Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மத அவமதிப்பா? கருத்து சுதந்திரமா?
#1
நபிகள் நாயகம் குறித்த கேலிச் சித்திரங்கள் மத அவமதிப்பா? கருத்து சுதந்திரமா?

<b>* டென்மார்க்கில் நிலவும் உணர்வுகள் குறித்த ஓர் நேரடி அலசல்</b>

<img src='http://www.thinakural.com/New%20web%20site/web/2006/April/02/d.gif' border='0' alt='user posted image'>

கேலிச் சித்திரம் வெளிவந்த பத்திரிகை பிரதி

கோபன்ஹேகனிலிருந்து ந.சிவேந்திரன்

டென்மார்க்கின் நாளிதழான `ஜூலண்ட் போஸ்ட்' வெளியிட்ட முகமது நபி குறித்த கேலிச் சித்திரங்கள் உலகளாவிய ரீதியில் பெரும் சர்ச்சைக்கு வழிவகுத்திருந்தன.

பத்திரிகைச் சுதந்திரத்திற்கு எல்லை உண்டா? அப்படியானால், எதை எல்லையாகக் கொள்வது? மத அவதூறு என்பதற்கான வரையறைகள் என்ன? ஒரு மதத்தின் சுயகட்டுப்பாடுகளை அம்மதத்தை அவதூறு செய்யாதவிடத்தும் அம்மதம் சாராத ஏனைய மக்கள் கடைப் பிடிக்க வேண்டுமா? அது அவர்களை கட்டுப்படுத்துமா? என்பது போன்ற பல்வேறு கேள்விகளையும் இந்த கேலிச்சித்திர சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

கேலிச்சித்திரங்கள் தொடர்பில் டென்மார்க் மக்கள் சமூக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் வேறுபட்ட கருத்துகளை உடையவர்களாக இருப்பதை டென்மார்க்கில் இருந்த காலப் பகுதியில் உணரக் கூடியதாக இருந்தது.

53 இலட்சம் மக்கள் தொகையை மட்டுமே கொண்டதும் இலங்கையின் பரப்பளவின் முக்கால் பங்கைவிடவும் (43,000 சதுரகிலோமீற்றர்) சிறியதும் உலகின் செல்வந்த நாடுகளின் பட்டியலிலுள்ளதுமான டென்மார்க், சர்வதேச உறவுகளைப் பேணுவதற்கு தனது வருமானத்தில் கணிசமான ஒரு பகுதியை செலவிடுகின்றது.

இவ்வாறான ஒரு நிலையில் கேலிச்சித்திரங்கள் கிளப்பிய சர்ச்சை இஸ்லாமிய நாடுகளுடனான அதன் உறவில் விரிசல்களை ஏற்படுத்தியுள்ளமை டேனிஷ்காரர்களை சற்று அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளமை தெளிவாகத் தெரிந்தது. ஆயினும், மிகப்பெரும்பாலான டேனிஷ்காரர்கள் கார்ட்டூன்களை பத்திரிகை வெளியிட்டதை ஒரு குற்றமாகக் கருதவில்லை.

டென்மார்க்கின் அரசியல் கட்சிகள் கூட, இது தொடர்பில் கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருந்த போதிலும் பத்திரிகைச்சுதந்திரத்தின் படியும் அந்நாட்டு சட்டதிட்டங்களின்படியும் அப்பத்திரிகை முகமது நபி குறித்து கேலிச்சித்திரங்கள் வெளியிட்டதில் தவறில்லை என்று கருதுகின்றன.

டென்மார்க்கில் பேச்சுச் சுதந்திரம் புனிதமானதாகும். எங்களின் கருத்துப்படி ஜூலண்ட் போஸ்ட் கேலிச்சித்திரங்களை வெளியிட்டது சட்ட பூர்வமானதாகும் என்ற கன்சர்வேட்டிவ் கட்சியின் அரசியல் ஆலோசகர் பிராங் கோஸ்கோம், ஆயினும் பேச்சுச் சுதந்திரம் பொறுப்புணர்வைக் கொண்டிருக்க வேண்டும் என்றார்.

