Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழீழக் காணிச்சட்டமும் புலம்பெயர் மக்களின் காணிகளும்:
#21
காவடி Wrote:
Quote:எமக்கு இதனால் ஏற்படும் பாதிப்புக்களைச் சுட்டிக்காட்டுகின்றோம். ஆனால் கருத்தே தெரிவிற்கக் கூடாது என்று தடை இருக்கின்றதா என்ன??
இப்படித்தான் வேறு சிலரும் தங்களுக்கு புலிகளால் சில பாதிப்பக்கள் எற்பட்ட போது சுட்டிக்காட்டினார்கள்.. விமர்சித்தார்கள்.. அவர்களுக்கெல்லாம் துரோகிப்பட்டம் கட்டியவர்கள் இப்போது தங்கள் கழுத்திலும் கத்தி விழுகின்றதாக உணருகின்ற போது கருத்துச் சொல்ல தடையா என்கிறார்கள்.

ஏனய்யா.. புலிகளின் நடவடிக்கைகளை விமர்சிக்காமல் இருப்பது தானே ஒரு தமிழ்த் தெசிய வாதிக்கு அழகு.. அவன் தானே தமிழன்..

கழுத்து இறுகிறது என்று தெரிகிறது. இப்போது கருத்து சுதந்திரம் பற்றி பேசுகிறார்கள்.

புலிகள் இந்த நடைமுறையிலிருந்து பின்வாங்க கூடாது. வேண்டுமானால் புலத்தில் உள்ளவர்களிடம் காலவரையறை கேட்கலாம். எப்பொழுது வருவார்கள் என சரியான திகதியை கேட்டு காலவரையறை கொடுக்கலாம்.

தமிழீழம் விரைவில் கிடைத்து விடும்.. இதோ நாளை என்றவர்கள் இப்போது.. சுதந்திரத்துக்கு இன்னும் அதிக நாள் பயணிக்க வேண்டியிருக்கிறது. அது வரை இது கூடாது என்கிறார்கள். புலத்திலுள்ளவர்கள் பற்றி புலிகள் அறிந்து கொள்ள சரியான வாய்ப்பு இது

தளத்தில் உயிரைக்கொடுப்பவனின் தியாகத்தின் முன், புலத்தில் பங்களிப்பு செய்பவன் ஒன்றும் பெரிதல்ல, ஏனெனில் அதை ஒத்த ஒரு உயிர்தான் புலத்துக்கு வந்து உழைத்து தன்னையும் வழப்படுத்தி, தான் சார்ந்தவர்களையும், வழப்படுத்தி, ஒருபகுதியை நாட்டுக்காகவும் கொடுக்கிறான், ஆனால் தளத்தில் உள்ளவன் தன்னையே கொடுக்குறான், அவர்களோடு ஒப்பிடமுடியாது,
ஆனால் தளத்திலும் புலத்திலும் பங்களிப்பே செய்யாமல், தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் ஒரு கூட்டமும் இருக்கு, அதைவிட பங்களிப்பும் செய்யாமல் ஒதுங்கியும் இராது உபத்திரம் கொடுத்துக்கொண்டு ஒரு கூட்டம் இருக்கு, இவர்களை விட புலத்தில் இருந்து கொண்டு பங்களிப்பு செய்வபன் மேலானவன். அவன் தளத்தில் வைத்திருக்கும் நிலத்தின் பெறுமதி, அவனது இங்கத்திய உழைப்புக்கு ஒரு சொற்பப்பெறுமதி அந்த துண்டு காணிக்காகவும் அங்கிருக்கும் எஞ்சிய உறவுகளுக்காகவும் அவன் வருடம் ஒருதடவை போகிறான் வருகிறான். அந்த காணியின் பெறுமதிக்கு மேலாகவே அவன் இங்கு பங்களிக்கிறான், அந்த துண்டு நிலத்துகாகத்தான் அவன் பங்களிப்பு செய்கிறான் என நினைத்தால் அது நகைப்பிற்கிடமான விடயம், இதை விட காணி இல்லாதவர்களும் பங்களிப்பு செய்கிறார்கள், இதற்கெல்லாம் காரணம் என்ன? அவனது நாடு விடுதலை பெறவேண்டும், அவன் சுதந்திர தமிழீழத்தில் வாழமுடியாவிட்டாலும் அவன்பின் வரும் இனமாவது சுதந்திரத்துடன் வாழவேண்டும், எமது முன்னோர் செய்திருந்தால் நாம் வாழ்ந்திருப்போம், நாம் செய்வதால் எமது அடுத்த சந்ததி வாழும், நாமும் செய்யாவிடால் அடுத்த சந்ததியும் போராடிக்கொண்டுதான் இருக்கும், எம்மனதுக்கு பட்டதை சொல்வோம் ஏற்பதும் மறுப்பதும் உம் பாடு.:wink:
.

