Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழீழக் காணிச்சட்டமும் புலம்பெயர் மக்களின் காணிகளும்:
#1
<img src='http://www.yarl.com/forum/files/20060405001_551.jpg' border='0' alt='user posted image'>

தமிழீழக் காணிச்சட்டமும் புலம்பெயர் மக்களின் காணிகளும்: சட்டவாக்கல் பொறுப்பாளர் சுடர் விளக்கம்
[புதன்கிழமை, 5 ஏப்ரல் 2006, 20:44 ஈழம்] [ம.சேரமான்]

தமிழீழக் காணிச்சட்டத்தின் உள்ளடக்கம் மற்றும் நடைமுறைகள் என்ன? என்பது தொடர்பாக தமிழீழ நீதி, நிர்வாகத்துறையின் சட்டவாக்கல் பிரிவுப் பொறுப்பாளர் சுடர் விளக்கம் அளித்துள்ளார்.


விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான புலிகளின் குரலிற்கு தமிழீழ காணிச்சட்டம் தொடர்பாக சுடர் வழங்கிய நேர்காணல்:

<b>கேள்வி: தமிழீழ காணிச்சட்டம் உருவாக்கப்பட்டதன் நோக்கம் என்ன?</b>

பதில்: தமிழீழத்தில் உள்ள காணியற்றோருக்கு காணிகள் பகிர்ந்தளிக்கப்படுவதற்காகவும் பொதுத் தேவைகளுக்காக காணிகளை ஒதுக்கீடு செய்வதையும் மற்றும் புலம்பெயர்ந்து வாழ்வோரின் காணிகளை அவரிடமும், அவரின் உதிர உறவினர்களிடம் கையளிப்பதற்காகவும் காணிகளின் விலை மதிப்பீடு பற்றியும் அதன் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இந்த சட்டம் உருவாக்கப்பட்டதாகும்.

தற்போது தமிழீழத்தில் உள்ள நிர்வாக அமைப்பான தமிழீழ நிர்வாக சபையின் காணிப்பகுதியினரால் இந்த காணிகளை தமிழீழத்தில் உள்ள காணியற்றோருக்கு சரியான விதத்தில் பகிர்ந்தளிக்கப்படும்.

போர்ச் சூழல் காரணமாக புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்வோரின் காணிகளைப் பாதுகாத்து, அவர்கள் மீள இந்த மண்ணில் குடியேறுகின்ற போது அவர்களிடம் ஒப்படைக்கப்படும்.

பெருமளவிலான அரச காணிகள் தனியாரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அவற்றை மீளப்பெற்று தமிழீழத்தின் பொதுத் தேவைகளுக்கு பயன்படுத்துவோம். இவற்றை காணிச்சட்டத்தினூடே செயற்படுத்துவோம்.

<b>கேள்வி: இந்த சட்டத்தை எந்த வகையில் நடைமுறைப்படுத்த உள்ளீர்கள்?</b>

பதில்: தமிழீழ நிர்வாக சேவையின் செயலகங்கள் ஒவ்வொரு மாவட்ட ரீதியாகவும் அவர்களுடைய நடுவப் பணியகத்தின் காணிப்பகுதிச் செயலகம் ஊடாக இந்தச் சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்படும்.

<b>கேள்வி: காணியற்றோருக்கு காணி வழங்குதல் தொடர்பான விடயங்கள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளனவா?</b>

பதில்: தற்போது தமிழீழப் பகுதிகளில் காணியற்றிருப்போருக்கு குடியிருப்பதற்கான காணியை வழங்குவதற்கான நடவடிக்கையும் அதே சமயம் அவர்கள் விவசாயம் செய்யக்கூடிய வலுவுள்ளவர்களாக இருப்பவர்களாக இருந்தால் அவர்களுக்கு விவசாயம் செய்வதற்குரிய மேலதிக காணிகளையும் அவர்கள் ஆடு, மாடு, பன்றி போன்ற வளர்ப்புத்திட்டங்களில் ஈடுபடுபவர்களாக இருந்தாலோ அல்லது விவசாயம் செய்பவர்களாக இருந்தாலோ அவர்களுக்குத் தேவையான காணிகளையும் அந்த, அந்த அளவுகளில் பகிர்ந்தளிப்பதற்காக இந்த சட்டத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

<b>கேள்வி: தாயகத்தில் உள்ள புலம்பெயர் மக்களின் காணிகள் எந்த வகையில் கையாளப்படுகின்றன? </b>

பதில்: காணிச்சட்டம் இயல் - 08 இல் இது தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

எமது தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் மீண்டும் தாயகத்திற்கு திரும்பும் எண்ணம் உள்ளவர்களுக்கு அல்லது அவர்கள் தாங்கள் விரும்புகின்ற உதிர உறவிர்களிடம் காணிகளை கையளிப்பதற்காக இந்த இயல் ஏற்பாடுகளை செய்திருக்கின்றது.

அதாவது நாங்கள் இந்த இயலில் பிரதானமாக வெளிநாடுகளில் உள்ளோர் தமது காணிகளை விற்பனை செய்வதை இந்த சட்டம் சட்டம் நடைமுறைக்கு வரும் நாளிலிருந்து தடை செய்கின்றோம்.

ஆனால், அவர்கள் அதாவது சட்டமுறை உள்ள ஆவணங்களோடு புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்வோர் தங்களுடைய காணிகளை நிர்வாக சேவையின் காணிப்பகுதிக்கு கையளிக்குமாறும் இந்த சட்டம் ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

இதன் மூலம் அவர்கள் எந்தக்காலப்பகுதியில் மீண்டும் தமிழீழத்திற்கு வருகின்றார்களோ அந்த காலப்பகுதியில் அவர்களுடைய காணி மீளவும் அவர்களிடம் கையளிக்கப்படும்.

