Posts: 333
Threads: 16
Joined: Jan 2006
Reputation:
0
நாளை சிட்னி முருகன் ஆலய வருடாந்த உற்சவம் கொடியெற்றத்துடன் நாளை(2/4/2006) ஆரம்பமாகி 10 நாட்கள் திருவிழா நடை பெற்று 10/4/2006 தேர் திருவிழாவும்,11/4/2006 தீர்த்த திருவிழாவும் நடை பெறும்.
சுண்டல்.கந்தப்பு,தூயா,அரவிந்தன் அன்னதானத்தில் களந்து கொள்ளுமாறு பணிவண்புடன் கேட்டு கொள்ளபடுகிறிர்கள்.
மு.கு:சைவ நாயன்மார்களையும் பா சீடர்களையும் கண்டால் ஒதுங்கி இடம் விடவும்.
"To think freely is great
To think correctly is greater"
Posts: 638
Threads: 21
Joined: Nov 2005
Reputation:
0
அது என்ன பா சீடர்கள்?. விளங்கவில்லை?.
நேற்று கோவிலுக்குப்போனனான். ஒரு மணித்தியாலம் அன்னதானத்துக்கு லைனில நிண்டனான். ஆச்சிமார்கள் இடையில புகுந்து சாப்பாட்டினை வாங்க எனக்கு கடைசியாக மரவள்ளிக்கிழங்குக்கறியும், கத்தரிக்காய்க்கறியும் கிடைக்கவில்லை. அடுத்தமுறை கெதியாய்போய் நிக்கவேணும்.
அது சரி அம்மாவும் சிட்னிக்கு வந்திட்டா. இனி எப்ப அப்பா வரப்போறார்?
! ?
'' .. ?
! ?.
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
300 kg அரிசியாம் நேற்றைய அண்ணதானத்தக்கு மட்டும்...
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 638
Threads: 21
Joined: Nov 2005
Reputation:
0
சுண்டல், அன்னதானத்துக்கு கிட்டப்போகவேண்டாம் இலவசச்சுண்டல் என்று ஆராவது சாப்பிட்டுவிடுவார்கள். கவனம்
! ?
'' .. ?
! ?.
Posts: 870
Threads: 22
Joined: Apr 2005
Reputation:
0
அய்h அவுஸ்ரெலியவாழ் தமிழரே உந்த சிட்னி முருகன் ஆலயம்பற்டூpயும் அவ்வப்போது சர்சைகள் எழும்புகிறது யாரது பா சீடர் கா பக்தர் அம்மா அய்யா எண்டு விபரமா யாராவது எழுதுங்கோவன்
Posts: 1,674
Threads: 91
Joined: Jan 2005
Reputation:
0
நான் எழுதலாம் என்றால் "சின்ன பிள்ளை சும்மா இருக்கனும்" என்று சொல்லிவிட்டார்கள்..ஆக கந்தப்பு, அரவிந்தன் போன்றவர்கள் தொடங்கினால்..நானும் சுண்டலும் ஒரு சின்ன மகாபாரதமே எழுதிடிவமே<!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b][size=15]
..
Posts: 1,630
Threads: 108
Joined: Jun 2005
Reputation:
0
யாரு சொன்னது தூயா?
சும்மா எழுதுங்க,உண்மைய எழுத சின்னப்பிள்ளை எண்டா என்ன,பெரிய ஆள் எண்டா என்ன?
'எப் பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப் பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு'
Posts: 1,674
Threads: 91
Joined: Jan 2005
Reputation:
0
கந்தப்ஸ் ஆரம்பிக்கட்டும் என்று பார்த்து கொண்டு இருக்கிறேன்...எங்களுக்கு தெரிந்ததை மற்றவர்களுக்கு சொன்னால் தானே புண்ணியம்...
[b][size=15]
..
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
பாப்ஸ் எழுதுங்கப்பா.............
