யார் இந்தக் கூலும் கூலின் வரலாற்றுப் பின்னணியும்.
1983ம் ஆண்டு காலப்பகுதியில் தமிழீழ தேசிய விடுதலை முன்னணி என்னும் ஒரு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த இயக்கமானது 1986ம் ஆண்டு தைமாதம் 20திகதி இரு குழுக்களாக உடைந்து தமிழீழ தேசிய விடுதலை முன்னணி என்.எல்.எவ்.பி; Nடுகுவு - யேவழையெட டுiடிநசயவழைn குசழவெ ழக வுயஅடை நுநடயஅ ஆக பிளவுபட்டது. அதிலிருந்து விசுவானந்ததேவன் தலைமையிலான குழுவினர் தமிழீழ மக்கள் விடுதலை முன்னணி Pநழிடந டுiடிநசயவழைn குசழவெ ழக வுயஅடை நநடயஅ என்ற பெயரில் இயங்கத் தொடங்கினர். இவ்வாறு பிளவுபட்ட போது விசுவானந்ததேவன் தலைமையிலான குழு தமது பிரிவினருக்கு எந்தப் பெயர் வைப்பது என்று விவாதித்து பின்னர் புரட்சிகர ஈழத்தேசிய விடுதலை முன்னணி டுiடிநசயவழைn யேவழையெட குசழவெ ழுக வுயஅடை ஆர்.என்.எல்.எவ்.ரி என்னும் பெயரை முதலில் தெரிவு செய்தார்கள். எனினும் இந்தப் பேரை வைப்பது தமிழ் மாறன் தலைமையிலான தமிழீழ ஈழத்தேசிய விடுதலை முன்னணி என்.எல்.எவ்.பி என்னும் குழுவுக்க எதிரான குழு என்று பொருள்படும் எனக் கருதியதால் மாற்றுப் பெயர் பற்றி விவாதிகப்பட்டு மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) என்னும் பெயர் பற்றித் தீர்மானித்த போது எற்கனவே தென்பகுதியில் ஜே.வி.பி ஜெனதா விமுக்தி பிரமுன இயங்குவதனால் அப்பெயரும் கைவிடப்பட்டு தமிழீழ மக்கள் விடுதலை முன்னணி pடநழிடந டுiடிநசயவழைn குசழவெ ழுக வுயஅடைநுநடயஅ என்னும் பெயர் வைக்கப்பட்டது. தமிழ்மாறன் தலைமையிலான தமிழீழத் தேசிய விடுதலை முன்னணி Nடுகுவு - யேவழையெட டுiடிநசயவழைn குசழவெ ழக வுயஅடை நுநடயஅ என்.எல்.எவ்.பி என்னும் அதே பெயரில் தொடர்ந்தும் செயற்பட்டனர்.
இவ்வாறு ஆரம்பிக்பப்பட்ட பி.எல்.எவ்.பி அமைப்புக்குப் புத்துயிர் கொடுக்கும் வேலைகளில் டாக்டர் சிறீதரன் ஈடுபட்டார். எனினும் ஊழியர்களை வழிகாட்டித் தம்முடன் ஈர்த்துச் செல்லும் திறமை இவருக்குக் குறைவு என்றபடியால் ஆரம்பத்தில் பி.எல்.எவ்.பி உறுப்பினர்களையும் இவரால் வழிநடாத்த முடியவில்லை.
