Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஆனையிறவு இராணுவ முகாம் இருந்த இடத்தில் "புலி" வீடுகள்
#1
ஆனையிறவு இராணுவ முகாம் இருந்த இடத்தில் "புலி" வீடுகள்
விடுதலைப்புலி உறுப்பினர்களின் குடும்பங்களுக்காக ஆனையிறவு இராணுவ முகாம் இருந்த இடத்தில் விடுதலைப் புலிகள் வீடுகளை அமைத்து வருவதாக இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


ஜெர்மன் ஜி.ரி.இசட் நிறுவனத்தின் ஆதரவுடனே இந்த வீடுகள் அமைக்கப்பட்டு வருவதாக பாதுகாப்புத் தரப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த போராளிகளின் குடும்பத்தினருக்காக இராணுவ முகாம் இருந்த இடத்தில் வீடுகளை அமைக்க ஜெர்மன் தொண்டர் நிறுவனம் உதவியது சட்டவிரோதமானது. அவர்கள் இதுபற்றி பாதுகாப்புப் படையினருக்கு அறிவிக்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Reply
#2
என்ன இது இப்படி சொல்லுறாங்க எங்கட இடத்தில எங்களை கேக்காமல் சிங்கள இராணுவம் காம்ப் போட்டாத்தானே சட்ட விரோதம் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
. .
.
Reply
#3
இந்த செய்தி "புதினம்"(த்தில்) இருந்து சுடப்பட்டது
Reply
#4
ஆனையிறவு இராணுவ முகாம் இருந்த இடத்தில் "புலி" வீடுகள்

விடுதலைப்புலி உறுப்பினர்களின் குடும்பங்களுக்காக ஆனையிறவு இராணுவ முகாம் இருந்த இடத்தில் விடுதலைப் புலிகள் வீடுகளை அமைத்து வருவதாக இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


ஜெர்மன் ஜி.ரி.இசட் நிறுவனத்தின் ஆதரவுடனே இந்த வீடுகள் அமைக்கப்பட்டு வருவதாக பாதுகாப்புத் தரப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த போராளிகளின் குடும்பத்தினருக்காக இராணுவ முகாம் இருந்த இடத்தில் வீடுகளை அமைக்க ஜெர்மன் தொண்டர் நிறுவனம் உதவியது சட்டவிரோதமானது. அவர்கள் இதுபற்றி பாதுகாப்புப் படையினருக்கு அறிவிக்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நன்றி புதினம்.
Reply
#5
ஆனையிறவு முகாம் இருந்த பகுதியில் போராளி குடும்பங்களுக்கு வீடமைப்பு

அரச படையினரிடமிருந்து விடுதலைப் புலிகள் அமைப்பினர் ஆனையிறவு இராணுவ முகாமைக் கைப்பற்றிய நீண்ட நாட்களுக்குப் பின்னர் தற்போது அந்த முகாம் பகுதிகளில் புலிகள் அமைப்பு குடியிருப்பு வீடுகளை அமைக்கத் தொடங்கியுள்ளதாகவும், இந்த குடியிருப்பு மனைகள் புலிகள் இயக்கப் போராளிகளின் குடும்பங்கள் குடியிருப்பதற்காகவே அமைக்கப்பட்டு வருகின்றன எனவும் இராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

