Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கிழக்கு மக்களின் செருப்படி.
#1
கிழக்கின் உள்ளுராட்சி தேர்தல் - முகத்தில் அறையும் ஜதார்த்தம்
Sunday, April 02 - 07:22:26

(அறிவன்)
நடைபெற்றுமுடிந்த உள்ளுராட்சித்தேர்தலில் தமிழ்த்தேசியத்தின் எழுச்சி ஓங்கி உரைக்கப்பட்டிருக்கிறது. எத்தகைய அச்சுறுத்தல்கள், படையினரின் கெடுபிடிகள் இருந்தபோதும் தென்தமிழீழ மக்கள் தமிழ்த்தேசியத்தின் மீதான தமது பற்றுறுதியை வெளிப்படுத்தியுள்ளனர்.
மட்டு – அம்பாறை மாவட்டங்களில் இத்தேர்தலில் போட்டியிட்ட தமிழரசுக்கட்சியின் வேட்பாளர்களுக்கு கொலை அச்சுறுத்தலை விடுத்திருந்தது கருணா ஒட்டுக்குழு. இத்;தேர்தலுக்கு சிலதினங்களுக்கு முன்னர் வடக்கு கிழக்கைப்பிரிப்பது பற்றிய கூட்டம் விமல் வீரவன்ஸ தலைமையில் நடைபெற்றபோது அதாவுல்லாவின் அணியினரும், கருணாகுழுவினரும் அதில் பங்கேற்றிருந்தனர். இந்நிலையில் தலா ஒன்பது பேர் கொண்ட திருக்கோயில் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேசசபைகளில் சகல ஆசனங்களையும் வென்று சரித்திரம் படைத்துள்ளது தமிழரசுக்கட்சி. விகிதாசாரப் பிரதிநிதித்துவம் அறிமுப்படுத்தப்பட்ட பின்னர் இவ்வாறான இமாலய வெற்றியொன்றைப் பெற்றுள்ளது தமிழரசுக்கட்சி. இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டபோது ஒரு கட்சி சகல ஆசனங்களையும் கைப்பற்றுவது இனிச்சாத்தியமில்லை என்றே அரசியலமைப்பு விற்பன்னர்கள் தெரிவித்தனர். தமிழ்த்தேசிய எழுச்சிக்கு முன்னர் இந்த கணிப்புகள் உடைந்து நொருங்கின. காரைதீவிலும் மொத்தமாக உள்ள ஐந்து ஆசனங்களில் நான்கினை வென்று ஆட்சியை பொறுப்பேற்றுள்ளது இக்கட்சி.

திருமலைமாவட்டத்தில் வெருகல் பிரதேசசபையை ஏற்கெனவே போட்டியின்றிக்கைப்பற்றியது தமிழரசுக்கட்சி. இச்சபைக்கெனவேறு எந்தக்கட்சியும் போட்டியிடவில்லை. திருமலை நகரசபையில் உள்ள பன்னிரெண்டு ஆசனங்களில் 10ஆசனங்களையும், பட்டணமும் சூழலும் பிரதேசசபையில் உள்ள 9ஆசனங்களில் ஆறு ஆசனங்களையும் வென்று இந்த உள்ளுராட்சிகளைப் பொறுப்பேற்றுள்ளது இக்கட்சி. அத்துடன் கிண்ணியா, மொறவேவ, சேருவெல பிரதேசசபைகளில் தலா ஓரு ஆசனத்தையும் தம்பலகாமத்தில் இரு ஆசனங்களையும் மூதூரில் நான்கு ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளது.
<b><span style='font-size:25pt;line-height:100%'>இதன் மூலம் தமிழ்மக்களின் ஏக பிரதிநிதிகள் புலிகளே என்பது மீண்டுமொருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தத்தேர்தலின் போது அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் விடுதலைப் புலிகள் அரசியல் பணியாற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த பொதுத்தேர்தலின் போது விடுதலைப்புலிகள் மோசடிமூலமே வெற்றிபெற்றார்கள் என்ற டக்ளஸ் மற்றும் ஆனந்த சங்கரியின் வாதங்களும் </span>அடிபட்டுப்போயின.