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 870
Threads: 22
Joined: Apr 2005
Reputation:
0
கந்தர் கண்டதையும் அடிச்சிட்டு எங்கையாவது கவிண்டு கிடப்பார் அப்பப்ப முழிச்சு பாத்து ஏதாவது எழுதுவார் அதாலை துர்யா நீங்களே தொடங்குங்கோ அப்பதானே என்ன நடக்குதெண்டு அறியலாம் <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Posts: 638
Threads: 21
Joined: Nov 2005
Reputation:
0
<!--QuoteBegin-sathiri+-->QUOTE(sathiri)<!--QuoteEBegin-->அய்h அவுஸ்ரெலியவாழ் தமிழரே உந்த சிட்னி முருகன் ஆலயம்பற்டூpயும் அவ்வப்போது சர்சைகள் எழும்புகிறது யாரது பா சீடர் கா பக்தர் அம்மா அய்யா எண்டு விபரமா யாராவது எழுதுங்கோவன்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அம்மாவைப்பற்றி அறிய இந்த இணைப்பினைப்பாருங்கள்.
http://www.amma.org/victoriasatsang/
நகைச்சுவைக்காக அப்பா எப்ப வருவார் என்று எழுதியிருந்தேன்?. அப்பா என்று ஒருவருமில்லை. அம்மா தற்பொழுது அவுஸ்திரெலியாவுக்கு விஜயம் செய்துள்ளார். இந்துக்களினை விட வெள்ளைக்காரர்களின் கடைகளில் தான் அதிகளவில் அம்மாவின் வருகை பற்றிய விளம்பரங்கள் காணப்படுகின்றன.
! ?
'' .. ?
! ?.
Posts: 638
Threads: 21
Joined: Nov 2005
Reputation:
0
இக்கோவிலில் மாவீரர் தினப்பூசைகள் கொண்ட்டடப்படுவதில்லை.கோவில் உறுப்பினர் எல்லோரிலும் குறைசொல்லக்கூடாது. ஒருசிலர்கள் மட்டும் சர்ச்சைக்குறியவர்கள். அவர்கள் கோவில் உறுப்பினர் என்பதினால் 63 நாயன்மார்களில் ஒருவர் என்று நினைத்து அடிக்கடி சட்டங்கள் இயற்றுவினம்.
சுனாமியின் போது நடந்த சம்பவம் இது.
http://www.yarl.com/forum/viewtopic.php?t=2959
இந்தச்சம்பவத்தினை சிட்னியில் உள்ள வானொலி1ல் ஒருவர் நேயர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் சொன்னார். இதனைத்தொடர்ந்து, நேயர்கள் பலர் சுனாமியின் போது நடந்த நாகரிகமற்ற செயலுக்கு அவ்வானொலியில் கண்டனம் செலுத்தினார்கள். தொடர்ந்து 2,3 கிழமைகளாக நேயர்கள் தமது கருத்தினை கோவில் நிர்வாகத்தைச் சேர்ந்த சிலருக்கு எதிராக தெரிவித்தார்கள். வானொலி1க்கு எதிராக ஆரம்பித்த போட்டி வானொலி2, கோவில் நிர்வாகத்தினைச்சேர்ந்த ஒருவரினைப்பேட்டி கண்டது. அதில் நிர்வாகத்தினைச்சேர்ந்தவர் ' கோவில் சட்டத்திட்டத்திற்கமைய தனிப்பட்டவர்கள் கோவிலில் நிதி சேகரிக்க முடியாது' என்றும் 'சுனாமிக்காக கோவிலில் ஒரு உண்டியல் வைக்கப்பட்டதாகவும், அதனால்தான் கோவிலில் நிதி சேகரிக்க வந்தவர்களினை கோவில் வளாகத்தினுள் நிதி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டது' என்றும் சொன்னார். (அதன்படி பிறகு உண்டியலில் சேர்த்தகாசும் 2004,2005க்கு வெளினாடு அமைப்புகளுக்கு உதவி வழங்கும் காசு(10000 டொலர் -ஒருவருடம்) கிட்டத்தட்ட 50000 டொலர்களினை தமிழர் புனர் வாழ்வுக் கழகத்துக்கு வழங்கினார்கள்.).
