Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கொழும்பு தமிழன் தமிழன் இல்லையா?
#1
கொழும்பு தமிழன் தமிழன் இல்லையா?

நம்ம கொழும்பு தமிழர பத்தி இங்க ரொம்ப பேருக்கு நல்ல அபிப்பிராயம் கிடையாதுங்கிறத பாத்திருக்கன். அத பத்தி கருத்துக்களை எழுதுங்க. நா தொடர்ந்து எழுதுறன்.
Reply
#2
BBC Wrote:கொழும்பு தமிழன் தமிழன் இல்லையா?
வன்னி***க்குள்ளை அடைபட்டிருக்காத தமிழனெல்லாம் தமிழனல்ல.. இப்படி சவூதி சீலன் சொன்னார்.. அவர்தான் வந்து காரணம் சொல்லவேணும்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#3
கொழும்பில எந்தப் பகுதில வாழுற தமிழர்கள்? ஏனெனில் அங்கேயும் பிரிவுகள் உண்டு. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 83ம் ஆண்டு கலவரத்தின்போது வெள்ளவத்தை கோயில் அகதிமுகாமில்.. கொழும்பில் அகதியான தமிழர்களுக்கிடையிலேயே அவ்வாறானதொரு பிரிவுச் சச்சரவு ஏற்பட்டது. (துண்டு துண்டா அவ்வப்போதுதான் இதைப்பற்றி எழுதவேணும்.. முழுமையாக எழுதினால், சிலவேளை வீரகேசரியில் வந்துடும்.. :wink: )
.
Reply
#4
எந்த தமிழ்ல பிரிவினை இல்ல? யாழ்ப்பாணத்திலயே வடமராச்சியான், தீவான், வலிகாமத்தான்???

நா சொல்றது கொழும்பில ரொம்ப நாளா இருக்கிற தமிழ் பேசுற மக்களை பற்றி. அது வெள்ள்வத்தை, கொட்டேனா, மருதான எதுவாவும் இருக்கலாம்.
Reply
#5
கொழும்ப தமிழரைபற்றி அபிப்பிராயம் சொலஇல அவளவு அறிவு எனக்கில்லை.. எனினும் யாழ்ப்பாணத்தை பெயரளவிலேமட்டும் தெரிந்து.. யாழ் பாஸ்போட்டுடன் ஜேர்மனியில் யாழ்ப்பாணத்தானென அரசியல் அடைக்கலம்கோரி.. பின் சிங்களவர்களுடன் உண்டு குடித்து, புலிகள் தமிழரை மிரட்டி பணம் பறிக்கிறார்கள் என்று சிங்களவருடன் சேர்ந்து தமிழர் என்ற ரீதியில் கையெழுத்திட்டு 'செனற்'றுக்கு அனுப்பிய கொழும்புத் தமிழரைத் தெரியும்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
.
Reply
#6
அது கொழும்பு தமிழர் மட்டும் இல்ல யாழ்பாணத்து தமிழரும் இருக்கு.

பொதுவா கொழும்பு தமிழர் பத்தி உங்க கருத்து என்ன சோழியான்?

நீங்க றோயல்ல படிச்சதா சொன்னாங்க அதுனால உங்களூக்கு நிறைய தெரிஞ்சிருக்கும் பொஸ்
Reply
#7
நீங்களே சொல்லிவிட்டீர்களே கொழும்புத்தமிழன் என்று.
இதைவிட வேறு விளக்கம் வேண்டுமா என்ன? :roll:
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#8
நா சொல்லிட்டன் ஆனா நிறைய பேர் ஏத்துக்கிறதில்ல. கொழும்பு தமிழரை பத்தி அவங்க தமிழை, குணத்தை, கலாச்சாரத்தை பத்தி உங்க கருத்த சொல்லுங்க.

