Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புதிய அடிமைக்கு பழைய அடிமை எச்சரிக்கை
#1
தனது தாயின் பேச்சை மீறி அதிமுகவுடன் கூட்டணி அமைத்து, 'தாய் சொல்லைத் தட்டிய தனயன்' என்ற அவப்பெயரை சம்பாதித்துவிட்டார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ என்று 'தலைமறைவு' சென்னை மாகராட்சி துணை மேயர் கராத்தே தியாகராஜன் கூறியுள்ளார்.

கடந்த பல மாதங்களாகவே தலைமறைவாக இருக்கும் கராத்தே தியாகராஜன் தற்போது இந்தியாவுக்குள் வந்து விட்டதாக கூறப்படுகிறது. தற்போது டெல்லியில் அவர் பதுங்கியிருப்பதாக தெரிகிறது.

இந் நிலையில் டெல்லியிலிருந்து கராத்தே தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தேர்தல் நேரத்தில் அரசியல் அணி மாற்றம் என்பது சாதாரண விஷயம்தான். திமுக வாரிசு அரசியலில் ஈடுபடுகிறது, குடும்ப நலனுக்காக மட்டுமே பாடுகிறது என்று கூறும் வைகோ, தயாநிதி மாறன் மத்திய அமைச்சரவையில் ஈடுபட்டிருப்பதை ஏளனம் செய்துள்ளார்.

கட்சியில் தலைவர்கள் இல்லையா, தியாகிகள் இல்லையா என்றும் கேள்விக் கணைகளைத் தொடுத்துள்ளார். மத்திய அமைச்சராக திறம்பட செயல்பட்டு, பலரது பாராட்டுக்களையும், பிரதமரே மெச்சும் வகையிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் தயாநிதி மாறன்.

அவரது சாதனைகளை உலகமே பாராட்டிக் கொண்டுள்ளது.

இந்தியா முழுவதும் ஒரு ரூபாயில் பேசலாம் என்ற மாபெரும் தொழில்நுட்பப் புரட்சியை செய்துள்ளார். அப்படிப்பட்டுவரை,

திமுகவின் தலை சிறந்த சிந்தனையாளர்களில் ஒருவர் என்று புகழப்பட்ட முரசொலி மாறனின் மகன் என்று கூட பாராமல் வைகோ சிறுமைப்படுத்தி பார்த்தது நியாயத்திற்கு ஒவ்வாத செயல்.

தயாநிதி மாறன் இன்றைக்கு அனைவராலும் மதிக்கப்படுகிற மனிதராக திகழ்கிறார். துடிப்புள்ள இளைஞராக அவர் பணியாற்றி வருகிறார். இன்றைக்கு பொது வாழ்வில் நேர்மை, தூய்மை என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கும் வைகோவின் மதிமுக கடந்த வாஜ்பாய் அரசில் இடம் பெற்றிருந்தபோது என்ன நடந்தது?

அமைச்சராக இருந்த செஞ்சி ராமச்சந்திரன் மீது பலவித ஊழல் புகார்கள் வந்தன. அவரது உதவியாளர் சிபிஐ விசாரணை வளையத்தில் சிக்கினார். இதனால் செஞ்சி ராமச்சந்திரன் பதவி விலகக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. அந்த உதவியாளர் வைகோவின் உறவினர் என்று கூட கூறப்பட்டது.

கடந்த கால சம்பவங்களை வசதியாக மறந்து விட்டு இன்று வைகோ பேட்டியளிக்கிறார். தேர்தல் விதி மீறல்களுக்காக சென்னை காவல்துறை ஆணையர் நடராஜ் மாற்றப்பட்டதைக் கண்டித்து குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

2002ம் ஆண்டு சைதாப்பேட்டை இடைத் தேர்தல் நடந்தபோது தேர்தல் விதிமுறை மீறல்களுக்காக அப்போது மாநகராட்சி ஆணையராக இருந்த சம்பத் தேர்தல் ஆணையத்தால் அதிரடியாக மாற்றப்பட்டாரே, அப்போது வாய் திறக்காதது ஏன்?

இன்றைக்கு தாய் சொல்லைத் தட்டிய தனயன் என்ற அவப்பெயரெடுத்து விட்டாலும கூட, வைகோ தனது தாயார் மீது அளவற்ற பாசம் உள்ளவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

அதேபோல் நானும் எனது தாய் மீது மிகுந்த பாசம் உள்ளவன். ஆனால் இறந்து போன எனது தாய்க்குக் கொள்ளி வைக்கக் கூட முடியாத சூழ்நிலைக்கு ஜெயலலிதா அரசால் தள்ளப்பட்டேன் என்று குமுறியுள்ளார் கராத்தே.

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் காங்கிரஸில் சேர தீவிரமாக முயன்று வந்தார் கராத்தே. ஆனால் அவரை சேர்க்க காங்கிரஸ் கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அந்த முயற்சி தோல்வி அடைந்தது.

இந் நிலையில் தான் திடீரென தயாநிதி மாறனுக்கு 'ஜிங்ங்..சக்' அடித்துள்ளார். இதன் மூலம் திமுகவுக்குத் தாவ அவர் அடி போடுகிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
,
......
Reply
#2
நல்லது!!
ஆனால் பாருங்கோ!! தானே ஜெயலலிதாவிற்கு ஆப்பு வைத்துவிட்டு ஓடி ஒளிஞ்சு நிற்கின்றார். ஆனால் இவர் மற்றவர்களைப் பற்றி கதைக்கின்றார்.
ரெம்பத் தான் லொள்ளு!!!
[size=14] ' '
Reply
#3
தூயவன் வார்த்தைகளை அள்ளி வீசாதீர்கள்.....

தியாகராஜனை மலேசியாவில் வைத்து பாதுகாத்தவர்கள் ஈழத்தமிழர்கள்.... இந்தக் கூத்தை எங்கே போய் சொல்வது?
,
......
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)