சுpறீதரனுடைய தூண்டுதலின் பேரிலேயே பி.எல்.எவ்.பி அமைப்புக்குள்ளேயும் வெளியேயும் உள்ள சக்திகளுக்குத் தென்பூட்டும் நோக்குடனும் அரசியல் தெழிவூட்ட நோக்குடனும் புதிய சமுதாயம் என்ற பெயரில் ஒரு அரசியல் தத்துவார்த்த ஏடு வெளியிடப்பட்டது. இது றோனியோப் பிரதியாகவே வெளியிடப்பட்டது. இது ஒரே ஒரு இதழுடன் நின்றுவிட்டது. 1987ல் இந்திய இராணுவத்தின் வருகையின் பின்னர் தொடர்ந்து செய்யப்பட வேண்டிய வேலை முறைகள் பற்றி டாக்டர் சிறிதரன் பி.எல்.எவ்.ரி உறுப்பினர்களுக்குத் தெளிவாக்கினார். உடனடியாக இந்திய இராணுவத்திற்கு எதிராகப் போராடும் வல்லமை எமக்கு இல்லாதபடியால் எமது வேலைகளை சமுகத்தில் நிகழும் அநீதிகளுக்கு எதிராகவும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவம் குரல் கொடுப்பதிலிருந்து ஆரம்பிக்கலாம் என்ற கருத்தை அவர் முன்வைத்தார். இதன்படி சமூகத்தில் நிகழும் ஊழல்களுக்கு எதிராகக் குரல்கொடுப்பது என்பதை பல்கலைக்கழக மட்டத்திலிருந்து ஆரம்பிக்கலாம் என்று தீர்மானிக்கப்பட்டது. சிறீதரன் யாழ் பல்கலைக்கழகத்திலிருந்தும் யாழ் பல்கலைக்கழக உபவேந்தரும் ஊழல் மிக்கவருமான சு.வித்தியானந்தருக்கும் இந்திய இராணுவத்தின் கெடுபிடிகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பதற்கு ஏற்ற தளமாக பல்கலைக்கழகம் விளங்கியதும் இதற்குக் காரணமாக அமைந்தன.
சிறீதரன் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பதற்கென்று பல்கலைக்கழக மட்டத்தில் ஒரு அமைப்பைத் தோற்றுவிக்க முற்பட்டார். இதன்படி பல்கலைக்கழக கணனித்துறை சிரேஸ்ட விரிவுரையார் கலாநிதி றாஜன்கூல் மருத்துவபீடத்தைச் சேர்ந்த சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி றாஜினி திரணகம (உடல்கூற்றுவியல்துறை) கலாநிதி தயா சோமசுந்தரம் உளவியல் (பகுதி) என்போரும் இணைந்து மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமெனும் அமைப்பைத் தோற்றுவித்தனர். இது பி.எல்.எவ்.பியின் உப அமைப்பாகவே தொடங்கப்பட்டது.
1988ம் ஆண்டு மார்கழி மாதம் உத்தியோக பூர்வமாக பி.எல்.எவ்.பி அமைப்பால் ஆரம்பிக்கப்பட்டது. இதனை உருவாக்குவதில் விஞ்ஞானபீடத்தின் கணிதத்துறை விரிவுரையாளர் றாஜன்கூல் சிறீதரன் மருத்துவபீடத்தின் உடற்கூற்றுவியல் பகுதியைச் சேர்ந்த றஜனிதிரணகம தயா சோமசுந்தரம் ஆகியோர் முக்கிய பங்காற்றினர். கலைப்பீடத்தில் தத்துவப் பிரிவைச் சேர்ந்த உதவி விரிவுரையாளர் ராஜ்மோகன் என்பவரும் இதன் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவராவார். இவர்கள் இந்திய இராணுவத்தினதும் இயக்கங்களினதும் நடவடிக்கைகளுக்கு எதிராகச் செற்பட முனைந்தனர். இதற்குள் சிறீதரனின் கருத்துக்களுக்கு கணிசமான ஆதரவு இருந்தது குறிப்பிடத்தக்கது. பி.எல்.எவ்.பி அமைப்புக்களின் கருத்துக்களை மனித உரிமை அமைப்புக்களின் கருத்துக்களைப் பிரதிபலிப்பவராக சிறீதரன் இருந்தார். இவ் அமைப்பின் செல்வாக்கு விஞ்ஞானபீட மருத்துவ பீடத்திலும் ஓங்கியிருந்தது. விஞ்ஞானபீட மாணவரவையும் மருத்துவபீட மாணவரவையும் இவர்களைத் தம்பக்கம் இழுப்பதில் வெற்றி கண்டார்கள்.
