04-02-2006, 11:30 AM
வன்னி வந்த தமிழக திரைப்பட இயக்குநர் குறும்படத் துறையில் புதிய திருப்புமுனை
* `தமிழீழத் திரைப்படங்கள் மக்களின் வாழ்வையும்விடுதலைப் போராட்டத்தையும் பேச வேண்டும் என்பதில் தலைவர் கொண்டுள்ள கரிசனை மிகப் பெரியது...!'
* தொடர்ந்த, இடைவிடாத யுத்த சூழலில் தான் எமது சினிமா கலை பிறந்து வளர்ந்தது'
வன்னியில் இயக்குநர் மகேந்திரன் குறும்படம் ஒன்று பற்றி விளக்கமளிக்கையில்....
ஆர்.பி
" வருங்காலத்தில் வெளிநாட்டுத் திரையரங்கில் தமிழீழத்தின் திரைப்படம் பார்த்து எழுந்து நின்று கை தட்டு பவர்களில் ஒருவனாக ஒரு நாள் நானும் இருப்பேன்...."
இப்படிச் சொல்லியிருப்பவர் யாராக இருக்கமுடியும் ? தமிழகத்தின் பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன்தான் இவ்வாறு கூறியிருக்கின்றார். தமிழகத்தில் வெளியான பல தரமான, புகழ்பெற்ற திரைப்படங்களை இயக்கி, தனக்கெனத் தனியான ஒரு இடத்தைப் பெற்றிருப்பவர் மகேந்திரன். ரஜினிகாந்துக்கு புகழ்தேடிக் கொடுத்த `முள்ளும் மலரும்' மற்றும் ` உதிரிப்பூக்கள்' என்பன இவரது திறமைக்கு இரண்டு எடுத்துக்காட்டுகள். ரஜினிகாந்தை உருவாக்கியவர் கே.பாலச்சந்தர் என்று சொன்னார், ரஜினிகாந்தின் உன்னத வளர்ச்சிக்குக் காரண மாகவிருந்தவர்களில் மகேந்திரன் முக்கியமானவர் எனக்குறிப்பிடலாம்.
இவ்வளவு பிரபலமான ஒரு இயக்குநர் இதுவரையில் திரைக்கு வராத தமிழீழ திரைப்படம் பற்றி இவ்வாறு கூறியிருப்பதற்கு காரணம் தான் என்ன?
நிச்சயமாக காரணம் இருக்கின்றது. சில மாதங்களுக்கு முன்னர் வன்னி சென்ற மகேந்திரன், இங்கு விடுதலைப் புலிகளின் நிதர்சனம் பிரிவினரால் தயாரிக்கப்படும் குறும்படங்கள் மற்றும் வீடியோ கமராக்களைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட முழு நீளத் திரைப்படங்களைப் பார்வையிட்டதுடன், நிதர்சனம் குறும்படப் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு சில மாதகாலப் விசேட பயிற்சி வகுப்புகளையும் நடத்திய பின்னர் திரும்பியிருக்கின்றார். இதற்கும் மேலாக கிளிநொச்சிலுள்ள ஆதவன் திரைப்படக் கல்லூரிக்காக `நடிப்பு என்பது.. என்ற தலைப்பில் நூல் ஒன்றையும் எழுதிக் கொடுத்துச் சென்றுள்ளார். நடிப்புத்துறைக்கு வருவோருக்கான சிறந்ததொரு கைநூலாக இதுவே உள்ளது.
இந்த நூலை எழுதியமைக்கான காரணத்தை மகேந்திரன் பின்வருமாறு விளக்குகின்றார்.
" ஒவ்வொரு மனிதனும் ஒரு புதிர் முகத்தோடு, வேறு வேறு விசித்திரமான கதாபாத்திரங்களாக உலவிவரும் மண்ணைச் சார்ந்தவர்களுக்கு நடிப்புப்பற்றி அதிகமாகத் தெரிந்திருக்கலாம். ஆனால், எல்லோரும் ஓர் முகம், எல்லோரும் ஓர் குணம் என்றிருப்பவர்களுக்குத் திரையில் பொய் முகம் காட்டி நடிக்க முடியுமா?
