Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் கருத்துகளம் ஒரு வெட்டிவேலை?
#1
இதுவரைக்கும் நிறைய மாட்டர் (Matter) பத்தி பேசிட்டோம். இன்னிக்கு தமிழ் கருத்துகளம் பத்தி பேசலாமா? அது வெட்டிவேலையா? உஙக கருத்துகளை கொட்டுங்க.
Reply
#2
இதோ ஒருத்தரோட கருத்து

மடலேறும் தமிழர்களின் மகாத்மியங்கள்

இணையத்தின் மிகமுக்கிய விவாத களங்களில் ஒன்று செய்திக்குழுக்கள் (newsgroups) விவாத அரங்கங்கள், பிரபல சர்ச் எஞ்சினான கூகிளுக்குச் சென்றால் அங்கிருந்து ஆயிரக்கணக்கான விவாதமேடைகளை நீங்கள் பார்க்கலாம். அவற்றில் soc.culture.tamil என்கிற விவாத அரங்கம் முழுக்க தமிழ், தமிழர்கள் சம்பந்தமான பொதுவான விவாதங்கள் நடக்கும்.

அநேகமாக நீங்கள் இதுபோன்ற விவாதமேடைகளில் பங்கெடுத்திருக்கலாம். இந்த விவாதமேடைகள் யாஹூ க்ரூப்கள் போல. ஏதோ ஒருவிஷயத்தில் ஒத்த கருத்து இருப்பவர்கள் சேர்ந்து நடத்தும் விவாதங்கள் அல்ல. [b]யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் விவாதம் செய்ய வழியுள்ள பொது இடங்கள், அதுவும் சைபர் வெளி இல்லையா?
நிறைய முகமூடி மனிதர்களை soc.culture.tamil போன்ற அரங்குகளில் காணலாம். அவர்கள் மிகமிக சூடாக விவாதிப்பார்கள், புனைப்பெயரில் தோன்றும் இவர்களின் வார்த்தைகள் மிக பச்சைபச்சையாகவும் இருக்கும்.
இணையத்தில் தீவிரமாக விவாதங்களில் ஈடுபடும் தமிழர்கள் என்ன விஷயங்களையெல்லாம் விவாதிப்பார்கள் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?

இது வரை செய்திக்குழுக்களில் (newsgroups) அனுபவம் இல்லாதவராக நீங்கள் இருக்கும் பட்சத்தில் உங்களிடம் ஒரு போட்டியே கூட வைக்கலாம். [b]அவர்கள் என்னவெல்லாம் விவாதிப்பார்கள்? அவர்கள் அரசியல், சினிமா, பொது விஷயங்களைத்தான் விவாதிப்பார்கள். ஆனால் பெரும்பாலான விவாதங்களோ மிகவும் தரம்கெட்டவையாக இருக்கின்றன.

[b]மிக அதிக அளவில் தமிழ் செய்திக்குழுக்களில் விவாதிக்கிற விஷயங்கள் - தமிழ் ஈழப்பிரச்னை.இந்தியாவில் உள்ள இனப்பிரச்னை. அல்லது பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதோர் பிரச்னை. அவ்வப்போது தி.மு.க. - அ.தி.மு.க. மோதல், காவிரி பிரச்னை, ஆட்சி மொழி பிரச்னை, வீரப்பன் விவகாரம். . . விவாதங்களுக்கான களம் இவைதான். என்னவோ தமிழர்களுக்கு இவற்றைவிட்டால் வேறு பிரச்னைகளே இல்லை என்பதுபோல. . .

[b]இந்த பிரச்னைகளையும் நிதானத்தோடு, காரண காரியங்களோடு விவாதிக்க இணையத்தில் யாரும் காணப்படவில்லை. நூற்றுக்கு தொண்ணூற்றியொன்பதே முக்கால் வீதம் முகமூடிக்காரர்களால் நடத்தப்படும் இந்த விவாதங்கள் ஒரு சைபர் கோல்ட்வார் போல இருக்கிறது.

