Posts: 2,315
Threads: 5
Joined: Jan 2005
Reputation:
0
கடைசிக்காலத்தில எல்லாரும் நல்லவராகலாம் மரணத்தின் நிழலில தான் சுடலை ஞானம் வரும் என்று அப்பம்மா சொல்லுவா அது சரி ஆனால் இதே புஸ்பராசா தான் வாழும் காலத்தில தான் செய்தஇ காரணமாயிருந்த கொலைகளுக்காக ஏன் ஒரு இடத்திலும் மன்னிப்பு வேண்டவில்லை :roll: :?: :?:
வாழும்போது செய்யறது சரியாக தெரிந்ததா என்ன :?:
பாவ மன்னிப்பு வழங்க நாங்க மறு கன்னம் காட்டச் சொன்ன யேசு பிரான் இல்லையே சாதாரண மக்கள் எனது மாமா இந்த கூலிகும்பலால் தான் எப்படி சித்திரவதைப் படுத்தப்பட்டார் என்று இப்பவும் சொல்லுவாரே இதேபோல பாதிக்கப்பட்ட எத்தனை மக்கள் இருப்பினம் அவை இவரை மன்னிக்க தயாரில்லையே :evil:
. .
.
Posts: 1,886
Threads: 60
Joined: Aug 2005
Reputation:
0
<!--QuoteBegin-Luckyluke+-->QUOTE(Luckyluke)<!--QuoteEBegin-->ஒரு வேளை கடைசிக் காலத்தில் தவறுகளை உணர்ந்திருப்பாரோ?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ரஷ்சியப்படைகள் சூழ்ந்து வந்தபோது, நிலவறைக்குள் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்யத்துணிந்த போது ஹிட்லரும் தன் தவறை உணர்ந்துதானே இருப்பான்.
.
.
Posts: 1,321
Threads: 76
Joined: Dec 2005
Reputation:
0
எனது சாட்சியம் புத்தகத்தில் 14ஆம் பக்கத்தில் அவர் கூறியுள்ளதாக மேலே வானம்பாடி போஸ்ட் செய்திருக்கிறார்.... அதை படித்துப் பாருங்கள்....
அவருக்கு வக்காலத்து வாங்க வேண்டிய எந்த அவசியமும் எனக்கில்லை.... நான் ஒரு மூன்றாம் மனிதன்.... அந்த அடிப்படையிலேயே இங்கு சில கருத்துகளை சொன்னேன்.... யாரும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்....
,
......
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
லக்கிலுக் வெறும் அறிக்கைகளை மட்டும் வைத்து ஒரு மனிதனின் செயற்பாட்டை கருதுபவரா நீர்? உம்மை நினைத்து வருந்துகின்றேன்.
ஈபிஆர்எல்வின் சரித்திரமே பல கொலைகளையும், கொள்ளைகளையும் செய்தது தான். மண்டையன் குழு, ஈன்டிஎல்எவ் என்று பல பிரிவுகளை ஆரம்பித்து கண்ணில் பட்டவர்களை எல்லாம் கொலை செய்ய ஒரு அமைப்பு! மூத்தவயதுள்ளவர்களை கேட்டால் தெரியும். இவர்கள் வருகின்றார்கள் என்றால் மக்கள் பயந்து ஒளித்த காலமும் உண்டு.
மாற்று இயக்கங்கள் என்று சொல்லப்பட்ட இயக்கங்கள் ஏன் மக்கள் மத்தியில் எடுபடாமல் அழிந்து போயின என்று உங்களுக்கு கேள்வி எழலாம்?. அதற்கு காரணம் மக்களுடன் அவர்கள் நடந்து கொண்ட விதம் தான்.
இப்படிப்பட்ட அமைப்பில் இருந்து வந்த புஸ்பராஜா ஜனநாயம் கதைக்கின்றார் என்றால் வேடிக்கையாக இல்லை?
[size=14] ' '
Posts: 1,321
Threads: 76
Joined: Dec 2005
Reputation:
0
தூயவன்,
இனியும் நான் இங்கு பதிலளிக்க தயாரில்லை.... எனக்கு தேவையில்லாத இந்த பிரச்சினையில் ஏன் தான் மூக்கு நுழைத்தேனோ?
