Ilango Wrote:அஜீவன்
நடந்தது நடந்துவிட்டது.
திரைப்படவிழாவை செய்தவர்களுக்கு இது முதல் அனுபவமாக இருக்கலாம்.
சிலவிடயங்களை கவனிக்க தவறியிருக்கலாம். இனி இப்படி நடக்காது இருக்க இது ஒரு அனுபவமாக இருக்கும்.
வளர்ந்துவரும் கலைஞர்களை தொடர்ந்து இப்படி விமர்சனம் செய்வது நல்லதாக எனக்குப்படவில்லை. எனவே இந்தவிடயத்தை இத்துடன் விட்டுவிடுங்கள்.
(இது எனது தனிப்பட்ட கருத்து)
![[Image: enter.gif]](http://images.google.ch/images?q=tbn:X5jhlo8ntjoJ:www.sissymary.com/enter.gif)
[size=15]எனக்கும் தெரியும். இருப்பினும் செய்த தவறை ஏற்றுக் கொள்ளும் துணிவு.அதற்கு மன்னிப்பு கேட்க வேண்டாம்.ஆகக் குறைந்தது வருத்தமாவது தெரிவிக்கலாம்.
தவறை ஒப்புக் கொள்ளும் பக்குவமாவது தேவை.அதைவிட்டு நியாயப்படுத்தி பேசுவது கூட தவறாக தெரியாமலிருக்கிறதே?
இப்படியான நல்ல திரை விழா நிகழ்வுகளுக்கு வாழ்த்துவதும் ஆதரவளிப்பதும் எமது தார்மீக கடமை.
உதாரணமாக லண்டனில் ஈழவர் திரைக்கலை மன்றத்தினருக்காக செய்த அழியாத கவிதையின் குறும்பட அனைத்து பகுதிகளும் என்னிடம்தான் இருக்கின்றன. அதன் திரைக்கதை-ஒளிப்பதிவு-இயக்கம் ஆகியவற்றின் பின் தொகுப்புக்காக இங்கு கொண்டு வந்தேன். தொகுப்பின் பின் சினிமா சார்ந்த சிலரிடம் அதைக் காண்பித்து சில மாற்றங்கள் செய்தேன்.அது எனது தொகுப்பு மேசையில்.இறுதி முடிவான பின் குறும்படத்தை அவர்களிடம் கொடுத்து விட்டு மௌனமாக இருக்கிறேன். அது பற்றிய விமர்சனங்கள் வந்தால் பேசுவேன். ஏனைய விடயங்கள் தயாரிப்பாளருடையது. அதை வேறு எங்காவது திரையிடவோ கொடுக்கவோ எனக்கு உரிமையில்லை.
அதுபோலவே எமது குறும்பட விழாவுக்கு வந்த 100க்கும் மேலான குறும்படங்கள் என்னிடமுள்ளன. அவற்றை அதற்குரியவர்களது எழுத்து மூல அனுமதியின்றி எதுவும் செய்யும் உரிமை எனக்கு இல்லை.
சுவிசில் ஒளிப்பதிவு செய்து தொகுக்கப்படும் நண்பர்களது படங்களின் பகுதிகளை பிரதி செய்து நான் எடுத்து வருவதுண்டு. காரணம் சில கருத்துகளை அல்லது மாற்றங்களைச் சொல்ல பல முறை நான் பார்க்க வேண்டியிருப்பதால். ஆனால் இவற்றை நான் யாருக்கும் காண்பிப்பது கூட கிடையாது.
இதைத்தான் வியாபாரிகள் நாணயம் என்பது.
எனது தயாரிப்பு குறும்படங்களான எச்சில் போர்வை
நிழல் யுத்தம்
யாத்திரை
பீல் த பெயின்
ஆகியவை யாரும் திiயிடவோ பிரதி பண்ணவோ அனுமதியுள்ளவை.எதுவித உரிமமும் இல்லாதவை.அவற்றுக்கு நான் மட்டுமே பொறுப்பு.
அடுத்தவருடன் இணைந்து செயலாற்றியதற்காகத்தான் போராடுகிறேன்.
இதுபோல் இனி நடக்கக் கூடாது என்பதுடன் தெரியாதவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதுமே எனது ஆதங்கம். அதைப் புரிந்து கொண்டாலே போதும்.
எனது நண்பர் ஒருவர் என்னைத் தொடர்பு கொண்டு இவர்களது படத்தை நாம் சுவிசில் வெளியிடுவதாக விளம்பரம் செய்வோம். அவர்கள் என்ன செய்ய முடியும்? பார்க்கலாம் என்றார்.
அதற்கு நான் இதுபோல அவர்களுக்கும் நடக்கக் கூடாதென்பதே எனது ஆதங்கம் என்றேன். இதுதான் எனது குறிக்கோள் இளங்கோ.
யாருடைய படத்தையும் வீடுகளில் பார்க்கலாம். ஆனால் விழாவொன்றில்..................வேண்டாம் இதற்கு மேலும்.............................
நமது கலை வளர வேண்டுமானால் சம்பந்தப்பட்ட கலைஞர்கள்தான் கௌரவிக்கப்பட வேண்டும்.அந்த தவறை நான் செய்தாலும் என்னையும் தூக்கி எறியுங்கள்.......................
இரத்தத்தைச் சிந்தி உழைக்கும் தொழிளாளிக்கு கிடைக்காத பெருமை வாங்கி விற்ற முதலாளிக்கு கிடைக்குமானால் நியாயங்களுக்காக வாதாடும் சனநாயகம் தேவையற்றது.
அன்புடன் மௌனியாகிறேன்.
AJeevan