[b]பிரமாதமான ஆங்கிலத்தில் தமிழைத் திட்டுகிறார்கள் அல்லது ஆங்கிலத்தை ஒழித்துக்கட்ட அறைகூவல் விடுக்கிறார்கள், சைபருலக பிராமணர்களோ பிராமணரல்லாதோர் இயக்கம் பற்றி 60 ஆண்டுகளுக்கு முந்தைய எதிர்ப்பிரச்சாரங்களை மீண்டும் கட்டவிழ்த்துவிடுகிறார்கள்.

தாமே புதுப் பிராமணராகிக் கொண்டிருக்கும் பிராமணரல்லாத இளைஞர்களோ தி.க.காரர்களை விட மிகத் தீவிரமாக பேசுகிறார்கள். அவ்வப்போது காவிரிப் பிரச்னை, வீரப்பன் பிரச்னை வரும்போது தமிழர்களின் பத்து பஞ்சமாபாதகங்களை பட்டியலிட்டு ஒரு கன்னட மாவீரன் (முகமூடிதான்) soc.culture.india.karnataka விலிருந்து ஒரு மெயிலை ஃபார்வர்ட் செய்வார். [b]மேற்சொன்ன இந்த தலைப்புகளிலான விவாதங்கள் என்றென்றும் முடிவடையாத சித்தி சீரியலைப் போல இழுத்துக் கொண்டே போகும்.

இதற்கெல்லாம் நடுவில் தமிழ் படிக்க விரும்புகிறேன் என்று சொல்லி யாரோ ஒரு இண்டாலஜிஸ்ட் ஆஸ்திரியாவிலிருந்து கேட்டிருப்பார். [b]அதற்கு பதில் சொல்லவே ஆளிருக்காது. ஆனால், வடக்கத்தியான் முட்டாள், தெற்கத்தியான் புத்திசாலி, பெங்காலிகள் சூப்பர் ரேஸாக்கும் என்பது போன்ற தலைப்புகளில் தீவிர விவாதங்கள் நடக்கும்.

வீரப்பன் விவகாரங்களில் தமிழனை தாக்கும் ஹொய்சள வீரனும் தமிழ் சினிமாவை ஜிகினா என்று மெயிலிங் லிஸ்ட்டில் திட்டிவிட்டு மறக்காமல் அதைப் பார்க்கும் சேர நாட்டு மறவர்களும் தமிழ் தீரர்களோடு சேர்ந்து வடநாட்டவர்களைப் பற்றி கிண்டலடிப்பார்கள். [b]இவர்களில் 90 சதவீதத்தினர் கலிபோர்னியாவிலிருந்தும் கனடாவிலிருந்தும்தான் இப்படி கல்லடிக்கிறார்கள் என்பதை மறக்கவேண்டும்.

[b]ஆனால் இவர்கள் இணையம் தந்திருக்கும் அற்புதமான வாய்ப்பை வீணடிக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.நமது தற்கால சமூகம் பேசவேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது. முக்கியமாக தமிழர்கள் - குறிப்பாக தமிழ்நாட்டு தமிழர்கள் - அதிகம் இணைய விவாதங்களில் ஈடுபடாததினால்தானோ என்னவோ தமிழ்நாட்டின் முன்னேற்றம் பற்றி யாரும் விவாதிப்பதில்லை.

இன்று நமது அரசியல் சூழல் ஏன் வரலாறு காண முடியாத அளவுக்கு தாழ்ந்திருக்கிறது? நமது தானைத் தலைவர்களுக்கும் மக்களுக்கும் ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி? மக்கள் ஏன் முன்னேற்றத்தைப் பற்றி சிந்திக்காமல் டி.வி. சீரியல், வாஸ்து, சாதி சங்கம் என கெட்டலைகிறார்கள்?

பக்கத்தில் சந்திரபாபு நாயுடும் கிருஷ்ணாவும் மாநிலத்தின் மேம்பாடுகளைப் பற்றி தீவிரமாக செயல்படும் நேரத்தில் நாமோ அடிமை முதல்வர் ஒருவரை வைத்துக் கொண்டிருக்கிறோம். இதனால் மாநிலத்தின் வளர்ச்சி எப்படி பாதிக்கிறது? ஆப்கன் யுத்தம் நமது வாழ்க்கையை எப்படி பாதிக்கும்? இந்த விஷயங்களை பற்றி விவாதிக்க யாரும் இல்லை.