<b>கேள்வி: அந்த காணிகள் கையகப்படுத்தல் தொடர்பான செயற்பாட்டிற்கான கால வரையறை ஏதாவது உண்டா?</b>

பதில்: புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசிப்போரின் காணிகள் பத்து வருடங்களுக்கு மேலாக பராமரிப்புக்களின்றி காணப்படுமானால் நாங்கள் இந்த விதிமுறைகளுக்கு அமைய அதனை கையகப்படுத்தி பிற தேவைகளுக்காக பயன்படுத்துவதற்கு இந்த சட்டத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

<b>கேள்வி: புலம்பெயர் நாடுகளில் உள்ள உறவுகள் தாயகத்தில் உள்ள தமது காணிகளை தமது உறவினர்களுக்கோ அல்லது தமது நண்பர்களுக்கோ வழங்குவதற்கான ஏற்பாடுகள் ஏதாவது உள்ளனனவா?</b>

பதில்: இந்த சட்டத்தில் பிரிவு - 60 இல் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதாவது புலம்பெயர்ந்து வாழ்கின்ற ஒருவர் தனது காணியை தான் சுயமாக விரும்பும் தனது உதிர உறவினருக்கு மட்டும் தன்னுடைய காணியை கையளிக்கலாம்.

காணியினுடைய ஆட்சியுரிமையை மட்டும் கையளிப்பதற்கு இந்த சட்டத்தின் படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எந்த நாட்டில் அவர் வாழ்கின்றாரோ அந்த நாட்டில் கடமை புரியும் சட்டவாளர் ஒருவர் ஊடாக வரையப்பட்ட தத்துவ ஆவணம் ஊடாக அதனை கையளிக்கலாம். அதே நேரம் அந்த ஆவணம் தமிழிலும் இணைக்கப்பட்டித்தல் வேண்டும்.

ஆனால் இந்த காணியை கையேற்பவர் தமிழீழத்தில் நிலையாக வாழ்பவராகவும் இருந்தால் வேண்டும். அத்தோடு இந்த சட்டத்தின் பிரிவு 64 இல் இன்னொரு ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்து இந்த காணிகளை கையேற்பவர் அது நெற்செய்கைக் காணி எனில், தன்னுடைய உடமையில் வைத்திருக்க வேண்டும். மாறாக அந்தக் காணியை அவர் பாட்டத்திற்கு (குத்தகை) அல்லது ஏனைய வேறு வழியில் வேறு ஒருவருக்கு கையளிப்பதோ இந்த சட்டத்தின் மூலம் தடுக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் அவர் கையேற்கின்ற காணி ஒரு மேட்டு நிலப் பயிர்ச் செய்கைக்குரிய காணியாகவோ அல்லது ஒரு குடியிருப்புக் காணியாகவோ அல்லது ஒரு வணிகத்துக்குரிய காணியாகவோ இருப்பின் அவரே யார் கையேற்கின்றாரோ அவரே அதனை நேரடியாக பயன்படுத்துதல் வேண்டும். மாறாக அவர் தன் விருப்பிற்கோ அல்லது வேறொருவரிடம் கையளிப்பது இந்த சட்டத்தின் படி முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

<b>கேள்வி: புலம்பெயர் நாடுகளில் வாழ்கின்ற மக்கள் இந்த விடயங்கள் தொடர்பான விளக்கங்களை பெறுவதற்கான ஏதாவது ஏற்பாடுகள் செய்யப்படடுள்ளனவா?</b>

பதில்: புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்வோரின் காணிகள் அனைத்தும் இந்த சட்டம் நடைமுறைக்கு வரும் நாளிலிருந்து தமிழீழ நிர்வாக சேவையின் காணிப்பகுதி செயலகத்தில் கையளித்தல் வேண்டும்.

அவ்வாறு கையளிக்கப்பட்ட காணிகளை தமிழீழ நிர்வாக சேவையினர் அவை கட்டடத் தொகுதிகளை கொண்டிருந்தால் அவற்றை தமிழீழ நிதித்துறையின் வருவாய்ப்பகுதியினூடாகவும் அவை வேளான் சேவைக் காணிகளாக இருந்தால் அவைகள் பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தின் ஊடாகவும் தென்னந் தோட்டக்காணிகளாக இருந்தால் பெருந்தோட்டப் பகுதியினரிடம் ஒப்படைத்து அவைகளை தொடர்ந்தும் பயன்பாட்டில் இருப்பதற்குரிய ஏற்பாடுகளை செய்திருத்தல் வேண்டும்.

<b>கேள்வி: தமிழீழ காணி உரிமம் வழங்குதல் தொடர்பான நடவடிக்கை ஏதாவது முன்னெடுக்கப்படுகின்றதா?</b>

பதில்: இது தொடர்பான உரிமம் வழங்குகின்ற நடவடிக்கைகளை தமிழீழ நிர்வாக சேவை காணிப்பகுதி செயலகங்கள் மேற்கொண்டு வருகின்றன. அவைகள் முதலில் குடியிருந்த காணிகளை வழங்குகின்ற போது தற்காலிக காணிப்பத்திரங்களையும் மீண்டும் அந்த காணிகள் தொடர்ந்தும் பயன்படுத்தி தொடர்ச்சியான பயன்பாட்டில் இருக்கும் காலப்பகுதியில் அதற்கான நிரந்தர அனுமதிகளை வழங்குவதற்குரிய ஏற்பாடுகளை தமிழீழ நிர்வாக சேவையின் காணிப்பகுதியினர் செய்துள்ளனர்.