வானொலி1னால் தான் பிரச்சனை பெரிதானது என்று வானொலி2 வானொலி1க்கு எதிராகப் பிரச்சாரம் செய்தது.
இப்பிரச்சனையினைபார்த்த ஒஸ்ரெலியா எட்டப்பன்( http://www.yarl.com/forum/viewtopic.php?t=7935 ) தனது ஆசி........ இணையத்தளத்தில், வானொலி2ல் வந்த கோவில் நிர்வாகியின் பேட்டியில் சிலவற்றினை எடுத்து, சிலபொய்களினைப்புதிதாகச்சேர்த்து புலிகள் சிட்னி கோவிலினைக்கைப்பற்ற மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது என்று பொய்யான செய்தியினை எழுதினார். கோவில் திருவிழாவில் மக்கள் நிக்கும் காட்சியினை படம் எடுத்து புலிகளுக்கு எதிராக மக்கள் நிக்கிறார்கள் என்று பொய்களினை எட்டப்பன் எழுதினார்.
! ?
'' .. ?
! ?.
Posts: 638
Threads: 21
Joined: Nov 2005
Reputation:
0
இறைவனுக்குத் தொண்டாற்றும் பக்தர்களுக்குப் போட்டி, பொறமை கூடாது. ஆனால் இக்கோவிலில் நிர்வாகத்தில் உள்ள சிலர்(கோவில் நாயன்மார்கள்) தங்களுக்குள் நான் பெரியவன்,பதவிப்போட்டிகள், தங்களுக்கு சார்பனவர்களுக்காக எடுக்கும் முடிவுகள் கவலைதரும் விடயங்களாக இருக்கிறது. ஆனால் நிர்வாகத்தில் உள்ள எல்லாரையும் குறைசொல்லக்கூடாது. சில நல்லவர்களும் இருக்கிறார்கள். அந்த நல்லவர்களில் ஒருவர், வன்னியில் தனது சொந்தப்பணத்தில் மிகப் பெறுமதியான வைத்திய உபகரணங்களினை வாங்கி தாயகத்துக்கு பங்களிப்புச் செய்து வருகிறார்.
வானொலி1 10வருடத்துக்கு முதல் சிட்னியில் ஆரம்பிக்கப்பட்டது. இதற்குப்போட்டியாக வானொலி2 3,4 வருடத்துக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது. இரண்டு வானொலிகளும் தாயகத்துக்கு பங்களிப்பினைச் செய்கின்றன. வானொலி2 இனைவிட கிட்டத்தட்ட வானொலி1 க்கு 5,6 மடங்கு ரசிகர்கள் சிட்னியில் உள்ளனர். வானொலி2 நிர்வாகிகள் சிலரும் கோவில் நிர்வாகத்தில் உள்ளார்கள்.
