Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யாழ் இணையம் உங்களுக்கு எப்படி அறிமுகமானது?
#1
<span style='font-size:30pt;line-height:100%'><b>யாழ் இணையம் உங்களுக்கு எப்படி அறிமுகமானது?</b></span>

<b>யாழ் இணையம் என்கிற ஒரு இணையத்தளம் இருப்பது உங்களுக்கு எப்படித் தெரிய வந்தது? நண்பர்கள் மூலமா அல்லது கூகிள் தளமூடாகவா? அல்லது வேறு தமிழ் தளங்களூடாகவா?

யாழ் கருத்துக்களத்தில் இணைய வேண்டும் என்கிற ஆர்வம் எப்படி வந்தது? யாழில் நடந்த விவாதங்களா? கவிதை கதை போன்ற ஆக்கங்களா? அல்லது வேறு ஏதுமா?</b>


Reply
#2
என்ர அண்ணாட திருமண வீட்டுக்கு பாரிசில் இருந்து வந்த ஒருவருக்கும் எனக்கும் வாக்கு வாதம் நான் சொன்னன் தமிழ் நாதம் தான் நல்லம் என்று அவர் சொன்னார் யாழ் தான் நல்லம் என்று இறுதியா அவர் பெரியவர் என்பதால சொன்னார் நீர் போய் யாழில் இணைந்து பார்த்து சொல்லும் என்று. அதன் படியே இணைந்தேன். யாழ் என்னை கவர்ந்தது இறுதியில் அவர் தான் வென்றார். நான் தோற்றாலும் நல்லதோர் இடத்தில் இணைந்ததில் மகிழ்ச்சி.
யாழில் இணையத்தோன்றியது நாமும் ஏதாவது எழுத வேண்டும் என்கின்ற ஆவல்...மற்றவர்களின் எழுத்துக்களில் இருந்து தான் அந்த ஆவல் எனக்குள் எழுந்தது...

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
எனக்கு தமிழ் நாதம் இணையத்தளத்தின் மூலம் யாழ் இணையத்தளத்தினைப்பற்றி தெரியவந்தது. புதினம்,சங்கதி,பதிவு, நிதர்சனம் போன்றவற்றில் வராத செய்திகள், வாசகர்களின் கருத்துக்கள் போன்றவற்றினால் யாழ்களம் என்னைக்கவர்ந்து என்னையும் இணையத்தூண்டியது. பலவிடயங்களினை,செய்திகளினை அறியக்கூடியதாக உள்ளது. எனது ஊரினைச்சேர்ந்த கனடாவில் வசிக்கும் சபேசன்,ஜேர்மனியில் வசிக்கும் சாந்தி ரமேஸ் போன்றவர்களும், சென்னையில் பழகிய ஆதிபன் போன்றவர்களையும் மீண்டும் தொடர்பு கொள்ள யாழ்களம் எனக்கு உதவிசெய்தது. 8வது அடியில் காலடி வைக்கும் யாழ்களத்துக்கும், மோகன் அண்ணாவுக்கும் எனது வாழ்த்துக்கள்.
,
,
Reply
#4
எனக்கு தமிழ் நாதம் இணையத்தளத்தின் மூலம் யாழ் இணையத்தளத்தினைப்பற்றி தெரியவந்தது. அதன் பின் கடந்த நான்கு வருடங்களாக யாழ் இணையத்துடன் இணைந்து உள்ளேன்.
" "
Reply
#5
எனக்கு தமிழ் நாதம் இணையத்தளத்தின் மூலம் யாழ் இணையத்தளத்தினைப்பற்றி தெரியவந்தது. அதன் பின் கடந்த 2 வருடங்களாக யாழ் இணையத்துடன் இணைந்து உள்ளேன்.
Reply
#6
எனக்கு 4வருடங்களாக அறிமுகமாகி இருந்தாலும், சென்ற ஆனி இருந்து தான் இணைந்து கொண்டேன். அப்போது தமிழில் பெரிதாக பதிவு செய்ய முடியாததால் அதிகம் எழுதுவதில்லை. இப்போது தான் ஏதோ கொஞ்சம் பதிவு செய்ய முடிகின்றது. Idea :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

முன்பெல்லாம் யாகு அரட்டை அறை தான் தஞ்சம். அங்கே உண்மையான அல்லது, உருப்படியான நட்புக்களையோ, உறவுகளையோ பெறமுடியவில்லை. ஆனால் யாழ் வந்தபின்பு விவாதங்களால் பலருடன் வாக்குவாதப்பட்டாலும் எல்லோரையும் நெருங்கிய சொந்தங்களாகவே உணர முடிகின்றது!!

