Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
vdJ FWk;glk;- Muk;gk;
#1
எனது குறும்படம்
ஆனந்த கண்ணீரோடு உங்களிடம் சமர்ப்பிக்கின்றேன். உங்கள் கருத்துக்களை என்னோடு
பகிர்ந்துகொள்ளுங்கள்.
நன்றி
தம்பிதாசன்
இமெயில் அனுப்புங்கள்

rajkumar1974@hotmail.com
எனது குறும்படம் - ஆரம்பம்

http://host144.ipowerweb.com/~tusguorg/raj/movie.html
Reply
#2
ஒன்றுமே விளங்கவில்லையே....
Reply
#3
இப்போது எல்லாம் தெளிவாக தெரிகிறது.

ஆனந்தக்கண்ணீரோடு சமர்பித்த ஆரம்பம் மிக சிறப்பாக அமைந்து இருந்தது.
வாழ்த்துக்கள்....

யாதார்த்த வாழ்க்கையின் பிரதிபிம்பம்.

கூடியகெதியில் விமர்சனத்தை தங்கள் இமெயில் முகவரிக்கு அனுப்பி வைப்பேன்.
Reply
#4
வாழ்த்துக்கள் தம்பிதாசன். இணயம் மூலம் ஓரு படத்தை பார்க்கும்போது பல தடைகள் ஏற்படலாம்.. அதனால் ஒளிப்பதிவைப்பற்றி விசேடமாக குறிப்பிட்டு கூறுவது கடினம்.. எனினும் பார்க்கும்போது மனதில் பட்டவைகள்.. சில காட்சிகளில் கமரா தேவையில்லாமல் அசைகிறதோ என்று தோன்றுகிறது.. அசையும்போது கமரா தளம்புவதுபோல உள்ளது. மற்றும், ஆரம்பத்தில் ஸ்நோ மீது அந்த இளைஞர் வீழ்ந்திருப்பதுபோல வருகிறது.. முடிவில் தாக்கப்படும் இடத்தில் அப்படியான காலநிலையை காண முடியவில்லை.. சிலவேளை காரில் ஸ்நோவை நோக்கி கொண்டு செல்கிறார்களோ தெரியவில்லை. இன்னொன்று தாக்கப்படும்போது.. அவரது சத்தம் ஆரம்பத்திலிருந்து வரவில்லை.. இடையிலேயே ஒலிக்கிறது. அது சற்று யதார்த்தத்தை பாதிக்கிறது. மற்றும்படி நல்ல கரு.. நல்ல முயற்சி.. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
.
Reply
#5
குறும்படம் பற்றிய எனது பார்வை.

ஆனந்தக்கண்ணீரோடு தாங்கள் சமர்ப்பித்த ஆரம்பம் குறும்படம் சிறப்பாக அமைந்து இருந்தது.
வாழ்த்துக்கள்.

கதையினை பொருத்தமட்டில் யதார்த்த வாழ்வில் பிரதிம்பமாக பிரதிபலிக்கின்றது.

தன் காதலை தெரிவிக்கும் கதாபாத்திரத்தில் மேலும் சிறிது தன் உணர்ச்சிகளை காட்டி நடித்திருக்கலாம் போல் தெரிகிறது.

கமரா வைப் பொருத்தமட்டில் ஆரம்பக்கட்டத்தில். மேலும் சிறிது லாவகமாக கையாண்டிருக்கலாம் போல் தெரிகிறது.

ஓலிப்பதிவிலும் சற்று கவனத்தை திருப்பியிருக்கலாம் போல் தெரிகிறது.

ஆரம்பக்காட்சி இறுதிக்காட்சியில் குழப்பங்கள் இல்லை.

கதை நன்றாகவே கொண்டு செல்லப்படுகிறது.
வாழ்த்துக்கள் பல...

இவை.. இக்குறும்படம் பற்றிய என் தனிப்பட்ட கருத்து

மேலும் இப்படிப்பட்ட பல குறும்படங்களைத் தரவேண்டும் என்றும் தங்கள் சேவை வளர என் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)