இதில் முக்கியமாக கவனிக்கப்படவேண்டியது வேறு எந்தக்கட்சிகள் சார்பாகவும் தமிழர்கள் தெரிவாகவில்லை என்பதுதான். கவனிக்கப்படவேண்டிய இன்னொரு விடயமாக திருமலை நகரசபை விவகாரம் உள்ளது. திருமலை நகரம் தொடர்பான விடயங்கள் 1958முதல் இன்றுவரை உணர்ச்சிபூர்வமானதாகவே உள்ளது. அந்த வகையில் இத்தேர்தலில் திருமலை நகரசபையைப் பொறுத்தவரை தான் எடுத்த தீர்மானம் சரியானதுதானா? எதிர்காலத்தில் விடுதலைப்புலிகளைச் சந்திக்கும் போது தனது செயலுக்கு எவ்விதத்தில் நியாயம் கற்பிக்கப் போகிறார் மு.கா.தலைவர் ரவூவ்ஹக்கீம்? என்பன முக்கியமான வினாக்கள்.


இலங்கைத்தீவில் தாங்கள் போட்டியிட்ட சகல உள்ளுராட்சித்தேர்தல்களிலும் எதிரெதிராகப் போட்டியிட்ட ஐக்கியதேசியக்கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திரமுன்னணியும் திருமலை நகரசபையில் இணைந்தே போட்டியிட்டன. ஜனாதிபதி தேர்தல் பாராளுமன்றத் தேர்தல் போன்றவற்றிலெல்லாம் ஆட்சியைக் கைப்பபற்ற அடிபடும் இக்கட்சிகளை ஓரணியில் திரளவைத்தது எது என ஆராய்ந்தால் அதற்கான விடை தமிழர் எதிர்ப்பு என்பதாகும்.

பாராளுமன்றத்திலும் தமக்குள்ளே என்னதான் சண்டையிட்டாலும் அவசரகாலச்சட்ட நீடிப்பிலோ, பாதுகாப்பு அமைச்சுக்கான நிதிஒதுக்கீட்டிலோ இரட்டைக்குழல்துப்பாக்கி போலவே இக்கட்சிகள் செயற்படுவதுண்டு அந்த வகையில்தான் திருமலை நகரசபையில் தமிழர் எதிர்ப்பு என்ற ஒரு விடயத்தில் தமக்குள் இக்கட்சிகள் ஐக்கியப்பட்டன. இக் கூட்டினுள் இயல்பாகவே தமிழின எதிர்ப்பைக் கக்கும் வடகிழக்கு சிங்கள அமைப்பு அடங்கியதொன்றும் வியப்பல்ல.

ஆனால் இதேகூட்டினுள் முஸ்லீம் காங்கிரஸ் ஏன் இணைந்தது? நீங்கள் தமிழருக்கு சார்பானவரா? சிங்களவருக்குச் சார்பானவரா? எனக் கேட்டால் இனி ரவூப்ஹக்கீம் சிங்களவருக்கு சார்பானவரே எனத்தான் பதில் கூறமுடியும். மூன்றாம் தரப்பு என்பதெல்லாம் திருகோணமலை நகரசபை எல்லைக்குள் நின்று சொல்ல முடியாது. (இத்தேர்தலுக்குப்பிறகு தனது தனித்தரப்பு கோரிக்கையை வலியுறுத்தும் தார்மீக உரிமையை இழந்துவிட்டார் ரவூப்ஹக்கீம்.) ஐக்கிய தேசியக்கட்சிசார்பில் நால்வரும், ஐக்கிய சுதந்திரமக்கள் முன்னணி (சுதந்திரக்கட்சி) சார்பில் ஐவரும், வடக்குகிழக்கு சிங்கள அமைப்பு சார்பில் ஐவரும் கொண்ட அதே பட்டியலில்தான் முஸ்லீம் காங்கிரசின் இருவேட்பாளர்களும் அடங்கியிருந்தனர். இவ்வாறாக தமிழினத்துக்கு எதிராகச் செயற்பட்டும் முஸ்லீம் காங்கிரஸ் அங்கத்தவர்கள் எவரும் வெற்றிபெறவில்லை என்பதுதான் அவருக்குக் கிடைத்த செருப்படி.
தமிழரசுக்கட்சி சார்பிலும், ஐக்கியதேசியக்கட்சி சார்பிலும், ஐக்கியமக்கள் சுதந்திர முன்னணி சார்பிலும் தலா ஒரு முஸ்லீம்கள் தெரிவாகியுள்ளனர். ஆனால் முஸ்லீம் காங்கிரஸ் சார்பான வேட்பாளர் வெற்றிபெறவில்லை.

