் பொருட்படுத்துகிறார்கள் என்கிற கேள்வியை எழுப்பக் காத்திருப்பார்கள் மற்றைய அணியினர்.).
சூழலுக்கு அல்லது சமூகத்துக்கு பயந்த பெற்றோர் தமது பிள்ளைகள் மீது அளவுக்கதிகமாக அழுத்தங்களை பிரயோகிக்கிறார்கள். அழுத்தங்கள் அதிகமாக அதிகமாக பிள்ளைகள் குமுறி வெடிக்கிறார்கள். இந்த வெடிப்பு பெற்றோர் பிள்ளைகள் இடையே இடைவெளியாக உருவெடுக்கிறது என்று அழுத்தமாக சொல்லிச் சென்றார்.
இன்னொன்றையும் இறுதியாக ஆனால் உறுதியாகச் சொன்னார். "நீ உன்னை முதல் திருத்து, உலகம் தன்னால் திருந்தும்", "சூழலை குற்றம் சாட்டி நீ தப்பித்துக்கொள்ளாதே" என்றெல்லாம் எதிரணியினர் சொல்லலாம் - ஆனால், நானும் (இளைஞர்களும்) பெற்றோர்களும் திருந்துவதற்கு (இடைவெளிகளைக் குறைப்பதற்கு) தகுந்த சூழலை இந்த சூழல் (சமூகம்) உருவாக்கித் தந்தால் தான் தனிமனிதனாக நாம் திருந்த முடியும் என்றார். சேற்றுக்குள் இருந்துகொண்டு சேறுபடாமல் இருக்கச் சொன்னால் எப்படி முடியும்?
இப்படியாக, தனது எண்ணங்களை தனது அணிசார்பாக முன்வைத்துச்சென்றார். பெற்றோர்களையும், பிள்ளைகளையும் பிரிக்கிற சூழலை கடுமையாகச் சாடிச்சென்றார்.
சரி அணித்தலைவர்கள் எல்லாம் தமது கருத்துக்களை முன்வைத்துவிட்டார்கள். இனி அடுத்ததாக "இடைவெளி உருவாகி விரிவடைவதற்கு காரணம் பிள்ளைகளே" என்று வாதாட வந்திருக்கும் "ரமா" அவர்களை களமேடைக்கு அழைக்கிறோம். பிள்ளைகளைக் கிள்ள வாருங்கள் ரமா... <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
<b>இந்த பட்டிமன்றத்தை ஒழுங்கமைத்த ரசிகைக்கும், நீதியான தீர்ப்பை வழங்க எமது கருத்துக்களை கணக்கு பார்த்துக்கொண்டிருக்கும் நடுவர் அவர்கட்கும், மற்றும் எமதணி, எதிரணி நண்பர்களுக்கும், இப்பட்டிமன்றத்தை ரசித்துக்கொண்டு... எமக்கு ஊக்கம் அளித்துக்கொண்டிருக்கும் பார்வையாளர்களுக்கும் எனது முதற்கண் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
பெற்றோர்களுக்கும் இளம் பிள்ளைகளுக்குமிடையே இடைவெளி ஒன்று உருவாகி அது கால வளர்ச்சியில் விரிவடைவதை உணர முடிகிறது. ஆகவே இந்த இடைவெளிக்கு காரணம் பெற்றோரா? பிள்ளைகளா? சூழலா? என்ற தலைப்பில் இடைவெளி உருவாவதற்கு காரணம் பிள்ளைகளே என்று வாதிட வந்திருக்கிறேன்.. இதனூடாக " பிள்ளைகள் தமது சுயநலங்களுக்காக வளர்த்து ஆளாக்கிய பெற்றோரை அவர்களுக்கு உதவ வேண்டிய நேரத்தில் விலகிசெல்வதும், அதற்காக அவர்கள் கூறும் விளக்கங்கள்" பற்றிய தவறான விடயங்களை சுட்டிக்காட்ட எனக்கு வாய்ப்பு ஒன்று கிடைத்தமைக்காக மகிழ்ச்சி அடைக்கிறேன்.