சுனாமிக்கு முன்பு முருகன் கோவில் வெள்ளிக்கிழமைப்பூசைகள் வானொலி1ல் மட்டும் நேரடி ஒலிபரப்பு வந்தன. வருடாந்த மகோற்சவ பூசைகளும் ஒலிபரப்பு செய்யப்பட்டன. சிட்னியில் உள்ள வயோதிபர்கள் வீட்டில் இருந்தே பூஜைகளினை கேட்டு முருகப்பெருமானை வழிபட்டு வந்தார்கள். சுனாமிப்பிரச்சனைக்குப்பிறகு ஏற்பட்ட சம்பவத்தின் பிறகு கோவில் நிற்வாகத்தில் உள்ள வானொலி2 நிற்வாகிகளின் நிற்பந்தத்தினாலும், நாயன்மார்களில் சிலராலும் வானொலி1 வந்த நேரடி ஓலிபரப்பு நிற்பாட்டப்பட்டு, அவ்வொலிபரப்பு வானொலி2க்கு வழங்கப்பட்டது. இதனால் பல கோவிலுக்கு செல்ல முடியாத வயோதிபர்கள் முருகப்பெருமானின் பூஜையினைக்கேட்க முடியாமல் உள்ளார்கள். தற்பொழுது நடைபெறும் திருவிழாவின் நேரடி ஓளிபரப்பினை வானொலி2ல் மட்டுமே கேட்கலாம். வானொலி2, வானொலி1னை வெறுப்பு ஊட்டுவதற்காக் 'திருவிழாவினை ஒளிபரப்புச்செய்யும் ஒரே வானொலி வானொலி2' என்று அடிக்கடி அறிவிப்பினைச் செய்கிறார்கள். வானொலி1ல் மக்கள் கோவில் நாயன்மார்களின் முறைகேடுகள் பற்றி நேயர்கள் கலந்து கொள்ளும் நேரடி ஒலிபரப்பில் சொல்வார்கள். இன்னிகழ்ச்சியில் வானொலி2 நிர்வாகத்தினைச் சேர்ந்த ஒருவர், குரலினை மாற்றிக் தகாத வார்த்தைகளினாலும் கத்திக் குழப்பங்கள் ஏற்படுத்துவார்.
! ?
'' .. ?
! ?.
Posts: 638
Threads: 21
Joined: Nov 2005
Reputation:
0
சிட்னியில் அண்மையில் சைவமகானாடு நடைபெற்றது. http://www.yarl.com/forum/viewtopic.php?t=9450 முருகன் கோவிலில் சைவமன்றம்தான் இவ்விழாவினை ஒழுங்கு செய்தார்கள். வானொலி2க்கு நேரடி ஓளிபரப்பினை வழங்கினார்கள். வானொலி1க்கு நேரடிஓளிபரபினை வழங்கவில்லை. வானொலி1ல் விளம்பரமும் செய்யவில்லை. இந்த மகானாட்டின் போது மகானாட்டு மலர் ஒன்றினை வெளியிட்டார்கள். பல அறிஞர்கள் நல்ல, நல்ல சைவக்கட்டுரைகள் எழுதினார்கள். கோவில் நிர்வாகத்தினைச்சேர்ந்த ஒருவர் எழுதிய கட்டுரையில் 'சைவசமயத்தினர் இப்பொழுது சைவம் எது என்று விளக்கமில்லாமல் மனிதர்களையும் கடவுளாக நினைத்துக்கும்பிடுகிறார்கள். அம்மனிதர்களில் சிலர் கொலை, கற்பழிப்பு வழக்கில் தண்டனை பெறுகிறார்கள்' என்று எழுதியிருந்தார். மேலும் 'தடக்குப்பட்டு விழுந்து கையினை முறித்துக் கொள்பவரையும் கடவுளாக நினைக்கிறார்கள். அவர் தன்னைப்பார்க்கவே வழியில்லை, இவரை மக்கள் கும்பிடுகிறார்கள்' என்றும் எழுத சிட்னியில் உள்ள சாய்பாபா சமித்தியில் உள்ள சிலர் கோவில் சைவமன்றத்துக்கு எதிராக விளக்கம் கேட்டனர். கோவில் திருவிழாவின் 10 நாட்களுக்கும் சிட்னித்தமிழர்கள் வாழும் பிரதேசங்கள்(suburb) பிரிக்கப்பட்டு ஒவ்வொரு திருவிழாவுக்கும் ஒவ்வொரு பிரதேசமக்கள் பணம் கொடுத்து சொந்தத்திருவிழாவாகக் கொண்டாடுவார்கள். இம்முறை இக்கட்டுரையினால் சில பாபா.பக்தர்கள் கோவில் திருவிழாவினையும், பணம் வழங்குவதினையும் புறக்கணித்தார்கள்.
! ?
'' .. ?
! ?.