,
......
Posts: 181
Threads: 16
Joined: Jun 2005
Reputation:
0
அப்படினால் ஏன் விவாதிக்க ஆரம்பித்தீர். வழிதெரியாதபோது ஒதுங்குவது உம்முடைய இயல்புதானே? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Posts: 1,630
Threads: 108
Joined: Jun 2005
Reputation:
0
லகி நீங்கள் ஒருவரின் எழுத்துத் திறனில் இலகுவாக எடுபடுபவர் போல் உள்ளது.ஒருவர் ஒன்றைக் கூறுகிறார் ஆகின் ,அதன் நேர்மையை, நாங்கள் அவர் கூறும் கூற்றில் இருந்து மட்டும் கிரகித்துக்கொள்ள முடியாது.அவ்வாறெனில் நன்றாக கதையளக்க முடிந்தவர்கள் மட்டுமே நல்லவர்கள் ஆகி விடுவார்கள்.
ஈழத் தமிழர்கள் இவர்களின் வன்முறையை நேரடியாக அனுபவித்தவர்கள்.இவர்களின் கொலை வெறியை நேரடியாக சந்தித்தவர்கள்.ஆகவே இவர்கள் தங்களை தூயவர்களாகக் காட்டிக் கொள்ள ,தங்களை சுத்தம் செய்துகொள்ள பாவிக்கும் எழுத்தின் வீச்சில் மயங்கி விடமாட்டார்கள்.
கொலை என்பது வெறுக்கத் தக்கதே,ஆனால் ஒரு இனம் இன்னொரு இனத்தின் மீது கொலை வெறியுடன் இராணுவ ஆக்கிரமிப்பை மேற்கொள்ளும் போது, அதற்கு எதிராக போரிடும் இனம் மேற் கொள்ளும் வன்முறைப் போராட்டாமானது தனது இருப்புக்காக, தனது சுய பாதுகாப்பிற்காக மேற் கொள்ளும் வன்முறையானது ,அந்த இனம் வாழ்வதற்கான மனித நேயத்தின் அடிப்படயில் ஆன வன்முறை ஆகும்.இங்கே ஆக்கிரமிப்பாளனின் கொலை வெறியை, ஆக்கிரமிக்கப் பட்டவனின் எதிர் வன்முறையுடன்,கொலையுடன் ஒப்பிடுவது , நேர்மையான ஒரு மனித உரிமைப் போராளியின் நிலைப்பாடு ஆகாது.
கொலை நீதி அற்றது எனின் கார்கிலில் பாகிஸ்தானிய படைகளை ஏன் கொன்றீர்கள்?ஈழத்தில் ஏன் எமது உடன் பிறப்புக்களைக் கொன்றீர்கள்? நீங்கள் பூக்களை அல்லவா செறிந்திருக்க இருக்க வேண்டும். நேர்மையான படைப்பாளியின் எழுத்துக்கும், செயற்பாட்டுக்கும் எப்போதுமே சம்பந்தம் இருக்க வேண்டும் .அத்தோடு அவன் உண்மை பேச வேண்டும்.ஆகவே எனது பார்வயில் இவர் ஒரு எழுத்து வியாபாரியே, மனித உரிமைப் போராளி அல்ல.