டென்மார்க்கில் குடியேற்றவாசிகளுக்கு எதிராக கடும் நிலைப் பாட்டைக் கொண்ட தேசியவாதக் கட்சியான டேனிஷ் மக்கள் கட்சி கேலிச்சித்திரங்களை தீவிரமாக ஆதரிக்கின்றது.

"சவுதி அரேபியாவிலோ அல்லது பாகிஸ்தானிலோ என்ன செய்ய வேண்டும் என்று நாம் கூறுவது கிடையாது. அங்கு சென்றால் நாம் அந்நாட்டு சட்டதிட்டங்களை ஏற்றே செல்ல முடியும். அவ்வாறே எங்கள் நாட்டில் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று ஏனையவர்கள் கூறமுடியாது. எமது நாட்டில் பேச்சுச்சுதந்திரம் மிக அடிப்படையான விடயமாகும். அதனை இஸ்லாமிய அடிப்படைவாதம் அச்சுறுத்துவதற்கு இடமளிக்க முடியாது" என்றார் டேனிஷ் மக்கள் கட்சியின் ஊடக பேச்சாளர் சோரன் சொண் டகார்.

முகமது நபியை வரையக் கூடாது என்ற விதிமுறை முஸ்லிம்களுக்கு மட்டுமே பொருந்தும். அது ஏனையவர்களை கட்டுப்படுத்தாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

கேலிச்சித்திரங்கள் அவமரியாதை செய்பவை என்றும் மத அவதூறானவை என்றும் அதன் எதிர்ப்பாளர்கள் விமர்சிக்கின்றனர். ஆனால், அதற்கு எவ்வாறு பதிலளித்திருக்க வேண்டும் என்பதில் அவர்களுக்குள் வேறுபாடு காணப்படுகின்றது.

<img src='http://www.thinakural.com/New%20web%20site/web/2006/April/02/den.gif' border='0' alt='user posted image'>

டென்மார்க் கன்சர்வேட்டிவ் கட்சியின் அரசியல் ஆலோசகர் பிராங்கோஸ்கோம்

கேலிச்சித்திரங்களையும் அவற்றுடன் இணைந்து வேறுபடங்களையும் மத்திய கிழக்கிற்கு எடுத்துச் சென்று பிரச்சினையை பெரிது படுதியதாக குற்றம் சாட்டப்படும் இஸ்லாமியமத குருக்களுள் ஒருவரும், டேனிஷ்காரர்களால் பரவலாக "இரட்டை நாக்கு" உடையவர் என்று விமர்சிக்கப்படுபவருமான அபுலபான்,

கருத்துச் சுதந்திரம் உள்ளதென்பதற்காக மதங்களை அவதூறு செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. மற்றவர்களை மதிக்கும் அடிப்படை நாகரிகத்தை ஜூலண்ட் போஸ்ட் பின்பற்றவில்லை என்று குற்றம் சாட்டியதுடன் அரசாங்கம் இது தொடர்பில் அக்கறையீனமாக நடந்து கொண்டதாக சாடுகின்றார்.

கேலிச்சித்திரங்களை விமர்சிக்கும் சோமாலிய சமூக அமைப்பொன்றின் தலைவரான அப்டிசம் மே-ஏ. டவ்வயே, அப்பிரச்சனை உள்நாட்டிலேயே தீர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்று கருதுகின்றார்.

