Posts: 936
Threads: 42
Joined: Dec 2005
Reputation:
0
<b>செவ்விளநீர் மர நிழலில்
மண்ணழைந்து- செம்பருத்தி பூ
இதழ்பிரித்து பொட்டு வைத்து
மெல்லிய காற்றில்
அணிஞ்சில் பழ கோது கொண்டு
விசில் ஊதி..........
ஐஸ் பழ வான் பின்னால் ஓடி
அடித்து பிடித்து
சில்லறை கொடுத்து
நாவில் பனியுருக
நாவால் உதட்டை
துடைத்து துடைத்து
சுவைத்தோமே
வருமா வருமா?
மீண்டும்-அந் நாட்கள் ?
சுகம் தருமா தருமா?
பாட நேரம் வெளியோடி
காளிகோயில் மாமரம் மீதேறி
பறித்து வந்த மாம்பிஞ்சை
ஒளித்து ஒளித்து சாப்பிட்டோமே
அக்காலம் வருமா வருமா?
சுகம் தருமா தருமா?
கள்ளன் பொலிஸ் விளையாடி
கள்ளனுக்கு பொலிஸ்
"ஊண்டி போட "
அவன் அழுதுகொண்டு
வீட்டை -ஓட
அப்பா கிட்ட உதை வாங்கினோமே
வருமா வருமா அந்நாள்?
சுகம் தருமா தருமா?
மாலா புது சைக்கிள்
எடுத்திட்டாளென்று அழ
போனா போகுது என்று
அப்பா "லுமாலா" சைக்கிள்
ஒன்று எடுத்து தர - குறுக்கால போவான்
ஒருவன் பிளேற்றால் சீற்றை
குறுக்கும் மறுக்கும் வெட்டித்தள்ள
வீட்டை எப்பிடி போவதென்று
தெரியாம- விக்கி விக்கி
அழுதோமே- வருமா வருமா?
அந்நாட்கள் சுகம் தருமா தருமா?</b>
-!
!
Posts: 928
Threads: 32
Joined: Jul 2005
Reputation:
0
இளநீர் மரம் நிழல் தருமா வர்ணன்?:-)
"செம்பருத்தி பூ
இதழ்பிரித்து பொட்டு வைத்து"
நானும் செய்திருக்கிறன் இந்த விளையாட்டு.
"அணிஞ்சில் பழ கோது கொண்டு
விசில் ஊதி" & "ஊண்டி போட "
கேள்விப்படாதவை.
கவிதை நன்றாகவே வந்திருக்கிறது.என்ன சொல்ல அந்த நாட்கள் மீண்டும் வராது என்பது கசப்பான உண்மை.....அப்பிடியே வந்தாலும் முன்பு அனுபவித்த அதே சந்தோசம் வருமா என்பதும் சந்தேகமே.
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Posts: 928
Threads: 32
Joined: Jul 2005
Reputation:
0
"குறுக்கால போவான்
ஒருவன் பிளேற்றால் சீற்றை
குறுக்கும் மறுக்கும் வெட்டித்தள்ள "
என்ர சைக்கிள் கரியர்ல கூடப் படிச்ச பெடியங்கள் வெடி வச்சவங்கள்.அஞ்சாம் வகுப்பு நேரம் அடிக்கடி வகுப்பில வினாடி வினாப் போட்டி நடக்குறது ...தோத்த கோவத்தில வெடி வச்சவை விடுவமா நாங்கள் பொறுப்பாளற்ற போய் சொல்லி நல்லாத் திட்டு வாங்கினவை.பத்தாததுக்கு அவேன்ர அம்மாவைட்டயும் சொன்னான்.அந்தக் கோவத்தில ஒருத்தன் என்னை மரத்தில இருந்து தள்ளி விழுத்திப்போட்டான்.இப்ப நினைச்சா சிரிப்பா இருக்கு.
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Posts: 928
Threads: 32
Joined: Jul 2005
Reputation:
0
ஹாஹா ஊண்டி அடிச்சிட்டீங்கள் பொலிஸை.....சேர்த்து வாசிச்ச உடனே தெரியாத வார்த்தை என்று நினைச்சிட்டன்.அதோட பாவிக்காத சொற்கள் மறந்து போகுதே என்ன பண்ண.
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
வர்ணன் பழைய நினைவுகளை மீட்டி ஒரு கவிதை எழுதி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.
Posts: 422
Threads: 10
Joined: Oct 2005
Reputation:
0
வருமா? வருமா?
வர்ணனுக்கு நல்லா வருகுது கவிதை வாழ்த்துக்கள்!
ஆனால் அந்த நாட்கள் நிச்சயம் திரும்ப வராது.
அப்படி வந்தாலும் அவை முன்புபோல இனிப்பாக இருக்காது.