என்னுமொன்று சொல்லவேண்டும். நான் எழுதிய கருத்துக்கள் எவருடைய மனதைப் புண்படுத்தி இருந்தாலும் மன்னித்துக் கொள்ளுங்கள். அவற்றை மறந்து நல்ல உறவுகளாக இருப்போம். (எல்லாம் பிறகாலத்தில் பழி தீர்க்க கூடாது என்ற தற்பாதுகாப்பு உணர்ச்சி தான் :wink: )
[size=14] ' '
Reply
#7
எனக்கும் நண்பர்களால் தான் யாழ் களம் அறிமுகமானது.அறிமுகமான அன்றே இணைந்து கொண்டேன்...ஆனால் தொடர்ந்து கருத்துக்களை வாசித்ததில்லை.2005 மார்கழியில் ஒருநாள் அஜீவன் அண்ணா தன் யாழ் கள நண்பர்களான சோழியன் அண்ணா ரசி அக்கா றமாக்கா இப்படியான பலருடன் உரையாடும் சந்தர்ப்பத்தை தந்த போது அவர்களுடைய அந்நியோன்யத்தை பார்த்தே யாழுக்கு வந்தேன்.<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

தூயவன் அண்ணா உங்கட தற்பாதுகாப்பு முயற்சியும் வெற்றி பெறட்டும். :wink:
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
#8
<img src='http://img240.imageshack.us/img240/2246/iron3gv.th.jpg' border='0' alt='user posted image'><img src='http://img86.imageshack.us/img86/9034/conceptualanimation321gk.gif' border='0' alt='user posted image'>
Reply
#9
நல்வாழ்த்துக்கள்
Reply
#10
மன்னிக்கவும் தவறுதலாக அனுப்பபட்டுவிட்டது
<span style='font-size:25pt;line-height:100%'>எல்லாம் இந்த அரசியல் விவதத்தால் தான்...............</span>
<img src='http://img240.imageshack.us/img240/2246/iron3gv.th.jpg' border='0' alt='user posted image'><img src='http://img86.imageshack.us/img86/9034/conceptualanimation321gk.gif' border='0' alt='user posted image'>
Reply
#11
பெங்களுரில் இருந்த நண்பர் ஒருவர் தொலைபேசி மூலம் எனக்கு யாழ் இணையத் தளத்தைப் பற்றிச் சொன்னார்.... எப்படியோ தட்டுத் தடுமாறி நானும் இங்கே ஆயிரம் அஞ்சல்களுக்கு மேல் செய்திருக்கிறேன்.....
,
......
Reply
#12
எனது கருத்துக்களினைச்சொல்ல ஒரு ஊடகம் ஒன்று எனக்குத் தேவைப்பட்டது. யாழ் இணையத்தினைப்பார்த்தபின்பு, தேசியத்தலைவரின் 51 வது அகவை அன்று எனது முதலாவது கருத்தினை யாழில் பதித்தேன்.

உணர்ச்சிவசப்பட்டு எழுதிய சில கருத்துக்கள் உங்களின் மனதினைப்புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.