கேலிச்சித்திரங்கள் முஸ்லிம்களின் மனதை புண்படுத்துபவை. அவ்வாறு வெளியிட்டமை தவறானது, அவற்றை உள்நாட்டிலேயே தீர்த்திருக்க முடியும். முஸ்லிம் மதகுருக்கள் அவற்றை வெளிநாடுகளுக்கு எடுத்துச் சென்றது பிழையானதாகும் என்றார் அப்டிசம்மே. அவ்வாறு செய்ததன் மூலம் அவர்கள் பிரச்சனையை அதிகரித்து விட்டார்கள். அவர்களின் செயல் முஸ்லிம்களை அடிப்படைவாதிகளாகவும் இஸ்லாத்தை அடிப்படைவாத மதமாகவும் உலகத்திற்கு காட்ட முனைபவர்களுக்கே சாதகமானதாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

<img src='http://www.thinakural.com/New%20web%20site/web/2006/April/02/denma.gif' border='0' alt='user posted image'>
சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மதகுரு அபுலபான்

அரசியல் மட்டங்களை தவிர பொதுமக்கள் மத்தியில் இது தொடர்பில் வேறுபட்ட கருத்துகள் காணப்படுகின்றன.

பேச்சுச்சுதந்திரம் முக்கியமான விடயம். ஆனால், அது பொறுப்புணர்வை கொண்டிருக்கவேண்டும். ஜூலண்ட் போஸ்ட் இந்த விடயத்தில் பொறுப்புணர்வுடன் செயற்படவில்லை என்கிறார் ஊடகவியல் ஆலோசனை மற்றும் பயிற்சி நிறுவனமான டானிக்கொம்மின் பணிப்பாளர்களில் ஒருவரான பியர் ஒஸ்டெலண்ட்.

இக்கருத்தையே பல்வேறு நாடுகளில் பணிபுரிந்தவரும் அதே நிறுவனத்தின் மற்றுமொரு பணிப்பாளருமான நீனா வேன்பேர்க்கும் தெரிவிக்கின்றார்.

"ஊடக சுதந்திரம் என்பது பொறுப்புணர்வையும் கொண்டதாகும்" என்றார் நீனா. கேலிச்சித்திரங்களை வெளியிட்டமை மட்டரகமான ரசனையை காட்டுவதாக குடியேற்றவாசிகளுக்கு டேனிஷ் மொழி கற்பிக்கும் 62 வயதான டேனிஷ் பெண்மணி ஒருவர் கூறினார். அவர் தனது பெயரை குறிப்பிட விரும்பவில்லை.


<img src='http://www.thinakural.com/New%20web%20site/web/2006/April/02/denmark-.gif' border='0' alt='user posted image'>

டேனிஷ் மக்கள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் சோரன் சொண்டகார்

"இவ்விடயம் குறித்து கருத்துத் தெரிவிப்பது சற்று சிரமமான விடயமாகும். கேலிச்சித்திரங்கள் வெளியிட்டமை மட்டரகமான ரசனை (Bad taste) யாகும். அவர்கள் இவ்வாறு செய்திருக்கக் கூடாது. மறுபுறமாக, ஜனநாயகத்தில் உறுதியான நம்பிக்கை கொண்ட நாடு டென்மார்க் ஆகும். அதற்கு பேச்சுச் சுதந்திரமே அடிப்படையானதாகும். எங்கள் நாட்டு சட்டங்களின்படி அரசாங்கத்தால் ஊடகங்களை எதுவும் செய்ய முடியாது" என்றார் அந்த ஆசிரியை.

இது குறித்து முஸ்லிம் நாடுகள் சிலவற்றில் நடைபெற்ற வன்முறைகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர்,
"அந்த நாடுகளில் மக்களின் விருப்பத்திற்கு மாறான சர்வாதிகார ஆட்சிகள் நடைபெறுகின்றன. ஆட்சியாளர்களுக்கு எதிரான கோபத்தினை இவ்வாறு வேறு பிரச்சினைகளினூடாக மக்கள் வெளிப்படுத்துகின்றார்கள்" என்றார்.

கேலிச்சித்திரங்கள் குறித்து சாதாரண முஸ்லிம் வெறுப்படைந்திருந்தாலும் இப்பிரச்சினையை பெரிதாக்குவதை விரும்பவில்லை. துருக்கி, ஈராக், பலஸ்தீனம், ஈரான், சோமாலியா, பாகிஸ்தான் போன்ற பல்வேறு முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த குடியேற்றவாசிகள் டென்மார்க்கில் வசித்து வருகின்றனர்.

