Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மகிந்தவை விழிபிதுங்க வைத்திருக்கும் புலிகளின் ஜெனீவாஆவணங்கள்
#1
ஜெனீவா பேச்சுக்களின் போது சிறிலங்கா அரசாங்கக் குழுவிடம் கையளிக்கப்பட்ட ஆவணங்களைப் படித்துப் பார்த்த சிறிலங்கா மகிந்த ராஜபக்ச அதிர்ச்சியடைந்துள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
சிறிலங்காவின் தேசிய பாதுகாப்பு சபைக் கூட்டத்தை கடந்த வியாழக்கிழமை மகிந்த ராஜபக்ச கூட்டியுள்ளார். அதில் ஜெனீவா பேச்சுக்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளன.
மேலும் தமிழீழ விடுதலைப் புலிகளினால் கையளிக்கப்பட்ட ஆவணங்களையும் மகிந்த ஆராய்ந்துள்ளார்.
இந்த ஆவணங்களை உரிய அதிகாரிகள் படித்துப்பார்த்து என்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று தமக்குத் தெரிவிக்குமாறும் மகிந்த ராஜபக்ச கோரியுள்ளார்.
சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுக்கள், பொதுமக்களுக்கு எதிரான வன்முறைகள், அதி உயர் பாதுகாப்பு வலயத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் விவரங்கள், மீன்பிடித் தடைகள் ஆகியன தொடர்பான ஆவணங்களை விடுதலைப் புலிகள் கையளித்திருந்தனர்.
"சிறிலங்கா அரச படைகளும் துணை இராணுவக் குழுக்களும்" என்ற விடுதலைப் புலிகளின் 37 பக்க ஆவணமானது சிறிலங்கா அரச தலைவரையும் படைத் தளபதிகளையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ஈ.பி.டி.பி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், கருணா, ஜிகாத் குழுக்கள் பற்றி அந்த ஆவணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆயுதக்குழுக்களை யார் இயக்குகிறார்கள், அந்தக் குழுக்களின் தலைவர்களினது செல்லிடப்பேசி எண்கள், இந்தக் குழுக்களை இயக்குகிற இராணுவத் தளபதிகள், புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளின் பெயர்கள், துணை இராணுவக் குழுக்களின் முகாம்கள் ஆகியவை அந்த ஆவணங்களில் விவரிக்கப்பட்டுள்ளன.
இந்த துணை இராணுவக் குழுக்களினால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் இடம்பெற்றிருந்தவர்கள் பெயரும் அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் கருணா குழுவினருக்காக கொழும்பு தனியார் வர்த்தக வங்கிகள் இரண்டில் தமிழ் வர்த்தகர்கள் இருவர் பெருந்தொகை பணத்தை வைப்புத் தொகையாக செலுத்தியுள்ளமையும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்த இரு தமிழ் வர்த்தகர்களும் அச்சுறுத்தலின் பேரில் இந்த தொகையை செலுத்தியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருணா குழுவுக்கும் சிறிலங்கா இராணுவ அதிகாரிகளுக்கும் இடையேயான உறவுகளை விளக்கும் கொழும்பு ஆங்கிலப் பத்திரிகைகளின் கட்டுரைகளும் அந்த ஆவணத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
மேலும் மகிந்த ராஜபக்ச அரச தலைவராகப் பொறுப்பேற்ற பின்னர் அரச படைகளால் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பொதுமக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் தொடர்பான 73 பக்க அறிக்கையையும் விடுதலைப் புலிகள் கையளித்துள்ளனர்.
இந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும் தரவுகளானது தென்னிலங்கை நிர்வாக அமைப்புகளுக்குள் விடுதலைப் புலிகள் செல்வாக்கு செலுத்தி தரவுகளைப் பெற்றுள்ளமையையும் புலிகளின் புலனாய்வுத் துறையின் வலுவையும் பகிரங்கப்படுத்துவதாக இருந்ததாக ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


www.eelampage.com
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)