1989ம் ஆண்டு காலப்பகுதியில் செல்வாக்குமிக்க மாணவர்கள் மாணவரவைத் தலைவராகவும் விஞ்ஞானபீட மாணவரவையின் முக்கிய உறப்பினராகவும் பொதுப்பேரவையின் செயலாளராக இருந்த அன்ரன் வின்சலஸ் மற்றும் மருத்துவபீட மாணவரவைiயும் தம்பக்கம் வைத்துக் கொண்டதன் மூலம் மாணவர் பொதுப்பேரவையைத் தம் கருத்துக்கள் பக்கம் திருப்பினார்கள். கலைப்பீட மாணவரவையில் மாணவர்களுக்கு எவ்வித செல்வாக்கும் இல்லாத போதிலும் குறிப்பாக கலைப்பீட மாணவரவையில் திரு.ராஜ்மோகனுக்கு எதிரான கருத்தே இருந்தது. மாணவர் பொதுப்பேரவையினை விஞ்ஞானபீடமாணவரவை மருத்துவபீட மாணவரவை ஆகியவற்றைப் பயன்படுத்தி இவர்கள் தம்பக்கம் ஈர்த்தார்கள்.
இனங்களுக்கிடையில் நீதிக்கும் சமத்துவத்துக்குமான அமைப்பு - ஆஐசுதுநு
ஆஐசுதுநு எனப்படும் தேசிய மட்டத்திலான அமைப்பான மேச் அமைப்பின் வட தென் பிராந்தியங்களின் பிரிவுகள் அனைத்துடனும் இவர்களுக்குத் தொடர்புகள் இருந்தன. மேச் அமைப்பின் தென் பகுதியில் உள்ள ராதிகா குமாரசாமி போன்றோரின் பெண்கள் அமைப்புடனும் தொடர்புகள் இருந்ததனால் றாஜினி போன்றோருக்குத் தொடர்புகள் இருந்தன. இதைவிட மேச் அமைப்பின் வடபிராந்தியக் கிளைத்தலைவரான அருட்திரு
ஜெயசீலனும் றாஜன் கூலுக்கு தொடர்புகள் இருந்தன. றாஜன் கூலின் வீட்டிற்கு அருகாமையில் அமைந்துள்ள பரிஜோவான் சென்ஜேம்ஸ் திருத்தலத்திற்கு வழிபாட்டுக் கூட்டங்கள் பிரசங்கங்கள் நடாத்துவதற்கு றாஜன் கூலின் அழைப்பின் பேரில் ஜெயசீலன் செல்ல வேண்டியாயிற்று மேலும் ஜெயசீலன் யாழ் கத்தோலிக்கத் திருச்சபையின் சர்வமத ஆணைக்குழு மதங்களுக்கு இடையிலான கலந்துரையாடலுக்கும் ஒருங்கிணைப்புக்குமான ஆணைக்குழுவின் தலைவராக உள்ள றாஜன் கூல் இந்த ஆணைக்குழுவின் கூட்டங்களுக்கு றாஜன்கூல் வருவதுண்டு 1984ம் ஆண்டு முதல் கத்தோலிக்க திருச்சபையின் சர்வதேச அமைப்பான பக்ஸ்கிறிஸ்டி என்னும் அமைப்பின் வட கிளையை ஸ்தாபித்து இந்த அமைப்பின் தலைவராகவும் உள்ளார். இது யாழ்பாணத்தில் மட்டும் இயங்குகின்றது. அருட்திரு ஜெயசீலன் யாழ்பல்கலைக்கழக ஆங்கில இலக்கியத்துறையில் ஆங்கில இலக்கிய விரவுரையாளராகப் பணியாற்றியும் வந்தார்.
தேசிய மட்டத்திலான தென்பகுதி பொதுசன இயக்கங்களான சுயாதீன மாணவர் ஒன்றியம்.
இன்டிபென்டன் ஸ்ரேட் யூனியன்.
ஜ.எஸ்.யு
மூவ்மன் போ விசன்ஸ் ஒவ் டெமோகிரடிக் றயிட்ஸ்
எம்.டி.பீ.ஆர்
என்னும் அமைப்புகளுடனும் டாக்டர் சிறிதரனுக்குத் தொடர்புகள் இருந்தன.
பி.எல்.எவ்.பியின் பெண்கள் ஆய்வு வட்டம்.