கேலிச்சித்திரங்கள் தவறானவை. ஆனால், அவற்றை வைத்து பிரச்சினையை பெரிதாக்கிக் கொண்டு செல்வது இங்குள்ள எம்மைப் போன்ற சிறுபான்மை சமூகத்திற்கு உகந்ததல்ல. செப்டெம்பர் 11 இற்குப் பின்னர் ஐரோப்பிய நாடுகளில் முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வு வேகமாக வளர்ந்து வருகின்றது. இவ்வாறான சம்பவங்கள் அதை அதிகரித்துவிடும் என்று அச்சமாக உள்ளது என்றார் கோபன் ஹேக்கினில் பல்பொருள் அங்காடியொன் றை வைத்திருக்கும் ஈராக்கியரான அப்துல் சதாத் (48).

கேலிச்சித்திரங்கள் மோசமான ஒரு விடயமாகும். பேச்சுச்சுதந்திரம் ஏனைய மதங்களை அவமரியாதை செய்வதை உள்ளடக்கவில்லை என்கிறார் துருக்கிய வம்சாவளியைச் சேர்ந்த 17 வயது உயர்தர மாணவனான செம் வார்தார்.

பல்கலைக்கழகமொன்றில் கல்வி பயிலும் டேனிஷ் மாணவரான மோசஸ் சற்று மாறு பட்ட கருத்தைத் தெரிவித்தார்.

"பூமியைச் சூரியன் சுற்றி வரவில்லை சூரியனை பூமி சுற்றி வருகின்றதென்றும் பூமி தட்டை வடிவமானதல்ல பூமி உருண்டையானதென்றும் விஞ்ஞானிகள் ஆராய்ந்து தெரிவித்தபொழுது கிறிஸ்தவ திருச்சபை அவர்களை துன்புறுத்தியது. சிலர் கொல்லப்பட்டனர். ஆயினும், அன்று பரவலாக சரியென்று நம்பப்பட்ட இவ்வாறான மத கருத்துகளுக்கு எதிராக துணிந்து விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித்தபடியால்தான் மனித குலம் இன்று இந்த அளவிற்கு முன்னேறியுள்ளது. அன்று அக் கருத்துகள் மதத்திற்கு அவதூறானவை எனக் கருதி தெரிவிக்கப்படாமல் விடப்பட்டிருந்தால் நாம் இந்த முன்னேற்றத்தை கண்டிருக்கமாட்டோம். எனவே, மதங்களை விமர்சிக்கும் உரிமை அனைவருக்கும் குறிப்பாக' ஊடகங்களுக்கு முக்கியமானதாகும் என்றார் அவர்.

இது குறித்து கருத்துத் தெரிவித்த மருத்துவ பீடத்தில் கல்வி பயிலும் 20 வயதான தமிழ் மாணவி ஆரபி,

"பத்திரிகைச் சுதந்திரம் முக்கியமானது. ஆயினும், பிரச்சினைகளை தீர்ப்பதில்தான் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும். தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்குவதற்கு அந்தச் சுதந்திரத்தை பயன்படுத்தக் கூடாது. சர்ச்சையென்றால் உலக சமூகத்திற்கு ஏதாவது நன்மை விளையுமாயின், அதனை சரியென்று ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், இதில் அவ்வாறான நன்மை எதுவும் விளைவாகவில்லை முரண்பாடுகளும் பகைமையுணர்வுமே அதிகரித்துள்ளன. ஆயினும். இந்த சம்பவத்திற்கு முஸ்லிம் நாடுகளில் வன்முறையான பிரதிபலிப்பு காட்டப்பட்டது மிகவும் தவறான விடயமாகும்" என்றார்.

எது எவ்வாறு இருப்பினும் இந்தச் சர்ச்சை ஊடகத்துறை வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு இடத்தைப் பிடித்துவிட்டது.