சைபர்வெளிக்கு நாடு, மொழி, இன பேதம் கிடையாது என்று சொல்லப்பட்டாலும், ஒவ்வொரு நாட்டுக்கும் மொழியினருக்கும் இனத்துக்கும் ( சில சமயங்களில் ஜாதி, குலம், கோத்திரத்துக்கும் ) தனித்தனி விவாத அரங்குகள் இருக்கின்றன. அங்கே அவரவர் தங்களுக்குள் குசுகுசுத்துக்கொண்டு கிடக்கிறார்கள்.

நாலு பேர் சேர்ந்து ஒரு விஷயத்தை விவாதித்து முடிவெடுக்கும் போக்கைவிட ஒரு பிரச்னையை நாலா பக்கமும் இழுத்து சிதறடிக்கும் போக்கே அவர்களின் மின்மடல்களில் தெரிகிறது.

அப்படியென்றால், மனிதர்கள் - தமிழர்கள் - மாறவே மாட்டார்களா? என்னதான் தொழில்நுட்ப வரப்பிரசாதம் கிடைத்தாலும் அதை புதுமைக்கு பாலமாக மாற்ற மாட்டார்களா என்கிற ஆதங்கம் எழுகிறது.

அது கிடக்கட்டும். நல்லதே நடக்கவில்லையா என்ன? நடக்கிறது, குறிப்பாக தமிழில் தகவல் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த விரும்பும் ஆர்வலர்கள் நடத்தும் மெயிலிங் லிஸ்ட்கள், யாஹூ குழுக்களில் உருப்படியான விவாதங்கள் நடைபெறவே செய்கின்றன.

உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மையத்தின் (www.infitt.org) விவாதக்குழுக்களில் தமிழில் தகவல் தொழில்நுட்ப சொற்களை எப்படி மொழிபெயர்ப்பது என்பது போன்ற விவாதங்கள் நடக்கின்றன. தமிழில் லீனக்ஸை கொண்டுவரும் வேலையிலுள்ள நண்பர்கள் விவாத மேடைகளில் பங்கேற்கிறார்கள்.

அதைப் போலவே, 2000 ஆண்டுகால தமிழ் கலை இலக்கிய மரபை டிஜிட்டல் வடிவத்துக்கு மாற்றுவதற்கான முயற்சியில் இறங்கியிருக்கும் ப்ராஜெக்ட் மதுரை , தமிழ் மரபு போன்ற கூட்டமைப்புகளின் விவாத மேடைகளிலும் உருப்படியான செயல்பாடுகள் நடக்கவே செய்கின்றன.

ஆனால் தமிழக பொருளாதாரம், அரசியல், மேம்பாடு போன்ற விவாதங்கள் அவசியமாகத் தேவைப்படுகிற துறைகளில் - அதாவது ஆக்கபூர்வமான விவாதங்கள் - மின்குழுக்கள் எதுவும் காணப்படவில்லை.

வழக்கம்போல பெரும்பாலுமான தமிழர் மடற்குழு விவாதங்கள் ஆங்கிலத்திலேயே நடக்க தமிழ்நெட் அகத்தியர் குழு போன்ற அரங்குகளில் தமிழிலேயே விவாதங்கள் நடந்துவருகின்றன. சமீபத்தில் மலேசியாவில் வெளியான ஒரு புத்தகத்தைப் பார்க்க நேரிட்டது.

இணையத்தில் ஜேய்பி என்கிற அந்த நூல் மலேசியத் தமிழர்களிடம் பிரபலமான எழுத்தாளரான டாக்டர் ஜெயபாரதியின் மின்னஞ்சல் குழுக்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. அநேகமாக, இந்த மாதிரியிலான தொகுப்பு தமிழில் இதுதான் முதல் என்று நினைக்கிறேன்.
Reply
#3
மேல இருக்கிறத படிச்சுட்டு உஙக கருத்துகளை கொட்டுங்க. நம்ம நிறையபேர குத்துற மாதி இருக்கு பொஸ்.