ஒருவிதத்தில் திருமலை நகரசபையில் ஒரு சிங்களவரும் வெற்றிபெறவில்லை. என்பது தமிழர்களுக்க இரட்டிப்பு வெற்றியே.



இன்னொருவிடயம் - தமிழரசுக்கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட திரு.வ.நவரத்தினம் தமிழர் சுயாட்சிக்கழகத்தினை ஆரம்பித்து 1970 மற்றும் 1977தேர்தலில் பேட்டியிட்டார். அச்சமயத்தில் திருமலையில் தனது கட்சிபோட்டியிடாது என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினார் திரு.வ.நவரத்தினம். தமிழர் வாக்குகளைப் பிரிப்பதற்குதான் தயாரில்லை என்றும் தனது கட்சி அங்கு போட்டியிட்டால் இனவாதிகளுக்கே அது சார்பாக முடியும் என்றும் பதிலளித்தார். அவர் ஆனால் சிங்களவர்கள் அனைவரும் தமிழின எதிர்ப்பு என்ற குடையின் கீழ் ஒன்றிணைந்து (இவர்களுடன் ரவூவ்ஹக்கீம்) போட்டியிடுகின்றார் எனத் தெரிந்தும் தமிழரின் வாக்குகளை பிரிக்கும் தனது முயற்சியை டக்ளஸ் தேவானந்தா கைவிடவில்லை. ஆயினும் வெறும் 259 வாக்குகளை மட்டுமே இவரால் பிரிக்கமுடிந்தது.


மோசடிபுரிந்தே புலிகள் இத்தேர்தலில் வெற்றிபெற்றனர். ([b]கடந்த பாராளுமன்றத் தேர்தலில்</b>) எனப் புலம்பிய டக்ளஸ் மற்றும் ஆனந்தசங்கரி ஆகியோர் இத்தேர்தல்களின் பின்னர் எதைக் கூறப்போகிறார்கள்?

மலையகத்திலும் நிலைமைகள் மாறுகின்றன. இதற்கு உதாரணம் நுவரெலியா மாநகரசபை தேர்தல் முடிவு. இ.தொ.க,- மலையக மக்கள் முன்னணி ஆதரித்தும் கூட ஐ.ம.சு.மு இரண்டு ஆசனத்தையே கைப்பற்றியுள்ளது. அந்த இருவரும் கூட சிங்களவரே. தொண்டமானினதோ சந்திரசேரனினதோ வேண்டு கோளுக்காக மலையகமக்கள் வாக்களித்திருந்தால் விருப்புவாக்குகளின் அடிப்படையில் நிச்சயம் இவ்விரு ஆசனங்களும் தமிழர்களே தெரிவாகியிருப்பர் தமது நிலைப்பாடு என்ன என்பதை மலையத்தமிழர்கள் இவ்விரு கட்சிகளுக்கும் எடுத்துக் கூறிவிட்டனர். அந்தச் செய்தியின் ஆழத்தை சம்பந்தப்பட்டவர்கள் உணரும் போது இலங்கைத்தீவில் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ்வதற்கான வழிவகைகள் பிறக்கும்.






காப்புரிமை மட்டக்களப்பு ஈழநாதம் பத்திரிகை நிறுவனத்திற்குரியது



நன்றி:எங்கள் மட்டக்களப்பு ஈழநாதம்
[b]
Reply
#2
போகப் போக இன்னும் செருப்படி விழும்
! ?
'' .. ?
! ?.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)