எனது கருத்தை கூறும் அதே நேரத்தில், எதிரணியினரின் சில பிழையான கருத்துக்களையும் சுட்டிக்காட்டி அதன் மேலே எனது சரியான கருத்தை வைக்கலாம் என்று நினைக்கிறேன். பிள்ளைகள் சுயநல தேவைகளுக்காக பலகாரணங்களை கூறி பெற்றோரின் மீது பிழையை போட்டு விட்டு விலகிவிடுகின்றனர், தமது பிழையை மறைப்பதற்கு, தமது குற்ற உணர்வை குறைத்துக்கொளுவதற்கு, மற்றவர்களிடத்தில் தமது அனுதாபத்தை பெற்றுக்கொள்வதற்கு அவர்கள் கூறும் காரணங்களை தான் எதிரணியினரும் கூறியிருக்கிறார்கள். நிதர்சன் ஒரு உதாரணம் சொன்னார்... வருவாயை பெற்றோரிடம் கொடுத்தல்... அப்புறம் விருந்துபசாரத்துக்கு செல்வதற்கு பெற்றோரை கேட்க வேண்டும் என்று கூறுவதின் மூலம் சமுதாயத்தின் மீது பழியை போட்டு விட்டு தனது குற்ற உணர்வை குறைக்க முற்பட்டிருக்கிறார்.
ஆனால் நான் கூறுகிறேன்.. வெள்ளையின பெற்றோர் போலவா எமது பெற்றோர் எம்மை வளர்த்தார்கள்?? ஒரு வெள்ளையின பிள்ளையின் பேட்டி பார்த்தேன். புதுவருடத்தில் உனது ஆசை என்ன?? பதில் கூறியது அந்த பிள்ளை. இந்த வருடத்திலாவது எனது அம்மா அப்பா வேளைக்கு எழும்ப வேண்டும். என்னை கவனிக்கவேண்டும். இப்படியா எமது பெற்றோர் எம்மை பராமரித்தார்கள். அப்படியான எமது பெற்றோருக்கு அவர்கள் செய்ததை திருப்பி காட்ட வேண்டுமா?? அல்லது வெள்ளையின நண்பன் காசை கொடுக்காதே என்று கூறினால் அதை கேட்டு நம் பெற்றோரை வெறுக்க வேண்டுமா?? காசை கொடுக்க கூடாதா?
அத்துடன் நிதர்சனின் சமுதாய கருத்தை மறுப்பதுக்கு நான் ஒன்று கூறுகிறேன். புலம் பெயர்நாடுகளில் மட்டுமா பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடைவெளி வருகின்றது?? எமது தாய்நாட்டில் இடைவெளி வரவில்லையா?? புலம்பெயர் நாடுகளை மையமாக வைத்து நீங்கள் கூறிய 2..3 காரணங்கள் இல்லாதபோதும் தாயகத்திலும் இடைவெளி இருக்கத்தானே செய்கிறது. அதற்கு என்ன சொல்லப் போகிறீர்கள்??
சமுதாயத்துக்கு வலுச்சேர்க்க நிதர்சன் இன்னொரு கருத்தை சொன்னார். சமுதாயம் பெற்றோரிடம் பத்திவைக்கிறது என்று. நிட்சயமாக பெற்றோரிடம் சென்று நேரடியாக உங்கள் பிள்ளை செய்கிறது என்று சொல்ல கூடியவர் இன்னும் ஒரு பெற்றோராகத்தான் இருப்பார். அதுவும் பத்திவைப்பதற்காக அவர் சொல்ல மாட்டார். அந்த பிள்ளையை நெறிப்படுத்த வேண்டும் என்ற நல்நோக்கிலேயே அவர் சொல்லுவார் என்பது என் கருத்து. ஆனால் பிள்ளைகள் அதை பத்திவைப்பதாக எடுத்துக்கொண்டு பெற்றோர்களிடம் சண்டை போடுகிறார்கள். சரி இப்போது பிள்ளைகளை தான் போன போக்கில் விட்டு விட்டால்... பிள்ளைகள் பெற்றோரை விட்டு விலக மாட்டார்களா?? பெற்றோர் மீது பிழை சொல்லமாட்டார்களா?? அதுவுமில்லை. புலர்பெயர் நாடுகளில் வாழும் இளைஞர்கள் பலர் பெற்றோர்களிடத்திலிருந்து விலகி.. பலவிதமான குற்ற செயல்களை செய்து விட்டு பெற்றோரின் முகங்களின் முகத்திலேயே முழிக்கமுடியாத அளவுக்கு ஒழிந்துவாழ்கிறார்கள். ஆனால் பெற்றோர் அந்த வேளையில் கூட பிள்ளைகளை அரவணைத்து, காவல்துறையினரின் உதவியுடன் பிள்ளைகளை மீண்டும் ஒரு வளமான வாழ்வை கொடுக்க முற்படுகிறார்கள். அதை நாம் அன்றாடம் புலம் பெயர்நாடுகளில் காண்கிறோம். இவ்வேளையில் பைபிளில் இடம்பெறும் ஒரு கதை அனைவருக்கும் நினைவுக்கு வரும் என்று நினைக்கிறேன். வீட்டில் இருக்கும் தனது மகனைவிட விலகிசென்ற மகன் திரும்பிவானா என்று ஒரு தந்தை ஏங்குவது போல அக்கதையில் வருகின்றது. ஆகவே பெற்றோர் பிள்ளைகள் விலகிச்செல்வதற்கு காரணமாக அமைவதில்லை.