<b>கேள்வி: காணி விற்பனை தொடர்பிலான விடயங்கள் ஏதாவது இதில் குறிப்பிடப்பட்டுள்ளனவா?</b>

பதில்: இந்த சட்டத்தில் எங்களால் ஒரு காணி விலை மதிப்பீட்டுக் குழு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த விலை மதிப்பீட்டுக்குழுவானது தமிழீழ நிர்வாக சேவையினரின் ஆளுகைக்கு உட்பட்ட ஐந்து உறுப்பினர்களைக் கொண்டதாக அமைந்திருக்கும். அதாவது, அவர்கள் வருவாய்ப் பகுதி பிரதிநிதி ஒருவர், பிரதேச சபை ஆணையாளர் ஒருவர், தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு பிரதிநிதி ஒருவர், தமிழீழ நிர்வாக சேவைப் பிரதிநிதி ஒருவரும் அதே சமயம் துறைசார் நிபுணர்கள் தொடர்பில் அதாவது மதிப்பீடு தொடர்பில் துறைசார் நிபுணர் ஒருவரும் இதில் அங்கத்தவராக இருப்பார்.

இந்த சட்டத்தில் இயல் - 08 இல் அதாவது காணியின் விலைகளை வரையறை செய்வது தொடர்பான நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ளது. தமிழீழத்தில் உள்ள காணி விற்பனை செய்யப்படுகின்ற போது காணியின் விலையினை தீர்மானிக்கின்ற குழுவாக இருக்கும்.

இந்த குழுவினர் சாதாரணமாக காணியை விற்பனை செய்பவரும் அந்த காணியை வாங்குபவரும் காணிப்பகுதிச் செயலகத்திற்கு தங்களுடைய வேண்டுகையை அனுப்பிவைக்க வேண்டும். அவ்வாறான வேண்டுகை ஒன்று சாதாரணமாக மாவட்ட நிர்வாக சேவையில் உள்ள காணிப்பகுதி செயலகத்தில் கையளித்தல் வேண்டும்.

காணிப்பகுதிச் செயலகமானது அந்த வேண்டுகையை விலை மதிப்பீட்டுக் குழுவினரிடம் கையளித்து அந்த விலை மதிப்பீட்டுக்குழுவினர் நேரடியாக குறித்த காணிப் பகுதிக்குச் சென்று அந்த காணியினுடைய பெறுமதியை தீர்மானித்து அந்த வேண்டுகையாளருக்கு எழுத்து மூலமாக வழங்கப்படுதல் வேண்டும்.

இந்த சட்டத்தினுடைய பிரிவு 67 இல் காணி விற்பனை மேற்படி நடவடிக்கைகளை பின்பற்றாமல் யாராவது செய்திருப்பின் காணியை விற்பனை செய்பவரும் அந்த காணியை வாங்குபவரும் இந்த சட்டத்தின் நடவடிக்கைகளை பின்பற்றாது இவ்வாறான காணி விற்பனையை செய்திருப்பின் அது சட்டப்படியாக விற்பனை செல்லுபடியற்றதொன்றாகும். இந்த விதியை பின்பற்றாமல் செய்யப்பட்ட அந்த விற்பனையின் போது காணிக்குழுவினரால் மதிப்பிடப்பட்ட பெறுமதிக்கு மேலதிகமாக பெறுமதி போட்டு காணி விற்பனை செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் குறித்த தொகை கையகப்படுத்தி அரசு உடமையாக்கப்படும்.

<b>கேள்வி: புதிதாக நடைமுறைக்கு வந்துள்ள காணிச்சட்டம் தொடர்பில் நீங்கள் மக்களுக்கு கூறும் செய்தி என்ன?</b>

பதில்: இன்று, தமிழீழப்பகுதியில் காணியற்றிருப்போருக்கு காணிகளை வழங்குவதற்கும் அவர்கள் வேளான் செய்யக்கூடிய வலுவுடையவர்களாக இருப்பின் அவர்களுக்கு வேளான் செய்யக்கூடிய காணிகளை அந்த அந்த அளவில் பகிர்ந்தளிப்பதற்கும் மற்றும் இன்று தமிழீழ அபிவிருத்தித்திட்டங்களுக்காக அதாவது காணிகளை ஒதுக்கீடு செய்வதற்கும் மற்றும் இன்று தமிழீழத்தில் உள்ள சகல பொதுக்காணிகளையும் நாங்கள் தமிழீழ அரசுக்கு சொந்தமாக்கி அதன்மூலம் தமிழீழத்தினுடைய புனர்நிர்மாண வேலைகளை செய்வதற்காகவும் தற்போது மீண்டும் எங்களுடைய தமிழீழப்பகுதிகளில் பெருமளவிலான குளங்கள், அறுகள் மற்றும் கடற்கரைப் பகுதிகள் இருப்பதனால் அப்பகுதிகளிலிருந்து அதாவது, சாதாரணமாக இந்த சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய ஒருவர் ஒரு குளப்படுக்கையில் உச்சநீர் பிடிக்கும் வான்பாயும் எல்லையிலிருந்து ஒரு கிலோ மீற்றருக்கு அப்பால் தன்னுடைய குடியிருப்புக்களை அமைப்பதற்காகவும் அதே சமயம் ஆற்றொழுக்கின் மையப்பகுதியிலிருந்தும் எமது சட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட அளவுகளுக்கு அமைய தமது குடியிருப்புக்களை அமைப்பதற்கும் கடல் வலயங்களிலிருந்து முந்நூறு மீற்றர் அதாவது உச்ச அலை வீச்சிலிருந்து நிலத்தை நோக்கி அமையும் பகுதியை நோக்கி அவர்களுடைய குடியிருப்பை அமைப்பதற்கும் சில ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதே சமயம் எமது தெருக்களைப் பொறுத்த வரை "A" தர தெருக்கள் அதாவது தெருவின் இருமருங்கிலும் மையத்திலிருந்து 66 அடி ஒதுக்கப்பட வேண்டும் எனவும் "B" தர தெருக்கள் தெருவின் மையத்திலிருந்து இருமருங்கும் 33 அடி ஒதுக்கப்பட வேண்டும் எனவும் பொதுவாக உள்ளுராட்சித் தெருக்கள் தெருவின் மையத்திலிருந்து இருமருங்கும் 15 அடி ஒதுக்கப்பட வேண்டும் எனவும் சிறிய ஒழுங்கைகள் 10 அடிக்கு குறையாமல் இருக்க வேண்டும் எனவும் இந்த சட்டத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதன் மூலம் எதிர்காலத்தில் எங்களுடைய தமிழீழ அபிவிருத்தியை நாங்கள் மேற்கொள்கின்ற போது இன்று வெளிநாடுகளில் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளை அதாவது வீதி அபிவிருத்தியை சரியாக செய்வதற்கு அவர்கள் தயாராகும் போது குடியிருப்புக்களை நகர்த்துவதற்கோ அல்லது அங்கிருந்து குடியிருப்புக்களை அகற்றி புதிய தெருக்களை அமைப்பதற்கு பெரும் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர். அவ்வாறான பிணக்குகளை நாங்கள் எதிர்நோக்காது இன்றே இவ்வாறான செயற்பாடுகளை செய்கின்ற போது எமது தேசத்தை நாங்கள் மீண்டும் கட்டியெழுப்புகின்ற போது அதற்கான சரியான ஒழுங்மைப்பு முறையில் அதனுடைய அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ளலாம். அத்தோடு தமிழீழ அரசுக்கு உரித்தாக்கப்பட்டுள்ள காணிகளை தனியாருக்கு அல்லது அரச, அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு ஏல முறையில் பாட்டத்திற்கு (குத்தகை) விடுவது தொடர்பாகவும் இந்த சட்டத்தில் ஏற்பாடுகளை செய்துள்ளோம்.