.
Reply
#22
எந்த அரசும் தனது சுயாதிபத்திற்கு உடப்பட பிரதேசத்தில் நிலத்தை வாங்கும்,விற்கும் உரிமை உடையது.
அதுவே அந்த அரசின் சுயாதிபத்திய உரிமை அல்லது சொவரின் ரைட் எனப்படுகிறது.இது உலகின் எந்த அரசிற்கும் இருக்கும் உரிமை.இதன் அடிப்படையிலயே அது சட்டங்களை இயற்றுகிறது. நாணயங்களை வெளியிடுகிறது.இது தமிழ் ஈழ தனி அரசு நோக்கிய பயணத்தில் ஒரு மையிற்கல்.
இதன் அடிப்படயிலேயே இந்த காணிச் சட்டம் அமுல் படுத்தப் பட்டுள்ளது.உதாரணத்திறு சிங்கபூரில் எந்த வீடோ கணியோ நீண்டகால குத்தகைக்கே தனியாரிற்கு விற்கப் படுகிறது, நிரந்தர நில உரிமை அரசயே சாரும்.

இங்கே தமிழ் ஈழ அரசானது உருமையாளர் அற்று இருக்கும் காணிகளைக் கையகப் படுத்தி,தனியாரின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு தமிழ் ஈழ அரசின் கட்டுப் பாட்டில் வைத்திருக்கிறது.தகுந்த உரிமையாளர் வருமிடத்து ,இது மறுபடியும் அவர்களுக்கு வழங்கப் படுகிறது.

இங்கே இரத்தத்தையும்,உயிரையும் சிந்தி மீட்கப்பட நிலம், அந்த ஈகை எதற்காக நடத்தப்பட்டதோ ,அதன் நோக்கம் நிறைவேறுவதற்காக,தமிழ் ஈழ அரசின் பொருளாதர அடித்தளத்தை கட்டி எழுப்புவதற்காக, இந்தக் காணிகள் கையகப் படுத்தப்படுகின்றன.

எனது பாட்டன்,பூட்டனது நிலம் என்று கூறுபவர்கள் ஏன் வெளிகிட்டீர்கள் அங்கயே இருந்திருக்கலாமே,உங்கள் நிலத்தை மீட்க போராடி இருக்கலமே? இல்லை உங்கள் மண் மீது உங்களுக்கு பிணைப்பு வேண்டும் என்றால் மீண்டும் செல்வது தானே? நீங்கள் செல்லும் போது உங்களுக்கு அந்தக் காணிகள் வழங்கப்படும்.

புலத்தில் இருப் போரில் ஒரு பத்து சத விகிதத்தினரே போராட்டத்திற்கு உதவி செய்து வருகின்றனர். மிகுதிப் பேர் வெறும் வாய்ச்சவடால் செய்வோரும்,தமது சொந்த வேலைகளைப் பார்ப் போரும் ,புலத்தில் சொத்துக்களை சேர்ப்போரும் ஆகவே இருகின்றனர்.இவர்கள் தமிழ் ஈழத்திற்கு ஒரு போதும் போகப் போவதில்லை.இவர்களின் காணிகளை தமிழ் ஈழ அரசு கையகப் படுத்தி, தமிழ் ஈழத்தின் பொருளாதரத்தை மேம்படுத்தி,அங்கு வாளும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே ,அந்த நிலங்களை மீட்கப் போராடிய மாவீரரின் கனவுகளை நிஜமாக்கும்.

புலத்தில் இருந்து புலம்புபவர்கள் புலம்புவார்கள்,மேதாவிகள் ஆலோசனை சொல்வார்கள் இவற்றிற்கெல்லாம் அசைந்து கொடுக்க தமிழ் ஈழ தனியரசோ,அதனை அமைக்கப் போராடும் புலிகளோ தமது இறுதி இலக்கில் இருந்து வழுவார்கள். காரணம் போராடியவர்களுக்கே அந்த நிலம் சொந்தம்.உலக வராலாறுகளிலும் அதுவே நிதர்சனமான உண்மை.அதுவே தர்மமும் ஆகும்.

