Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வவுனியாவில் ஆளில்லா வேவு விமானம் வீழ்ந்தது!
#1
வவுனியாவில் சிறிலங்காவின் விமானப்படைக்குச் சொந்தமான ஆளில்லா வேவு விமானம் இன்று செவ்வாய்கிழமை வீழ்ந்துள்ளது.


வவுனியா சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதியான மகாரம்பைக்குளத்தில் இன்று முற்பகல் 10.00 மணிக்கு இச்சம்பவம் நடந்துள்ளது.

வவுனியாவின் வடகிழக்குத் திசையில் 4 கிலோ மீற்றர் தொலைவில் மகாரம்பைக்குளம் உள்ளது.
<img src='http://img479.imageshack.us/img479/1373/200603280020jh.jpg' border='0' alt='user posted image'>



சிறிலங்கா விமானப் படையின் தயாரிப்பான N226 LK சுப்பர் ஸ்டார் என்ற இந்த ஆளில்லா வேவு விமானம், தனியார் வீட்டு தொலைக்காட்சி அன்டெனாவில் மோதி வீட்டின் வெளிப்புறத்தில் விழுந்துள்ளது.

இயந்திரக் கோளாறினால் தலைமையகத்தின் கட்டுப்பாட்டை இழந்ததையடுத்து இந்த விபத்து நடந்ததாக தெரியவந்துள்ளது.




சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்ட கிராம மக்கள் சிறிலங்கா காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து விமானப் படையினர் மற்றும் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் சம்பவ பகுதியிலிருந்து விமானத்தை மீட்டுள்ளனர்.

இதற்கு முன்னர் கடந்த ஆண்டு ஒக்டோபர் 19 ஆம் நாளன்று வவுனியாவின் கனகராயன்குளத்துக்கு கிழக்காக விஞ்ஞானகுளத்துக்கும் 9 ஆம் கட்டைக்கும் இடையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் சிறிலங்கா விமானப்படையின் ஆளில்லா வேவு விமானம் விழுந்து நொறுங்கியது.
http://www.eelampage.com/?cn=25112
Reply
#2
மலையக் கிண்டி எலியப் புடிச்ச மாதிரி இருக்குது. இத்தினு}ண்டு பொம்மைப் பிளோன வைச்சு என்னத்தச் செய்யப் போறாங்க. தமிழீழக் குழந்தைகள் விளையாட நல்ல பொம்மை. வன்னிக்குள்ள அறிவுச் சோலைக் குழந்தைகளுக்குக் கொடுக்கச் சொல்லுங்கோ.
S. K. RAJAH
Reply
#3
பொத்துப் பொத்தென்று சிங்கள விமானம் புூமியில் விழுகுதாம் மெய்யா!!
செத்துப் போனாரா, உயிரோடு உள்ளாரோ கோயபாய ஜயா!!! :wink:
[size=14] ' '
Reply
#4
Quote:பொத்துப் பொத்தென்று சிங்கள விமானம் புூமியில் விழுகுதாம் மெய்யா!!
செத்துப் போனாரா, உயிரோடு உள்ளாரோ கோயபாய ஜயா!!!

தம்பி து}யவன.. இது தமிழ்க்களம் தமிழில கதைங்க.. அதென்ன கோயாபாயா ஐயா ..?? :twisted: :twisted:

என்ன விமானத்தை கையால து}க்கிறாங்க.. விமானமா விமானத்தின் மாதிரியா.. இலங்கைத்தயாரிப்பா..?? பறவாய் இல்லையே. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#5
tamilini Wrote:தம்பி து}யவன.. இது தமிழ்க்களம் தமிழில கதைங்க.. அதென்ன கோயாபாயா ஐயா ..?? :twisted: :twisted:

என்ன விமானத்தை கையால து}க்கிறாங்க.. விமானமா விமானத்தின் மாதிரியா.. இலங்கைத்தயாரிப்பா..?? பறவாய் இல்லையே. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