புலிகள் இயக்க தலைமைத்துவம் இந்த வீடமைப்பு பணிகளை ஜெர்மனியைச் சேர்ந்த ஜீ.ரி.இசட் நிறுவனத்தின் உதவியுடனேயே மேற்கொண்டுள்ளதாக யாழ்ப்பாணம் பிராந்திய தரப்பு சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் கடந்த 7 ஆம் திகதி கூறியுள்ளார். மேலும், இவ்வாறு புலிகள் அமைப்பு அவசரமாக முன்னைய ஆனையிறவு இராணுவ முகாம் பகுதியில் மக்கள் குடியிருப்புகளை அமைத்து வருவதற்குக் காரணம் அரச பாதுகாப்புத் துறையினர் ஆனையிறவு பகுதிகளை மீண்டும் புலிகளிடமிருந்து கைப்பற்றுவதற்கான இராணுவ நடவடிக்கையை எடுக்கக்கூடும் என்ற சந்தேகமே எனவும், இதனாலேயே இறந்துபோன புலிகள் இயக்க பயங்கரவாதிகளின் குடும்பங்களுக்காக புலிகள் அமைப்பு வீடமைப்புத் திட்டத்தை அமைப்பதன் மூலம் அப்பகுதிகளைத் தம்வசம் பாதுகாத்துக் கொள்ள முயல்வதாகவும் குறித்த சிரேஷ்ட பாதுகாப்புத்துறை உத்தியோகத்தர் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தப் பெரும்பரப்பளவிலான ஆனையிறவு இராணுவ முகாம்களை கடந்த 1996 ஆம் ஆண்டில் புலிகள் இயக்கம் கைப்பற்றியிருந்தது. இவ்வாறு அரசாங்கத்தின் இராணுவ முகாம்கள் இருந்த இடத்தில் இறந்த பயங்கரவாதிகளின் குடும்பங்களுக்காக வீடமைக்கும் கட்டாய பணிகளில் ஜெர்மனியைச் சேர்ந்த தனியார் நிறுவனம் அடிப்படையான உதவிகளை வழங்குவது சட்ட விரோதமானதாகும். மேலும், இவ்வாறு ஆனையிறவு பிரதேசத்தில் அரச பாதுகாப்புப் படையினரின் முகாம் அமைந்திருந்து பின்னர் புலிகள் இயக்கத்தினரால் அழிக்கப்பட்ட பிராந்தியத்தில் வீடமைப்பு பணிகளில் ஈடுபட்டிருப்பது பற்றி மேற்படி ஜேர்மனி நிறுவன பாதுகாப்புத் துறை அதிகாரிளுக்கு முன்னறிவிப்பைக் கூட தெரிவிக்கவில்லையென குறித்த சிரேஷ்ட பாதுகாப்புத்துறை உத்தியோகத்தர் குறிப்பிட்டுள்ளார்.

-திவயின : 08.03.2006-


நன்றி தினக்குரல்
Reply
#6
ஆனையிறவு எங்கடை இடம் எண்டதையும் இனவாத சிங்கள இராணுவம் அங்கிருந்து அடிபட்டு துவைபட்டு ஓடியதையும் பாதுகாப்பு அதிகாரி மறந்து விட்டாராக்கும்

-
Reply
#7
நமது தாய் நிலத்தில் வீடு கட்டுவதற்கு மாற்றான் படை
அனுமதி கேட்பதா?

ஆனையிறவில் இவ்வளவு அடி வாங்கியும் புத்தி
தெளியவில்லை போலும் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#8
ஆனையிறவு மனித வாழ்வதற்க்கு ஏற்ற பகுதி அல்ல
ஆனால் உப்பளத்திற்கு மிகவும் பிரசித்த ஒரு இடம்
தமிழிழத்தின் மிகப்பெரிய தொழிற்பேட்டை.
ஏன் ராணுவத்தினர் கூட கடினப்பட்டுத்தான் அங்க இருந்திருப்பார்கள்
அது அவர்களுக்கே தெரியும்.
அங்கு குடிப்பதற்கு ஏற்ப நல்ல தண்ணிரும் கிடையாது.
Reply
#9
அந்த இடம் மக்கள் குடியிருப்பதற்கேற்ற இடம் இல்லை ஒரே உப்பு வெட்டை இதில் இருந்து தெரியிது அவங்களுக்கு தமிழிழ நில அமைப்பை பற்றி ஒன்றுதெரியாது இப்படித்தான் எனது சிங்கள நண்பர் ஒருவர் சொன்னார் கப்பலில் மல்ட்ரி பரல வைத்து அடித்தா போதுமாம் முல்லைத்தீவை பிடிச்சிரலாமாம் இது எப்படி! :roll:
Reply
#10
ஆனையிறவில் இவ்வளவு அடி வாங்கியும் புத்தி
தெளியவில்லை
Reply
#11
தமிழர் பகுதியில் சட்டவிரோதமாய் குடியமைத்து அதை சிங்களவனின் பகுதியாய் மாற்றின கூட்டம் அப்;ப வாலாட்டிட்டு இப்ப குரைக்கிறது மிகவும் நகைச்சுவையாய் இருக்குது.
.
Reply
#12
சிங்களவன் - ஏதோ புலம்பிட்டு போகட்டும்-
எங்களுக்கு- ஏன் அதில் -இவ்ளோ அக்கறை?

