03-04-2006, 01:09 PM
ஈழத் தமிழர் தொடர்பான நிலைப்பாட்டில் எதுவித சமரசமும் எப்போதும் இல்லை: வைகோ
[சனிக்கிழமை, 4 மார்ச் 2006, 17:23 ஈழம்] [புதினம் நிருபர்]
ஈழத் தமிழர் தொடர்பான நிலைப்பாட்டில் எப்போதும் எதுவித சமரசமும் செய்து கொள்ள மாட்டோம் என்று தமிழகத்தின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அண்ணா தி.மு.க. அணியில் வைகோவின் ம.தி.மு.க. இன்று சனிக்கிழமை இணைந்தது.
ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்திற்குச் சென்ற வைகோ இது தொடர்பான பேச்சுக்களை நடத்தினார்.
அதன் பின்னர் ம.தி.மு.க. தலைமையகமான தாயகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் வைகோ கூறியதாவது:
பொடா சட்டத்தை நாங்கள் பங்கேற்றிருந்த மத்திய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுதான் அமுல்படுத்தியது. அதைச் செயற்படுத்தியதுதான் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு. பொடாவை அமுல்படுத்திய அரசாங்கத்தில் எமது அமைச்சர்களும் இருந்தனர். அப்போது அவர்கள் பதவி விலக முன்வந்தனர். ஆனாலும் அரசாங்கத்திலே நீடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.
ஆகையால் பொடா சட்டத்தின் கீழ் எம்மை கைது செய்த விவகாரம் பெரிதானது அல்ல. கடந்த காலங்களை மறக்கிறோம்.
ஈழத் தமிழர் பிரச்சனைக்காகக் குரல் கொடுப்பது என்பது எமது கட்சியின் தலையாயக் கொள்கை. ஈழத்தில் விடுதலைக்குப் போராடுகிற ஒரே இயக்கம் தமிழீழ விடுதலைப் புலிகள்தான். அவர்களை ஆதரிப்பதிலோ ஈழத் தமிழர் பிரச்சனை தொடர்பிலான எமது நிலைப்பாட்டிலே எப்போதும் எதுவித சமரசத்துக்கும் இடமே இல்லை என்றார் வைகோ.
மு.கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இதுவரை வைகோவின் ம.தி.மு.க. இருந்து வந்தது.
மறுலமர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கட்சி அமைப்பானது 35 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு செயற்பட்டு வருகிறது. ஆகையால் 35 மாவட்டத்துக்கும் ஒரு பிரதிநிதியாக தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பகிர்வில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 35 தொகுதிகள் கேட்கப்பட்டது. ஆனால் 16 தொகுதிகளில் தொடங்கி மிக அதிகபட்சமாக 22 தொகுதிகள் வரைதான் தர முடியும் என்று தி.மு.க.தரப்பு திட்டவட்டமாகத் தெரிவித்தது.
தி.மு.க. தரப்பு அளிக்க முன்வந்த 22 தொகுதிகளிலும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெறக் கூடிய தொகுதிகள் 6 மட்டுமே இருந்தமையால் அக்கட்சியினர் வருத்தமடைந்தனர்.
அதே நேரத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கோருகிற 35 தொகுதிகளையும் அளிக்க ஜெயலலிதா தலைமையிலான அண்ணா தி.மு.க. முன்வந்தது.
இதையடுத்து கடந்த சில நாட்களாக தமிழக அரசியலில் ஏற்பட்டு வந்த பரபரப்புகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் இன்று காலை ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்துக்குச் சென்ற வைகோ தொகுதிப் பகிர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
வைகோவின் ம.தி.மு.க.வுக்கு 35 தொகுதிகளைப் பகிர்ந்தளிக்கும் ஒப்பந்தத்தில் ஜெயலலிதாவும் வைகோவும் கைச்சாத்திட்டனர். இதை இருவரும் கூட்டாக ஊடகவியலாளர்களிடம் அறிவித்தனர்.
கடந்த காலங்களில் ஈழத் தமிழர் தொடர்பில் கடும் போக்கை வெளிப்படுத்தி வந்த ஜெயலலிதாவும் அண்மைக்காலத்தில் ஆதரவுப் போக்கை வெளிப்படுத்தியிருந்தார்.
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் இந்தியப் பயணத்தின் போது அவரை ஜெயலலிதா வரவேற்க மறுத்து திருப்பியனுப்பியிருந்தார். அதேபோல் ஈழத் தமிழ் அகதிகளின் வருகை தொடர்பிலும் கரிசனையை வெளிப்படுத்தியிருந்த ஜெயலலிதா, சிறிலங்கா அரசாங்கத்துக்கு இந்திய அரசாங்கம் உதவுவதையும் கடுமையாக எதிர்த்திருந்தார்.
இந்தச் சூழலில் ஈழத் தமிழர் பிரச்சனையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக உரத்துக் குரல் கொடுத்து வரும் வைகோ மற்றும் தொல். திருமாவளவன் ஆகியோரும் ஜெயலலிதாவின் அண்ணா தி.மு.க. அணியில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
puthinam.com

[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>