ஓடி ஒழிந்து கொண்ட நாங்கள் வரலாற்றைப் படைப்பவர்கள் அல்ல.
Reply
#23
narathar Wrote:................. .....................
புலத்தில் இருப் போரில் ஒரு பத்து சத விகிதத்தினரே போராட்டத்திற்கு உதவி செய்து வருகின்றனர். மிகுதிப் பேர் வெறும் வாய்ச்சவடால் செய்வோரும்,தமது சொந்த வேலைகளைப் பார்ப் போரும் ,புலத்தில் சொத்துக்களை சேர்ப்போரும் ஆகவே இருகின்றனர்..............
உண்மைதான்........
ஆனால் உண்மையாக 10 சதவீதம்தானா... Confusedhock: <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
அப்ப 50 சதவீதம் அல்லது இதைவிட கூடவீதத்தினர் பங்களித்தால்.... <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> & 8)
.
Reply
#24
Netfriend Wrote:
narathar Wrote:................. .....................
புலத்தில் இருப் போரில் ஒரு பத்து சத விகிதத்தினரே போராட்டத்திற்கு உதவி செய்து வருகின்றனர். மிகுதிப் பேர் வெறும் வாய்ச்சவடால் செய்வோரும்,தமது சொந்த வேலைகளைப் பார்ப் போரும் ,புலத்தில் சொத்துக்களை சேர்ப்போரும் ஆகவே இருகின்றனர்..............
உண்மைதான்........
ஆனால் உண்மையாக 10 சதவீதம்தானா... Confusedhock: <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
அப்ப 50 சதவீதம் அல்லது இதைவிட கூடவீதத்தினர் பங்களித்தால்.... <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> & 8)

டோற்முன்ரில் மட்டும் 155 குடும்பத்தில் 154பேர் இறுதியாக சேகரித்த தமிழீழதிறைசேரிக்கான நிதி பங்களிப்பு செய்திருக்கிறார்கள், இது எத்தனை சதவீதம்? கிறடிற்காட்டில் அடித்து கொடுத்தவர்களும் உண்டு. :wink:
.

.
Reply
#25
பிருந்தன் நான் புலதில் என்று தான் குறிப்பிட்டேன்,டோற்முன்ரில் என்று அல்ல.பிரித்தானியாவிலும்,கனடாவிலுமே அதிகளவிலான ஈழத் தமிழர்கள் வாழ்கிறார்கள் இங்கெல்லாம் முன் வந்து குடுப்பவர்கள் தொகை குறைவு.
Reply
#26
... ஈழத்திலிருந்து இலண்டனுக்கு வந்து 16 வருடங்கள் கடத்து விட்டது. இலண்டனில் வந்து வேலை செய்யத் தொடங்கி, வந்த முதல் கிழமை சம்பளம் 100 பவுண்களை, தங்குமிடம்/சாப்பாடு போட்ட உறவினனுக்கும் கொடுக்காமல் தேசியத்திற்காக ஒப்படைத்தேன். அன்று வாழ்க்கையில் ஏதோ ஒன்றை சாதித்து விட்டதான சந்தோசம்!! அன்று தொடங்கிய தேசியத்திற்கான பங்களிப்பு இன்றுவரை, எவ்வுழைப்பில் இருந்த போதும் என் கடமையை செய்யத் தவறியதில்லை! நேற்றல்ல .. இன்றல்ல ... எப்பவும் என் பங்களிப்பு தொடர்ந்து கொண்டேயிருக்கும்!!! ஏன் செய்கிறேன்?? எதற்காகச் செய்கிறேன்??? ....

எனது குடும்பங்கள் தாயகத்தில் இல்லை!!! இன்றுவரை புலத்தில் எனது தேசியத்திற்கான பங்களிப்பு, எனக்கு என் தாயகத்தில் இருக்கும் சொத்துக்களின் பெறுமதியை விட பன்மடங்கு!!! என்னையும் தாயகத்தையும், எனக்கு அங்கிருக்கும் நிலமே உறவுப்பாலமாக இருக்கிறது. அம்மண் எனக்கில்லையேல், எனக்கும் தாயகத்திற்கும் என்ன உறவு இருக்கப் போகிறது???