இது 1988ம் ஆண்டின் பிற்பகுதியில் முதலில் கல்விவட்டம் என்று ஆரம்பிக்கப்பட்டது. இதன் பீடங்களில் ஆண் பெண் இருபாலாரும் இடம்பெற்றனர். கலைப்பீடத்தில் சிவறமணி செல்வி குமரன் (முகாமைத்துவத் துறையில் அப்போது முதலாம் வருட மாணவனாக இருந்தவர் கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர். அங்கேயே கல்வி கற்றவர் வாத்திய எழுத்தாளரும் பத்திரிகை ஆசிரியருமாகிய செ.கணேசலிங்கத்தின் மகன் குமரன்.) போன்றோர் இதில் முக்கிய உறுப்பினர்களாக இருந்தனர். இதில் ராஜ்மோகன் இதன் ஆலோசகர்களில் முக்கியமானவர். 1988ன் பிற்பகுதியிலேயே பல்கலைக்கழக மாணவர்கள் ஊழியர்களுக்கிடையில் இடம்பெற்ற தகராறு ஒன்றில் கடுமையாக விமர்சிக்கபட்டதனால் நிறுத்தப்பட்டது.
பி.எல்.எவ்.பியின் பூரணி இல்லம்.
பாதிக்கபட்ட பெண்களுக்கென்று புனர்வாழ்வு வளங்குவது என்ற நோக்கில் உடுவிலில் இந்த அமைப்புத் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் இந்த இல்லம் ஆரம்பிப்பதற்கு கத்தோலிக்க திருச்சபையின் ஆதரவும் ஒத்துளைப்பும் இருந்தது. றாஜனி திரணகம சித்தரலேகா மௌனகுரு வசந்தாதேவி சுமங்களா கைலாசபதி போன்றோர் இதை ஆரம்பிப்பதில் முனைப்புடன் பணியாற்றியவர்கள். இந்த அமைப்பின் பிரதான நிதித்தளமாக லண்டன் சர்வதேச பக்ஸ்கிறிஸ்ரி அமையத்தில் கிளையிருந்தது. இந்த உறுப்பினரும் லண்டன் பிரசையுமான திருமதி பற்றெடி என்பவர் கத்தோலிக்க திருச்சபையின் உதவியை இது விடயத்தில் நாடினார்.
பிரபல சமூகசேவகியும் திருக்குடும்ப சபையின் அருட்சகோதரியுமான திரேசியா பற்ரடியுடன் இணைந்து இந்த இல்லத்தை ஆரம்பித்தார்கள். இந்த இல்லம் அமைந்திருந்த இடம் திரேசியாவின் உறவினர் வீடு. திரேசியாவும் இயக்குனர் சபையின் முக்கிய உறுப்பினராக இருந்தார். பூரணி இல்லம் தொடர்பான நிர்வாகச் சிக்கல்கள் திரேசியாவுக்கும் பற்றடிக்கும் இடையில் அடிக்கடி ஏற்படுவதுண்டு மேற்கு நாகரீகப் பாணியில் அமைந்த பற்றடியின் நிர்வாகப்போக்கும் கட்டுக்கோப்புள்ள திருக்குடும்ப சபையின் கன்னியரின் நிர்வாகப் போக்கும் முரண்படத் தொடங்கியது. இது ஜெயசீலன் அடிகளிடம் அடிக்கடி திரேசியாவினால் கூறப்பட்டது. 1990 நடுப்பகுதியில் கத்தோலிக்க திருச்சபையின் தளப்பிராந்திய யாழ் மறைமாவட்ட ஈடுபாட்டை யாழ் பூரணி இல்லத்தில் இல்லாமல் ஆக்கியதில் ஜெயசீலனுக்கு கணிசமான பங்கு இருந்தது.
தனக்கு மிக நெருக்கமாக இருந்த திருக்குடும்பக் கன்னியர் சபையின் வடகிழக்கு மாகாண சகோதரி கிறிஸ்தப்பலைப் பாவித்து திரேசியாவை பூரணி இல்லத்திலிருந்து அகற்றியதுடன் பூரணி இல்லத்தின் யாழ் திருச்சபையின் பங்கு இல்லாமல் போயிற்று.