தேசியப்போராட்டத்தினை வளர்க்க பங்களிப்புச்செய்யும் யாழ்களத்துக்கு எனது வாழ்த்துக்கள்.
! ?
'' .. ?
! ?.
Reply
#13
எனக்கு தமிழ் நாதம் இணைப்பு மூலம் அறிய கிடைச்சுது...2வரு சமாக பார்க்கிறனான்..உதிலை குருவியரின் வாதமும் பந்தி பந்தியாய் தமிழிலை எழுதினதை கண்டோனை எனக்கும் ஒரு ஆசை வந்தது இணைந்தது தான் ...ராசா இளஞன்..8 வருசமாய் இதுக்குளை ஓடி திரியிற பழைய உறவுகள் விவாதங்கள் நடப்புகள் பற்றி ஒரு மீள் பார்வையை செய்யன் பார்ப்பம் தமாசாய்...உதராணமாக...சந்தோசங்கள் சண்டைகள் மறக்க முடியாதவை அப்பிடி இப்பிடியெனறு...
Reply
#14
என்னை கவர்ந்து இங்கு இழுத்தவர் எங்கட முகக்குறிமன்னன், சீ5** ... சின்னப்பு தான்... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#15
யாழ்களம் எனக்கு கூகிள் மூலம் மூன்று வருடங்களுக்கு முன்பு அறிமுகமாகியது ஆரம்பத்தில எனக்கு தமிழ் எழுதுறதில கஸ்டமாக இருந்ததால பார்வையாளராக மட்டுமே இருந்தன் கடந்த வருடம் தையில தான் அங்கத்தவராக இணைந்தேன்
. .
.
Reply
#16
யாழ்களம் எனக்கு அறிமுகம் வேறு ஒரு தளத்தின் மூலமாக்தான். இது ஒரு ஐந்து ஆண்டுகளிற்கு முன் நடந்தது. அதன் பின்னர் யாழுடனான தொடர்பு இல்லாதிருந்து 2002ம் ஆண்டிற்குப் பின் தொடர்பு ஏற்பட்டது. அதன்பின் இங்கு நடந்த பரிமாறப்பட்ட கருத்துக்கள் என்னையும் ஒருவனாக இங்கு இணைய வைத்தது ஆயினும் சிறிது காலத்தின் பின்னே இதில் எழுத முயன்றேன்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#17
நல்ல சுவாரசியமான ,முக்கியமானா கேள்வி.யாழ்க் களத்தின் வளர்ச்சிக்கு தேவையான கேள்வி.
,முக்கியமாக நெடு நாளய அங்கத்வர்கள் எழுத வேண்டிய விடயம்.இழஞ்சன் நீர் என்ன கேள்வி மட்டும் தானா கேப்பீர் ,உமது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள மாட்டீரா?

எனக்கு எல்லா விடயமும் சரியாக நாபகத்தில இல்ல,ஆனா யாழ்க் களம் பாமினியில இருக்கேக்க மதிவதனனுடன் பலர் அரசியல் விவாதங்களில் கலந்து கொண்டது, பல புல எழுத்தாளர்கள் கலந்து கொண்ட விவாதங்கள் படித்ததாக நாபகம், எனக்கு அப்போது பாமினியில் எழுதுவது மிகவும் கஸ்டமாக இருந்ததாலும், டயல் அப் இணயத் தொடர்பே இருந்ததாலும் எழுதவில்லை.

பின்னர் ஒரு நாள் புலம் பெயர்ந்த பின், கூகிளில் தாரகி இறந்த சமயம் எதோ தேடிய போது , யாழ்க் களம் யுனி கோடுக்கு மாறி இருந்த படியால் சில கட்டுரைகள் அகப் பட்டன.அப்போது தான் தெரிந்தது யாழ்க் களம் யுனி கோடுக்கு மாறி இருந்தது.

அத்தோடு தாரகியின் கொலை என்னை வெகுவாகப் பாதித்த படியால், அவரின் இழப்பை இணயத்தில் ஈடு செய்வதற்காக, அவரது பெயரிலயே யாழ்க் களதில் இணைந்து எழுத முயற்ச்சி செய்தேன்.ஆனால் அது மிகப் பெரிய பொறுப்பாக இருந்தது,எனக்குக் கிடைக்கும் நேரம் அந்தப் பெயருக்கு ஏற்றவகையில் எழுத சாதகமானதாக இருக்கவில்லை.அதோடு யாழ்க் களத்தில் கருத்தியல் வன் முறையும், தான் தோன்றித் தனமான கருத்தாடல்களும், குழு மன வாதமும், தமது சொந்த நிலைகளுக்குள் இருந்து தேசிய விடுதலைப் போராட்டத்தயும், தமிழ்த் தேசிய இனவிடுதலை, தமிழ்த் தேசிய அடயாளம் பற்றி பல சிறு பிள்ளைத் தனமான கருத்துக்கள் பலரால் தெரிவிக்கப் பட்டு வந்தது எனக்கு இவற்றிற்கு எதிராக ,அதே கருத்தியல் வன்முறைப் பாணியில் பதிலடியாக எழுத வேண்டிய நிலயை உண்டு பண்ணியது.

ஒரு நாள் திடீரென அவ்வாறு எழுந்த உத்வேகத்தில் உருவானதே நாரதர் அவதாரம்.