எதிரணி நண்பர் தலா கூறிய கருத்துக்கள் அனேகமாக பெற்றோர்கள் அன்பு செய்யவில்லை, பிள்ளைகளை நல்வழிப்படுத்தவில்லை. அதனால் தான் பிள்ளைகள் பெற்றோர்களை வெறுக்கிறார்கள், விலகிச்செல்கிறார்கள் என்று கூறினார். ஒரு சம்பவத்தை கூறி எனது கருத்துக்கு வலுச்சேர்க்க நினைக்கிறென்.. சிறிது காலத்துக்கு முன்பு களத்தில் ஒரு கவிதையை உறவுகள் பார்த்திருக்கலாம். விலகிப்போகும் பிள்ளையை நினைத்து கவலையில் எழுதிய கவிதை அது. புலம் பெயர்நாடுகளில் உள்ள ஒவ்வொரு பெற்றோரது ஏக்கம் கவலையை பிரதிபலிக்க கூடியதாய்... ஒரு பெத்தமனம் எழுதிய கவிதை இது. இது தான் யதார்த்ததில் நடைபெறுகிறது. இவ்வாறு பெற்றோர் எபோதும் பிள்ளைகளின் நன்மைக்காகவே செயற்படுகின்ற போதிலும்.... முதுமையடைந்த பெற்றோருக்கு உதவி செய்யவிரும்பாத பிள்ளைகள், தமது ஆசைகளை நிறைவேற்றுக்கொள்வதற்காக சுயநலமாக செயல்படும் பிள்ளைகள், பெற்றோரின் மீதும் சமுதாயத்தின் மீதும் பிழைகளை போட்டு விட்டு தப்பித்து கொள்ள முற்படுகிறார்கள். என்று கூறி.. இப்பட்டி மன்றத்தைப் பார்த்து இனியாவது பிள்ளைகள் சரியாக நடப்பதற்கு வழிசமைக்கும்படி ஒரு தீர்ப்பை நடுவரவர்கள் வழங்குவார் என்ற எதிர்பார்ப்போடு விடைபெறுக்கிறேன். நன்றி வணக்கம்.
இன்னுமொன்றை கூறுகிறேன் நடுவரவர்களே.... எதிரணியினதின் பிழையான கருத்தை சுட்டிக்காட்டி அவர்களின் கருத்தை வெட்டுவதும், எமதணிக்காக ஒரு கருத்தைக் கூறி எமதணிக்கு ஒரு கருத்தை சேர்ப்பதும் ஒன்று தான். சில வேளையில் கருத்துக்களை சரியாக வாசிக்காத சிலபேர் எங்கே உங்கள் கருத்தை காணவில்லை என்று கேட்க முற்படுகிறார்கள். அதற்காகத்தான் சொன்னேன்.
நன்றி வணக்கம்.</b>
Posts: 1,053
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
<b>"பெற்றோர்க்கும், பிள்ளைகளுக்கும் இடையில் தோன்றி விரிவடைந்துவரும் இடைவெளிக்குக் காரணம் பிள்ளைகளே" என தனது அணியின் வழிநின்று தனது கருத்துக்களை இடித்துரைத்தார் ரமா அவர்கள். </b>
பிள்ளைகள் தம்முடைய சுயநலத் தேவைகளுக்காக தம்மை வளர்த்து ஆளாக்கிய பெற்றோரை விட்டு விலகுவதும், அதற்கு போலித்தனமான காரணங்களைக் கூறுவதும், தமது பிழைகளை மறைத்து பெற்றோர் மீதும், சமூகம் மீதும் பழி சுமத்துவதும் நாளாந்தம் நடந்தேறிக் கொண்டிருக்கிறது என்று தனது மையக் கருத்தை முன்வைத்தார்.