இதன்மூலம் தமிழீழ அரச காணிகளை நாங்கள் தேவைகள் ஏற்படும் போது மீளக் கையகப்படுத்தி அதனை அபிவிருத்தி திட்டங்களுக்கு பயன்படுத்துவதற்கு இலகுவான ஒரு முறையாகவும் இது காணப்படுகின்றது. இந்த சட்டத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அதன் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக தமிழீழத்தில் உள்ள எமது மக்கள் அனைவரும் ஒழுகி தங்களுடைய காணிகள் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்பவர்களாக இருந்தால் அது தமிழீழ அரசு எதிர்காலத்தில் தமது அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் காணி தொடர்பான பிணக்குகளையும் இலகுவான முறையில் மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும் என்றார் சுடர்.

குறிப்பு: பாட்டம் = குத்தகை

http://www.eelampage.com/?cn=25289
Reply
#2
Quote:அதாவது நாங்கள் இந்த இயலில் பிரதானமாக வெளிநாடுகளில் உள்ளோர் தமது காணிகளை விற்பனை செய்வதை இந்த சட்டம் சட்டம் நடைமுறைக்கு வரும் நாளிலிருந்து தடை செய்கின்றோம்.
என்னைப் பொறுத்தளவில் எனக்கு இதில் உடன்பாடு இல்லை..
'ஆண்டாண்டு காலமதாய் வளர்ந்து வந்த காணி
அப்பன் ஆச்சி காலமதாய் உருண்டு வாழ்ந்த காணி..'

வேர்களைக் கிளறி வேறாக்கும் செயலொத்தது இதுவென்பது எனது கருத்து. :oops:
.
Reply
#3
வணக்கம் சோழியன் அண்ணா!
உங்கள் காணிகள் விற்பனை செய்வதற்கே தடை செய்யப்பட்டிருக்கின்றது. உங்கள் பாட்காலத்து சொத்தை நீங்கள் விற்காமல் இருக்க இந்த சட்டம் உங்களுக்கும் உதவுகின்றது எனக் கொள்ளலாம். பரம்பரை சொத்தை நீங்கள் விற்க மாட்டீர்கள். எனவே இந்த சட்டத்தால் எந்த புலம் பெயர்வாழ் மக்களும் பாதிப்படைய மாட்டார்கள் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
விக்கிறாதால் என்ன பிரச்சினை, அவன் அவன் ரத்தம் சிந்தி சம்பாதிச்ச காணிகளை தன் தேவைக்காக விக்காமல் யாருக்காக வைத்திருக்க வேண்டும், காணி என்பதே ஒரு முதல்தானே, தேள்வைக்கு உதவாத பொருள் இருந்தென்ன விட்டென்ன? சிங்களவனுக்கா விற்கிறார்கள் தமிழனுக்குத்தானே விற்கிறார்கள், எப்படியோ ஒரு தமிழனிடம்தானே அது இருக்கப்போகுது,
.

.
Reply
#5
Quote:கேள்வி: தமிழீழ காணி உரிமம் வழங்குதல் தொடர்பான நடவடிக்கை ஏதாவது முன்னெடுக்கப்படுகின்றதா?
பதில்: இது தொடர்பான உரிமம் வழங்குகின்ற நடவடிக்கைகளை தமிழீழ நிர்வாக சேவை காணிப்பகுதி செயலகங்கள் மேற்கொண்டு வருகின்றன. அவைகள் முதலில் குடியிருந்த காணிகளை வழங்குகின்ற போது தற்காலிக காணிப்பத்திரங்களையும் மீண்டும் அந்த காணிகள் தொடர்ந்தும் பயன்படுத்தி தொடர்ச்சியான பயன்பாட்டில் இருக்கும் காலப்பகுதியில் அதற்கான நிரந்தர அனுமதிகளை வழங்குவதற்குரிய ஏற்பாடுகளை தமிழீழ நிர்வாக சேவையின் காணிப்பகுதியினர் செய்துள்ளனர்.

இங்கே குடியிருந்த காணிகள் எங்கிருந்து வரப் போகின்றன.. புலம்பெயர்ந்தவர்களால் விற்கமுடியாத காணிகள்.. அவர்கள் சந்ததியினரால் கவனிக்கமுடியாமல் போகும்பட்சத்திலும் வரலாமமில்லையா.. ஆக, ஒருநாள் புலத்திலும் ஏதாவது பிரச்சினைகள் தோன்றும்போது.. புகலிடத்தில் வாழும் சந்ததிகள் வேர்களற்ற அந்தரத்துக்குள் தள்ளப்படும் நிலை உருவாகாது என்பது என்ன நிச்சயம்?! Idea
.
Reply
#6
இந்த நேர்காணலில் பின்னர் புதினம் இணையத்தளத்தினர் திருத்தங்கள் செய்து போட்டிருக்கின்றனர்.