Posts: 361
Threads: 16
Joined: Sep 2004
Reputation:
0
sathiri Wrote:இவரது இந்த சாட்சி புத்தகத்தில் இவரது சகாக்களிற்கே உடனபாடு இல்லை அதைபடித்துவிட்டு அவரது நண்பர்களான கோவைநந்தன் மற்றும் உமாகாந்தன் போன்றவர்களே எதிர்ப்பு அறிக்கை விட்டனர் அதைவிட அவரது புத்தகத்தில் முதல் தற்கொலைபோராளி சிவகுமாரன் தனது மடியில்தான் உயிரை விட்டார் என்று ஒரு புளுகைவேறு அள்ளி விட்டிருக்கிறார் இவரது புளுகை பக்கம் பக்கமாக விபரிக்கலாம் ஆனால் அது இப்ப தேவையில்லாதது அதைவிட்டு என்றை இங்கு விளங்கபடுத்த விரும்புகிறேன் மாணவர் பேரவை என்பது தமிழீழ விடுதலையை நோக்காக கொண்டோ அல்லது ஈழவிடுதலைக்கான ஆயதபோராட்டத்திற்கான ஆரம்ப அமைப்போ அல்ல அது அன்று இலங்கை அரசின் தரபடுத்துதல் மற்றும் மாணவரது உரிமைகளிற்காக மட்டுமே சாத்வீக போராட்டங்கள் நடத்துவதற்காய் தொடங்கபட்டது அது தொடங்கி சில காலங்களிலேயே சிலர் கூட்டணி பின்னால் சிலர் தனியாக சிலர் ஆயுதபோராட்ட அமைப்புகள் என்று பிரிந்து போய் விட்டனர் அதில் இந்த புஸ்பராசா ஈபிஆர் எல் எவ் அமைப்பின் முழுஆதரவாளராய் செயற்பட்டாரே தவிர இவர் அந்த அமைப்பின் ஆயுதபயிற்சிபெற்ற ஒருவர்அல்ல பிரானன்சில் வந்து பின்னர்அந்த அமைப்பிறகாக வேலைகள் செய்தார் அதேநேரம் கூட்டணிக்கு கொடி பிடித்ததும் கோசம் போட்டதும் இவரது போராட்ட வடிவங்களில் ஒண்று
மன்னிக்க வேண்டும். உண்மைக்கு புறம்பான ஒன்றை கண்டும் காணாதமாதிரி விட மனம் வராததனால் எழுதுகிறேன். புஸ்பராஜாவை நான் நேரடியாக சந்தித்ததில்லை. ஆனால் அவரது இளைய சகோதரியான ஜெயராணியை யாழ். பல்கலைக்கழகத்தில் சந்தித்திருக்கிறேன். தமிழீழ விடுதலைப்புலிகள் மாவீரர் குடும்பத்தை சேர்ந்த மன்னார் பிரதேசத்து மாணவியுடன் அகதிகளுக்கான புனர்வாழ்வு பணிகளில் ஜெயராணி அப்போது ஈடுபட்டுக்கொண்டு இருந்தார். பிரபலமான மண்சுமந்த மேனியர் நாடகத்திலும் நடித்திருந்தார்.
அவர்களது இன்னுமொரு சகோதரியான புஸ்பராணி பற்றி பத்திரிகைகளில் படித்திருந்தேன். புலோலி வங்கி விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் நிதித்தேவைகளுக்காக கொள்ளையிட்ப்பட்ட போது, அந்த வங்கியில் காசாளராக இருந்து பணப்பேளையை திறந்து கொடுத்தவர் புஸ்பராணி. அவரை சி.ஐ.டி இன்பெக்ரர் பஸ்தியாம்பிள்ளை பொலிஸ்நிலையம் கொண்டு சென்று, பெற்றவர்கள் முன்பாக ஆடைகளை களைய வைத்து உள்ளாடையுடன் நிறுத்தி அந்த உள்ளாடைகளும் கிழிந்து விழும்வரை தாக்கினார் என்றும், இவ்வாறாகவே புலோலி வங்கிக் கொள்ளையுடன் சம்பந்தப்பட்டவர்கள் பற்றிய தகவல்கள் புஸ்பராணியிடம் இருந்து பெறப்பட்டன என்றும், அன்று பத்திரிகைகளில் எழுதப்பட்டது.
பின்னர் இன்ஸ்பெக்ரர் பஸ்தியாம்பிள்ளை மன்னார் காட்டில் புஸ்பராஜா மறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டு, அழைத்துவரப்பட்டு, கடத்திச்செல்லப்படடு, சித்திரவதை செய்யபப்பட்டு, ஆணுறுப்பு அறுக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
புலோலி வங்கிக்கொள்ளையில் பங்குபற்றியவர்களில் இன்னும் ஒரு முக்கியமானவர் பாலகுமார். இவர் அப்போது புலோலி வங்கியில் முகாமையாளராக கடமையாற்றினார். பின்னர் ஈரோஸ் பாலகுமார் என்று அறியப்பட்டு இன்று விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினராக இருக்கிறார்.