இப்படித்தான் தமிழீழம் வருமுன் எல்லோரும் நினைப்பார்கள். நானும் அப்படியே. இங்கே வந்த பிறகு இங்குள்ள கலைஞர்கள் யாவரும் நுண் கலைகள் அனைத்திலும் வல்லவர்களாகத் நிகழ்ந்திடக் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கின்றார்கள் என்பதையறிந்து வியப்படைந்தேன்.
எதனையும் முழு ஈடுபாட்டுடன், ஒழுக்கத்துடன் கற்றுக் கொள்ளும் வேகமும் விவேகமும் இங்குள்ள கலைஞர்களிடம் பொதிந்துள்ளது. ` நல்ல கலைஞர்கள் பெரும்பாலும் குடத்திலிட்ட விளக்காய் இருப்பார்கள். நாம் அந்த விளக்கை எடுத்து வெளியில் வைத்தால் போதும். அது தானாகச் சுடர்விட்டு எரியும்' இவ்வாறு பெருமைக்குரிய எம்.ஜி.ஆர். கூறுவார். இங்கே அப்படிப்பட்ட விளக்குகளை வெளியிலெடுத்து வைத்து, அவற்றை பிரகாசமாய் எரியவரும் உன்னதமான கலைப்பணி முழுவீச்சில் நடைபெறுகின்றது. இது தான் உயர்வான தொலைநோக்குப் பார்வை. இங்கு என்னைச் சுற்றியுள்ளவர்களின் உற்சாகம் என்னைத் தொற்றிக் கொண்டபோது, அவர்களுக்காக எழுத ஆசைப்பட்டேன்."
இவ்வாறு தான் ` நடிப்பு என்பது...' என்ற நூலை எழுதியமைக்கான காரணத்தை விளக்கும் மகேந்திரன், மற்றொரு முக்கிய விடயத்தையும் இவ்வாறு குறிப்பிடுகின்றார்.
"... பொய்யாக வாழத் தெரியாத மக்கள். பொய் முகத்தோடு நடந்து கொள்ளத் தெரியாத மக்கள். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத்தெரியாத மக்கள், திரைபடங்களில் பொய் முகத்தைக்காட்டி நடிப்பது எங்கணம் சாத்தியமாகும்?
இந்த என்னுடைய தொடக்க நிலைச் சந்தேகம் பின்னர் கலைந்து போய்விட்டது. அவர்களால் எதனையும் சாதிக்க முடியும் என்பதை உணர்ந்தேன்."
இவ்வாறு குறிப்பிடும் அவர் அதன் காரணமாகவே `.. வருங்காலத்தில் வெளிநாட்டுத் திரையரங்கில் தமிழீழத்தின் திரைப்படம் பார்த்து எழுந்து நின்று கைதட்டுபவர்களில் ஒருவனாக நானும் இருப்பேன்" என்ற எதிர்பார்ப்பை நம்பிக்கையை வெளியிடுகின்றார்!
அது சரி, அப்படிச் சொல்லக் கூடியளவுக்கு திரைப்படத்துறையில் இவர்கள் எதனைத்தான் சாதித்துள்ளார்கள்?
விடுதலைப் புலிகள் அமைப்பின் ` நிதர்சனம்' மூன்று பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது என்பதை நாம் கடந்த வாரத்தில் பார்த்தோம், ஒன்று, அவர்களது தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி. அது தொடர்பான விபரங்களைக் கடந்தவாரத்தில் பார்த்தேம். இரண்டாவது, நிதர்சனத்தின் கீழ் வருகின்ற திரைப்படப் பிரிவு. இந்தப் பிரிவினர் ` சினிமா' என்ற ஊடகம் மக்கள் மத்தியில் கருத்துகளைச் கொண்டு செல்வதில் பெறக் கூடிய முக்கியத்துவத்தைச் சரியான முறையில் இனங்கண்டு அதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றது. மூன்றாவது - விடுதலைப் புலிகளின் இறுவட்டுக்களை வெளியிடும் தர்மேந்திரா கலையகம். பாடல்களை உள்ளடக்கிய இறுவட்டுக்கள் இந்தப் பிரிவினராலேயே வெளியிடப்படுகின்றன. இந்த மூன்றும் தான் நிதர்சனத்தின் பிரதான பணியாக இருக்கின்றது எனக் கூறுகின்றார் அதன் பொறுப்பாளர் சேரலாதன்.