மற்றவர்களிடம் அனுதாபங்களைப் பெறுவதற்காகவே தம்மை பாவப்படவர்களாக மற்றைய அணியினர் காட்டிக்கொள்கிறார்கள் என்று கருத்துரைத்தார். ஏனைய மேலைத்தேய சமூகத்து பெற்றோர் போல் எமது பெற்றோர் எம்மை வளர்த்தார்களா என்று கேள்வி எழுப்புகிறார். எமது பெற்றோர்கள் எம்மை அன்போடு பராமரிக்கிறார்கள் என்றார். (நமது) பெற்றோருக்கு ஆதரவுக் கரம் நீட்டுகிறார். அந்தப் பெற்றோர்க்கு நாம் என்ன செய்கிறோம் - மற்றவர் பேச்சைக் கேட்டு எமது பெற்றோரை நாம் வெறுக்கவேண்டுமா - என்று கேள்விகளை அடுக்கினார்.
புலம்பெயர் நாட்டில் மட்டுமா பெற்றோர்-பிள்ளை-இடைவெளி இருக்கிறது, தாயகத்திலும் இருக்கிறதே - நிதர்சன் சமூகத்தின் மீது சுமத்திய பழிகள் அங்கு பொருந்துமா? - என்று நிதர்சனிடம் தனது கேள்வியினை முன்வைக்கிறார்.
சமூகத்தின் மீது நிதர்சன் "பெற்றோரிடம் சமூகம் பத்தி வைக்கிறது என்கிற கருத்தை"முன்வைத்த குற்றச்சாட்டை ரமா மறுதலிக்கிறார்: பெற்றோரிடம் பிள்ளைபற்றி கூறுவது பத்திவைப்பதற்காக இல்லை - பிள்ளைகளை திருத்தி நல்வழிப்படுத்துவதற்காகவே - ஆனால் பிள்ளைகள் அதைத் தவறாக புரிந்துகொண்டு பெற்றோருடன் முரண்படுகிறார்கள் என்கிறார். (--> உண்மைதானோ. நல்லதைச் சொன்னால் யார் கேட்கிறார்கள். ஏதோ தங்களைக் கொலை செய்வதாகவே எண்ணுகிறார்கள்.)
பிழைவிடும் பிள்ளைகளையும், விலகிச்செல்கிற பிள்ளைகளையும் அரவணைத்து, அன்புசெலுத்தி பிள்ளைகளின் வளர்ச்சியில் பெரும் பங்கை வகிக்கிறார்கள் பெற்றோர்கள் - அப்படிப்பட்ட பெற்றோரை குறைகூறலாமா என்கிறார். தனது கருத்துக்கு வலுச்சேர்க்க "பைபிளில்" இருந்து உதாரணம் கூறுகிறார்.
இப்படியாக பெற்றோரை உயர்த்தி - பிள்ளைகளின் பெற்றோர் மீதான புரிதலின்மையைக் கண்டித்து - பிள்ளைகளைக் கிள்ளி விடைபெற்றார்.
<b>இனி அடுத்ததாக "இடைவெளி உருவாகி விரிவடைவதற்கு காரணம் பெற்றோர்களே" என்று வாதாட வந்திருக்கும் "சுஜீந்தன்" அவர்களை களமேடைக்கு அழைக்கிறோம். தொட்டிலை ஆட்ட வாருங்கள் சுஜீந்தன்...</b>
Posts: 151
Threads: 4
Joined: Feb 2006
Reputation:
0
இந்தப் பட்டிமன்றத்தை ஒழுங்கு செய்து எனக்கு வாதாட வாய்ப்பழித்த ரசிகை அக்காவுக்கும் நடுவர் பங்கை செவ்வனே ஆற்றிக்கொண்டிருக்கும் இளைஞன் அண்ணாவுக்கும் உண்மை எதுவென்று தெரிந்தும் பொய்ச்செடிக்கு உரம் போட்டுக்கொண்டிருக்கும் எதிரணி வாதிகளுக்கும் இவர்களின் அறியாமை என்னும் இருளை அகற்றி அறிவு புகட்ட வந்திருக்கும் என் அருமைத் தோழர்களுக்கும் எனது முதற்கண் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். நான் இங்கு வாதாட வந்திருப்பது புலம்பெயர் நாடுகளில் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே விரிவடைந்து வரும் இடைவெளிக்கு காரணம் பெற்றோர்களே என்று வாதிடுவதற்காகும்.