இது சுட்ட இடம் http://utamilan.blogspot.com/2004_02_01_ut...an_archive.html
Reply
#4
பேச்சே இல்லை?
Reply
#5
<img src='http://smileys.smileycentral.com/cat/4/4_16_1.gif' border='0' alt='user posted image'> <img src='http://smileys.smileycentral.com/cat/4/4_16_1.gif' border='0' alt='user posted image'> COOL BBC <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#6
நாங்கள் கவலைப்படத் தேவையில்லை...எழுதியவருக்குப் பொறாமை அதிகம் என்பது எழுதிய விதத்தில தெரியுது...ஏன் அவரும் ஒரு முகமூடியப் போட்டுக் கொண்டு வந்து சொல்ல வேண்டியதைச் சொல்ல வேண்டியதுதானே....அதைவிட்டுவிட்டு இப்படித்தான் எழுத வேண்டும் என்று சொல்ல அவர் என்ன எல்லாம் அறிந்த ஞானியோ....?!

தூர இருந்து திட்டித் தீர்ப்பதிலும் பார்க்க பங்காளியாகி நல்லதுகள் செய்யலாமே...நல்லவற்றைச் செய்ய பெயரும் முகவரியும் தேவையில்லை...யாருக்கோ சொந்தமான பூமியில் வாழுகின்றோம்....பூமியில் ஒவ்வொரு மாற்றத்திற்கும் பூமியின் சொந்தக்காரனை... அவரின் முகவரியைத் தேடிக் கொண்டிருந்தால் மனிதன் வாழ முடியுமா என்ன....???! கருத்துக்களத்தில் கருத்தாட முடியுமா என்ன.....????!

காலத்தே பயிர் செய்தால் அன்றி நல்ல அறுவடை கிடையாது.....நாளை இணைய உலகில் இந்த நிலையும் மாறலாம்.....! அவருக்காக அதுவரை நாம் காத்திருக்க முடியுமா என்ன.....????!

நாம் நல்லது செய்கிறோம்... எழுதுகிறோம் என்றால் நாமேன் இந்த விமர்சனங்களின் மீது அக்கறை செலுத்த வேண்டும்.....????!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#7
kuruvikal Wrote:தூர இருந்து திட்டித் தீர்ப்பதிலும் பார்க்க பங்காளியாகி நல்லதுகள் செய்யலாமே
இஞ்சை நீங்கள் பங்காளி எண்ட பெயரிலை கொத்தடிமையாயிருக்கவெல்லே சொல்லுறியள்.. அல்லாது மறுத்தால் கிட்ட இருந்தே திட்டித் தீர்க்கிறயள்.. அதுதான் அவருக்கும் உங்களுக்கும் வித்தியாசம்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#8
vasisutha Wrote:<img src='http://smileys.smileycentral.com/cat/4/4_16_1.gif' border='0' alt='user posted image'> <img src='http://smileys.smileycentral.com/cat/4/4_16_1.gif' border='0' alt='user posted image'> COOL BBC <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