நன்றி டமிலினி அக்கா

இது முந்தி வந்த இயக்கப்பாட்டு. அதிலே ரத்வத்த ஜயா என்று வரும். நான் கொஞ்சம் மாற்றம் செய்து போட்டிருக்கேன்.
கொப்பி அடித்தாலும், காலத்துக்கு ஏற்றமாதிரி அல்லவா போடவேண்டும். இப்ப ரத்வத்தை தான் கஞ்சிக்கு டாவடிக்கின்றாராமே!! :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[size=14] ' '
Reply
#6
ஏன் டம்பி டு}யவன்.. அந்த பாட்டில நாலு வரி போட்டிருந்தா புரிஞ்சிருக்கும்.. சரி சரி.. ரத்துவத்த கஞ்சிக்கு டாவடிக்கிறாரா..?? அது சரி டாவு என்றால் என்ன.. எப்பதான் தமிழ்ல எழுதப்போறியளோ.. Cry Cry :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#7
இப்படி குறுக்கு கேள்வி கேட்டால் கதைக்கமாட்டேன் ஆமா!! நான் மட்டும் என்ன தெரிந்து கொண்ணடா சொன்னேன். :evil: :evil: :evil: :roll:
[size=14] ' '
Reply
#8
இதப் பாத்தா வேவு விமானம் மாதிரித் தெரியேல்ல.இதில கமரா இருக்கிற மாதிரியும் தெரியேல்ல.இது அனேகமாக வேவு விமானத்தை இயக்குபவர்களுக்கான பயிற்சி விமானமாக இருக்கும்.இது ரேடியோ வினால் இயக்கப்படும் மொடல் விமானம்.இதை புலத்தில பொழுதுபோக்காக சிறுவர் முதல் பெரியவர் வரை வடிவமைத்து,பறக்க வைப்பார்கள்.இது ஒரு 500 டொலருக்கு மேல வராது.
Reply
#9
பள்ளி கூடத்துக்கு சின்ன பிள்ளையள் கார்ட்போட் பெட்டில சென்ஞ்ச மாதிரி இருக்கு அதுவும் made in sri lanka vam அப்பிடியா தான் இருக்கனும்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#10
உது பயிற்சி விமானமாக இருக்கும் இல்லை உதுக்குள்ளை வெடிபொருளை நிரப்பி surgical strike செய்யிறதுக்கு (LRRP பாணியில், ஆனால் மனிதர்களை பயன்படுத்தி சிக்கல்கள் இழப்புகளை எதிர்கொள்ளாமல் இருக்க)பயிற்சியாகவும் இருக்கலாம்.

இலங்கை படைத்துறைக்கு இராணுவரீதியாக தொழில்நுட்ப உதவிகளை பெறுவதில் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கத்தின் படைகள் என்றரீதியில் சிக்கல்கள் குறைவு. மற்றும் அவர்களின் budget உம் பல மடங்கு அதிகம். ஆகவே அவர்கள் இப்படியான விமானங்களை பறக்க விட ஏதாவது ஒரு ஆழமான காரணம் இருக்கும். இங்கு சிலர் துள்ளிக்குதிப்பது போல் பப்பாவில் ஏத்தும் நோக்காகவும் இருக்கலாம். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இலங்கைப் படைகளின் புலநாய்வுத்துறையில் இருப்பவர்கள் (ஒட்டுப்படைகள் அல்ல) கூலிக்கு மாரடிக்கும் சாதாரண சிப்பாய்கள் மாதிரி இல்லை. ஓர்மத்தோடு அர்பணிப்போடு குறிக்கோளோடும் வேலை செய்பவர்கள்.
Reply
#11
<b>நவீன தொழில்நுட்ப மயப்படுத்தப்பட்ட அரசின் புலனாய்வுச் செயற்பாடுகள்.</b>

<i>4 ஆவது ஈழப்போர் தகவல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டேயிருக்கும்!</i>

தமிழீழ விடுதலைப் புலிகளின் உளவுத்துறைஇ தென் இலங்கை ஊடுருவல்களை முறியடிக்கவும் புலிகளின் பிரதேசத்துக்கும் ஊடுருவி புலனாய்வுத் தகவல்களை சேகரிக்கவும் புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அரச புலனாய்வு இயந்திரம் கடலிலும்இ தரையிலும்இ ஆகாயத்திலும் தொழில்நுட்ப மயப்பட்ட கருவிகளை பயன்படுத்தி புலனாய்வு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இது புலிகளின் உளவுத்துறைக்கு பெரும் சவாலாக அமைந்திருக்கின்றது. இதனால் புலிகளின் முறியடிப்புப் பணி பெரும் இடையூறுகளுக்கு உள்ளாகியுள்ளது.

புலனாய்வை இரண்டு வகையாகப் பிரிக்கலாம் ஒன்று தொழில்நுட்ப புலனாய்வு மற்றது மனிதவளப் புலனாய்வு என்பனவாகும்.

புலனாய்வுப் போர் இன்று அறிவியல் தொழில்நுட்ப மயப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. தரையிலும், கடலிலும், ஆகாயத்திலும், வேவுபார்ப்பதற்கும் தகவல்களைச் சேகரிப்பதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் இன்று மனிதன் தேவையில்லை. அவற்றை எல்லாம் இலத்திரனியல் அல்லது டிஜிட்டல் கருவிகள் செய்கின்றன. மனிதன் திரையின் முன் குந்தியிருக்கிறான். இலத்திரனியல் கருவிகள் தான் களச் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றன.