எங்கிருந்தாலும், என்றோ ஒரு நாள் எம் தாயகத்திற்கு செல்வோம் என்பதற்கான நம்பிக்கையை தந்து கொண்டிருப்பது, எமக்கு அங்குள்ள மண்தான்!!

இங்கு கொண்டுவரப்பட்ட சட்டம் தூரநோக்கற்றது!! புலத்தில் உள்ள மக்களிடம் தேவையற்ற மன சஞ்சலங்களை உருவாக்கவே முற்படும். மேலும் கள/புல தொடர்புகளை அறுப்பதற்காக செய்யப்பட்ட முயற்சி!!
"
"
Reply
#27
மத்தியிலை கூட்டாட்சி மாநிலத்திலை சுயாட்சி எண்டா உந்தக் காணிப்பிரச்சனையில்லை.

நாலு சொல்லு இங்கிலிசு தெரிஞ்ச சனம் எண்டா உப்படி கிறடிற்காட்டிலை அடிச்சு தமிழீழதிறைசேரிக்கு காசுகுடுக்காது. கொன்சவேற்றிப்பாட்டிக்கு நிதியுதவி செய்வினம்.
Reply
#28
தம்பி குறுக்காலபோவான் என்னத்தைச் சொல்ல வந்தீரோ தெரியவில்லை? உமக்கு யார் சொன்னது லண்டனில் கிறடிட்காட்டில் அடித்து காசு கொடுக்கப்பட்டதில்லையென்று? உமக்கு தெரியுமா லன்டனில் திறைசேரிக்கு அளிக்கப்பட்ட நிதியின் தொகை? சும்மா விதன்டாவாததிற்கு எழுதாதீர்!

அது இருக்க, இஸ்ரவேல் எனும் நாடு மலர்ந்து இன்றுபல வருடங்கள் சென்று விட்டன. ஆனால் இன்றும் இஸ்ரவேலின் பாரிய நிதிப்பிரட்சனைகளை புலத்தில் உள்ள யூத மக்களே கரம் கொடுக்கிறார்கள்! இதை என்னத்திற்குச் சொல்கிறேன் என்றால் நாளை மலரப்போகும் தமிழீழத்தில் முதலிடுவதற்கு வெளிநாடுகளோ அல்லது வெளிநாட்டு நிறுவனங்களோ அடித்துப் பிடித்து முண்டியடித்து வரப் போவதில்லை! புலத்தில் உள்ள நாம்தான் நீண்ட காலத்திற்கு கை கொடுக்க வேண்டிவரும் மட்டுமல்ல கை கொடுக்க வேண்டும்! இது கடந்த காலங்களிலும் கண் கூடு! சுனாமியாகட்டும், வெள்ளப்பெருக்குகள் ஆகட்டும் நாம்தான் கை கொடுத்தோம்! ஒருவரும் வரவில்லை!!!! இன்றைய தேசியத்தின் வளர்ச்சிக்கு களத்தில் உள்ள மக்கள் செய்த தியாகங்கள் கற்பனைக்கு எட்டாதவை! மலரப்போகும் ஈழத்தில் அம்மக்களுக்கே முதலிடம் வழங்க வேண்டும் என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை! ஆனால் புலம்பெயர் மக்களின் பங்களிப்பானது, இன்று பரவி வியாபித்திருக்கும் தேசிய விருட்சத்தில் பாரிய பங்கையும் யாரும் மறுப்பதற்கில்லை!!
"
"
Reply
#29
narathar Wrote:பிருந்தன் நான் புலதில் என்று தான் குறிப்பிட்டேன்,டோற்முன்ரில் என்று அல்ல.பிரித்தானியாவிலும்,கனடாவிலுமே அதிகளவிலான ஈழத் தமிழர்கள் வாழ்கிறார்கள் இங்கெல்லாம் முன் வந்து குடுப்பவர்கள் தொகை குறைவு.

10 சதவீதம் என்பது மிக குறைவு என நான் நினைக்கிறேன், கருனா அடித்து கொண்டுபோனதே 10பில்லியன் வருமாம் உண்மை பொய்தெரியாது, இதில் பெருமளவு புலம்பெயர் தமிழர் பணம் இருக்கும், ஆயினும் தளராது தொடர்ந்து பங்களிக்கின்றனர், அவர்களுக்கு தேவையானதெல்லாம் தாயகத்தின் விடுதலை, கிடைக்கும் அனைத்து வருமானங்களும் விடுதலையை நோக்கியதாக இருக்கவேண்டும் என்பதுதான் எமது எண்ணம், புலம்பெயர்தமிழர் பங்களிப்புக்கு பாதகம் வந்து விடுமோ என்பதுதான் எமது கவலை.
.