பாட்டம் (குத்தகை) என்பதன் அர்த்தம் சரி செய்திருப்பதாக கூறியிருக்கின்றனர். பேட்டியை மீண்டும் வாசிக்க வேண்டும்.

<b>குறிப்பு: </b>பாட்டம் என்பதன் பொருள் தன் விருப்பத்திற்கு என எமது முன்னைய செய்தியில் வெளியிட்டிருந்தோம். ஆனால் அதற்குரிய சரியான பொருள் குத்தகை என்பதாகும். தவறுக்கு வருந்துகின்றோம்.

இந்த நேர்காணல்களை பல இணையத்தளங்கள் தம்முடையது போன்று கொப்பியடித்து போட்டிருக்கின்றனர். இத்தவறினை அவர்களும் திருத்துவது நல்லது.
S.Nirmalan
Reply
#7
புலம்பெயர்ந்து இருந்துகொண்டு காணிகளை அதிக பெறுமதிக்கு விற்று அவற்றை காசாக்கிக் கொண்டு மீண்டும் இங்கு வந்து அங்குவாழும் மக்கள் காணியும் இல்லாமல் இருக்க இடமும் இல்லாமல் வாழ்வதை விட தமிழீழ நீதி நிர்வாகத்துறையின் இச் செயற்பாடு மிகவும் வரவேற்கத்தக்கது.

புலம்பெயர்ந்து வாழும் யாரும் நீங்கள் வாழும் நாட்டில் உங்களிற்கு உங்கள் தாயகத்தில் இவ்வளவு பெறுமதியான சொத்து இருக்கின்றது என்று காட்டியிருக்கிறீர்களா? :roll:
நீங்கள் இருக்கும் நாட்டையும் ஏமாற்றி தமிழீழத்தினையும் ஏமாற்ற முயற்சிக்க வேண்டாம். Idea
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#8
இந்த முடிவை நிட்சயம் புலம் பெயர்தவர் அதிலும் புலம் பல உடையோர் கேட்டு புலம்பவே செய்வர் ஆனாலும் எடுத்த முடிவு எடுத்ததே என்பதும் எல்லோருக்கும் புரியும்
Reply
#9
Birundan Wrote:விக்கிறாதால் என்ன பிரச்சினை, அவன் அவன் ரத்தம் சிந்தி சம்பாதிச்ச காணிகளை தன் தேவைக்காக விக்காமல் யாருக்காக வைத்திருக்க வேண்டும், காணி என்பதே ஒரு முதல்தானே, தேள்வைக்கு உதவாத பொருள் இருந்தென்ன விட்டென்ன? சிங்களவனுக்கா விற்கிறார்கள் தமிழனுக்குத்தானே விற்கிறார்கள், எப்படியோ ஒரு தமிழனிடம்தானே அது இருக்கப்போகுது,



பிருந்தன் அவர்களே
வெளிநாட்டில் உள்ளோர் காணியை விற்க முடியாது என்று கொண்டுவந்த சட்டம் என்பது, எம்மக்களை தாயகத்தில் இருந்து தூரவிலகிப் போவதைத் தடுப்பதற்காகத் தான் அப்படி ஒரு சட்டம் வந்திருக்க வேண்டும்.

காணி இருந்தால் கட்டாயம் தாயகத்தோடு தொடர்பைப் போண வேண்டிய சூழ்நிலை உருவாகும் எனக் கருதியிருக்கலாம். ஏனென்றால் சிலர் புலம்பெயர்ந்த பின்பு தாயகத்தை மறந்த நிலையில் வாழ்வது தெரிகின்றது. ஏன் தாயகத்தில் உள்ள காணியை விற்கின்றார்கள்?? தங்களுக்கும் தாயகத்துக்கும் தொடர்பை விலத்தி கொள்வதற்கு தானே? அது அனுமதிக்கப்பட வேண்டும் என நம்புகின்றீர்களா??

இச்சட்டம் பலரைப் பாதித்திருக்கலாம். ஆனால் கட்டாயம் அவசியமானது.
[size=14] ' '
Reply
#10
sOliyAn Wrote:
Quote:கேள்வி: தமிழீழ காணி உரிமம் வழங்குதல் தொடர்பான நடவடிக்கை ஏதாவது முன்னெடுக்கப்படுகின்றதா?
பதில்: இது தொடர்பான உரிமம் வழங்குகின்ற நடவடிக்கைகளை தமிழீழ நிர்வாக சேவை காணிப்பகுதி செயலகங்கள் மேற்கொண்டு வருகின்றன. அவைகள் முதலில் குடியிருந்த காணிகளை வழங்குகின்ற போது தற்காலிக காணிப்பத்திரங்களையும் மீண்டும் அந்த காணிகள் தொடர்ந்தும் பயன்படுத்தி தொடர்ச்சியான பயன்பாட்டில் இருக்கும் காலப்பகுதியில் அதற்கான நிரந்தர அனுமதிகளை வழங்குவதற்குரிய ஏற்பாடுகளை தமிழீழ நிர்வாக சேவையின் காணிப்பகுதியினர் செய்துள்ளனர்.

இங்கே குடியிருந்த காணிகள் எங்கிருந்து வரப் போகின்றன.. புலம்பெயர்ந்தவர்களால் விற்கமுடியாத காணிகள்.. அவர்கள் சந்ததியினரால் கவனிக்கமுடியாமல் போகும்பட்சத்திலும் வரலாமமில்லையா.. ஆக, ஒருநாள் புலத்திலும் ஏதாவது பிரச்சினைகள் தோன்றும்போது.. புகலிடத்தில் வாழும் சந்ததிகள் வேர்களற்ற அந்தரத்துக்குள் தள்ளப்படும் நிலை உருவாகாது என்பது என்ன நிச்சயம்?! Idea

சோழியன் அண்ணா சொல்வது சரியானது. தொடர்புகள் விடுபடக்கூடாது என்பதற்காக ஒரு பக்கம் சட்டம் ஒன்று கொண்டவரப்பட்ட பின்பு மறுபக்கம் குடியிருந்தவர்களுக்கு காணி சொந்தம் என்ற நிலையை உருவாக்குவது சரியாகப்படவில்லை.