கிழக்கு, மேற்கு நாடுகள் இவ்வாறாக தகவல் தொழில்நுட்பத்துறையில் விருத்தியடைந்ததைப் போல அல்லது இலங்கை அரச புலனாய்வுத்துறை விருத்தியடைந்ததைப் போல தமிழீழ உளவுத்துறை விருத்தியடையவில்லை. ஏணி வைத்தாலும் எட்டாத தூரத்தில்தான் உள்ளது. இதற்குப் பெரும் பிரச்சினை நிதிப் பிரச்சினையாகவேயுள்ளது. மனிதவள பற்றாக்குறையுமாகும்.

தமிழ் மக்களின் உளவுச் சேவை சிங்கள மக்களின் உளவுச் சேவையுடன் ஒப்பிடும்போது ஆளணி மனித வலுச் சமநிலையிலும் பாரிய இடைவெளி காணப்படுகிறது. ஆனால், புலனாய்வு வலுச்சம நிலையில் புலிகளின் உளவுத்துறை வீரியம் பெற்றுள்ளது.

...
.....

4 ஆம் கட்ட ஈழப்போர் என்பதுதகவல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டே அமையும். எது எப்படி இருப்பினும் 3 ஆம் கட்ட ஈழப்போரின் புலிகளிடம் இல்லாத தொழில்நுட்ப வசதிகள் பலவற்றை 4 ஆம் கட்ட ஈழப்போரில் புலிகள் பயன்படுத்துவார்கள். இனிவரும் போர் நவீன தொழில்நுட்ப மயப்படுத்தப்பட்ட சமர்க்களமாக அமையும்.

புலிகளின் புலனாய்வு தொழில்நுட்ப விருத்திக்கும் போதிய பொருளாதார மனித வளம் இல்லை. இவ் குறையினை நிவர்த்தி செய்ய வேண்டுமாயின் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தொழில்நுட்ப வல்லுநர்கள் கரம் கொடுக்க வேண்டும்.


http://www.thinakural.com/New%20web%20site...2/Article-9.htm
Reply
#12
குறுக்கால போனவர்,
உதை நான் ஒரு வருடத்திற்கு முன்னம் தாரகி என்ற பேரில எழுதேக்க குறிப்பிட்டிருந்தனான்.புலத்தில் பலரும் தங்கள் ,தங்கள் அலுவல்களில் குறிப்பாக தொழில்சார் துறை நிபுணர்களாக இருப்பவர்கள் மற்றும் பல்கலைக் கழகங்களில் இருப்பவர்கள் இருகிறார்கள்,இவர்களை இணைப்பதற்கு புலத்தில் ஒரு அமைப்பு அவசியம்.உதாரணத்திற்கு வன்னிரெக்கிற்கு பின் புலத்தில் இருந்து இயங்கும் தமிழ் தொழில் நுட்டபவியளாளர் என்கின்ற அமைப் பைப் போல் ஒன்று அவசியம் ஆகும்.இதை நான் முன்னர் ஜேய் குமாரசூரியரிடமும் கூறி இருக்கிறேன்.அந்த அமைப்பு வட அமெரிக்கா குறிப்பாக சிலிக்கன் பள்ளத்தாக்கை மைய்யமாக வைத்தே இயங்குகிறது,இதனை ஒவ்வொரு நாட்டிலும் உருவாக்க வேண்டும்.அல்லது டெக்கின்(TECH) செயற்பாடுத் திறனய் விரிவாக்க வேண்டும்,பல்வேறு வகையானவர்களையும் உள்வாங்க வேண்டும்.தொழில் நுட்ப வளர்ச்சியானது எமது பொருளாதாரத்தை,படை வலிமையை வளர்க்க மிக முக்கியமான ஒரு விடயம்.இந்த ஒருங்கிணைவிற்கு இணயத் தொழில் நுட்பம் உதவியாக இருக்கும்.இதற்கெனவே ஒரு கருதுக்களத்தை உருவாக்கலாம்.அல்லது யாழின் தொழில் நுடுப்பப்பக்கத்தையே அதற்கு உபயோகப் படுத்தலாம்.இதற்கு குறிப்பிட்ட உறுப்பினர்கள் மாத்திரம் என ,மட்டுப்படுத்தப்பட அனுமதியை வரயறுக்கலாம்.

பொறுப்பில் உள்ளவர்கள் சிந்திக்க வேண்டும்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)