.
Reply
#30
நெல்லயன் உங்கள் ஆதங்கம் எனக்கு விளங்கவில்லை? நீங்கள் தாயகம் சென்றால் உங்கள் நிலம் உங்களிடம் ஒப்படைக்கப்படும்.அதுவரை அது அங்கிருப்பவர்களுக்கு,தமிழ் ஈழ அரசு அமைக்கப் படுவதற்கு உதவுவதில் உங்களுக்கு என்ன பிரச்சினை?உங்கள் நிலம் எங்கும் ஓடி விடப் போவது இல்லயே?உங்களை வர வேண்டாம் என்று ஒருவரும் சொல்லவில்லயே?இதுவரை பங்குதாரர் ஆகாதவர்கள், ஆகுங்கள் என்பது தானே இதன் அர்த்தம்.
Reply
#31
அருவி Wrote:புலம்பெயர்ந்து இருந்துகொண்டு காணிகளை அதிக பெறுமதிக்கு விற்று அவற்றை காசாக்கிக் கொண்டு மீண்டும் இங்கு வந்து அங்குவாழும் மக்கள் காணியும் இல்லாமல் இருக்க இடமும் இல்லாமல் வாழ்வதை விட தமிழீழ நீதி நிர்வாகத்துறையின் இச் செயற்பாடு மிகவும் வரவேற்கத்தக்கது.