விடுதலைப்புலிகள் என்றால் போற்றுவதையும் விடுதலைப்புலிகள் அல்ல என்றால் தூற்றுவதையும் வழக்காக கொண்டிருப்பவர்கள், எத்தனை அறியப்படாத "மாத்தையாக்களுக்கும்", "கருணாக்களுக்கும்" மாவீரர் அஞ்சலிகள் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நினைத்துப்பார்க்க வேண்டும்..
''
'' [.423]
Posts: 181
Threads: 16
Joined: Jun 2005
Reputation:
0
மகன் செத்தாலும் விதவையாக வேணும் எண்ணம் கொண்ட லக்கி லுக்கு யூடே போன்றவர்கள் கண்ணை மூடிக்கொண்டு விடுதலைப்புலிகளை எதிர்க்கின்றீர்கள். ஆனால் ஒரு கருணா (துரோகி) மாத்தயா போன்ற ஒரு சில குற்றச்சாட்டுகளை சாட்டுகின்றீர்கள் சந்ததியார் தாஸ் போன்ற மரணங்களை நியாயப்படுத்துவீர்கள்.
நீங்கள் எல்லாம் சோறுதான்.......................... :oops: :oops: :oops:
Posts: 2,315
Threads: 5
Joined: Jan 2005
Reputation:
0
ஜூட் அண்ணா சொல்வதை தெளிவா சொல்லுங்க மாத்தயாவும் கருணாவும் இருந்ததால எங்களை அண்ணாக்களுக்கு (மன்னிக்கவும் அப்படியே எழுதி பழகிட்டு விடுதலைப்புலிகளுக்கு) ஆதரவு கொடுக்க வேண்டாம் முழுமையான துரோகிகளாக சுய நலத்துக்காக தமிழீழ விடுதலையை விலைபேசியவர்களுக்கு ஆதரவு கொடுக்க சொல்லுறீங்களா :evil: :roll: :roll:
. .
.
Posts: 1,321
Threads: 76
Joined: Dec 2005
Reputation:
0
வன்னியன் Wrote:மகன் செத்தாலும் விதவையாக வேணும் எண்ணம் கொண்ட லக்கி லுக்கு யூடே போன்றவர்கள் கண்ணை மூடிக்கொண்டு விடுதலைப்புலிகளை எதிர்க்கின்றீர்கள். ஆனால் ஒரு கருணா (துரோகி) மாத்தயா போன்ற ஒரு சில குற்றச்சாட்டுகளை சாட்டுகின்றீர்கள் சந்ததியார் தாஸ் போன்ற மரணங்களை நியாயப்படுத்துவீர்கள்.
நீங்கள் எல்லாம் சோறுதான்.......................... :oops: :oops: :oops:
யோவ் லூசு... என்னை என்ன ஈழத்தமிழன் என்று நினைத்தாயா? நான் இந்தியன்....
****
**** நீக்கப்பட்டுள்ளது - மோகன்
,
......