ஒரு குழந்தை பிறந்து 5 வயது வரும் வரை அந்தக் குழந்தையின் ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் பெற்றோரே ஆதிக்கம் செலுத்துகின்றனர். ஒரு குழந்தை என்ன மொழி பேச வேண்டும் என்ன வகையான் உணவுகளை உண்ண வேண்டும் அதன் நடை உடை பாவனை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைப் பெற்றோரே தீரிமானிக்கின்றனர். சூழல் என்ற ஒன்று குழந்தையின் வாழ்க்கையில் செல்வாக்கு செலுத்துவது அதற்கு பிறகுதான். அடித்தளம் ஆணித்தரமாக இருந்தால் கட்டிடம் பலமாக இருக்கும். புயலையும் எதிர்த்து நிற்கும். அதுபோலவே அந்த 5 வயது வாழ்கையில் பெற்றோர் சரியான அடித்தளம் இட்டால் அதன்பின் வரும் சூழலால் குழந்தையை அசைக்க முடியாது. இதனை அறிந்துதான் நம்மினத்தவர்கள் ஒரு பிள்ளையின் குறைகளையும் நிறைகளையும் பெற்றோருக்கே சமர்ப்பிக்கின்றனர். எடுத்துக்காட்டாக " கந்தையாவின் பொடியன் சின்னராசாவின் பொட்டையோடு ஒடிப்போட்டான் " அல்லது " கனகலிங்கத்தின் பொடியன் இப்ப இஞ்சினியராம். அந்தக் காலத்தில கனகலிங்கம் டபுள் அடிச்சு எப்படியோ தன் மகனைப் படிப்பிச்சுப்போட்டுது. " என்று கூறுவார்களே தவிர பிள்ளைகளின் பெயர் சொல்லி அழைப்பது மிகவும் குறைவு. ஆகவே சூழல்தான் பெற்றோர் பிள்ளைகளுக்கான விரிவுக்கு காரணம் என்ற நிதர்சனின் சுத்துமாத்து இங்கு பொய்ப்பிக்கப்பட்டுவிட்டது. இதுவரை சூழல் எவ்வாறு இடைவெளிக்கு காரணம் இல்லை என்று ஆராய்ந்;தோம். இனி பெற்றோர்கள் எவ்வாறெல்லாம் இந்த இடைவெளிக்கு காரணம் என்று விரிவாகப் பார்ப்போம்.
கனடா போன்ற புலம் பெயர் நாடுகளில் பெற்றோர் தமது பிள்ளைகளை பாடசாலை அல்லது பல்கலைக்கழகம் அனுப்பும் போது சொல்லிவிடுவது இதுதான்: " அப்பு! நீ இசுகூலில தமிழ் ஆக்களோட சேராதே. எல்லாரும் சுத்துமாத்துக்காரன்கள். வெள்ளைக்காரப் பொடியன்களோட சினேகிதம் வைச்சுக்கொள் அப்பதான் இங்கிலீசு கெதியாப் படிக்கலாம்." இப்படிச்சொன்னா பொடியன் என்ன செய்வான். அவன் அவர்களுடன் பழகும்போது அவர்களின் நடை உடை பாவனை தனிமனிதச்சுதந்திரம் போன்றவற்றை பின்பற்றத் தொடங்குவான். தனது அலுவல்களில் பெற்றோர் தலையிடக்கூடாது என்ற எண்ணம் தோன்றும.; பெற்றோரின் சொல்லைக்கேளாமல் நீள்காற்சட்டையை பி~;டபாகத்திற்கு கீழ் போட்டு நடப்பான். திருநீறு இருக்கவேண்டிய இடத்தில் பன்டானாவின் ஆட்சி நிகழும். கடைசில ஒரு வெள்ளைக்கார பொட்டையோட வந்து நிற்பான். அப்பதான் பெற்றோர்களுக்கு உறைக்கும். ஆனால் அப்பொழுதும் தாங்கள் விட்ட தவறை மறைத்து " கூட்டுச் சரியில்லை. அதுதான் பிள்ளை இப்படி மாறிப்போட்டான்" என்பார்கள். ஆனால் இதற்கு உண்மையான காரணம் யார்? பெற்றோர்களே. பெற்றோர்கள் முதலிலேயே சரியான அறிவுரையை கொடுத்திருந்தால் அந்தப் பிள்ளைக்கு தனிமனித சுதந்திரம் என்ற எண்ணம் தோன்றாமல் குடும்பம் என்ற உணர்வு உதித்திருக்கும்.