இன்று அதற்கான தேவை வெகுவாகக் குறைந்து விட்டது.யாழ்க் களம் வளர வேண்டும் என்று விருப்பம் உண்டு.அதற்காக எல்லாரும் இணைந்து செயற்பட வேண்டும்.பல்வேறு நாடுகளில் இருக்கும் பல்வேறு தரப்பட்டவர்களும் இன்று இணைந்து வருகின்றனர்.ஒரு காலத்தில் கருத்தியல் வன்முறகளால் மன உளச்சலுக்கு உள்ளான கருத்தாளர்களும் மீண்டும் இணைந்து தங்களது பங்களிப்பையும் அழிக்க வேண்டும்.மேலும் வலைப் பூக்களில் எழுதபவர்களும் இங்கே கருத்தாடலில் ஈடுபட்டால் இன்னும் யாழ்க் களம் சிறக்கும்.

அத்தோடு யாழ்க்களம் வளர்ச்சி அடய அது தனி ஒருவரின் நிதி மூலாதாரத்தில் மட்டுமே தங்கி இருத்தல் என்பது ,அதன் வளர்ச்சியிக்கு தடயாக இருக்கும் என்றே கருதுகிறேன்.யாழ்க் களத்திற்கென சேர்வர்கள் வேண்டும்.
அதற்கு நிதி மூலாதாரம் அவசியம்.இதனை சில நடை முறைகள்,வியாபார முறமைகள் மூலம் ஏற்படுத்தலாம் என்று கருதுகிறேன்.மோகன் அவர்கள் இது பற்றி மேலும் கரிசனை எடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.அதோடு இது பலரது கூட்டு முயற்ச்சினாலயே சாத்தியம் ஆகும்.
இதற்கு கள அங்கத்தவர்கள் உதவுவார்கள் என்றும் நினைக்கிறேன்.
Reply
#18
ம்ம் நானும் உப்பிடித்தான் தமிழ்கனடியனூடாக தமிழ அவுஸ்ரேலியனின் இணைப்பெடுத்து அதனூடாக தமிழ்நாதத்தின் இணைப்பெடுத்து ஒருவாறு யாழை வந்தடைந்தேன். நான் என்னை பதிவு செய்து முதலாவது கருத்து எழுதியது நினைவில் வருகின்றது. "நானும் உள்ளே வரலாம" என உள்னுழைததது எழுதியதை பார்த்து ஒரு உறுப்பினர் கேட்டார் அதுதான் வந்திட்டீரல்லே பிறகென்ன கேள்வி என. என்னை வரவேற்றவர்களில் சிலரை குறிப்பிடுகின்றேன். குருவிகள், தமிழினி அக்கா,சோழியன் அண்ண, இலைஞ்ஞன்,கவிதன், டண், வசம்பு, வசி, சின்னப்பு நிதர்சன், சியாம் மற்றும் தமிழ்நிலா ஆகியோரே. நான் முதல் முறையாக குரிவிகளின் அழகிய ஆழமான கருக்கொண்ட கவி ஒன்றினை யாழில் படித்து அதன் மீதான எனது கருத்தினையும் முன்வைத்தேன். இவ்வாறு ஒரு நல்ல தளத்தினை வந்தடைந்ததனையிட்டு பெருமகிழ்வும் மனநிறைவும் எனக்குள்.
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#19
யாழ் எதேச்சையாக வந்து சேந்த ஒரு தரிப்பிடம் தான். இணைய உலாவி மூலம் தமிழ் பற்றி தட்ட வந்து சேந்தது.. ஆரம்ப காலத்தில்.. பார்வையாளராக இருந்தேன்.. அப்போது.. சோழியான் அண்ணாவின் கதைகள் படிக்ககிடைக்கும்.. கதையைத்தேடி வருவேன். அப்போதெல்லாம் பாமினியை அடிக்க தெரியாது. பாடசாலையில்இருந்து பாத்துவிட்டு ஒரு நாள் பதிந்துவிட்டேன். நான் யாழுடன் நெருங்கியது சுவாரசியமான கதை. குளிர் எனக்கு புதிது பாடங்களுக்கான இடைவெளியில்... கூடப்படிப்பவர்கள் கீழ் இறங்கி புகைப்பிடிப்பார்கள் புகையை கண்டால் எனக்கு வருத்தம் வந்துவிடும். அப்படியே குளிரும் எதிரி கணணியை தேடி நூல்நிலையத்தில் அல்லது வகுப்பறைகளில் இருந்து இணையத்தில் வலம்வருவேன்.. அப்போது.. யாழ் பரீட்சையமானது..