அது இருக்க - அந்த செய்தி உண்மைதானா? :roll:

சகல வசதிகளுடனும் இருந்த சிங்களவனே - செத்து செத்து பிழைச்ச - அந்த பிரதேசத்தில் - சாதாரண மக்கள் வாழ்வது - சாத்தியமோ தெரியல -! :roll:
-!
!
Reply
#13
ஆனையிறவில வீடுகட்டி குடும்பங்களை இருத்திற அளவுக்கு மண்டைக்குள்ள ஒண்டுமில்லாத ஆக்கள் எண்டு நினைச்சானோ என்னவோ?
ஆனால் இயக்கச்சி, பரந்தன், உட்ப ஏனைய பகுதிகளையும் அவங்கள் ஆனையிறவு எண்ட பேருக்குள்ளதான் அடக்கிறவங்கள். அந்த இடங்களில நடக்கிற வீடமைப்புத் திட்டங்கள் எதையேன் அறிஞ்சிருந்தாலும் இப்பிடிச் சொல்லுவாங்கள். செய்தி உண்மையெண்டா உது சனத்துக்குக் கட்டிற வீட்டைத்தான் புலிகளுக்கு எண்டு சொல்லுறாங்கள் போல.

நிற்க, திவயினவை மேற்கோள் காட்டிப்போட்டிருக்கிற செய்தியில ஆனையிறவு 96 இல பிடிபட்டது எண்டு வருகுது. திவயினவின்ர பிழையோ மற்றாக்களின்ர பிழையோ?
Reply
#14
<!--QuoteBegin-nallavan+-->QUOTE(nallavan)<!--QuoteEBegin-->ஆனையிறவில வீடுகட்டி குடும்பங்களை இருத்திற அளவுக்கு மண்டைக்குள்ள ஒண்டுமில்லாத ஆக்கள் எண்டு நினைச்சானோ என்னவோ?
ஆனால் இயக்கச்சி, பரந்தன், உட்ப ஏனைய பகுதிகளையும் அவங்கள் ஆனையிறவு எண்ட பேருக்குள்ளதான் அடக்கிறவங்கள். அந்த இடங்களில நடக்கிற வீடமைப்புத் திட்டங்கள் எதையேன் அறிஞ்சிருந்தாலும் இப்பிடிச் சொல்லுவாங்கள். செய்தி உண்மையெண்டா உது சனத்துக்குக் கட்டிற வீட்டைத்தான் புலிகளுக்கு எண்டு சொல்லுறாங்கள் போல.

<b>நிற்க, திவயினவை மேற்கோள் காட்டிப்போட்டிருக்கிற செய்தியில ஆனையிறவு 96 இல பிடிபட்டது எண்டு வருகுது. திவயினவின்ர பிழையோ மற்றாக்களின்ர பிழையோ</b>?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


நல்லவன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அது ஒண்டும் இல்ல - சிங்களவன்ர மண்டை பிழை-!
அடி வாங்கின காலத்தையே மறந்திட்டான் ! 8)
-!
!
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)