நீங்க யாழ்ப்பாண தமிழரை பத்தி ஒரு புது டொபிக் ஆரம்பிச்சிங்கன்னா நா அத பத்தி என் கருத்த சொல்லுவன்
Reply
#9
நான் கொழும்பில் 10 வருட காலங்கள் இருந்தேன்.
அங்குள்ள தமிழரைப் பொறுத்தவரை 4 வகையாக அவர்களைப் பிரிக்கலாம்.
1. கொழும்பிலேயே பிறந்து வளர்ந்த தமிழர்கள்.
2.முஸ்லிம் மற்றும் மலையக தமிழர்கள்.
3.இடம்பெயர்ந்து வந்து அங்கேயே தங்கிவிட்ட ஈழத்தமிழர்.
4.வெளிநாடு செல்வதற்காக தற்காலிகமாக தங்கியிருக்கும் தமிழர்.

இதில் முதலாவது வகையினரை எடுத்துக் கொண்டால் இவர்களில் அநேகமானவர்கள் ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழியையே பேசுபவர்களாயிருப்பர்.
ஈழத்தமிழரை எப்போதும் வேற்றுக்கிரக வாசி போலவே பார்ப்பார்கள் (அனுபவம்).
ஈழத்தில் என்ன நடக்கிறது என்று இவர்களுக்கு தெரிந்திராது அல்லது தெரியாதது போல நாடகமாடுவர்.

மற்றவர்கள் பற்றி பிறகு தொடரும் Arrow
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#10
vasisutha Wrote:நான் கொழும்பில் 10 வருட காலங்கள் இருந்தேன்.
அங்குள்ள தமிழரைப் பொறுத்தவரை 4 வகையாக அவர்களைப் பிரிக்கலாம்.
1. கொழும்பிலேயே பிறந்து வளர்ந்த தமிழர்கள்.
2.முஸ்லிம் மற்றும் மலையக தமிழர்கள்.
3.இடம்பெயர்ந்து வந்து அங்கேயே தங்கிவிட்ட ஈழத்தமிழர்.
4.வெளிநாடு செல்வதற்காக தற்காலிகமாக தங்கியிருக்கும் தமிழர்.

இதில் முதலாவது வகையினரை எடுத்துக் கொண்டால் இவர்களில் அநேகமானவர்கள் ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழியையே பேசுபவர்களாயிருப்பர்.
ஈழத்தமிழரை எப்போதும் வேற்றுக்கிரக வாசி போலவே பார்ப்பார்கள் (அனுபவம்).
ஈழத்தில் என்ன நடக்கிறது என்று இவர்களுக்கு தெரிந்திராது அல்லது தெரியாதது போல நாடகமாடுவர்.

மற்றவர்கள் பற்றி பிறகு தொடரும் Arrow

அப்டின்னா நம்ம கொழும்பு தமிழர் ஈழதமிழர் இல்லனு சொல்றிங்களா பொஸ்?
Reply
#11
கொழும்பிலேயே பிறந்து வளர்ந்த ஈழத்தமிழர் என்n வைத்துக் கொள்ளுங்கள் பிபிஸி <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#12
சரி பொஸ்
Reply
#13
முக்கியமானது ஒன்று - கொழும்புத் தமிழனிடம் நேர்மை இராது - அனுபவம். உங்களிடமிருந்து எப்படி பறிக்கலாம் எண்று நேரம் பார்த்து கழுத்தறுப்பான்.
வட கிழக்கில் எங்கு சண்டை நடந்து அம்பூலன்ஷ் ஆமிக்காரனை ஏத்திக்கொண்டு ஒடினாலும் எம்மைப் பார்த்து திட்டுவான் - படிக்கும்போதய அனுபவம். முக்கியமாக இந்திய கொழும்ம்புத் தமிழந்தான் திட்டிக்கொண்டே இருப்பான்.
அவனைப் பொறுத்தவரை என்ன நடந்தாலும் தான் சாப்பிட்டு சிங்களவனுக்கு வாலாட்டி நக்கிக் கொண்டிருந்தால் சரி.
தற்போது இந்த ரகத்தில் ஈழத்தில இருந்து வந்ததுகளும் சேர்திட்டுதுகள்.
கொழும்புல பிறந்து வளந்தவனெண்டால் அவனுக்கு ஏதோ சந்திரல்ல இருந்து வந்தெணட நினைப்பு - நினைப்புதான் வெறோண்டுமில்ல.
...... 8)
Reply
#14
அப்படி கூறமுடியாது. ஒருகாலத்தில் தமது பகுதியில் கண்ணிவெடி வைத்துவிட்டார்களே என்று திட்டியவர்கள்தான், போராட்டத்துக்கு ஆதரவாக மாறியதையும் பார்க்கக் கூடியதாக உள்ளது. மண்புழுகூட மிதிபடும்போதுதான் துள்ளி எழுகிறது. ஆகவே கொழும்புத் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் தமக்குமேல் சிறுகச்சிறுக போடப்படும் அடக்குமுறைகளை முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை என்றே கருதவேண்டியுள்ளது.
.
Reply
#15
adipadda_tamilan Wrote:முக்கியமானது ஒன்று - கொழும்புத் தமிழனிடம் நேர்மை இராது - அனுபவம். உங்களிடமிருந்து எப்படி பறிக்கலாம் எண்று நேரம் பார்த்து கழுத்தறுப்பான்.
.