Posts: 870
Threads: 22
Joined: Apr 2005
Reputation:
0
அடட உலகெலாம் உள்ள தமிழர் உணர்ந்து ஒதவேண்டிய கடவுளிற்கு உண்டியலாலையும் வானொலியாலையும் இத்தனை தொல்லையா?ஏற்கனவே ஒண்டும் வேண்டாமெண்டு கோமணத்துடன் சிட்னியின் ஆண்டியான முருகனுக்கு இத்னை சோதனையா? பாவம் தாங்க மாட்டாரய்யா தாங்க மாட்டார் <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Posts: 638
Threads: 21
Joined: Nov 2005
Reputation:
0
வானொலி1 நத்தார்தினத்தில் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தோடு சேர்ந்து தாயகத்துக்கு வருட வருடம் நிதி சேகரித்து வந்தது. நேரடி ஓளிபரப்பில் மக்கள் நன்கொடைகளினை அள்ளி அள்ளி வழங்குவார்கள். சென்ற நத்தாரின் போது வானொலி1 வழமைபோல தமிழர் புனர் வாழ்வுக்கழகத்தின் உதவியுடன் நிதி சேகரித்தது. வானொலி2, சிட்னிக் கத்தோலிக்க அமைப்போடு சேர்ந்து இதே திகதியில் வானொலி1க்குப்போட்டியாக தாயகத்துக்கு உதவ நிதி சேர்த்தது. வானொலி1, கத்தோலிக்க அமைப்பினை வேறு ஒருனால் மக்கள் குழப்பமடையமல் இருப்பதற்காக நிதி சேகரிக்குமாறு கேட்க, கத்தொலிக்க அமைப்பு ஈழத்தில் உள்ள கிழக்கு கத்தொழிக்க அமைப்பு ஒன்றுக்கு 'வானொலி1 தங்களினை நிதி சேகரிக்கத்தடையாக உள்ளது என்று கடிதம் எழுதி அனுப்பியது. அதன் பிரதியினை வானொலி1,வானொலி2, மற்றைய தமிழ் ஊடகங்களுக்கும் வழங்கியது. வானொலி2 தனது வழமையான செய்திகள் வாசிப்பதினை சிறு நிமிடங்களுக்கு பிற்போட்டுவிட்டு இப்பிரதியினை மிகமுக்கியவிடயமாகக் கருதில் கொண்டு வாசித்தது. இதனால் வானொலி1ல் மக்கள் கலந்து கொள்ளும் நேரடி ஒலிபரப்பில் பல மக்கள் வானொலி2க்கும், சிட்னி கத்தோலிக்க அமைப்பிற்கும் எதிராகக் கருத்தினைத்தெரிவித்தார்கள். மற்றைய ஊடகங்கள் இப்பிரதியினைக் கண்டுகொள்ளவில்லை.
! ?
'' .. ?
! ?.
Posts: 638
Threads: 21
Joined: Nov 2005
Reputation:
0
இனித் தூயாவும், சுண்டலும் தான் சொல்லவேண்டும்
! ?
'' .. ?
! ?.
Posts: 1,630
Threads: 108
Joined: Jun 2005
Reputation:
0
கந்தப்பு உமது தகவல்களுக்கு நன்றி,
இப்போது தான் எமக்கு செய்திகளுக்குப்பின்னால் இருக்கும் பிரச்சினை விளங்குகின்றது. நீர் கூறியவற்றை வைத்துப் பார்க்கும் போது, மதம் என்பதை வைத்து வானொலி இரண்டு, வனொலி ஒன்றை முந்தப் பார்க்கிறது என்பது.இதைச் சாட்டாக வைத்து பிரிவினயை வளர்த்து அதை தேசிய விடுதலைப் போராட்டத்திற்கும்,புலிகளுக்கும் எதிராக திருப்பி விட சிலர் முயற்சிக்கனர் என்று.