தாங்க்ஸ் வசி
Reply
#9
மேலே எழுதிய கட்ட்டுரையை எழுதியது ஒரு இந்தியத் தமிழன் என்பது தெள்ளத்தெளிவாக விளங்குகிறது இல்லையா நண்பர்களே. நாம் எமது இனத்தைப்பற்றிக் கதைத்தால் இவனுக்கென்ன என்று விளங்கயில்லை. இலங்கைத்தமிழர்கள் இலங்கைப் பிரச்சினையைப் பற்றிக் கதைக்காமல் வேறு எதை கதைப்பதென்று எழுதியவருக்கு விளங்கயில்லை. கதைப்பதற்கு வெறு நிறைய விடயங்கள் உள்ளதுதான் ஆனால் இலங்கைத்தமிழனைப் பொறுத்தவரை தற்போது முன்னிலையில் நிற்பது எமது இனப்பிரச்சினைதான் என்பது எழிதியவருக்கு தெரிய வாய்ப்பே இல்லை. ஏனெனில் பக்கத்து தமிழ் உறவுகளுக்கு என்ன நடப்பதென்பதே தெரியாத அல்லது தெரிந்தும் இவன் ஆரோ என இருக்கும் நடைப்பிணங்கள். இவர்களின் கருத்தையெல்லம் ஒரு கட்டுரை என்று பிபிசி ஏழுதியிருக்கிறார். பெரியப்பு சொல்லுவதுபோல் அவர்கள் கொத்தடிமைகளாகத்தான் இப்போதும் உள்ளார்கள். அவர்களுக்கு அவர்கள் யார் என்றே தெரியாமல் எவன் என்ன சொன்னாலும் ஆமாம் சார் போடும் ஜென்மன்கள். காசைகாட்டினால் எதுவும் செய்யும் கூட்டம்(???? :rollSmile.
...... 8)
Reply
#10
adipadda_tamilan Wrote:மேலே எழுதிய கட்ட்டுரையை எழுதியது ஒரு இந்தியத் தமிழன் என்பது தெள்ளத்தெளிவாக விளங்குகிறது இல்லையா நண்பர்களே. நாம் எமது இனத்தைப்பற்றிக் கதைத்தால் இவனுக்கென்ன என்று விளங்கயில்லை. இலங்கைத்தமிழர்கள் இலங்கைப் பிரச்சினையைப் பற்றிக் கதைக்காமல் வேறு எதை கதைப்பதென்று எழுதியவருக்கு விளங்கயில்லை. கதைப்பதற்கு வெறு நிறைய விடயங்கள் உள்ளதுதான் ஆனால் இலங்கைத்தமிழனைப் பொறுத்தவரை தற்போது முன்னிலையில் நிற்பது எமது இனப்பிரச்சினைதான் என்பது எழிதியவருக்கு தெரிய வாய்ப்பே இல்லை. ஏனெனில் பக்கத்து தமிழ் உறவுகளுக்கு என்ன நடப்பதென்பதே தெரியாத அல்லது தெரிந்தும் இவன் ஆரோ என இருக்கும் நடைப்பிணங்கள். இவர்களின் கருத்தையெல்லம் ஒரு கட்டுரை என்று பிபிசி ஏழுதியிருக்கிறார். பெரியப்பு சொல்லுவதுபோல் அவர்கள் கொத்தடிமைகளாகத்தான் இப்போதும் உள்ளார்கள். அவர்களுக்கு அவர்கள் யார் என்றே தெரியாமல் எவன் என்ன சொன்னாலும் ஆமாம் சார் போடும் ஜென்மன்கள். காசைகாட்டினால் எதுவும் செய்யும் கூட்டம்(????).
அடிவாங்கித்தானிருக்கிறியள்.. இரத்தக்காயம் தெரியிது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#11
ஒரு பார்வையில் இணைய அரட்டை மாதிரி இணையக் கருத்துக்களங்களங்களும் வெட்டி வேலை மாதிரி தோற்றப்பாட்டினை கொண்டிருந்தாலும் இவற்றின் இன்னோரன்ன பயன்களையும் புறந்தள்ளி விட முடியாது
உதாரணமாக தமிழர் நாகரீகம் பற்றி ஒரு விவாதம் வரும் போது பல்வேறு தரப்பட்ட அறிவாளர்களின் கருத்தையும் ஒரு சேர அறிய முடியும் அதேவேளையில் ஆதாரங்களற்ற எடுகோள்களின் பின்னணியில் தனிப்பட்டவர்களால் முன்வைக்கப்படும் கருத்துக்களையும் நம்ப வேண்டிய சூழ்நிலை காணப்படுகின்றது
அதே போன்று தனிநபர் மீதான தூற்றுதல்களே இன்று கருத்துக்களங்களில் அதிகம் காணப்படுகின்றது தாம் முன் வைக்க வேண்டிய கருத்தை நாகரீகமான முறையில் முன் வைப்பவர்கள் குறைவு இவற்றை தவிர்த்துக்கொண்டால் கருத்துக்களங்கள் மூலம் சிறந்த பயன் கிடைப்பது திண்ணம்
Reply
#12
adipadda_tamilan Wrote:மேலே எழுதிய கட்ட்டுரையை எழுதியது ஒரு இந்தியத் தமிழன் என்பது தெள்ளத்தெளிவாக விளங்குகிறது இல்லையா நண்பர்களே. நாம் எமது இனத்தைப்பற்றிக் கதைத்தால் இவனுக்கென்ன என்று விளங்கயில்லை. இலங்கைத்தமிழர்கள் இலங்கைப் பிரச்சினையைப் பற்றிக் கதைக்காமல் வேறு எதை கதைப்பதென்று எழுதியவருக்கு விளங்கயில்லை. கதைப்பதற்கு வெறு நிறைய விடயங்கள் உள்ளதுதான் ஆனால் இலங்கைத்தமிழனைப் பொறுத்தவரை தற்போது முன்னிலையில் நிற்பது எமது இனப்பிரச்சினைதான் என்பது எழிதியவருக்கு தெரிய வாய்ப்பே இல்லை. ஏனெனில் பக்கத்து தமிழ் உறவுகளுக்கு என்ன நடப்பதென்பதே தெரியாத அல்லது தெரிந்தும் இவன் ஆரோ என இருக்கும் நடைப்பிணங்கள். இவர்களின் கருத்தையெல்லம் ஒரு கட்டுரை என்று பிபிசி ஏழுதியிருக்கிறார். பெரியப்பு சொல்லுவதுபோல் அவர்கள் கொத்தடிமைகளாகத்தான் இப்போதும் உள்ளார்கள். அவர்களுக்கு அவர்கள் யார் என்றே தெரியாமல் எவன் என்ன சொன்னாலும் ஆமாம் சார் போடும் ஜென்மன்கள். காசைகாட்டினால் எதுவும் செய்யும் கூட்டம்(???? :rollSmile.