Posts: 870
Threads: 22
Joined: Apr 2005
Reputation:
0
Quote:பின்னர் இன்ஸ்பெக்ரர் பஸ்தியாம்பிள்ளை மன்னார் காட்டில் புஸ்பராஜா மறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுஇ அழைத்துவரப்பட்டுஇ கடத்திச்செல்லப்படடுஇ சித்திரவதை செய்யபப்பட்டுஇ ஆணுறுப்பு அறுக்கப்பட்டு கொல்லப்பட்டார் jude
அடடா புஸ்பராசா தான் தன்ரை கதையிலை கதை விட்டார் எண்டு பாத்தா இங்கை யுூட்கூட கதைவிட தொடங்கிட்டார் யுூட் அவர்களே பஸ்தியாம் பிள்ளையும் அவரது சகாக்களும் எப்படி கொல்லபட்டார்கள் என்று தெரியாவிட்டால் புஸ்பராசாவே தனது புத்தகத்தில் விபரமா எழுதியிருக்கிறார் வாங்கி படியும் பிறகு இங்கை வந்து எழுதும் இது ஒண்டும் பல நுற்றாண்டிற்கு முன்னர் நடந்த சம்பவம் அல்ல மாற்pவிருப்படி எழுத அல்லது நீர் யாழ்பல்கலை கழகத்தில் படித்த அதிபுத்திசாலி ஒத்து கொள்கிறோம் அதை பல தடைவை இங்கு எழுதியும் விட்டீர அதற்காக நடந்ததை மாற்றி எழுத முடியாது; நாங்கள் பள்ளிகூட பக்கம் போகவில்லை தான் ஆனால் போராட்டவரலாறு தெரிந்தவர்கள்
Posts: 1,886
Threads: 60
Joined: Aug 2005
Reputation:
0
விடுதலை புலிகள் மீதிருக்கும் கோபம் யூட்டின் கண்களை மறைகக்கிறது, நாம் வாழும் காலத்தில் நடந்ததையே இப்படிமாற்றுபவர்கள், வரலாறுகள்,இதிகாசங்கள்,புராணங்களை பற்றிகதைத்தால் தம் தேவைகளுக்காக எப்படி மாற்றி மாற்றிகதைப்பார்கள் என்பது புரிகிறது, இவர்கள்தான் சரியான மாற்றுக்கருத்துக்காரர்கள்.
.
.
Posts: 45
Threads: 8
Joined: Sep 2005
Reputation:
0
மேற்கோள்:
பின்னர் இன்ஸ்பெக்ரர் பஸ்தியாம்பிள்ளை மன்னார் காட்டில் புஸ்பராஜா மறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுஇ அழைத்துவரப்பட்டுஇ கடத்திச்செல்லப்படடுஇ சித்திரவதை செய்யபப்பட்டுஇ ஆணுறுப்பு அறுக்கப்பட்டு கொல்லப்பட்டார் தரனந
என் முழு புசானிக்காய சொத்திலா புதைக்கிறிஙாள் இப்பவே இப்பிடியேட்டா இன்னும் 100 வருசாம் கழிச்சு என்ன சொல்லு வியால் உண்மையா ஒரு நாளும் மத்ததையுங்கோ புஸ்பராசா துரோகம் செய்தாது செய்தாதுதான் அவரைப்பற்றி எனக்கு நிறையாத் தெரியும் என் என்டால் அவர்ற்ற வீட்டில் இருந்து 300 மிற்றர்தான் வாரும் எனது வீடு அவரை பற்றி நிறையாத் தெரியும் அவரை நான் விமார்சிக்கா விரும்பவில்லை ஒரு துரோகியை நியாப்படுத்து வதற்கு உண்மையை மறைக்கதையுங்கோ
Posts: 1,207
Threads: 105
Joined: Jun 2005
Reputation:
0
அப்படியே Harvard Press, Oxford Press, Cambridge Press எண்டு ஒரு பிரசுரிப்பாளர்களினூடாக ஆங்கிலத்திலையும் அழந்தா அது தான் வரலாறு என்று வந்துடும்.
Posts: 361
Threads: 16
Joined: Sep 2004
Reputation:
0
Niththila Wrote:ஜூட் அண்ணா சொல்வதை தெளிவா சொல்லுங்க மாத்தயாவும் கருணாவும் இருந்ததால எங்களை அண்ணாக்களுக்கு (மன்னிக்கவும் அப்படியே எழுதி பழகிட்டு விடுதலைப்புலிகளுக்கு) ஆதரவு கொடுக்க வேண்டாம் முழுமையான துரோகிகளாக சுய நலத்துக்காக தமிழீழ விடுதலையை விலைபேசியவர்களுக்கு ஆதரவு கொடுக்க சொல்லுறீங்களா :evil: :roll: :roll: நித்திலா
நான் எங்கே அப்படி சொன்னேன்?
தெளிவாக சொல்லும்படி கேட்கிறீர்கள். இதோ தெளிவாக...
யாரையும் நம்பாதீர்கள். ஆனால் யாரையும் அவமதிக்காதீர்கள்.