ஆகவே இங்கு போல் ,அங்கும் தமிழ் மக்கள் இந்த மத வெறிக்கு ஆளாகிவிடாமல், சுய நல நோக்கில் இயங்கும் சிலரின் நோக்காங்களுக்கு பலியாகி விடாமல் நடந்து கொள்ள வேண்டும்.இதனை புலத்தில் ஊடகங்களும் அம்பலப் படுத்த வேண்டும்.
ஒருவரின் மத நம்பிக்கை என்பது அவரது தனிப்பட்ட விடயம்.ஆனால் கோவிலில் சேரும் பணத்தை அல்லலுறும் மக்களுக்கு வழங்குவதே எந்தச் சமயத்தை பின் பற்றுபவரும் செய்ய வேண்டிய கடமை.அதை விடுத்து கோடி கோடியாக பணத்தைச் செலவழித்து கோவில் கும்பாபிசேகம் செய்வதும்,தனி நபர்கள் அந்தப் பணத்தை எடுத்து தமக்கு தேவையான செல்வாக்கை வளர்க்க அரசியற் கட்சிகளுக்கும் இன்னோரன்ன மத நிறுவனக்களுக்கும் வழங்குவது மனித நேயமற்ற செயல்கள்.
இவ்வாறு தேசியத்திற்கும் ,மனித நேயத்திற்கும் எதிராக இயங்கும் வானொலிகள்,கோவில் நிர்வாங்களிற்கு எதிராக புலத்தில் உள்ள மக்கள் ஒன்று திரண்டு போராட வேண்டும். புல ஊடகங்களும் நேர்மையாக இதனை அம்பலப் படுத்த வேண்டும்.
Posts: 1,674
Threads: 91
Joined: Jan 2005
Reputation:
0
சுனாமியின் போது நடந்த சம்பவம் ஏற்கனவே களத்தில் வந்திருந்தது..வாசித்தீர்கள் தானே?
[b][size=15]
..
Posts: 638
Threads: 21
Joined: Nov 2005
Reputation:
0
சிலர் செய்யும் பிழைகளினால் அந்த அமைப்புகள்/ நிறுவனங்களினை முற்று முழுதாகக்குறை சொல்லக்கூடாது. குறை சொல்வதினால் இவ்வமைப்புகளில் உள்ள நல்லவர்களுக்கும் கூடாத பெயர்கள் ஏற்படும். வானொலி1,வானொலி2 போட்டிகள் இருந்தாலும் இரண்டு வானொலிகளும் தாயகப்போராட்டத்திற்கு ஆதரவான வானொலிகள். இவ் வானொலிகள் பல்வேறு விதத்தில் தாயகப்போராட்டத்திற்கு சிட்னியில் பெரும் பங்களிப்புச் செய்து வருகின்றது.
சிட்னியில் மக்கள் ஒன்றுக்கூடுவதற்கு முருகன் கோவில் திருவிழா வழி வகுக்கிறது. திருவிழாவின் போது ஈழத்தில் புகழ்பெற்ற நாதஸ்வரவித்துவான்களினை அழைத்து கச்சேரிகள் வைப்பார்கள். இந்தமுறை இணுவில் சின்னராசாவின் மகனினதும்,இணுவில்,அளவெட்டி கலைஜர்களின் மேள நாதஸ்வர இசையினைக் கேட்கும்போது ஈழத்தில் இருப்பதுபோலத்தோன்றுகின்றது. இம்முறை தேர்த்திருவிழா வருகிற திங்கள் நடைபெறவுள்ளது. பலர் அன்று வேலையில் இருந்து லீவு எடுத்துக்கொண்டு முருகப்பெருமானின் ரத உற்சவத்தினைக் கண்டுகளிப்பார்கள். ஈழத்தினை விட்டு புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு இக்கோவிலுக்குச் செல்லும்போது நாதஸ்வரக்கச்சேரிகள், காவடிகள், அன்னதானம், தண்ணீர் பந்தல் போன்றவற்றினைப் பார்க்கும் போது ஈழத்தில் இருப்பது போலத் தோன்றும்.
! ?
'' .. ?
! ?.
|