அப்படி ஒரு பிரிவு கொண்டு வரவேண்டும் என்றால் தமிழீழம் கிடைத்த பிற்பாடு ஒரு நிம்மதியான காலப்பகுதியில் கொண்டுவரலாம். ஆனால் யுத்த காலப்பகுதியில் இப்படியான முறைமை ஆதரிக்கத்தக்கதல்ல. இன்று கூட காணியில் குடியிருக்கின்றவர்கள் காணியை கையளிக்க மறுப்பதாக அறிகின்றோம். தங்களுக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்துகின்றனர். இப்படியான சட்டம் மேலும் அவர்களின் அடாவடித்தனத்தை அதிகரிக்க செய்யும்.
[size=14] ' '
Reply
#11
விலைக் கட்டுப்பாடும் தர நிர்ணயமும் நல்ல திட்டங்கள். வெளிநாடகளில் நடைமுறையில் உள்ள திட்டங்கள். ஒரு நாட்டின் சொத்துக்களின் விலை அந்த நாட்டில் உள்ள மக்களின் வருமானங்களளிற்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட வேண்டுமே தவிர வெளிநாடுகளில் உள்ள மக்களின் தனிநபர் வருமானங்களிற்கு அல்ல..

யாழ்ப்பாணத்தின் கிராமங்களில் வீடுகள் 30 லட்சம் 40 லட்சம் என உயர்ந்ததற்கு வெளிநாட்டு தமிழ் மக்களும் ஒரு காரணம். யாழ்ப்பாணத்தில் தொழில் புரிந்து வருமானம் பெறும் ஒருவரால் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு அங்கு விலையேற்றம் உள்ளது. இதனை தடுக்க இத்திட்டம் உதவும். வெளிநாட்டுத்தமிழர்கள் தங்கள் பணத்தை வேண்டுமானால் தமிழீழத்தில் தொழில்துறைகளில் முதலிடட்டும்.
, ...
Reply
#12
தூயவன் Wrote:
sOliyAn Wrote:
Quote:கேள்வி: தமிழீழ காணி உரிமம் வழங்குதல் தொடர்பான நடவடிக்கை ஏதாவது முன்னெடுக்கப்படுகின்றதா?
பதில்: இது தொடர்பான உரிமம் வழங்குகின்ற நடவடிக்கைகளை தமிழீழ நிர்வாக சேவை காணிப்பகுதி செயலகங்கள் மேற்கொண்டு வருகின்றன. அவைகள் முதலில் குடியிருந்த காணிகளை வழங்குகின்ற போது தற்காலிக காணிப்பத்திரங்களையும் மீண்டும் அந்த காணிகள் தொடர்ந்தும் பயன்படுத்தி தொடர்ச்சியான பயன்பாட்டில் இருக்கும் காலப்பகுதியில் அதற்கான நிரந்தர அனுமதிகளை வழங்குவதற்குரிய ஏற்பாடுகளை தமிழீழ நிர்வாக சேவையின் காணிப்பகுதியினர் செய்துள்ளனர்.

இங்கே குடியிருந்த காணிகள் எங்கிருந்து வரப் போகின்றன.. புலம்பெயர்ந்தவர்களால் விற்கமுடியாத காணிகள்.. அவர்கள் சந்ததியினரால் கவனிக்கமுடியாமல் போகும்பட்சத்திலும் வரலாமமில்லையா.. ஆக, ஒருநாள் புலத்திலும் ஏதாவது பிரச்சினைகள் தோன்றும்போது.. புகலிடத்தில் வாழும் சந்ததிகள் வேர்களற்ற அந்தரத்துக்குள் தள்ளப்படும் நிலை உருவாகாது என்பது என்ன நிச்சயம்?! Idea

சோழியன் அண்ணா சொல்வது சரியானது. தொடர்புகள் விடுபடக்கூடாது என்பதற்காக ஒரு பக்கம் சட்டம் ஒன்று கொண்டவரப்பட்ட பின்பு மறுபக்கம் குடியிருந்தவர்களுக்கு காணி சொந்தம் என்ற நிலையை உருவாக்குவது சரியாகப்படவில்லை.

அப்படி ஒரு பிரிவு கொண்டு வரவேண்டும் என்றால் தமிழீழம் கிடைத்த பிற்பாடு ஒரு நிம்மதியான காலப்பகுதியில் கொண்டுவரலாம். ஆனால் யுத்த காலப்பகுதியில் இப்படியான முறைமை ஆதரிக்கத்தக்கதல்ல. இன்று கூட காணியில் குடியிருக்கின்றவர்கள் காணியை கையளிக்க மறுப்பதாக அறிகின்றோம். தங்களுக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்துகின்றனர். இப்படியான சட்டம் மேலும் அவர்களின் அடாவடித்தனத்தை அதிகரிக்க செய்யும்.