இறந்து போன புஸ்பராஜாவை பற்றி விடுதலைப்புலிகளுக்கு எதிரான இணையத்தளத்தில் இவர் இறப்பதற்கு இரு வாரங்களுக்கு முன்பு இவரை மோசமாக தாக்கி எழுதியிருந்தார்கள். ஏன்? வுpடுதலைப்புலிகளை ஆதரியுங்கள் என்று சொல்லிவிட்டாராம். அது தான் அந்த கேவலமான தாக்குதலுக்கு காரணம். புஸ்பராஜா குடும்பம் இராணுவத்தாலும் பொலிசாராலும் சித்திரவதைப்படுத்தப்பட்ட குடும்பம். இவர்கள் விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப முன்னோடிகள். எப்படி மாத்தையாவையும் கருணாவையும் யாரென்று தெரியாமல் பலரும் ஆதரித்தார்களோ அப்படியே இந்த இறந்து போன மனிதரை யாரென்று தெரியாமல் தூற்றாதீர்கள்.
இங்கே எழுதுபவர்கள் பலரும் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்து எழுதுகிறார்கள். பக்கத்திலிருந்த மாத்தையாவையும் கருணாவையும் தலைவருக்கே தெரியவில்லை. நீங்கள் எல்லாம் அவரிலும் சிறந்தவர்களா, இல்லையே? ஆகவே இந்த இறந்து போன மனிதரை தூற்றாதீர்கள்.
தெளிவான விளக்கம் போதுமா நித்திலா?
''
'' [.423]
Posts: 361
Threads: 16
Joined: Sep 2004
Reputation:
0
Birundan Wrote:விடுதலை புலிகள் மீதிருக்கும் கோபம் யூட்டின் கண்களை மறைகக்கிறது, நாம் வாழும் காலத்தில் நடந்ததையே இப்படிமாற்றுபவர்கள், வரலாறுகள்,இதிகாசங்கள்,புராணங்களை பற்றிகதைத்தால் தம் தேவைகளுக்காக எப்படி மாற்றி மாற்றிகதைப்பார்கள் என்பது புரிகிறது, இவர்கள்தான் சரியான மாற்றுக்கருத்துக்காரர்கள்.
பிரண்டன் விடுதலைப்புலிகளில் எனக்கு ஏன் கோபம் என்று சொல்வீர்களா? உண்மையில் நான் விடுதலைப்புலிகளை மிகவும் நிறைவாக மதிக்கிறேன். அவர்களை விட சிறந்த நிருவாகிகளை அன்றும் கண்டதில்லை இன்றும் கண்டதில்லை. அவர்களை போல பண்பாளர்கள் எவருமே இல்லை. தியாகத்துக்கும் நேர்மைக்கும் விடுதலைப்புலிகள் இலக்கணமானவர்கள். இன்னும் சொல்லப் போனால் அவர்களது ஆட்சியில் உள்ள பகுதியை எங்கள் ஆயுட்காலத்தில் உலகின் முதல் பத்து செல்வந்த பிரதேசங்களில் ஒன்றாக நீங்களும் நானும் காணப்போகின்றோம். போதுமா?
அதற்காக, எனக்கு தெரிந்ததை தெரிந்த படி நான் எழுதுவது எனது உரிமை. நீங்கள் மறுத்தாலும் நான் எழுதுவேன். தவறான தகவலாக இருந்தால் சரியானதை எழுதுங்கள்.
அதே போல விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என்று காட்டிக்கொண்டு பலரும் இங்கே எழுதும் கருத்துக்களில் உள்ள தர்க்க தவறுகள், வரலாற்று தவறுகள், தமிழ் தவறுகள் என்று நான் கருதுவது பற்றி எழுதும் உரிமையும் எனக்கு உண்டு. அதையும் நான் யாருக்காகவும் விட்டுக்கொடுக்க போவதில்லை.
