<span style='font-size:21pt;line-height:100%'>சில விடயங்களை நான் தெளிவுபடுத்துவது பலருக்கு உண்மையான பிரச்சனைகளை புரிந்து கொள்ள கூடியதாக இருக்குமென்று நம்புகிறேன்.
மாற்று திரைப்படத்தை சுவிசில் திரையிட உதவுவது சம்பந்தமாக திரு.வாசுதேவன் அவர்களோடு பேசும் போது நடைபெறப் போகும் விழா பற்றியும் விழாவில் எனது குறும்படமொன்றை திரையிட விரும்புவது பற்றியும் நிகழ்சிக்கு லண்டன் வருமாரும் அழைத்தார். பின்னர் அவரை லண்டனில் சந்தித்தேன். அப்போது என்னால் நிகழ்ச்சிக்கு வர இயலாமலுள்ளது பற்றி கூறி எனது குறும்படமான நிழல்யுத்தம் குறும்படத்தை அவருக்கு அனுப்பி வைத்தேன்.
அதன் பின்னர் கூட திரு.வாசு அவர்களோடு பேசினேன். ஆனால் அவர் திரையிட வேண்டாம் என்று கூறிய மட்டை மற்றும் எதிர்பார்ப்புகள் ஆகிய குறும்படங்கள் பற்றி எதையுமே அவர் பேசவில்லை.
ஆனால் தமயந்தியின் மழை (நோர்வே) மற்றும் கனடா குறும்படமொன்று மற்றும் சில லண்டன் குறும்படங்கள் என்று மட்டுமே அவர் கூறினார். எனவே இது பற்றிய விபரங்கள் தெரியாமலே இருந்தது.
திடீரென 29ம் திகதி இரவு லண்டனில் இருந்து தொடர்பு கொண்ட கலைஞர்கள் எமது குறும்படங்கள் தேசம் வெளியீடு என்ற பெயரில் திரையிடப்பட இருப்பதாகவும் அவற்றை வெளியிடுவதைத் தடுக்குமாறும் கேட்டுக் கொண்டனர்.
மட்டை மற்றும் எதிர்பார்ப்புகள் ஆகிய குறும்படங்கள் பயிற்சிப் பட்டறையின் போது பயிற்சிக்காக எடுக்கப் பட்டது மட்டுமல்லாமல் இது வெளியாருக்கு காட்டப்பட மாட்டாது என்ற கருத்தில் உருவாக்கப் பட்டாலும் மட்டை குறும்படம் திருட்டு கிரடிட் காட்கள் பற்றிய பிரச்சனைகளை மையப்படுத்தியிருப்பதால் அவை அக் கலைஞர்களை ஏற்கனவே பிரச்சனைக்குள்ளாக்கியிருந்தது. இது சம்பந்தமானவர்களுக்கு நன்கு தெரியும்.
இப் படங்கள் என்னைப் பொறுத்த வரை தரமானவை அல்ல. பரீட்சைக்கு போகுமுன் எழுதும் பரீட்சார்த்தமான வினாக்களுக்கு எழுதும் பரீட்சை போன்றதே.
என்னால் லண்டனில் இலவசமாக நடத்தப்பட்ட குறும்பட பயிற்சிப் பட்டறையை ஒழுங்கு செய்தவர் (ஆதரவு தந்தவர்) என்ற முறையில் தேசம் சஞ்சிகையின் ஆசிரியர் திரு.ஜெயபாலன் அவர்கள் வசம் மட்டுமல்ல ஏனைய பல கலைஞர்களிடமும் இதன் பிரதிகள் உள்ளன. ஆனால் இவை எவராலும் எங்குமே திரையிடப்படவில்லை.
அவர் வசமிருந்த இப்பிரதிககளே 31ம் திகதி தேசம் வெளியீடு என்ற பெயரில் திரையிட ஏற்பாடாகியிருந்தது.
நான் கேள்வியுற்றதும் 30ம் திகதி திரு.வாசு அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இவற்றை திரையிட வேண்டாம் என்று கூறினேன். அவர் முதலில் சரியென்று கூறி விட்டு சிறிது நேரத்தில் தொடர்பு கொண்டு அவை தேசத்தின் தயாரிப்பு என்று திரு. ஜெயபாலன் கூறுவதாகக் கூறினார். நான் உடனே குறும்படங்களின் எழுத்தோட்டததை தயவு செய்து பாருங்கள் உண்மை விளங்கும் என்றும் நான் எழுத்து மூலம் எதிர்ப்பு கடிதத்தை அனுப்பினேன்.
ஆனால் அதையும் மீறி இக் குறும்படங்கள் திரையிடப்பட்டது வேதனையானதாகும்.
எனது குறும்படங்களை என்னால் கொடுப்பதற்கு எதுவித பிரச்சனையுமில்லை. ஆனால் வேறொருவரோடோ அல்லது ஒரு குழுவோடோ அல்லது ஒரு அமைப்போடோ நான் இணைந்து வேலை செய்த படைப்புகளை என் விருப்புகளில் திரையிடவோ கொடுக்கவோ மாட்டேன்.அப்படிச் செய்வது அநாகரீகமானது வெட்கப்பட வேண்டியதாகவே கருதுவேன்.</span>
இதோ நான் அவர்களுக்கு எழுதிய மடல் :-
<img src='http://www.yarl.com/forum/files/ayarl.jpg' border='0' alt='user posted image'>
திரு.வாசு அவர்களுக்கு
லண்டன்
ஐரோப்பிய திரைப்பட கழகத்தின் பயிற்ச்சிப் பட்டறை படைப்புகளான மட்டை மற்றும் எதிர்பார்ப்புகள் ஆகிய குறும்படங்களை 31.01.2004 அன்று லண்டனில் உங்கள் அமைப்பினால் நடத்தும் திரைக்கலை விழாவில் திரையிட உள்ளதாக அறிந்து இவற்றை திரையிட வேண்டாம் என்று 30.01.2004 தொலைபேசி வாயிலாக தெரிவித்தேன்.
இக் குறும்படங்களைத் தயாரித்த ஐரோப்பிய திரைப்பட கழகத்தின் அல்லது இவற்றை இயக்கிய இயக்குனர்களது எழுத்து மூல அனுமதி பெறாது திரையிட இருப்பது அறிந்து வருந்துகிறேன்.
தவிரவும் இக் குறும்படங்கள் பயிற்சி பட்டறை படங்களே தவிர வெளியார் திரையிடல்களுக்கான நிலையில் உருவாக்கப் பட்ட குறும்படங்கள் அல்ல.
இக் குறும்படங்கள் ஐரோப்பிய திரைப்பட கழகத்தின் தயாரிப்பு என்பதும் இப்படைப்புகள் வேறு எவர் பெயரிலும் வெளியீடு செய்யவோ - உரிமை கொண்டாடவோ முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனவே தயவு செய்து இக் குறும்படங்களினால் ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு இக் குறும்படங்களை திiயிட வேண்டாம் என்று பணிவுடன் வேண்டுகிறேன்.
உண்மையுடன் 30.01.2004
அஜீவன்
Founder
Europe Movie Club
http://www.ajeevan.com/movieclub.html
Head Office
Switzerland
www.ajeevan.com
The official member of Swiss Movie
and
Swiss Film Federation