குடி இருப்பவனுக்குதான் காணி என்றால் நிட்சயமாக 90% புலம்பெயர் மக்களுடைய காணிகள் அவருக்கு உரிமையற்றதாக போய்விடும். இது நிட்சயம் புலம்பெயர் தமிழரிடையே பெரும் மாற்றத்தை உருவாக்கும், நான் நினைக்கிறேன் இச்சட்டங்கள், சுதந்திர தமிழ்ழீழத்தில் மேற்கொள்லப்பட வேண்டியவை,சுதந்திரத்தின் பின் திரும்பிவரவிரும்பாதவர்களின் காணிகளை, காணியற்றவர்களுக்கும், அரசும் எடுத்துக்கொள்வது சரியாக இருக்கும், ஆனால் சுதந்திரத்துக்கு நாம் இன்னமும் நீண்டதூரம் பயனிக்கவேண்டி இருக்கும், அதற்க்கு புலம்பெயர் தமிழரின் பங்களிப்பு இன்றி அமையாதது, இச்செயல் நிட்சயம் புலம்பெயர் தமிழர் பங்களிப்பில் பெரும் மாற்றம் கொண்டுவரும் என்பதே எனது எண்ணம்,
வந்தசட்டம் வந்தது வந்ததுதான், வருவதை வரும்போது பார்போம். :wink:
.

.
Reply
#13
தம்மீது குண்டு விழாதவரை, தம்மை பயிற்சியெடுக்க அழைக்காதவரை, தாம் புலிகளால் பாதிக்கப்படாதவரையே புலத்தமிழர்களின் ஆதரவு புலிகளுக்கு இருக்கும் என்கிறீர்கள்..

90 வீதமானவர்களின் காணி உரிமையற்றதாக போய்விடும் என்றால் 90 வீதமானோர் திரும்ப மாட்டார்கள் என்கிறீர்கள்.

தங்களை பாதிக்காதவரை புலிகளுக்கு ஆதரவு.. எங்கே அவர்களது நடவடிக்கைகள் தம்மையும் பாதித்திடும் என்னும் போது.. மெதுவாக குரல் வருகிறது.. உது சரியில்லை என்று..

புலத்தமிழர்களின் எதிர்ப்புக்காக புலிகள் பணிந்து போனால் அவர்களின் பணத்திற்கு பணிந்ததாகவே கொள்ள வேண்டிவரும்..
, ...
Reply
#14
சில தவறான நடவடிக்கைகளால் தற்போதைய நிலைமைகளில் மாற்றங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாததே. புலிகளின் வளர்ச்சிக்கு புலம் பெயர்ந்த தமிழர்களின் பங்களிப்பும் முக்கியமானதொன்றென்பதை எவரும் மறுக்க முடியாது.
<i><b> </b>


</i>
Reply
#15
Birundan Wrote:குடி இருப்பவனுக்குதான் காணி என்றால் நிட்சயமாக 90% புலம்பெயர் மக்களுடைய காணிகள் அவருக்கு உரிமையற்றதாக போய்விடும். இது நிட்சயம் புலம்பெயர் தமிழரிடையே பெரும் மாற்றத்தை உருவாக்கும், நான் நினைக்கிறேன் இச்சட்டங்கள், சுதந்திர தமிழ்ழீழத்தில் மேற்கொள்லப்பட வேண்டியவை,சுதந்திரத்தின் பின் திரும்பிவரவிரும்பாதவர்களின் காணிகளை, காணியற்றவர்களுக்கும், அரசும் எடுத்துக்கொள்வது சரியாக இருக்கும், ஆனால் சுதந்திரத்துக்கு நாம் இன்னமும் நீண்டதூரம் பயனிக்கவேண்டி இருக்கும், அதற்க்கு புலம்பெயர் தமிழரின் பங்களிப்பு இன்றி அமையாதது, இச்செயல் நிட்சயம் புலம்பெயர் தமிழர் பங்களிப்பில் பெரும் மாற்றம் கொண்டுவரும் என்பதே எனது எண்ணம்,
வந்தசட்டம் வந்தது வந்ததுதான், வருவதை வரும்போது பார்போம். :wink:

ஆமாம். சுதந்திரத்துக்கு பிற்பட்ட காலப்பகுதியில் இது சரியானதாகத் தான் இருக்கும். சிறிலங்கா அரசின் சட்டமூலத்தில் 10வருடங்களுக்கு மேல் ஒருவர் குடியிருப்பாராயின் அது அவருக்குச் சொத்துமையாகின்றது என்ற சட்டம் இருப்பதாக அறிகின்றோம். ஆனால் யுத்தப் பிரதேசங்களுக்கு அவை பொருந்தாது. இவ்வாறான சட்டங்கள், இக்காலப்பகுதியில் தேவையற்றது. மக்களின் மனங்களை கசப்புக்களை ஏற்படுத்தக் கூடும்.

சட்டஅமைவாக்கலைச் செய்பவர்கள் இது குறித்து கவனத்தில் எடுப்பது நல்லது.
[size=14] ' '
Reply
#16
காவடி Wrote:தம்மீது குண்டு விழாதவரை, தம்மை பயிற்சியெடுக்க அழைக்காதவரை, தாம் புலிகளால் பாதிக்கப்படாதவரையே புலத்தமிழர்களின் ஆதரவு புலிகளுக்கு இருக்கும் என்கிறீர்கள்..

90 வீதமானவர்களின் காணி உரிமையற்றதாக போய்விடும் என்றால் 90 வீதமானோர் திரும்ப மாட்டார்கள் என்கிறீர்கள்.

தங்களை பாதிக்காதவரை புலிகளுக்கு ஆதரவு.. எங்கே அவர்களது நடவடிக்கைகள் தம்மையும் பாதித்திடும் என்னும் போது.. மெதுவாக குரல் வருகிறது.. உது சரியில்லை என்று..

புலத்தமிழர்களின் எதிர்ப்புக்காக புலிகள் பணிந்து போனால் அவர்களின் பணத்திற்கு பணிந்ததாகவே கொள்ள வேண்டிவரும்..

இல்லை நண்பரே!!
யோசித்துப்பாருங்கள். இப்போது காணிகளின் விலை எவ்வளவு போகின்றது. 50 லட்சம் ரூபா என்று ஒருவரின் சொத்தின் அளவை வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் தமிழீழ நிதிக்காக புலத்தமிழர் பலமடங்கு கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். அது ஏனென்றால் எம் தாய் நிலத்தின் மீதுள்ள பற்று. எனவே உதவியே செய்யாமல் இருப்பவர்களை விட இவர்களின் செயற்பாடு எவ்வவோ மேல்.

