Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நாங்கள் இருக்கிறோம் திருப்பி அடிப்போம் சொன்னார்: எழிலன்
#1
எம்மீது வலிந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டால் பதில் தாக்குதல்கள் நடத்தப்படும் எழிலன் எச்சரிக்கை.

<img src='http://img506.imageshack.us/img506/1395/elilanslmmmeet30030616hy.jpg' border='0' alt='user posted image'>

யுத்த நிறுத்தக்கண்காணிப்புக்குழுவின் திருகோணமலை மாவட்ட தலைவர் உவே ஜோன் அவர்களுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது.
இந்தச்சந்திப்பு தொடர்பாக நேற்று காலை ஸ்ரீ லங்கா கடற்படையினரின் கரையோரம், மற்றும் மீனவர்கள் மீதான தாக்குதல்கள் பற்றி திருமலை கண்காணிப்புக் குழுத் தலைவரிடம் திருமலை அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலன் தெரியப்படுத்தியதுடன் முறைப்பாட்டினையும் செய்துள்ளார். இதன்போது ஸ்ரீ லங்கா கடற்படையினரும் தங்கள் மீது கடற்புலிகள் வலிந்து தாக்கியதாக முறையிட்டுள்ளதாக போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவினர் தெரிவித்தனர்.

<img src='http://img90.imageshack.us/img90/4898/elilanslmmmeet30030627au.jpg' border='0' alt='user posted image'>
இதற்கு பதிலளித்த திருமலை அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் அவர்கள், இன்று காலை 10 மணியளவில் எமது கட்டுப்பாட்டு பிரதேசத்தில் கடற்றொழிலாளர்கள் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டு வேட்டுக்களை தீர்த்தவண்ணம் வந்த கடற்படையினர் தொடர்ந்தும் தாக்குதல்களை எமது பிரதேசங்கள் நோக்கியும் நடத்தினர் இதனால் இவர்களால் ஏவப்பட்ட மோட்டார் குண்டு ஒன்றும் அரசியல்துறை அலவலகத்தில் விழுந்துள்ளது. இவ்வாறு தாக்குதல்களை நடத்தியவண்ணம் கடற்படையினர் எமது பிரதேசத்திற்கு அண்மையாக வந்தபோதே எமது போராளிகள் பதில் தாக்குதலை நடத்தி அவர்களை விரட்டியடித்துள்ளனர்.
<img src='http://img506.imageshack.us/img506/3153/elilanslmmmeet30030636qw.jpg' border='0' alt='user posted image'>


இனிவரும் காலங்களில் எமது மக்கள் மீதோ, அல்லது எமது போராளிகள் மேலோ இனிவரும் காலங்களில் வலிந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டால் நாம் இனியும் கைகட்டி பார்த்திருக்கமுடியாது. எம்மீது வலிந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டால் உடனுக்குடன் பதில் தாக்குதல்களை எமது போராளிகள் நடத்துவர் எனவும் தெரிவித்துள்ளார்.

திருமலை கண்காணிப்புக்குழுத்தலைவர் சம்பூரில் எழிலனுடன் ஸ்ரீ லங்கா கடற்படையினர் தாக்குதல் நடத்திய இடங்களையும் பார்வையிட்டுள்ளார்.

நன்றி:பதிவு
[b]
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)