யாழ்ப்பாணத்தில் இருந்த காலத்திலேயே விடுதலைப்புலிகளை குற்றம் கண்டு, கேள்வி கேட்டு, பதில் பெற்று தான் நான் ஆதரித்தேன். இங்கே ஆதரவாளர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் அட்டகாசம் உண்மையில் அந்தநாள் ஈபிஆர்எல்எப் கூட்டத்தை தான் ஒத்திருக்கிறது. விடுதலைப்புலிகளின் பண்பாடான பேச்சுவழக்கோ, நடத்தையோ, அவர்களின் மதிநுட்பமோ, புன்னகை மாறாமலே உறுதியுடன் சமார்த்தியமாக நிலைமையை கட்டுப்படுத்தும் ஆற்றலோ இங்கு கருத்து எழுதும் தான்தோன்றி ஆதரவாளர்களிடம் கொஞ்சமும் இல்லை.
''
'' [.423]
Posts: 361
Threads: 16
Joined: Sep 2004
Reputation:
0
kurukaalapoovan Wrote:அப்படியே Harvard Press, Oxford Press, Cambridge Press எண்டு ஒரு பிரசுரிப்பாளர்களினூடாக ஆங்கிலத்திலையும் அழந்தா அது தான் வரலாறு என்று வந்துடும்.
அது பற்றி தாங்கள் என்ன செய்வதாக உத்தேசம்?
உண்மையில் நான் ஆங்கில ஊடகங்களுக்கும் எழுதுவது வழக்கம். எனக்கு சரியென்று தெரிந்ததை எழுதத்தான் போகிறேன். நான் அறிந்த வரலாறு சரியென்று நான் நம்புமளவும் நான் அதை எழுதுவேன். அது தவறான வரலாறு என்று உங்களுக்கு தெரிந்து, அதை திருத்தவேண்டும் என்ற நோக்கமும் இருந்தால், பண்பாடான முறையில் (விடுதலைப்புலிகளை போல, அவர்கள் பண்பாடானவர்கள் பேச்சிலும் நடத்தையிலும்) சரியான வரலாறு என்று நீங்கள் நம்புவதை எழுதுங்கள்.
''
'' [.423]
Posts: 361
Threads: 16
Joined: Sep 2004
Reputation:
0
sathiri Wrote:நாங்கள் பள்ளிகூட பக்கம் போகவில்லை தான் ஆனால் போராட்டவரலாறு தெரிந்தவர்கள்
பள்ளிக்கூடம் போகாதது பண்பாடற்ற எழுத்திலேயே தெரிகிறது. உங்களுக்கு தெரிந்த போராட்ட வரலாற்றின் உண்மைத்தன்மையை ஆராயும் திறன் பள்ளிக்கூடம் போகாததனால் உங்களுக்கு இல்லை என்பதும் தெரிகிறது. ஆகவே நீங்கள் சொல்லித்தான் தங்கள் அறிவின் தரம் தெரியவேண்டிய அவசியம் இல்லை.
''
'' [.423]
Posts: 936
Threads: 42
Joined: Dec 2005
Reputation:
0
Jude Wrote:kurukaalapoovan Wrote:அப்படியே Harvard Press, Oxford Press, Cambridge Press எண்டு ஒரு பிரசுரிப்பாளர்களினூடாக ஆங்கிலத்திலையும் அழந்தா அது தான் வரலாறு என்று வந்துடும்.
அது பற்றி தாங்கள் என்ன செய்வதாக உத்தேசம்?
<b>உண்மையில் நான் ஆங்கில ஊடகங்களுக்கும் எழுதுவது வழக்கம்</b>.
எனக்கு சரியென்று தெரிந்ததை எழுதத்தான் போகிறேன். நான் அறிந்த வரலாறு சரியென்று நான் நம்புமளவும் நான் அதை எழுதுவேன். அது தவறான வரலாறு என்று உங்களுக்கு தெரிந்து, அதை திருத்தவேண்டும் என்ற நோக்கமும் இருந்தால், பண்பாடான முறையில் (<b>விடுதலைப்புலிகளை போல, அவர்கள் பண்பாடானவர்கள் பேச்சிலும் நடத்தையிலும்</b>) ¨
சரியான வரலாறு என்று நீங்கள் நம்புவதை எழுதுங்கள்.
[b]உண்மையில் நான் ஆங்கில ஊடகங்களுக்கும் எழுதுவது வழக்கம்[/b <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
-!
!
|