புலம்பெயர்ந்து வாழும் யாரும் நீங்கள் வாழும் நாட்டில் உங்களிற்கு உங்கள் தாயகத்தில் இவ்வளவு பெறுமதியான சொத்து இருக்கின்றது என்று காட்டியிருக்கிறீர்களா? :roll:
நீங்கள் இருக்கும் நாட்டையும் ஏமாற்றி தமிழீழத்தினையும் ஏமாற்ற முயற்சிக்க வேண்டாம். Idea
மற்றவர்கள் என்னவோ தெரியாது.. ஆனால் நான் 84ல் வந்தபோது எனக்கு சொத்தே இருக்கவில்லை.. தற்போது உள்ளது.. காரணம் எனது பெற்றோருக்கு ஒரே பிள்ளை நான்.. ஆக, அவர்களது உடமைகள் இன்று எனக்கு உரித்தாகியுள்ளது. ஆக.. ஓரிருவரை வைத்து எல்லாரையும் ஒரே குட்டைக்குள் அமிழ்த்துவது சுத்த வடிகட்டின ......தனம். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.
Reply
#32
Quote:விற்பதற்கு தடை என்பதை மேற்கோள் காட்டி.. ஒருவர் அப்பு ஆச்சி ஆண்ட மண்ணாம்.. என்று சொல்லியிருக்கிறார். ஆச்சியின் மண் என்றால் எதற்காக விற்க வேணும்.. புலிகளின் பராமரிப்பில் நீங்கள் போகும் வரை? இருக்கட்டுமே..
அப்பு ஆச்சி ஆண்ட மண் அந்த வரியமைந்த தாயகப் பாடல் இருக்கிறதா என்பதே உமக்குத் தெரியுமா காவடி.. நான் எழுதின கருத்தை தெளிவாக புரிந்து கொள்ளாமல் காவடி ஆடி பம்மாத்து காட்ட வேண்டாம் இங்கே..
அநேகமான புகலிட உறவுகளும் தமக்கென ஒரு குழியாவது தாயகத்தில் உரிமையுடன் இருப்பதையே விரும்புவார்கள்.. ஏனெனில் அது அவர்கள் பிறந்து தவழ்ந்து வளர்ந்த மண்.. அந்த மண்ணை எடுத்து, யாரோ ஒருவருக்கு தற்காலிகமாக கொடுத்து, பின் நிரந்தரமாக்கி... நாம் அங்கு தற்காலிகமாக போனாலும்.. அங்கே உரிமையுடன் என் வீடு என நுழைய முடியாமல்.. என் முன்னவர் கட்டிய வீடு.. நான் ஓடித் திரிந்த வீடு என்று உவகைகொள்ள முடியாமல்.. இதை காவடித்தம்பி விற்பனைக்கு என்று தனக்குத்தானே மண்டைக் களிமண்ணுக்குள் பிசைந்து கொக்கலித்து இங்கே முக்குவது ஏனென்றுதான் புரியவில்லை.. முக்குக.. முக்குக.. கவனம்.. மூலம் வந்து குருதி கொட்டியாவது அதிலே கறையான் அரித்த நேயம் தெரியட்டும்..
காவடி காட்டியே.. ஒன்றை தெளிவீர்.. எனது கடமைகளை செய்தவாறே நான் இங்கே கருத்துப் பரிமாற்றம் செய்கிறேன்.. கிளறிவிட்டு குளிர்காயவல்ல இது.. அல்லது செடில் குத்தி குதித்தாடி முதுகில் ஊத்தைகளைச் சுமப்பதற்குமல்ல..
.
Reply
#33
Quote:எனது பாட்டன்,பூட்டனது நிலம் என்று கூறுபவர்கள் ஏன் வெளிகிட்டீர்கள் அங்கயே இருந்திருக்கலாமே,உங்கள் நிலத்தை மீட்க போராடி இருக்கலமே? இல்லை உங்கள் மண் மீது உங்களுக்கு பிணைப்பு வேண்டும் என்றால் மீண்டும் செல்வது தானே? நீங்கள் செல்லும் போது உங்களுக்கு அந்தக் காணிகள் வழங்கப்படும்.
ஓம் நாரதரே! உப்பிடி கேள்வி கேட்க எனக்கும் வரும்.. ஆனா, உதுக்கு மேலயும் நிறைய கேட்கலாம்.. ஆனா. அது நானே என்னைக் கொச்சைப்படுத்துவதுபோல..
இன்றைக்கு மேடைகளிலே முன்னுக்கு நிற்பவர்கள் அந்தந்த நாட்டு பிரசைகளாக இருக்கலாம்.. ஆனால் நான் 22 வருடங்களாக ஏன் இலங்கை கடவுச்சீட்டில் இருக்கவேணும்.. காரணம் இங்கே அவசியமற்றது.
பிருந்தன் கூறியவாறு சுதந்திர தமிழீழத்தில் இப்படியானதொரு சட்ட அமுலாக்கம் ஏற்படின் வரவேற்கத்தக்கதே! நாரதரே.. இன்னும் ஒரு கேள்வி.. 84ம் ஆண்டளவில் எந்த அப்பன் ஆச்சி தமது பிள்ளைகளை மனமுவந்து போராட்டத்துக்கு அனுப்பினார்கள்? அப்பு ராசா.. இதுகளுக்கால நீயாவது ஓடித் தப்படா என்று சொல்லி வெளியேற்றியதுதான் உண்மை.. அப்படி வெளியேறியவர்களில் பலர்.. 10 வீதமல்ல.. பலர் இன்றும் தாயகப் பற்றுடன் வாழ்கிறார்கள். தாயகத்துக்கு தங்களாலான பங்களிப்புகளை வழங்குகிறார்கள் என்பதுதான் உண்மை. சொத்து இன்று வரும்.. நாளை போகும்.. அது பெரிய விடயமல்ல.. அன்று 100 டொலருடன் புலம் பெயர்ந்தவர்கள்தான் தங்களது திறமையால் பல்வேறு துறைகளிலே குறிப்பிடக்கூடிய வகையில் முன்னேறியுள்ளார்கள்.
எனது கருத்தாடலின் முக்கிய பொருள்.. புகலிட தமிழர்களதும் தாயகத்துக்குமான ஒரு உரிமைப் பிணைப்பாக உள்ள சொத்து ஏன் கைமாற வேண்டும்.. அதற்கு என்ன அவசியம் இப்போது.. அதுதான்.
மற்றும்படி.. சொத்தின் பெறுமதிய புகலிடத் தமிழர்கள் உயர்த்துகிறார்களாம்.. யதார்த்த உண்மை தெரியாத அலம்பல் இது.. தாயகத்திலுள்ள உறவுகளை விசாரியுங்கள்.. போராட்டம் வெடிக்கப் போகிறது என்ற பயத்தில் சொத்துகளை வாங்க அங்கே ஆட்களில்லை.. அதனால் சொத்தின் பெறுமதி குறைந்துகொண்டு போகிறது என்பதுதான் உண்மை.
.
Reply
#34
சட்டங்கள் என்பது மக்களுக்காக உருவாக்கப்படுவதே. சட்டங்களுக்காக மக்கள் இல்லை. புலம் பெயர்ந்த நாரதர் காணிகளை விட்டுவிட்டு ஏன் புலம்பெயர்ந்து வந்தீர்கள் அங்கேயே இருந்து அதை காப்பாற்றி இருக்கலாமென கேட்பது வேடிக்கை. இன்று இவ்வளவு மக்கள் புலம்பெயர்ந்து வந்ததினால்த்தான் போராட்டம் இவ்வளவு வளர்ச்சியடைந்துள்ளது. எல்லா மக்களும் அங்கிருந்திருந்தால் செம்மணிகள் தான் மிஞ்சியிருக்கும். அத்துடன் இப்படியான சட்டங்களினால் எதிர்காலத்தில் தாயகத்தில் தமது முதலீடுகளைப் போட எண்ணியிருந்தவர்களும் அதனை வேறு இடங்களுக்கு மாற்றவே இது இடம் அளிக்கும். இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் நிச்சயம் புலிகளுக்கும் புலம் பெயர் மக்களுக்கும் இடையில் இடைவெளி அதிகரிக்கவே இது வழி வகுக்கும்.
<i><b> </b>