பி.எல்.எவ்.பியின் முறிந்த பனைமர வெளியீடு
இந்த நூலை 1989ம் ஆண்டளவில் மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் யு.ரி.ஏச்.ஆர் முக்கிய உறுப்பினர்களான றாஜன்கூல் தயா சோமசுந்தரம் சிறீதரன் றஜனி திரணகம என்பவர்களால் வெளியிடபட்டது. அப்போது றாஜன்கூல் யாழ் பல்கலைக்கழக கணிதபீடத்தின் சிரேஸ்ட விரிவுரையாளராக இருந்தார். சுpங்கப்பூ+ரிலேயே பிறந்து வளர்ந்த இவர் இங்கேயே கல்வி கற்றார். இவர் சிறீதரனின் நண்பர். மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் குழுவின் ஸ்தாபக உறுப்பினர் இவர் கிறீஸ்தவர் ஆகையால் கிறீஸ்தவ மத நிறுவனங்களுடன் தொடர்பு வைத்திருந்தார். றட்ணஜீவன் கூல் இவர் றாஜன் கூலின் தமயனார் இவர் அமெரிக்காவின் கவாட் பல்கலைக்கழகத்தின் விரிஜவுரையாளராக இருந்தவர். இவரே முறிந்தபனை புத்தகத்தை அச்சிட்டு வெளியிடுவதற்குப் பல்கலைக்கழக மனித உரிமைகள் குழுவுக்கு உதவினார். கவாட் பல்கலைக்கழக அச்சகத்திலேயே இந்தப் புத்தகம் அச்சிடப்பட்டது.
பி.எல்.எவ்.பியின் முறிந்தபனை அமெரிக்காவிலிருந்து இலங்கை வந்த விதம்.
கவாட் பல்கலைக்கழகத்தில் அச்சிடபட்ட றட்ணஜீவன் கூலினால் அமரிக்காவிலிருந்து சிங்கப்பூருக்கு அனுப்பப்பட்டு பின்பு அங்கிருந்து கப்பலில் கொழும்புக்குக் கொண்டு வரப்பட்டது. இன்னூல்கள் அனுப்பபட்ட போது நூல்களுடன் சேர்த்து டாக்டர் சிறீதரனின் வேண்டுகோளின் பேரில் பி.எல்.எவ்.ரி அமைப்புக்காக சில வோக்கி ரோக்கிகளும் கைத்துப்பாக்கிகளும் புத்தகத்தின் இடையில் வைத்து அனுபப்பட்டது. 1989ம் ஆண்டின் முறிந்தபனை புத்தகத்தின் பல விடுதலைப் புலிகளுக்கு எதிரான பகுதிகளை ஈ.பி.ஆர்.எல்.எவ் தங்களின் நமது விடுதலை என்னும் பத்திரிகையில் பிரசுரித்தனர். இதற்கு ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பினர் தாம் பாதுகாப்புத் தரலாம் எனக்கோரினர். எப்படியான பாதுகாப்பு என்று சிறீதரன் விபரம் கேட்ட போது ஆயுதம் தரலாம் என்று கூறப்பட்டது. பின்னர் பி.எல்.எவ்.பி தனக்குள் கலந்தாலோசித்து ஆயுதம் ஏதும் கிடைத்தால் வாங்கும்படி சிறீதரனைத் தூண்டியது. ஆயுதத்தை வாங்கி வைத்திருப்பதே நல்லது என்னும் கருத்தின் அடிப்படையில் சிறீதரன் மீண்டும் ஈ.பி.ஆர்.எல்.எவ்.உடன் தொடர்பு கொண்டு பிஸ்ரல் துப்பாக்கிகளை பத்மநாபாவிடம் பெற்றுக் கொண்டார்.
1990ம் ஆண்டு சிறீதரனும் யூ.ரி.ஏச்.ஆர்ன் செயற்பாடுகளும்.