நிதர்சனம் இவ்வருடம் 20 ஆவது ஆண்டில் காலடி வைத்துள்ளது. இதனை முன்னிட்டு முழு அளவிலான திரைப்படம் ஒன்றைத் தயாரிக்கும் முயற்சியிலும் விடுதலைப் புலிகள் இறங்கியுள்ளனர். நிதர்சனத்தின் திரைப்படத்துறை குறும்படங்களிலிருந்தே வளர்ச்சியடைத் தொடங்கியது.
` நிதர்சனம்' பிரிவினரால் இதுவரைகாலமும் சுமார் 65 க்கு மேற்பட்ட குறும்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. "அதிலும் குறிப்பாக தமிழக இயக்குநர் மகேந்திரன் வந்து இங்கு பயிற்சி வகுப்புக்கள் பயிற்சிப்பட்டறைகளை நடத்திய பின்னர் குறும்படத்துறையின் வளர்ச்சி என்பது பிரமாதமானதாகவும் சிறப்பானதாகவும் இருக்கின்றது" என நிதர்சனம் பொறுப்பாளர் சேரலாதன் கடந்த வாரம் எம்மிடம் கூறினார்.
"அதேபோல தொழில்நுட்ப ரீதியிலும், பிரதிகளைத் தயாரிப்பதிலும் மட்டுமன்றி குறும்படத்துறையில் பல்வேறு விடயங்களும் பல முன்னேற்றங்களை மகேந்திரனுடைய வருகைக்குப் பின்னர் தான் காணக்கூடியதாகவிருந்தது" எனவும் கூறும் சேரலாதன், குறும்பட உருவாக்கத்தில் மாமனிதர் ஞானரதனுடைய பங்களிப்பையும் முக்கியமாககக் குறிப்பிடத் தவறிவில்லை. " தமிழீழ குறும்படத்துறையை நோக்கும் போது அதற்குரிய தோற்றுவாயாக இருக்கக் கூடியவர் மாமனிதர் ஞானரதன் தான் என நிச்சயமாகச் சொல்லலாம்" எனக் குறிப்பிடுகின்றார் சேரலாதன் . " அவருடைய வழிகாட்டலின் பயனாகவும், இப்போது இயக்குநர் மகேந்திரனுடைய பயிற்சித்திட்டங்களினுடாகவும் உலகத்தரம் வாய்ந்த குறும்படங்களின் வரிசைக்கு எங்களுடைய குறுப்படங்கள் உயர்ந்துள்ளன" என்கின்றார் சேரலாதன்.
2006 ஆம் ஆண்டுக்கான குறும்படப் போட்டிக்கு நிதர்சனத்தால் தயாரிக்கப்பட்ட மூன்று குறும்படங்கள் அனுப்பப்பட்டுள்ளன என்ற தகவலையும் அறிந்துகொள்ள முடிந்தது. சுவிட்சர்லாந்து, லண்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ள குறும்பட விழாக்களுக்கே இவை அனுப்பப்பட்டுள்ளன. நிதர்சனம் பிரிவினரால் தயாரிக்கப்படும் குறும்படங்கள் பெரும்பாலும் 15 நிமிடத்திலிருந்து 30 நிமிடத்துக்கு உட்பட்ட வையாகவே உள்ளன.
தமிழீழ தேசியத் தொலைக்காட்சியில் வாராந்தம் குறும்படங்கள் ஒளிபரப்பப்படும் அதேவேளையில், நிதர்சனம் தயாரித்த குறும்படங்களுக்கு புலம்பெயர்ந்த மக்கள் மத்தியிலும் பெருமளவு வரவேற்புள்ளதைக் காணமுடியும்.
குறும்படங்கள் என்பதற்கப்பால், முழு அளவிலான வீடியோ படங்கள் சிலவும் வன்னி மண்ணில் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால், இவை வீடியோ கமராக்களைக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படங்களாகவே உள்ளன. " தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கலையூடகப் பலம் பெறவைப்பதிலும் தமிழீழ மக்களின் வாழ்வைப் பேசுவதிலும், தமிழில் நல்ல சினிமாவை உருவாக்க வேண்டுமென்ற நோக்கில் தமிழீழத்தின் சினிமா முயற்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன" எனக் கூறும் ஆதவன் திரைப்படக் கல்லூரியைச் சேர்ந்த சி. சேரன் குறிப்பிட்டுள்ள சில விடயங்கள் கவனத்துக்குரியவை.