[b]கேலிச் சித்திர சர்ச்சை வளர்ந்து வந்த கதை

* 30 செப்டெம்பர் 2005 :- முகமது நபி குறித்த 12 கேலிச் சித்திரங்களை ஜூலண்ட் போஸ்ட் வெளியிடுகின்றது.

* 9 ஒக்டோபர் 2005:- டென்மார்க்கின் இஸ்லாமிய நம்பிக்கை சமூகம் என்கின்ற அமைப்பின் பேச்சாளர் ஜூலண்ட் போஸ்ட் மன்னிப்புக்கோர வேண்டும் என்று வலியுறுத்துகின்றார்.

* 14 ஒக்டோபர் 2005:- கோபன் ஹேகனில் முஸ்லிம் அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றன.

* 19 ஒக்டோபர் 2005 :- பதினொரு முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த இராஜதந்திரிகள் கேலிச் சித்திரங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக டென்மார்க் பிரதமர் அன்டோர்ஸ் -ஃபோக் ராஸ்முஸ்ஸனைச் சந்திக்க விரும்புகின்றனர். "எங்களது ஜனநாயகம் செயற்படுவது இவ்வாறல்ல" என்று கூறி ராஸ்முஸ்ஸன் அவர்களை சந்திக்க மறுக்கின்றார்.

* நவம்பர் - டிசம்பர் 2005:- டென்மார்க் முஸ்லிம் மதகுருக்கள் குழுவொன்று மத்திய கிழக்கிற்கு சென்று அங்குள்ள மதத் தலைவர்களை சந்திக்கின்றது. அவர்கள் ஜூலண்ட் போஸ்ட் வெளியிட்ட 12 கேலிச் சித்திரங்களுடன் வேறு சில படங்களையும் இணைத்து அங்கு வெளிப்படுத்துகின்றனர்.சர்ச்சை அதிகரித்து வந்த பொழுதில் இவ்வாண்டு 50 இற்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த பத்திரிகைகள் கேலிச் சித்திரங்கள் அனைத்தையுமோ அல்லது சிலவற்றையோ மீள் பிரசுரம் செய்தன.

சர்ச்சை வலுவடைந்த பொழுது மன்னிப்புக் கோருமாறு டென்மார்க் பிரதமர் கேட்கப்பட்டார். இந்த வேண்டுகோளை நிராகரித்த ராஸ்முஸ்ஸன் டென்மார்க் நாளிதழ் ஒன்றிற்காக அரசாங்கம் மன்னிப்புக் கேட்க முடியாது என்று தெரிவித்தார்.

இதன் விளைவாக லிபியாவும் சவுதி அரேபியாவும் டென்மார்க்கிலுள்ள தமது தூதுவர்களை திருப்பி அழைத்துக் கொண்டன. டேனிஷ் பொருட்களை பகிஷ்கரிக்கும் செயற்பாடு பல முஸ்லிம் நாடுகளில் முன்னெடுக்கப்பட்டது. சிரியாவிலும் லெபனானிலும் டென்மார்க் தூதரகங்கள் தாக்கப்பட்டன.

பிரச்சினையைத் தணிக்கும் பொருட்டு ராஸ்முஸ்ஸன் அல் அராபியா தொலைக்காட்சியில் தோன்றி கேலிச் சித்திரங்களால் ஏற்பட்ட தாக்கத்திற்காக வருத்தம் தெரிவித்தார்.

டேனிஷ் சட்டங்களின் படி ஊடகங்கள் குறித்து தனக்கு எந்தவிதமான அதிகாரங்களும் இல்லை என்று விளக்கமளித்த அவர், பல தடவைகள் தான் பேச்சுச் சுதந்திரத்திற்கு ஆதரவாளித்துள்ளதாகவும், ஆனால் கேலிச்சித்திரங்களின் தகவலை தான் ஏற்றுக் கொள்ள வில்லை என்று குறிப்பிட்டார்.

