02-28-2006, 01:03 PM
<b>ஜெனீவாப் பேச்சுவார்த்தையை சீர்குலைக்க சதி!: சரணடைந்த இளைஞர் தகவல் </b>
[செவ்வாய்க்கிழமை, 28 பெப்ரவரி 2006, 16:58 ஈழம்] [கிளிநொச்சிலிருந்து செ.தனோஜன்]
சிறிலங்காப் படையினரும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் ஆயுதக் குழுவும் ஜெனீவாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையை சீர்குலைக்க மேற்கொண்ட சதி முயற்சி தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளது.
ஜெனீவாப் பேச்சுக்கள் நடைபெற்ற ஆரம்ப தினமான பெப். 22 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவதன் மூலம் ஜெனீவாப் பேச்சுக்களை குழப்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
கருணா குழு எனக் கூறப்படும் ஆயுதக் குழுவிலிருந்து விடுதலைப் புலிகளிடம் சரணடைந்துள்ள இளைஞர் ஒருவர் இந்த தகவலைத் தெரிவித்துள்ளார்.
கோரகல்லிமடுவைச் சேர்ந்த ஆறுமுகம் விக்னேஸ்வரன் (32) என்ற இளைஞர் கிளைமோர்த் தாக்குதல் நடத்துவதற்குக் கொடுக்கப்பட்டிருந்த வெடிமருந்து நிரப்பப்பட்ட கலன் மற்றும் வெடி பொருட்களுடன் விடுதலைப் புலிகளிடம் சரணடைந்துள்ளார்.
இது தொடர்பான ஊடகவியலாளர் மாநாடு நேற்று திங்கட்கிழமை முற்பகல் 11.00 மணிக்கு கொக்கட்டிச்சோலை சோலையகத்தில் நடைபெற்ற போது மேற்படி இளைஞர் விடயங்களை ஊடகவியலாளரிடம் தெரிவித்தார்.
சந்திவெளி, கோரகல்லிமடுவைச் சேர்ந்த இந்த இளைஞர் வியாபாரத் தொழிலில் ஈடுபட்டு வந்ததாகவும் கடந்த பத்து மாதங்களுக்கு முன்னர் வலுகட்டாயத்தின் பேரில் கருணா குழுவில் சேர்ந்து கொண்டதாகவும் குறிப்பிட்டார்.
பின்னர் கிரான் படைமுகாமில் சிறிலங்காப் படையினருடன் சேர்ந்து பொதுமக்கள் கெடுபிடி நடவடிக்கைகளுக்கு ஒரு ஆளாக தன்னைப் பயன்படுத்தி வந்ததாகவும் குறிப்பிட்டார்.
கடந்த 18 ஆம் திகதி கிரான் படை முகாமிலிருந்து விக்னேஸ்வரனை கருணா கும்பல் தீவுச்சேனைக்கு வருமாறு அழைத்துள்ளனர். அங்கு சென்றபோது "நீர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஊடுருவித் தாக்குதல் நடாத்த வேண்டும்" எனக் கூறி அதிசக்தி வாய்ந்த வெடிபொருட்கள் நிரப்பட்ட ஒரு கலன் சிறிய அலவாங்கு ஒன்று, ஒரு எறிகணை மற்றும் வயர் ஆகியவற்றை கொடுத்துள்ளனர்.
அத்துடன் மூன்று நாள் சிறப்பு பயிற்சியும் இந்த இளைஞருக்கு தீவுச்சேனையில் வழங்கியுள்ளனர். தாக்குதலை நடத்துவதற்கான ஊக்குவிப்பு பணமாக நாலாயிரம் ரூபா பணமும் கொடுத்ததாக அந்த இளைஞர் குறிப்பிட்டார்.
அதேவேளை புலிபாய்ந்த பாலப் பகுதிக்குச் சென்று தளபதிகளான ஜெயார்த்தனன், உமாறாம் ஆகியோர் மீது தாக்குதலை நடத்திவிட்டு வருமாறு தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் முடிந்த பின் கிரான் படை முகாமிற்கு வருமாறும் வரும் போது டோர்ச் லைட் பாவிப்பதன் மூலம் படையினர் அடையாளம் கண்டுகொள்வார்கள் என கிரான் படைமுகாமிலுள்ள இராணுவ அதிகாரி கப்டன் பந்துல என்பவர் குறிப்பிட்டதாகவும் இந்த இளைஞர் தெரிவித்தார்.
மேற்படி இளைஞர் ஓட்டமாவடிக்கு ஏற்றிவந்து அங்குள்ள இளைஞர்களிடம் ஆயுதக்குழுவினர் ஒப்படைத்துள்ளனர். அந்த இளைஞர்கள் காவத்தைமுனையிலுள்ள ஊர்காவல்படை காவலரணுக்குக் கொண்டு வந்து விட்டதாகவும் அங்கிருந்து ஆற்றைக் கடந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்ததாகவும் இந்த இளைஞர் தெரிவித்தார்.
பின்னர் தாம் செய்யப் போவது தவறு என்பதை உணர்ந்து கொண்டு வந்த வெடிபொருட்களுடன் விடுதலைப் புலிகளிடம் சரணடைந்தேன் என்றார் ஆயுதக்குழுவிடமிருந்து தப்பி வந்த விக்னேஸ்வரன்.
நனறி:புதினம்

[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
<!--QuoteEBegin-->