அடுத்ததாக இங்கு வாழும் பெற்றோருக்கு மற்றவர்கள் போல் வசதியாக வாழ வேண்டும் என்ற பேராசை. அந்நாட்டிலே பிறந்து அந்நாட்டிலேயே வளரும் குடும்பங்கள் பெரிய வீடுவைத்திருப்பது ஒன்றும் புதிதல்ல. ஆனால் இன்னும் விமானத்தில் ஏறிய பிரமிப்பில் இருந்து மீளாதவர்களுக்கும் 5 அறையுள்ள மனை பென்சு மகிழுந்து போன்றவற்றை வாங்கவேண்டும் என்ற பேரவா. இந்;த ஆசையை நிறைவேற்றும் முகமாக தாயும் தந்தையும் மாறி மாறி இரண்டு வேலை செய்து விட்டு அலுப்பில் படுத்துவிடுவார்கள். இதனால் அவர்களின் பிள்ளை அவர்களிடமிருந்து தூர இருப்பதுபோல் உணருகின்றது. தனது பெற்றோரைவிட தனது நண்பர்களிடம் நெருக்கமாக இருப்பதை உணருகின்றது. இதனால் தன் நண்பர்கள் சொல்வதையே செய்கின்றது. இறுதியில குழுச்சண்டைகளில ஈடுபட்டு தன் வாழ்க்கையை சிறுவயதிலேயே தொலைக்கின்றது. இவ்வாறே பிறந்த குழந்தைகளையும் குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தில் சேர்த்துவிட்டு பெற்றோர் வேலை செய்கின்றனர். பெற்றோர்களின் அரவணைப்பில் வாழாத குழந்தை பெற்றோர்களிடமிருந்து விலகி வேறு உறவுகளைத் தேடிக்கொள்கின்றது. இதற்கெல்லாம் முழுமுதற்காரணம் யார்? பெற்றோர் என்பது தெளிவு. இவர்களின் நடவடிக்கை எல்லாம் கார் திறப்பை தேடப்போய் காரையே தொலைத்த போல்தான் உள்ளது. இவர்கள் சாதாரண( ஆடம்பரம் இல்லாத) வாழ்க்கை வாழ்ந்திருந்தால் இவை எல்லாம் நடந்திருக்க வாய்ப்பில்லை.
இன்னுமொன்று கூறுகின்றேன் கவனமாகக் கேளுங்கள். ஒருநாள் நான் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தேன். அப்பொழுது ஒரு தாயும் சிறுபிள்ளையும் ஒரு தரிப்பிடத்தில் ஏறினார்கள். அவர்கள் கதைத்துக்கொண்டிருக்கும் போது ஒட்டுக்கேட்டதில் இருந்து சில பகுதிகளைக் கூறலாம் என்று நினைக்கின்றேன். அந்தப் பிள்ளை கூறியது “ அம்மா என்ட இசுகூலுல இரண்டு பேர் தமிழ் கிளாசுக்கு போறவை. நானும் போகட்டே.” அதற்கு அம்மா கூறுகின்றார் “ தமிழ் படிச்சு என்னத்தை இப்ப கிழிக்கப்போறாய். பிரஞசு படிச்சாலாவது ஏதாவது வேலை எடுக்கலாம்.” இது எவ்வாறு பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் இடைவெளியை ஏற்படுத்துகின்றது என்று சிலர் கேட்கலாம். கொஞ்சம் பொறுங்கள் கூறுகின்றேன். தமிழ் இப்பொழுது வேண்டாதது ஒன்று என்று கூறி தாய்மொழியை அந்தப் பிள்ளையிடமிருந்து தாய் அந்நியப்படுத்துகின்றாள். இதையே சிறிது காலத்தில் தாயால் ஒரு பயனும் இல்லை என்று கூறி தாயை கொண்டுசென்று முதியோர் இல்லத்தில் அந்தப் பிள்ளை சேர்க்கும். கடைசியில் தங்கள் இரக்கமான நிலைக்கு தாங்களே காரணமாகின்றார்கள். தமிழில் உள்ள கௌசிகர் கதையைக் கூறி வளர்த்திருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்குமா?