சர்ச்சை தற்பொழுது தீவிரம் குறைவடைந்துள்ள போதிலும் ஊடகத்துறையின் செயற்பாடு குறித்த ஆழமான கேள்வியை எழுப்பியுள்ளதுடன் இது டென்மார்க் சமூகங்களிடையே உள்ள பிளவுகளையும் சுட்டிக்காட்டியுள்ளது.

[b]ஜுலண்ட் போஸ்டின் வாதங்கள்...

முகமது நபி குறித்த 12 கேலிச் சித்திரங்களை பிரசுரித்த டேனிஷ் மொழி நாளிதழான "ஜூலண்ட் போஸ்ட்" இன்று உலக பிரசித்தி பெற்ற ஊடகங்களில் ஒன்றாகி விட்டது. "காலைச் செயதித்தாள் ஜூலண்ட் போஸ்ட்" என்று பொருள்படும்.`Morgenavisen Jyllands Posten" என்ற இந்த டேனிஷ் நாளிதழ் டென்மார்க்கில் அதிகம் விற்பனையாகும் (150,000 பிரதிகள்) பத்திரிகையாகும்.

கேலிச் சித்திரங்களை பிரசுரித்து உலகளாவிய ரீதியில் சர்ச்சையை கிளப்பிய ஜூலண்ட் போஸ்ட் சர்ச்சை வலுவடைந்ததைத் தொடர்ந்து முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டதற்காக வருத்தம் தெரிவித்தது.ஆனால் கேலிச் சித்திரங்களை வெளியிடுவதற்கான தனது உரிமையை தொடர்ந்து வலியுறுத்தியுள்ளது. டென்மார்க் பத்திரிகைகள் எதைப் பிரசுரிக்க வேண்டும் என்று இஸ்லாமிய அடிப்படைவாதம் உத்தரவிட முடியாது என்று அப்பத்திரிகை தெரிவிக்கின்றது.

முகமது நபி குறித்த சிறுவர் புத்தகமொன்றை எழுதிய டென்மார்க் எழுத்தாளர் காரே புளுட்சென் அதற்கு சித்திரங்கள் வரைவதற்கு ஓவியரைத் தேடுவதில் கடும் சிரமத்தை எதிர்கொண்டதைத் தொடர்ந்தே இவ்வாறான கேலிச் சித்திரங்களை வெளியிடும் எண்ணம் ஏற்பட்டதாக ஜூலண்ட் போஸ்ட் பத்திரிகை தெரிவித்தது.

முகமது நபியின் உருவத்தை வரைவதை தடுக்கும் இஸ்லாமிய கோட்பாடு முஸ்லிம்களை மட்டும் கட்டுப்படுத்துமே தவிர ஏனையவர்களை கட்டுப்படுத்தாது என்ற நிலையை தாம் எடுத்ததாக அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.

"இஸ்லாம் தொடர்பில் எப்படி சுய தணிக்கை மேற்கொள்ளப்படுகின்றது என்பதை துல்லியமாக கண்டறியவே கேலிச் சித்திரங்களை வரைந்து தருமாறு தாம் கேலிச் சித்திரம் வரைபவர்களை கேட்டுக் கொண்டதாக பத்திரிகை கூறுகின்றது.

கிறிஸ்தவம், பௌத்தம், இந்து மற்றும் ஏனைய மதங்களை அணுகுவது போன்றே இஸ்லாத்தையும் நாங்கள் அணுகியுள்ளோம். இதன் மூலம் முஸ்லிம்களை நாங்கள் எமது சமூகத்தின் ஓரங்கமாக இணைக்க முயற்சிக்கின்றோம். அவர்களை அந்நியர்களாக கருதவில்லை. கேலிச் சித்திரங்கள் அவர்களை எமது சமூகத்தினுள் உள்வாங்குவதற்கானவை என்று கேலிச் சித்திரங்களை வெளியிடுவதற்கு அனுமதியளித்த ஜூலண்ட் போஸ்ட்டின் கலாசார ஆசிரியர் பிலெமிஸ் ரோஸ் தமது இணையப் பதிப்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)