இத ஏத்துக்க முடியாது. ஏன் அப்பிடி சொல்றீங்க பொஸ்?
Reply
#16
அனுபவம் தந்த பாடம்....
Reply
#17
B.B.C நீங்கள் கேட்ட கேள்வி அடிப்படையிலேயே தப்பு இது எப்படி இருக்கிறது என்றால் கத்தரிக்காய் காய்கறி இல்லையா என்பது போன்று இருக்கிறது
வேண்டுமானால் இப்படி கேட்கலாம் கொழும்பில் வாழும் தமிழ் பேசும் மக்கள் தமிழர் இல்லையா என்று
ஏனென்றால் தன் மொழியை மறந்தவர்களையெல்லாம் நாம் எம் இனத்தில் சேர்ப்பதில்லை
மற்றும்படி எங்கிருந்தாலும் தமிழன் தமிழன் தான் என்ன ஒரு சின்ன வருத்தம் கொழும்பில் இருக்கும் பலர் தாங்கள் தமிழர் என்பதையோ தமக்கு தமிழ் மொழி தெரியும் என்பதையோ காட்டிக்கொள்ள விரும்பவில்லை
Reply
#18
Quote:adipadda_tamilan




Gender:
Joined: 26 Jan 2004
Posts: 16


Posted: Today at 3:25 am


முக்கியமானது ஒன்று - கொழும்புத் தமிழனிடம் நேர்மை இராது - அனுபவம். உங்களிடமிருந்து எப்படி பறிக்கலாம் எண்று நேரம் பார்த்து கழுத்தறுப்பான்.

லண்டன், கனடா நாறுகிறது தெரியேல்லையே... என் கொழும்பு தமிழன் தான் வந்து கெடுக்கிறானாக்கும். இருக்கிறதிலை 90வீதம் வடக்கு கிழக்கு தமிழர்.. நீங்கள் எல்லாரும் உத்தமர் மற்றவை கள்ளர்..
Reply
#19
Eelavan Wrote:B.B.C நீங்கள் கேட்ட கேள்வி அடிப்படையிலேயே தப்பு இது எப்படி இருக்கிறது என்றால் கத்தரிக்காய் காய்கறி இல்லையா என்பது போன்று இருக்கிறது
வேண்டுமானால் இப்படி கேட்கலாம் கொழும்பில் வாழும் தமிழ் பேசும் மக்கள் தமிழர் இல்லையா என்று
ஏனென்றால் தன் மொழியை மறந்தவர்களையெல்லாம் நாம் எம் இனத்தில் சேர்ப்பதில்லை
மற்றும்படி எங்கிருந்தாலும் தமிழன் தமிழன் தான் என்ன ஒரு சின்ன வருத்தம் கொழும்பில் இருக்கும் பலர் தாங்கள் தமிழர் என்பதையோ தமக்கு தமிழ் மொழி தெரியும் என்பதையோ காட்டிக்கொள்ள விரும்பவில்லை

கத்தரிக்காய் காய்கறி இல்லைன்னு சிலபேர் சொன்னதால தான் நா இந்த தலைப்பையே ஆரம்பிச்சேன். அத பத்தி பேசுவாம் முடிவு பண்ணுவம். பேசாம எப்பிடி முடிவு பண்ணுறது?