இதை இந்தியதமிழன் எழுதினாங்களா இல்லையா? அது எனக்கு தெரியாது. நம்ம பிரச்சனை அந்த விமர்சனத்துல ஏதுசரி உண்மை இருக்கா இல்லையான்னு சுயபரிசோதனை செய்து பார்க்கணும். உண்மையா இருந்தா எடுத்துக்கங்க இல்லேன்னா அதபத்தி விளக்கமா ஏன் இல்லைன்னு மத்தவஙக்ளுக்கு சொல்லுங்க. அதுக்குதானே கருத்துகளம் பொஸ்?

நீங்க அத எழுதினவனை ரொம்ப விமர்சிக்கிறதை பார்க்கும் போது அது உங்களை ரொம்ப குத்தியிருக்கு போல இருக்கு. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#13
Eelavan Wrote:ஒரு பார்வையில் இணைய அரட்டை மாதிரி இணையக் கருத்துக்களங்களங்களும் வெட்டி வேலை மாதிரி தோற்றப்பாட்டினை கொண்டிருந்தாலும் இவற்றின் இன்னோரன்ன பயன்களையும் புறந்தள்ளி விட முடியாது

உண்மை
Eelavan Wrote:உதாரணமாக தமிழர் நாகரீகம் பற்றி ஒரு விவாதம் வரும் போது பல்வேறு தரப்பட்ட அறிவாளர்களின் கருத்தையும் ஒரு சேர அறிய முடியும் அதேவேளையில் ஆதாரங்களற்ற எடுகோள்களின் பின்னணியில் தனிப்பட்டவர்களால் முன்வைக்கப்படும் கருத்துக்களையும் நம்ப வேண்டிய சூழ்நிலை காணப்படுகின்றது.