</i>
Reply
#35
ஐயாமாரே.. இப்ப என்ன நடந்து விட்டது..? நீங்கள் இல்லாத வீடுகளை தாம் பயன்படுத்திக்கொண்டு நீங்கள் வரும் போது திருப்பி தருவதாகத் தானே சொல்லுகிறார்கள். புலிகள் மேல் நம்பிக்கையில்லையா..?

நீங்கள் திரும்பும் வரை, இன்று வீட்டு வசதியில்லாமல், துன்பப்படும், நீங்கள் நேசிக்கின்ற தமிழீழ உறவுகளுக்கு தானே கொடுக்கப் போகின்றார்கள். மீளவும் நீங்கள் திரும்பி வந்ததும்? உங்களிடம் கையளிப்பார்கள். இதிலென்ன பயப்பிட இருக்கிறது.

இதை மறுப்பதற்கு சில காரணங்கள் உங்களுக்கு இருக்க வேண்டும்.

ஒன்று உங்கள் சொத்துக்களை விற்க முடியாது என்பது உங்களுக்கு பிடிக்கவில்லை.

இரண்டு புலிகளிடம் நம்பி உங்கள் சொத்துக்களை ஒப்படைக்க விரும்பவில்லை.

மூன்று 'அகதிகளை' உங்கள் வீடுகளில் குடியேற்ற உங்கள் மனம் விரும்பவில்லை.

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். புலிகளின் முடிவுகளை இதவரை விமர்சித்தவர்கள் எல்லோரும் தமக்கென ஒரு பாதிப்பு வரும் போது தான் விமர்சித்தார்கள். அவர்களில் பலரக்கு தான் நீங்கள் துரோகிப்பட்டம் கட்டினீர்கள். இப்போ உங்களுக்கு ?
, ...
Reply
#36
யாழ்ப்பாணத்திலிருந்த முஸ்லீம்களின் வீடுகள் முன்னர் கையகப்படுத்தியது தொடர்பான விடயம் இதே யாழில் விவாதத்திற்கு வந்திருந்தால் நீங்கள் எல்லாம் எப்படி எழுதியிருப்பீர்கள் என நினைத்துப் பார்த்தேன். சிரிப்பு வந்தது..
, ...
Reply
#37
அந்த முஸ்லீம்களின் நிலைதான் மற்றவர்களையும் சிந்திக்க வைத்திருக்கலாம் தானே. அது போல் தான் தாயகத்திலிருந்து கருத்தெழுதுவதாக ரீல் விட்டவர்களின் சாயங்களும் புலம்பல்களால் வெளுத்திருக்கின்றது.
<i><b> </b>


</i>
Reply
#38
தமிழீழ நீதி நிருவாகத்தின் முடிவுகளுக்கு எதிராக எழுதுபுவர்கள் துரோகிகள். இந்த சட்டங்களை விடுதலைப்புலிகள் தான்தோன்றித்தனமாக அமைப்பதில்லை. சட்டவல்லுனர்கள், சமுககட்டமைபபில் அனுபவமும் ஆற்றலும் உள்ளவர்கள், இடம்பெயர்ந்த மக்களின் தேவைகள் பற்றி நன்கு அறிந்தவர்கள் போன்றவர்களின் ஆலோசனைகளின் அடிப்படையிலேயே இந்த சட்டங்கள் இயற்றப்பட்டிருக்க கூடும்.
நாட்டின் தேவைகருதி விடுதலைப்புலிகளின் உலகம் போற்றும் நிருவாகம் எடுத்த முடிவை விமரிசிக்கும் உரிமை வேற்றுநாட்டில் வாழும் ***களுக்கு இல்லை.