அடுத்து ஒருபிள்ளை தான் 94 புள்ளிகள் எடுத்துவிட்டதை சந்தோசத்துடன் வந்து தாயிடம் சொல்கின்றான். அதற்கு தாய் சொல்கின்றாள் "மிகுதி ஆறு புள்ளிகள் எங்கே?" இது அந்தப் பிள்ளைக்கு எவ்வளவு வேதனை தரும் விடயம். பெற்றோரும் பிள்ளைகளின் பாடங்களைப்பற்றி கேட்டு பிள்ளைகளிடன் அக்கறை இருப்பதைக் காட்டிக்கொண்டால்தானே அந்தப் பிள்ளையும் தனது தாய் தந்தையிடம் பாசமாக இருக்கம். இதைவிட்டு இவ்வாறு பொறுப்பில்லாமல் கேட்டால் இடைவெளி கூடாமல் வேறு என்ன நடக்கும். அதைவிட புலம்பெயர் நாடுகளில் குடும்பத்துடன் கூடி உணவருந்துவதோ அல்லது சுற்றுலா செல்வதோ மிகக்குறைவு. இதற்கும் காரணம் பெற்றோரின் இடைவிடாத வேலை. இவையெல்லாம் பிள்ளைகளின் மனநிலையைப் பாதிக்கக் கூடிய விடயங்கள். மனநிலை பாதிப்பால் அந்த பிள்ளை சிறிது சிறிதாக தனது பெற்றோரிடமிருந்து விலகுகின்றது. எனவே பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் அதிகரித்துவரும் இடைவெளிக்குக் காரணம் முழுக்க முழுக்க பெற்றோர்களே என்று கூறி என் வாதத்தை சில கேள்விகளுடன் நிறைவு செய்கின்றேன்.
1 பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமான இடைவெளிக்குக் காரணம் சூழல் என்றால் ஏன் அந்தச் சூழலில் உள்ள அத்தனை குடும்பங்களிலும் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடைவெளி இருப்பதில்லை?
2 பிள்ளைகள்தான் காரணம் என்றால் ஏன் பாடசாலைகளில் பிள்ளைகள் விடும் தவறுகளுக்கு பெற்றோரை வரவழைத்து கதைக்கின்றனர்?
3 இங்கு வாதாட வந்திருக்கும் எதிரணி உறுப்பினர்களே!!!!!1 நீங்கள் புலம் பெயர் நாடுகளுக்கு வந்தவுடன் சூழல் காரணமாக உங்களுக்கும் பெற்றோருக்கும் இடையில் இடைவெளி வந்துள்ளதா? அவ்வாறு வராவிடின் அதற்கு காரணம் உங்கள் பெற்றோர்களின் வளர்ப்பு என்பதை ஓத்துக்கொள்கின்றீர்களா?
இந்தக் கேள்விகளுக்கு பதிலளித்துவிட்டு அங்கால் நகருங்கள். முடியாவிடின் பட்டிமன்றத்தைவிட்டு ஓடிவிடுங்கள். ஓடாவிடின் உங்களுக்கு ஒன்று சொல்கின்றேன். நான் வெறும் தென்றல்தான் எனக்குப்பின்னே இருப்பது புயல். புயலில் சிக்கினால் மீளுவது கடினம்.
.