உண்மை
Eelavan Wrote:அதே போன்று தனிநபர் மீதான தூற்றுதல்களே இன்று கருத்துக்களங்களில் அதிகம் காணப்படுகின்றது

உண்மையோ உண்மை
Eelavan Wrote:தாம் முன் வைக்க வேண்டிய கருத்தை நாகரீகமான முறையில் முன் வைப்பவர்கள் குறைவு இவற்றை தவிர்த்துக்கொண்டால் கருத்துக்களங்கள் மூலம் சிறந்த பயன் கிடைப்பது திண்ணம்

உண்மை
Reply
#14
தம்பி பிபிசி .உண்மையை தணிக்கை செய்யாமல் எழுதவிட்டால் யாழ் கருத்துக் களத்தையும் ஜரோப்பாவில் சிறந்த களமாக கொண்டுவரலாம்.(நடுநிலை கருத்துக் களமாக இருக்கவேண்டும்)
Reply
#15
தமிழ்கருத்துக்களம் ஒரு வெட்டிவேலையா... :?: :!:
நம்மள வெட்டி ஆட்கள் எண்டிற்றேன்க (நம்ம யாழ் நண்பர்களை)
:? :roll: :oops: :wink: :mrgreen:
Reply
#16
<b>
Quote:நல்லவற்றைச் செய்ய பெயரும் முகவரியும் தேவையில்லை...யாருக்கோ சொந்தமான பூமியில் வாழுகின்றோம்....பூமியில் ஒவ்வொரு மாற்றத்திற்கும் பூமியின் சொந்தக்காரனை... அவரின் முகவரியைத் தேடிக் கொண்டிருந்தால் மனிதன் வாழ முடியுமா...
அருமையான கருத்து....
சேவைகள் செய்ய சுயவிலாசங்கள் தேவை இல்லை - புதுமொழி Idea
உண்மையின் முன்னால் நடுநிலை என்பது இல்லை - அமரர் கஜன்</b> Idea

கருத்துக்களத்தை அரட்டை களமாக மாற்றாவிட்டால் மேலே சொன்ன யதார்தத்துடன் எழுதினால் கருத்துக்களமும் கருத்துக்களும் எல்லாருக்கும் எல்லாவகையினருக்கும் எப்பவும் இன்றி அமையாத ஒரு நல்ல பொக்கிசம்
நடுநிலமையுடன் கருத்துக்களத்தில் கருத்தாடுவதை விட மேளவாத்தியத்துக்கு போய் சிங் சக் போடலாம் Idea :wink:
Reply
#17
Rajan Wrote:தம்பி பிபிசி .உண்மையை தணிக்கை செய்யாமல் எழுதவிட்டால் யாழ் கருத்துக் களத்தையும் ஜரோப்பாவில் சிறந்த களமாக கொண்டுவரலாம்.(நடுநிலை கருத்துக் களமாக இருக்கவேண்டும்)

பிரச்சனையே எது உண்மையின்னு கண்டுபிடிக்கிறது தான்.
Reply
#18
anpagam Wrote:தமிழ்கருத்துக்களம் ஒரு வெட்டிவேலையா... :?: :!:
நம்மள வெட்டி ஆட்கள் எண்டிற்றேன்க (நம்ம யாழ் நண்பர்களை)
:? :roll: :oops: :wink: :mrgreen:

அதபத்தி எனக்கு தெரியாது <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#19
anpagam Wrote:சேவைகள் செய்ய சுயவிலாசங்கள் தேவை இல்லை - புதுமொழி Idea

ஒரு டவுட் பொஸ். அதுதான் காரணமா? இல்லைன்னா பேரை போட்டா எது சரி பிரச்சனை வந்தாலும் சொல்லி? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

anpagam Wrote:உண்மையின் முன்னால் நடுநிலை என்பது இல்லை - அமரர் கஜன் Idea

அது யாரு அமரர் கஜன்?


anpagam Wrote:கருத்துக்களத்தை அரட்டை களமாக மாற்றாவிட்டால் ...

அப்ப நாம் இப்ப அரட்டைதான் அடிக்கிறோம்ன்னு சொல்றீங்க? :wink:
Reply
#20
[quote=anpagam]நடுநிலமையுடன் கருத்துக்களத்தில் கருத்தாடுவதை விட மேளவாத்தியத்துக்கு போய் சிங் சக் போடலாம்தணிக்கை.. அச்சுறுத்தல்.. மிரட்டல்.. வன்முறை.. இதுகள்தானே உங்களது சிங் சக் மாற்றுக்கருத்து..

நான் நினைக்கிறன் நீங்கள் சக் சிங் போடுறியள்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)