03-10-2006, 07:13 AM
அம்மா கிறுக்கன்
அ.தி.மு.க.,விற்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள நடிகர் செந்தில் மதுரையில் நமது நிருபருக்கு சிறப்பு பேட்டியளித்தார். தமிழக மக்களுக்காக பாடுபட்டு வரும் ஜெயலலிதாவை மீண்டும் முதல்வராக்க, ராமனுக்கு அணில் போன்று பிரசாரத்தில் ஈடுபடுவதாக அவர் கூறினார்.
அவரது பேட்டி:
சினிமாவில் வாய்ப்புகள் குறைந்ததால் "தொழிலாக' அரசியலில் ஈடுபடும் நடிகர், நடிகைகள் வரிசையில் நீங்களும் அ.தி.மு.க.,வில் இணைந்தீர்களா?
இப்பவும் பிசியாக தான் இருக்கேன். "தொடாமலே', "என் காதலே', "வஞ்சகன்' போன்ற பல படங்களில் நடிக்கிறேன். 1970ல் தி.மு.க.,வில் சேர்ந்தேன். சென்னையில் எனது தலைமையில் சாதிக்பாட்ஷா மன்றம் திறந்தோம். தி.மு.க., தில்லுமுல்லுகளை அம்பலமாக்கி எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க., துவங்கியபோது, அக்கட்சியில் நானும், ஐசரிவேலனும் சேர்ந்தோம். அவ்வப்போது கட்சி கூட்டங்களில் பேசியிருக்கேன். முன்பு ரொம்ப பிசியாக இருந்ததால் தீவிர அரசியலில் ஈடுபடலை.
அ.தி.மு.க., மீது உங்களுக்கு ஈடுபாடு ஏற்பட காரணம் என்ன?
அம்மா இல்லாம அ.தி.மு.க., இல்ல. அவங்க முதல்வரா இருக்கிறதால தமிழகம் அமைதி பூங்காவா இருக்கு. எங்கையாவது ஜாதி சண்டை நடக்குதா? இல்லையே. எல்லாரும் தாயா பிள்ளையா இருக்கோம். கருணாநிதி முதல்வரா இருந்தப்ப என்ன நடந்துச்சு. எங்க பாத்தாலும் சண்டை சச்சரவு. யாருக்கும் நிம்மதியில்ல. கருணாநிதி கொடுக்கிற தொல்லைகளை பாத்து பொறுக்க முடியல. தமிழக மக்களுக்காக "அம்மா' பாடுபடுறாங்க. சுருக்கமா சொன்னா, சுனாமி பாதிச்சப்ப உயிரையும் பொருட்படுத்தாம கடல் பக்கம் போயி பாதிப்புகளை பார்த்தாங்க. பாதிக்கப்பட்டவங்களுக்கு உதவி செஞ்சாங்க. கருணாநிதி மருத்துவமனை போயி படுத்துகிட்டாரு. அத்தோடு பாதிக்கப்பட்டவங்களுக்கு மத்திய அரசிடம் ஜெ., கேட்ட நிதியை கொடுக்க விடாம தடுத்திட்டாரு. அவரு முதல்வரான தமிழகம் தாங்காது. முதல்வருக்கு பக்கபலமா இருக்கனும்னு தோணுச்சு, வந்துட்டேன்.
தி.மு.க., தலைவர் கருணாநிதியை கூட்டங்களில் கடுமையாக தாக்கி பேசுகிறீர்களே...
அவரால பல வழிகள்ல நான் பாதிக்கப்பட்டிருக்கேன். அதெல்லாம் வெளியே சொல்ல முடியாது. என்னை அவரு கிறுக்கன்னு சொல்லியிருக்காரு. ஆமா, நான் கிறுக்கன் தான். கிறுக்கன் என்றால் பற்று வைப்பவன்னு பொருள். அவரு சொல்படி நான் ஆடல் கிறுக்கன், பாடல் கிறுக்கன், தலைவி மீது கிறுக்கன், தொண்டர் மீது கிறுக்கன்... இப்படி என்னை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனா, கருணாநிதி தமிழக மக்கள் மீது கிறுக்கனா? இல்லையே... அவரு குடும்பத்தினர் மீது தானே கிறுக்கன்.
தொடர்ந்து பொதுக் கூட்டங்களில் பங்கேற்று வருகிறீர்கள். நடிகராக சொகுசு வாழ்க்கையில் இருந்த உங்களின் உடல்நிலை ஒத்துழைக்கிறதா?
வீட்டுக்கு போயி ஒரு மாதம் ஆச்சு. தினமும் வீட்டுக்காரி போன்ல பேசுவா. அவ சொல்றத தான் சாப்பிடுகிறேன். பிள்ளைங்க தோளுக்கு மேல வளர்ந்துட்டாங்க. அவங்க தனியா தொழில் பண்றாங்க. கிராமத்துல இருந்து வந்த உடம்பு இது. ஆண்டவன் புண்ணியத்துல உடம்புக்கு பிரச்னையில்ல.
தேர்தலில் போட்டியிடுவீர்களா?
எந்த எதிர்பார்ப்பும் இல்லாம வந்திருக்கேன். ஜெயலலிதா உத்தரவிட்டா போட்டியிடுவேன். நானா "சீட்' கேக்க மாட்டேன்.
விஜயகாந்த் பற்றி...
ரொம்ப நல்லவர். யாருக்கும் உதவும் குணம் கொண்டவர். அவரு கூட்டணியில சேர்றதா சொல்றாங்க. அதைத்தான் நானும் எதிர்பார்க்கிறேன்.