நான் வந்த புதிதில் மதித்தாத்தாவின் நகைச்சுவைகள் (இப்ப சின்னப்பு ரேஞ்சிற்கு) இருக்கும். இப்பத்தையே மாதிரி முகமூடி கதைகள் இருந்தது.. முன்னர் கருத்தெழுதப்பயம்... அப்ப உறுப்பினராக இருந்தவர்கள் உற்சாகம் எழுதவைத்தது. பின்னர் கவிதன் ஹரியண்ணா மழலை சியாம்.. தமிழ்நிலா.. வெண்ணிலா... நித்திலா..தூயா... மதுரன்..குளம் ..வியாசன் அண்ணா. நிதர்சன். வசம்பண்ணா.. குறும்பன் அண்ணா என்று புதிதாக உறுப்பினர்கள் இணைந்தார்கள் மோதல் அற்ற சுமூக கருத்தாட்டம்.. மோதல் வந்தாலும் அதை தீர்த்துக்கொண்டு மற்ற இடத்தில் சகஜமாய் உரையாடுவார்கள்.

அப்படியே சினிமாவுக்கு பின்னாலோடு அஜீவன் அண்ணாவும்.. எப்பவுமே ஓடியோடி பாரதியாரோடு சண்டை போடும் சோழியான் அண்ணாவும்.. சாத்தியக்கா.. சேது அண்ணா.. (இப்ப காணவேகிடைப்பதில்லை) இளைஞன்.. பரணிஅண்ணா.. ஈழவன்அண்ணா பிபிசி மதன் .. குருவி.. வசி.. அதிபன் அண்ணா..அன்பகம்.. சண்முகியக்கா சந்திரவதனாக்கா.. அடிக்கடி வந்த நினைவு.. இப்படி. பலரும் களத்தில் ஜெலித்தார்கள்.. இவர்கள் நான் வர இருந்தவர்கள்.. நான் வந்தப்பிறகு மதித்தாத்தா.. தலைமறை.. தேடுதல் போட்டு ஒருக்கா வந்த நினைவு.. (இதைப்படிச்சா திரும்ப வருவார் என்ற நம்பிக்க.. இல்லை மறந்திட்டாரோ யாழை.. )

யாழின் வளர்ச்சியில் மோகன் அண்ணா இசைகளை இணைக்கக்கூடிய வசதியை செய்து கொடுத்தார். குறும்பண் அண்ணா அழகிய கவிதைகளை பதிவு செய்து இணைப்பார்.. ஒரு சிறந்த அறிவிப்பாளனை காணவில்லை..?? எங்கே போனாரோ.. அப்படியே கவிதன் மதுரன் போன்றவர்களும் அழகிய கவிதைகளையும் தொடர்களையும் இணைப்பார்கள்.. பின்னர்.. நம்ம சின்னா.. முகம்ஸ் சாத்திரி டக்கண்ணா.. அதிரடி நகைச்சுவைக்கதம்பமே களம் இறங்கியது.. துன்பங்கள் துயரங்கள் என்று எல்லாத்தையும் மூட்டைகட்டி வைச்சு சந்தோசமாய் கொஞ்ச நேரம் சிரிக்க முடிந்தது. அடுத்த கட்டம் பல புதிய உறுப்பினர்கள்.. கருத்துக்கள்.. தொடர்கிறது.. அப்படியே தொடரணும்.. வாழ்த்துக்கள்..
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#20
<!--QuoteBegin-Mathuran+-->QUOTE(Mathuran)<!--QuoteEBegin--> என்னை வரவேற்றவர்களில் சிலரை குறிப்பிடுகின்றேன். குருவிகள், தமிழினி அக்கா,சோழியன் அண்ண, இலைஞ்ஞன்,கவிதன், டண், வசம்பு, வசி, சின்னப்பு நிதர்சன்,  சியாம் மற்றும் தமிழ்நிலா ஆகியோரே. .<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இதற்கெல்லாம் மதுரன் கவலைப்படாதையுங்கோ! நாங்கள் அப்போது இருக்கவில்லை. அதனால் தான் வரவேற்கவில்லை :oops: Cry
[size=14] ' '
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)