இது ஆரம்பிச்ச உன்னேயே ஒருத்தர் கொழும்பு தமிழரை ஈழத்தமிழர் இல்லைன்னாங்க. அப்புறம் இருக்குன்னாங்க.

கொழும்பு தமிழ்ங்க மேல நிறைய பேருக்கு குறிப்பா யாழ்ப்பாண தமிழங்களுக்கு கசப்பு இருக்கின்னு எனக்கு தெரியும். என்ன கசப்பு? ஏன் கசப்புன்னு சொல்லுங்க நா பதில் குடுக்கிறன். சரியா பொஸ்?
Reply
#20
கொழும்புத் தமிழன் என்று ஒருத்தர் சிறிலங்காவில் இல்லை...இருப்பது சிங்கள நிர்வாகத்தால் வகுக்கப்பட்ட இரண்டு பிரிவுகள்...ஒன்று இலங்கைத் தமிழர் மற்றது இந்தியத்தமிழர்....! இதுவும் தமிழர்களைப் பிரித்தாளவும் தமிழர்கள் ஒன்றிணைவதைத் தடுக்கும் திட்டத்தின் ஒருபகுதியே.....!

எனவே இப்படியாக தமிழர் மத்தியில் மீண்டும் பிரதேச பிரிவினையைத் தூண்ட முயலும் பிற்போக்குவாதக் கருத்துக்களை நாம் மிகவும் அவதானத்துடன் நோக்க வேண்டும்....இப்படியான பிரதேச பிரிவினைகள் முன்னர் பழைய சிங்கள, தமிழ் அரசியல்வாதிகளால் திட்டமிட்டு செழிப்புடன் வளர்க்கப்பட்டதும் பின்னர் தமிழர்களின் தேச விடுதலைப் போராட்டதில் எல்லாத்தமிழரும் மலைய மக்கள் உட்பட அனவரும் ஒன்றிணைந்து ஒரு கொள்கையுடன் போராடியதன் வாயிலாக அந்தப் பிற்போக்கான சிந்தனைகள் சிதறடிக்கப்பட்டன....!

எனவே யாழ் களம் போன்ற முற்போக்குவாத சிந்தனைக் களமொன்றில் இப்படியான பிற்போக்குச் சிந்தனைகள் அறிந்தோ அறியாமலோ புகுத்தப்படுவதை தமிழர்கள் என்ற வகையில் நாம் வருத்தத்துடன் நோக்குகின்றோம்.....! இன்று கொழும்பு வாழ் மனோ கணேசனும் மலையகம் வாழ் சந்திரசேகரனும் மற்றும் பலரும் வடக்குக் கிழக்கு மக்களுக்கும் வழிகாட்டிகளாக உள்ளதை யாவரும் அறிந்து கொள்ள வேண்டும்...இப்படியான ஒரு ஒருநிலைப்பட்ட தமிழர்களின் ஒற்றுமையை கடந்தகால வரலாறுகளில் நாம் காண முடிந்திருக்கவில்லை...இந்த ஒற்றுமை என்றும் வளர்க்கப்பட வேண்டும் என்று நாம் காத்திருக்கும் வேளையில் இப்படியான பிரதேசவாதக் கருத்துக்கள் யாழில் விதைக்கப்படுவது வருத்தமளிக்கிறது....!

இப்படியான பிரதேசவாதக் கருத்துக்கள் முன்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியாலும் தமிழ் காங்கிரசாலும் தமது அரசியல் நலன்களுக்காக வளர்க்கப்பட்டு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.....இவற்றிற்கு சில மலையகத் தலைமைகளும் தமது அரசியல் சுயநலம் கருதி உடந்தையாக இருந்தன....! மீண்டும் அப்படியான ஒரு நிலை எமக்கு வேண்டுமா...??? அதுவும் எமது தாய் மொழி தொடர்பில் புகுத்தப்படும் இவ்வாறன பிற்போக்குச் சிந்தனைகள் தேவையா.....???????!

:twisted: :evil: :?: Idea :twisted: :evil:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)