"... தரமான சினிமாவை உருவாக்க வேண்டுமென்ற கனவும் ஆர்வமும் முயற்சிகளும் இருக்கின்றனவே தவிர, அதற்கான போதிய வசதிகள் இல்லை. சினிமா துறையில் அறிவும், அனுபவமும் தேர்ச்சியும் எங்களுக்கில்லை. ஆனால், தமிழீழத்தில் கடந்த பதினைந்து ஆண்டுகளாகத் தொடர்ந்த சினிமா முயற்சிகள் நிதானமான வளர்ச்சியை நோக்கியதாக இருக்கின்றது. இது மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் தருகின்றது. முழு நீளத் திரைப்படங்களாகவும் குறும்படங்களாகவும் நிறையப் படங்கள் கடந்த பதினைந்தாண்டுகளில் உருவாகியுள்ளன. பலர் இத்துறையில் ஆர்வத்தோடும் முழுமையாகவும் ஈடுபடத் தொடங்கியுள்ளார்கள். தொடர்ந்த இடைவிடாத யுத்தச் சூழலில்தான் எமது சினிமா கலை பிறந்து வளர்ந்தது என்பதைக் கவனிக்கவேண்டும். இதற்கெல்லாம் காரணம் தேசியத் தலைவர் வே.பிரபாகரனுடைய இத்துறை மீதான அக்கறையே...."
இவ்வாறு குறிப்பிடும் சேரன், " தமிழீழத் திரைப்படங்கள் மக்களின் வாழ்வையும் , எமது விடுதலைப் போராட்டத்தையும் பேசவேண்டும் என்பதில் அவர் கொண்டுள்ள கரிசனை மிகப்பெரியதும் அத்துடன் தமிழீழத்தின் சினிமாவை உலகத் தரத்துக்கு நிகராக உயர்த்த வேண்டும் என்ற அவரது உயர்ந்த நோக்கும் எமது திரைப்படத் துறையின் வளர்ச்சிக்குக் காரணமாகியது" எனவும் சுட்டிக்காட்டுகின்றார்.
இவ்வகையில் திரைப்படத்துறை வளர்ச்சியின் ஒரு முக்கிய கட்டத்தை 20 வருடங்களைப் பூர்த்தி செய்துள்ள நிதிர்சனம் இப்போது தாண்டப்போகின்றது, அவர்களால் சுமார் ஐந்து கோடி ரூபா செலவிலான பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் முழு அளவிலான திரைப்படம் ஒரு முக்கிய மைல் கல்லாக அமையும் என்பது நிச்சயம். இதுவரையில் வீடியோ கமராக்களைப் பயன்படுத்தியே குறும்படங்களையும், முழு நீளத் திரைப்படங்களையும் தயாரித்த நிதர்சனம் பிரிவினர் இப்போது திரைப்படத்துக்கான அதி நவீன கமராவைப் பயன்படுத்தி இந்தத் திரைப்படத்தைத் தயாரிக்கின்றார்கள்! இதற்காக இவர்கள் பயன்படுத்தும் கமரா அதி நவீனமானதாகும், தெற்காசியாவிலேயே இவ்வாறான இரண்டு கமராக்கள் மட்டுமேயுள்ளன.
முழுக்கமுழுக்க வன்னியிலேயே தயாரிக்கப்படும் இப்படத்தின் தொடக்கவிழாவில் தமிழகத்தின், புகழ்பெற்ற தமிழ்த் தேசியத்தில் பற்றுக்கொண்ட இயக்குநர் ஒருவர் கலந்து கொண்டார். மற்றொரு இளம் இயக்குநர்தான் இதனை இயக்குகின்றார். கதாநாயகன், கதாநாயகியாக நடிப்பவர்களும் தமிழகத்திலிருந்து தான் வந்துள்ளார்கள்.
அவர்கள் யார் ? அங்கு தயாராகும் திரைப்படத்தின் கதை என்ன என்ற விபரங்களுடன் அடுத்த ஞாயிறு.......

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->