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
வர்ணன் மீண்டும் ஒருதரம் ஊர் ஞபகங்களை அசைபோட வைத்துள்ளீர்கள்
இப்ப நினைக்கும் போது மனதில் ஏதொ ஒரு நெருடல் மீண்டும் அவ்வாழ்வு கிடைக்குமா என்று <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
அணிஞ்சில் பழம் சத்தியமாத் தெரியல, அதுக்கு வேறு ஏதும் பெயரும் உண்டா :roll:
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 936
Threads: 42
Joined: Dec 2005
Reputation:
0
கவிதை என்று நினைச்சு எழுதல்ல- இப்பிடியும் எழுதி பார்த்தால் என்ன என்று ஒரு சின்ன முயற்சி செய்தன் -! 8)
நன்றி சினேகிதி-ப்ரியசகி- ரமா- ஆசிரியர்-அருவி!
-!
!
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
தூயவன் Wrote:அருவி Wrote:வர்ணன் மீண்டும் ஒருதரம் ஊர் ஞபகங்களை அசைபோட வைத்துள்ளீர்கள்
ஓஒஒ......
நீங்கள் அசை போடுவீர்களா? அப்பவே கனபேர் சொன்னவர்கள் நான் தான் நம்பவில்லை!!
எல்லாத்தையும் நம்பாட்டிலும் சிலதையாவது நம்பணும்!!!
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 42
Threads: 3
Joined: Dec 2005
Reputation:
0
NAMBUNGAL, NAALAYA POZHUTHU NAMAKKAANATHU.
Posts: 42
Threads: 3
Joined: Dec 2005
Reputation:
0
வர்ணன்... கவிதை நல்லாய் இருக்கு. நாம் சிறுவர்களாய் இருக்கும் போது விரைவாக பெரியவர்கள் ஆகிவிடவேண்டும், என்று ஆசையாக இருக்கும். இப்போ பெரியவர்கள் ஆனபின் மீண்டும் துள்ளிதிரிந்த , சின்ன வயதை எண்ணி மனம் ஏங்கித்தவிக்கும்.. மனதின் உணர்வுகளும் ஏக்கங்களும் வினோதமானவைதான்.. இல்லையா?
NAMBUNGAL, NAALAYA POZHUTHU NAMAKKAANATHU.
Posts: 42
Threads: 3
Joined: Dec 2005
Reputation:
0
எனக்கும் யாழ் கழத்தில் கவிதை எழுத ஆசை. ஆனால் புதிய தலைப்பில் ஆக்கங்களை எழுதவோ,' BBகோட்' ஐ பயன்படுதவோ முடியவில்லை. ஆகவே நன்பர்களே[பிகளே] கீழேநான் தரும் கவிதையை அழகாக தட்டச்சிவிட்டால் என்றென்றும் நன்றியுடயவானாய் இருப்பேன்.[ஒவ்வொரு அடைப்புக்குறிகளும் தனித்தனி வரிகள் என்பதை கவனத்தில் கொள்ளவும்]
NAMBUNGAL, NAALAYA POZHUTHU NAMAKKAANATHU.
Posts: 42
Threads: 3
Joined: Dec 2005
Reputation:
0
[என் இழமைப்புத்தகத்தின்][ இரவுப்பக்கங்கள்][வெறுமையாய்க்கிடக்கின்றன] [இன்னும் எழுதப்படாத][ஓர் கவிதையை எண்ணி....][ எனது வானம்...][இருள் மூடிக்கிடக்கிறது][இதுவரை காணாத][அந்தப்பவ்ர்ணமிக்காக...][மெல்ல மெல்ல][கலத்திருடனிடம்][களவு போகின்றன-என்][நந்தவனப்பூக்களின் நறுமணமும்-நான்][சேர்த்துவைத்தகனவுகளின்][ஒளிநிறமும்....][நிசப்தம்விழுங்கிய][நீண்ட இரவொன்றில்...][நிமிர்ந்துபார்க்கிறேன்][மழை இருள்மூடிய][கரிருள் வானில்][பளிச்செனத்தெரிந்தது][தனிமை மூடிய-எனது][வாழ்க்கையின் வெறுமை.]
NAMBUNGAL, NAALAYA POZHUTHU NAMAKKAANATHU.
Posts: 2,315
Threads: 5
Joined: Jan 2005
Reputation:
0
வர்ண் அண்ணா கவிதை நல்லாயிருக்கு
உண்மைதான் அந்த நாள் ஞாபகங்கள் எல்லோருக்கும் இருக்குதான் என்ன செய்வது அவை இனி எமக்கு இனிய நினைவகளாக மட்டுமே
நல்ல கவிதை தொடர்ந்து எழுதுங்க
. .
.