1990ம் ஆண்டு யூன்மாதம் போர் ஆரம்பித்தவுடன் பி;.எல்.எவ்.ரியானாது பொய்மைக்குள் வாழ மறப்போம் என்ற துண்டுப் பிரசுரத்தை 28-05-90 வெளியிட்டது. இப் பிரசுரமானது முதலில் றோனியோப் பிரதியாகாவும் பின்னர் ஓவ்செட் பிரதியாகவும் வெளிவந்தது. பிரதி கொழும்பில் அச்சிடப்பட்டது. இந்தப் பிரசுரமானது புலிகள் தமது பலம்பற்றி மக்களுக்கு அதிகமாகக் கூறி மக்களை ஒரு பொய்மையான சூழ்நிலைக்குள் தள்ளிவிடப் பார்க்கிறார்கள் என்று இந்திய இராணுவத்தின் அட்டகாசங்கள் முடிவுற்ற சிறிதுகால எல்லைக்குள்ளேயே சிறீலங்கா இராணுவத்துடன் மோத நினைப்பது புத்திசாலித்தனமற்ற செயல் என்று தேவையற்ற முறையில் இளைஞர் சமுதாயம் அழிவுறுவதையே சிறீலங்கா மற்றும் புலிகள் யுத்தம் வளிவகுக்கும் என்றும் கருத்து வெளியிடப்பட்டு இந்தத் துண்டுப் பிரசுரத்தை சிறீதரனே தனிப்பட்ட முறையில் எழுதி வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து புலிகளால் பி.எல்.எவ்.ரி இயக்கம் கண்காணிகப்பட்டு சிறீதரனை புலிகள் தேடத்தொடங்கியதும் சிறீதரன் யாழ் குடாநாட்டை விட்டுத் தலைமறைவாகித் தப்பியோடிக் கொழும்புக்குச் சென்றார். புலிகள் இவருடைய சண்டிலிப்பாய் வீட்டிலிருந்து வோக்கிரோக்கிகளையும் பிஸ்ரல்களையும் கைப்பற்றியதாகத் தெரியவந்தது.
Pநழிடந டுiடிநசயவழைn குழவெ ழக வுயஅடை நுநடயஅ என்ற பி.எல்.எவ்.ரி அமைப்பில் இருந்து உருவாகிய என்.எல்.எவ்.ரி அமைப்பின் ஒரு உப அமைப்பாக பி.எல்.எவ்.பி என்ற அமைப்பின் ஸ்தாபகர்களில் ஒருவரான மனோரஞ்சன் என்பவரால் இந்த யு.ரி.ஏச்.ஆர் என்பதை உருவாக்கி சந்திரிகாவினதும் செத்துப்போன கதிர்காமரினதும் அனுசரணையோடு அவர்களின் ஆட்சிக்காலத்தில் அவர்களின் மறைவிடத்தில் இருந்து செயற்பட்டவர்கள். விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக அறிக்கைகளை விட்டுக் கொண்டும் கடந்த பல வருடங்களாகச் செயற்பட்டுக் கொண்டும் இருக்கிறார்கள். மனோரஞ்சன் இலங்கை வானொலியில் விடியும் வேளையென்ற நிகழ்ச்சியில் புலிகளுக்கு எதிராகக் கதைத்துக் கொண்டும் இருந்தவர். இப்படிப்பட்ட கும்பல்கள் இன்று துணைவேந்தராகவும் மனித உரிமைவாதிகளாகவும் உருமாறியுள்ளார்கள். கந்தசாமியும் குமாரவடிவேலும் வாக்கெடுப்பில் வரவேண்டியிருந்த போது இவர் வெல்லப்படாத போதும் இவரை மகிந்த றாஜபக்ச தெரிவு செய்திருக்கிறார். அவர்களின் ஊடுருவலாக இவர்கள் தொடர்ந்ம் செயற்படுவார்கள் என்பதற்காக இவர் நியமனமாகியுள்ளார். இவர்களுடைய வரலாற்றுப் பின்னணியைத் தெரிந்து கொண்டால் யாழ் கல்விச் சமூகம் விளங்கிச் செயற்படும் என்பதற்காக இந்தக் கட்டுரையை இங்கு பிரசுரிக்கிறம்.
மனிதஉரிமை வாதிகள் என்று சொல்வோருக்கு பிஸ்ரலும் வோக்கியும் எதற்கு?
நன்றி
சத்தியேந்திரன்
ஜெயானந்தம்
லண்டன்.
http://www.nitharsanam.com/?art=15806