Posts: 1,053
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
<b>"பெற்றோர்க்கும், பிள்ளைகளுக்கும் இடையில் தோன்றி விரிவடைந்துவரும் இடைவெளிக்குக் காரணம் பெற்றோர்களே" என தனது அணியின் வழிநின்று தனது கருத்துக்களை ஆணித்தரமாக முன்வைத்தார் சுஜீந்தன்.</b>
ஒரு பிள்ளையின் குழந்தைப் பருவத்தில் அதன் நடவடிக்கைகளில் பிறரை அல்லது பிறவற்றை விட பெற்றோரே அதிகமாய் ஆதிக்கம் செலுத்துகின்றனர் - அந்த அடித்தளம் தான் பிள்ளையின் எதிர்காலத்திலும் செல்வாக்கு செலுத்துகிறது என்கிற தனது மையக் கருத்தினை முன்வைத்து அதற்கு வலுவூட்ட சில உதாரணங்களையும் கூறிநின்றார். (--> "ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா" என்கிற பழமொழி நினைவுக்கு வருகிறது)
பிள்ளைகளின் குறை+நிறைகள் எல்லாமே பெற்றோரைச் சென்றடைகின்றன - பெற்றோரின் வளர்ப்பில் தான் இவை தங்கிநிற்கின்றன என்று தனது அணித் தலைவரின் கருத்துக்கு வலுச்சேர்த்தார். (-->அண்மையில் வந்த "திருட்டுப்பயலே" என்கிற தென்னிந்தியத் திரைப்படமும் இதே வகையான கருத்தை வெளிப்படுத்துகிறது)
புலம்பெயர் நாடுகளில் தமது பிள்ளைகள் தமிழர்களோடு பழகுவதை (சில) பெற்றோர்கள் விரும்புவதில்லை - வேற்றினத்தவரோடு பழகும்படி சொல்லிக்கொடுக்கிறார்கள் - அதனால் பலவிதமான கலாசார மாற்றங்கள், சீரழிவுகள் நிகழ்கின்றன - இதற்கு தொடக்கத்தில் பெற்றோரின் பிழையான வழிகாட்டலே காரணம் என்கிறார். (--> தமிழர்களோடு கூட்டுச் சேராதே என்று பெற்றோர்கள் எதற்கு சொல்கிறார்கள் என்கிற காரணத்தை மற்றைய அணியினர் தான் முன்வைக்கவேண்டும். --> தனிமனித சுதந்திரம் என்பது தவறானதா?, திருநீறு அணிதல் அவசியம் தானா?, வேற்று இனத்துப் பெண்ணை மணப்பது குற்றமா?, இவற்றுக்கும் பெற்றோர்-பிள்ளை-இடைவெளிக்கும் என்ன தொடர்புண்டு என்பதையும் மற்றைய அணியினர் விரிவாக அலசி காயப்போடுவார்கள் என நம்புகிறேன் <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> )
புலம்பெயர் பெற்றோர்க்கு பிறர் போல் வசதியாய் வாழ்வதில் அவா என்றொரு கருத்தை முன்வைத்துள்ளார். (--> புலம்பெயர்ந்த பெற்றோர்கள் கண்டன அறிக்கை விடப்போகிறார்கள். கவனம் சுஜீந்தன். -->உறவுக்கு, ஊருக்கு, நாட்டுக்கு கொடுக்க உழைப்பவர்கள் எத்தனைபேர். <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> ) பணம் தேடும் பெற்றோர் பிள்ளைகளின் தேவை அறிந்து அவர்களை அரவணைக்கத் தவறிவிடுகிறார்கள். பெற்றோரிடம் இடைவெளியை பிள்ளை உணர்கிறது - அதனை ஈடுகட்ட வேறு உறவுகளை நாடுகிறது - நாடுகிற உறவுகளால் தவறுகள் நேர்கிறது - என எடுத்துரைத்தார்.
தாய்மொழியால் என்ன பயனென தாய்மொழியை அந்நியப்படுத்தும் தாய் தந்தையரை - தாய்தந்தையால் என்ன பயனென முதியோர் இல்லத்தில் விலக்கி வைத்திருக்க ஒரு காலம் வருமென அழகாக கருத்துரைத்தார்.
கல்வி விடயத்திலோ அல்லது வேறு திறமை சார் விடயத்திலோ பிள்ளைகளை ஊக்குவிப்பதை விடுத்து - பல பெற்றோர்கள் தமது பிள்ளைகளை தாமே தாழ்த்திக் கதைப்பதுவும், பிறரோடு ஒப்பிட்டுக் கதைப்பதுவும் பிள்ளையை பெற்றோரிடமிருந்து விலகிநிற்கச் செய்கிறது என்றும் சொல்லிச்சென்றார்.
இறுதியாக சில கேள்விகளை முன்வைத்து - அதற்கு பதில் வைத்துவிட்டு அங்கால் நகருங்கள் - இல்லையெனில் ஓடிப் போங்கள் என்கிறார். (--> கவனம் பதில் கேள்வியுடன் வரப்போகிறார்கள். தயாராக இருங்கள்.).
தென்றலாய் வந்து போனார் சுஜீந்தன். தனக்குப் பின் புயல் வருமென எச்சரித்தும் சென்றார். புயலுக்கு முதல் சுடர் வரட்டும்.
<b>அந்தவகையில் அடுத்ததாக "இடைவெளி உருவாகி விரிவடைவதற்கு காரணம் சூழலே" என்று வாதாட வந்திருக்கும் "சுடர்" அவர்களை களமேடைக்கு அழைக்கிறோம். சுடர் விடும் கருத்துக்களைச் சுடச் சுடத் தாருங்கள்...</b>
|