Posts: 936
Threads: 42
Joined: Dec 2005
Reputation:
0
<b>முற்றத்து மல்லிகையே
முற்றத்து மல்லிகையே
நான் எங்கே என்று தேடினாயா?
வேலியோர மாதுளையே
நான் விரும்பி நீர் வார்த்த
குறோட்டன் செடியே
நான் இல்லையென்றே
நீ வாடினாயா?
கிணற்றடி துலாவே
கிணற்றடி துலாவே
உன் கழுத்தில் கயிறு மாட்டி
நாளும் இழுத்தவன்
காணலயே என்று தேடினாயா?
வேப்ப மரமே வேப்ப மரமே
உன் தோழ்வலிக்க ஊஞ்சலாடி
தொல்லை தந்தவன்
இப்போ எங்கேயென்று
எப்போதாவது எண்ணினாயா?
குயிலக்கா - குயிலக்கா
நீ ...............கூவ
மறைந்திருந்து நான் குரலெழுப்ப
உன் - உறவுதான் அதுவென்று எண்ணி
ஓயாமல் கூவினாயே
இந்த ஏமாற்றுகாரன்
எங்கே என்று எண்ணி
எபோதாவது ஏங்கினாயா?
கருங்குயிலென்று ஆனாலும்
சொந்த நாட்டிலிருந்தாய்
சுத்த வெள்ளை - நீ!
வெள்ளையர் நாட்டிலிருக்கிறேன்
வெள்ளையர் ஆட்சிசெய்ய
வாக்கும் செலுத்துறேன்
இருந்தும் -என்ன
என்றைக்கும் அவர்க்கு கறுவல் நான்!! 8) </b>[/b]
-!
!
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
உங்கள் கவிதை நன்றாகவுள்ளது வர்ணன். வாழ்த்துக்கள்.
<b> .. .. !!</b>
Posts: 700
Threads: 67
Joined: Oct 2004
Reputation:
0
ஏக்கங்கள் சுமந்து
எண்ணிலடங்கா சோகம் சொல்லி
ஏமாற்றமே மிச்சமாய்
எழுதிய கவியருமை தோழரே!
வளரட்டும் உங்கள் கவிதை..
வாசணை வீசட்டும் தமி;ழ்..
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,859
Threads: 37
Joined: Apr 2003
Reputation:
0
உண்மையான உணர்வுகள் கவிதையில் உணர்வுகளைக் காவி வாசிப்பவரையும் அதற்குள் இழுக்கும் என்பதற்கு இக் கவிதையும் உதாரணம். வாழத்துக்கள்!
.
Posts: 928
Threads: 32
Joined: Jul 2005
Reputation:
0
\\நீ ...............கூவ
மறைந்திருந்து நான் குரலெழுப்ப
உன் - உறவுதான் அதுவென்று எண்ணி
ஓயாமல் கூவினாயே \\
கவிதை வழமை போல ஞாபகங்களை மீட்டு வந்தது. இதை இப்பிடி மாத்தினால்....
நீ கூவ <b>மறந்திருக்க</b> நான் குரலெழுப்ப <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
wow superb நெஞ்ச தொட்டுடிங்கப்பா வர்ணன் வாழ்த்துக்கள்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 1,630
Threads: 108
Joined: Jun 2005
Reputation:
0
நல்ல கவிதை, நிதர்சனமான அரசியல் யதார்த்தம்,
//வெள்ளையர் நாட்டிலிருக்கிறேன்
வெள்ளையர் ஆட்சிசெய்ய
வாக்கும் செலுத்துறேன்
இருந்தும் -என்ன
என்றைக்கும் அவர்க்கு கறுவல் நான்//
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
குயிலக்கா - குயிலக்கா
நீ ...............கூவ
மறைந்திருந்து நான் குரலெழுப்ப
உன் - உறவுதான் அதுவென்று எண்ணி
ஓயாமல் கூவினாயே
இந்த ஏமாற்றுகாரன்
எங்கே என்று எண்ணி
எபோதாவது ஏங்கினாயா?
அந்த குயில் ஏங்குதோ இல்லையோ நாம் அந்த அனுபவங்களை நினைத்து ஏங்கி கொண்டு இருக்கின்றோம். அழகான நினைவுகளை மீட்டு வந்த கவிதை நன்று வாழ்த்துக்கள் வர்ணன்
Posts: 870
Threads: 22
Joined: Apr 2005
Reputation:
0
மனதை தொடும் கவி வரிகள் பாராட்டுக்கள் தொடருங்கள்
Posts: 936
Threads: 42
Joined: Dec 2005
Reputation:
0
நன்றி ரசிகை-நிதர்சன் -சோழியன் அண்ணா -சினேகிதி- சுண்டல்-நாரதர்-ரமா- சாத்திரி- நித்திலா- 8)
-!
!