இப்படியாக விடுதலைப்புலிகளின் சட்டம் நீதி அமைப்பை விமரிசிப்பவர்கள் இந்திய இலங்கை ஒட்டுப்படைகளின் கைக்கூலிகளாகவே இருக்க வேண்டும்.
''
'' [.423]
Reply
#39
காவடி Wrote:
Quote:எமக்கு இதனால் ஏற்படும் பாதிப்புக்களைச் சுட்டிக்காட்டுகின்றோம். ஆனால் கருத்தே தெரிவிற்கக் கூடாது என்று தடை இருக்கின்றதா என்ன??
இப்படித்தான் வேறு சிலரும் தங்களுக்கு புலிகளால் சில பாதிப்பக்கள் எற்பட்ட போது சுட்டிக்காட்டினார்கள்.. விமர்சித்தார்கள்.. அவர்களுக்கெல்லாம் துரோகிப்பட்டம் கட்டியவர்கள் இப்போது தங்கள் கழுத்திலும் கத்தி விழுகின்றதாக உணருகின்ற போது கருத்துச் சொல்ல தடையா என்கிறார்கள்.

ஏனய்யா.. புலிகளின் நடவடிக்கைகளை விமர்சிக்காமல் இருப்பது தானே ஒரு தமிழ்த் தெசிய வாதிக்கு அழகு.. அவன் தானே தமிழன்..

கழுத்து இறுகிறது என்று தெரிகிறது. இப்போது கருத்து சுதந்திரம் பற்றி பேசுகிறார்கள்.

புலிகள் இந்த நடைமுறையிலிருந்து பின்வாங்க கூடாது. வேண்டுமானால் புலத்தில் உள்ளவர்களிடம் காலவரையறை கேட்கலாம். எப்பொழுது வருவார்கள் என சரியான திகதியை கேட்டு காலவரையறை கொடுக்கலாம்.

தமிழீழம் விரைவில் கிடைத்து விடும்.. இதோ நாளை என்றவர்கள் இப்போது.. சுதந்திரத்துக்கு இன்னும் அதிக நாள் பயணிக்க வேண்டியிருக்கிறது. அது வரை இது கூடாது என்கிறார்கள். புலத்திலுள்ளவர்கள் பற்றி புலிகள் அறிந்து கொள்ள சரியான வாய்ப்பு இது

அண்ணாச்சி!!
எனது கழுத்துக்கு சுறுக்கே விழாது. அது ஏன் என்று களத்தில் உள்ள பல உறுப்பினர்களுக்குத் தெரியும். அது ஏன் என்று வெளிப்படுத்தவும் தேவையில்லை.

இருக்க, நான் அச்சட்டத்துக்கு தடை ஒன்றும் சொல்லவில்லையே!! காணி விற்கப்படக் கூடாது என்பதை வரவேற்கின்றேன்.

ஆனால் யாராவது ஒருவரை குடியேற்றி வைக்கும் போது எவ்வாறான உரிமத்தை குடியேறுபவர் கொண்டிருக்கின்றார் என்பது பற்றியே எனது கேள்வி! ஏனென்றால் இப்போது யாழ்பாணத்தில் பலர் இதே பிரச்சனையை எதிர்கொள்கின்றார்
[size=14] ' '
Reply
#40
தூயவன் Wrote:எனது கழுத்துக்கு சுறுக்கே விழாது. அது ஏன் என்று களத்தில் உள்ள பல உறுப்பினர்களுக்குத் தெரியும். அது ஏன் என்று வெளிப்படுத்தவும் தேவையில்லை.

ஓகோ!! நீங்கள் தான் தலைவருக்கு அடுத்தவரோ??? இவ்வளவு நாளும் தெரியாமல் போச்சே. அடுத்த கருணாவாக வராமல் இருந்தால் சரி.

என்ன புழுகு!!. இப்படி எத்தனை புழுகர்கள் இந்த களத்தில் இருக்கிறார்களோ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
''
'' [.423]
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)