மெதுவாக்க் குரல் வருவகின்றது என்பதல்ல இது. எமக்கு இதனால் ஏற்படும் பாதிப்புக்களைச் சுட்டிக்காட்டுகின்றோம். ஆனால் கருத்தே தெரிவிற்கக் கூடாது என்று தடை இருக்கின்றதா என்ன??
[size=14] ' '
Reply
#17
எது எப்படியோ..புலம் பெயர் தமிழ் மக்களுடைய அதிகமான எதிர்ப்பபை சம்பாதிக்க போகும் விடயம்..இது...சம்மந்தப்பட்டவர்கள் இதில தீவிர கவணம் செலுத்தினால் நல்லது...
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#18
Quote:எமக்கு இதனால் ஏற்படும் பாதிப்புக்களைச் சுட்டிக்காட்டுகின்றோம். ஆனால் கருத்தே தெரிவிற்கக் கூடாது என்று தடை இருக்கின்றதா என்ன??
இப்படித்தான் வேறு சிலரும் தங்களுக்கு புலிகளால் சில பாதிப்பக்கள் எற்பட்ட போது சுட்டிக்காட்டினார்கள்.. விமர்சித்தார்கள்.. அவர்களுக்கெல்லாம் துரோகிப்பட்டம் கட்டியவர்கள் இப்போது தங்கள் கழுத்திலும் கத்தி விழுகின்றதாக உணருகின்ற போது கருத்துச் சொல்ல தடையா என்கிறார்கள்.

ஏனய்யா.. புலிகளின் நடவடிக்கைகளை விமர்சிக்காமல் இருப்பது தானே ஒரு தமிழ்த் தெசிய வாதிக்கு அழகு.. அவன் தானே தமிழன்..

கழுத்து இறுகிறது என்று தெரிகிறது. இப்போது கருத்து சுதந்திரம் பற்றி பேசுகிறார்கள்.

புலிகள் இந்த நடைமுறையிலிருந்து பின்வாங்க கூடாது. வேண்டுமானால் புலத்தில் உள்ளவர்களிடம் காலவரையறை கேட்கலாம். எப்பொழுது வருவார்கள் என சரியான திகதியை கேட்டு காலவரையறை கொடுக்கலாம்.

தமிழீழம் விரைவில் கிடைத்து விடும்.. இதோ நாளை என்றவர்கள் இப்போது.. சுதந்திரத்துக்கு இன்னும் அதிக நாள் பயணிக்க வேண்டியிருக்கிறது. அது வரை இது கூடாது என்கிறார்கள். புலத்திலுள்ளவர்கள் பற்றி புலிகள் அறிந்து கொள்ள சரியான வாய்ப்பு இது
, ...
Reply
#19
சட்டத்தில் ஒரு இடத்திலும் முழுமையாக கையகப்படுத்த போவதாக என சொல்லவில்லை. வெளிநாட்டில் உள்ளவர்களின் காணி கையகப்படுத்தப்பட்டு அவர்கள் திரும்பும் போது அவர்களிடம் கொடுக்கப்படும்.

இங்கு தான் புலத்தமிழர்களுக்கு பிரச்சனை.. திரும்பும் போது தரப்படும் என்றால்.. அது ஒரு போதும் கிடைக்க போவதில்லை. ஏனெனில் 80 அல்லது 90 வீதம் திரும்ப போவதில்லை.

அவ்வாறாயின் விற்க முடியாது என்பது தான் பிரச்சனை.. சரி.. தூயவன் சொன்னது போல வீட்டுப் பெறுமதியை விட அதிகமாக கொடுக்கிறார்கள் என்றால் அந்தக் கணக்கில் வீட்டினையும் சேர்க்கிறது தானே..

விற்பதற்கு தடை என்பதை மேற்கோள் காட்டி.. ஒருவர் அப்பு ஆச்சி ஆண்ட மண்ணாம்.. என்று சொல்லியிருக்கிறார். ஆச்சியின் மண் என்றால் எதற்காக விற்க வேணும்.. புலிகளின் பராமரிப்பில் நீங்கள் போகும் வரை? இருக்கட்டுமே..

ஒரு வேளை புலிகளில் நம்பிக்கை இல்லையோ தெரியாது. அவங்கடை கையில போனால் போனது தான் எண்டு புலத்தமிழர்கள் நினைக்கிறார்களோ தெரியவில்லை..

நீங்கள் திரும்பியதும் உங்கள் வீடு உங்களுக்கு தான்.. அது வரை அது புலிகளின் கையில் இருக்கட்டுமே.. நாட்டையே புலிகளின் கையில் ஒப்படைத்திருக்கிறீர்கள். வீட்டை ஒப்படைக்க மாட்டீர்களா..?

பயப்பிட வேணாம்.. உங்கடை பேரில தான் காணியிருக்கும்.. ஆனால் நீங்கள் விக்க முடியாது. விலையேத்தவும் முடியாது..

வேணுமெண்டால் நேரை சொல்லுங்கோ.. புலிகளை நம்பி அவர்களின் கையில் வீடுகளை கொடுக்க முடியாதென..
, ...
Reply
#20
sOliyAn Wrote:............ஆக, ஒருநாள் புலத்திலும் ஏதாவது பிரச்சினைகள் தோன்றும்போது.. புகலிடத்தில் வாழும் சந்ததிகள் வேர்களற்ற அந்தரத்துக்குள் தள்ளப்படும் நிலை உருவாகாது என்பது என்ன நிச்சயம்?! Idea

விளங்கித்தான்.... விரைவில் யாவரும்... வருவோம் என்றும்.... இருக்லாம் அல்லவா... :mrgreen: <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> (புலத்து யூதர்கள் நிலை இப்போ அறிவீர்கள்தானே...Idea )

மேலும் மேலும் சிறு சிறு திருத்தங்களை எதிர்பார்க்கலலாம்... :|
.
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)