இன்று புலம் பெயர் நாடுகளில் பல ஊடகங்கள் மற்றும் பத்திரிகை வார மாத இதழ்கள் என்று பலவும் புலம்பெயர் தமிழர்களால் நடாத்தபடுகின்றது அதே போல இன்றைய தொழில் நு.ட்ப புரட்சியின் ஒரு உன்னத கண்டுபிடிப்பால் இன்று இணைய பத்திரிகைகளும் நாளுக்கு நாள் ஒவ்வொன்றாக அறிமுகமாகி கொண்டிருக்கின்றன ஒரு சில
வேண்டாத சம்பவங்களை தவிர்த்து பார்த்தால் புலத்து தமிழரின் இந்த முயற்சிகள்
பாராட்டபட வேண்டியவை.
பாராட்டுவோம். இவை இப்படியிருக்க இங்கு இந்த தமிழ் ஊடக மற்றும் எழுத்தளர்கள் ஒன்றியம்
என்று ஒண்டு உண்டு அதற்கு தலைவர்என்றும் ஒருவர் உள்ளார். இது எத்தனை
பேருக்கு தெரியும்? இப்படி ஒரு அமைப்பு இருப்பதாக ஒரு ஆறு மாதங்களிற்கு முன்னர் நான் கேள்விப்பட்டபோது உங்களை மாதிரித்தான் நானும் முழித்தேன்.
காரணம் இப்படியொரு அமைப்பு இயங்குவதாக வாசகர்களிற்கு தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லாவிட்டாலும் புலம் பெயர் எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள்
எத்தனை பேருக்கு இந்த அமைப்பை பற்றி தெரியும்? எத்தனை பேர் இதனுடன் இணைந்து செயல்படுபவர்களாகவோ
அல்லது அங்கத்தவராகவோ இருக்கிறார் என்று முயன்றவரை முயற்சி பண்ணி விசாரித்ததில் பெரிய ஊடககங்களிற்கோ
ஏன் புலத்தில் பெயர் சொன்னால் தெரிய கூடிய எழுத்தாளர்களிற்கோ இப்படி ஒரு ஒன்றியம் ஒன்று இருப்பது தெரியாது.
காரணம் அந்த ஒன்றியத்தின் செயல் வேகமாகவோ விவேகமாகவோ செயற்பட்டு தமிழ் ஊடகவியலாளர்களையோ அல்லது
எழுத்தாளர்களையோ உள்வாங்கவில்லையென்பதே. இன்று புலத்தில் தமிழ் எழுத்தாளர்களை எடுத்துக் கொண்டால் அவர்கள் அடித்த தேங்காய் போல் சிதறி ஆளுக்கு ஒரு இலக்கிய வட்டம்இ இலக்கண வட்டம் என்று வட்டங்கள் அமைத்து அந்த வட்டத்திற்குள்ளேயே கட்டம் கட்டமாக பிரிந்து போய் வருடத்தில் ஒருமுறை எங்காவது ஒரு மண்டபத்திலோ அல்லது
ஒரு வீட்டிலோ கூடி சில தீர்மானங்கள் அல்லது கண்டனங்களை ஞஉறைவேற்றி விட்டு கலைந்துஇ கரைந்து காலப்போக்கில் காணாமல் போய் விடுகிறார்கள். இப்படி இவர்களது அறிவு ஆற்றல் எல்லாம் வீணே விழலுக்கிறைத்த நீராய் வீணாகாமல் அதை அணைகட்டி ஒருங்கிணைத்து ஒரே பாதையில் எமது தமிழ் தேசியத்தின் பலத்திற்காகவும் இவர்களை கொண்டே புலத்தின் எமது இளம் சந்ததியின் சக்திகளையும் அறிவாற்றலையும் எமது தாயகம் நோக்கியதாய் திருப்ப வேண்டியது இந்த புலம்பெயர் ஊடக மற்றும் எழுத்தாளர் ஒன்றியத்திற்கு முன் உள்ள பாரிய கடமையாகும். ஆனால் அந்த ஒன்றியம் என்ன செய்து கொண்டிருக்கிறதென்றால் தனது இருப்பை காட்டி கொள்ள அவ்வப்போது ஒரு அறிக்கை. அதாவது பலரையும் போய் சென்றடைய கூடிய பத்திரிகைகளில் கூட இல்லை தங்களிற்கு தெரிந்த ஒருசில இணைய தளங்களிற்கு எழுதி அனுப்பி விட்டு மறக்காமல் தலைமை தன்னுடையை பெயரை மட்டும் போட்டு விடுவார்.
அப்படித்தான் அண்மையில் மறைந்த மாமனிதர் யோசப் பரராயசிங்கத்தின் படுகொலைக்கும் அந்த ஒன்றியத்தின் தலைவர் ஏதோ தான் வள்ளுவரின் வம்சாவழி வந்தவர் போல இரண்டே இரண்டு வரியில் இரண்டு கண்டன அறிக்கைகளை விட்டார் அதுவும் ஒரேயொரு இணையதளத்தில் பார்க்க முடிந்தது. கீழே மறக்காமல் வழமை போல தனது பெயர் இட்டுருந்தார். காரணம் அதை போடாவிட்டால்இவரையாரென்று எவருக்கும் தெரியாது. (போட்டாலும் தெரியாது) ஏன் மற்றைய ஊடகங்களிற்கு இவர் அனுப்பவில்லையா? அல்லது அனுப்பியும் அந்த ஊடகங்கள் இவரது இரண்டு வரி கண்டனத்தை பார்த்து இதெல்லாம் ஒரு கண்டனமா? என்று பிரசுரிக்கவில்லையா தெரியவில்லை. இதற்கு முதலும் பெல்ஜியத்தில் அய்ரொப்பிய ஒன்றியத்தின் புலிகள் மீதான சில கட்டுப்பாடுகளிற்கு எதிர்ப்பு தெரிவித்து புலம் பெயர் அய்ரோப்பிய தமிழர்களால்
நடாத்த பட்ட மாபெரும் கண்டன பேரணி பற்றிய விபரங்களை மற்றைய அய்ரோப்பிய ஊடகங்கள் மூலம் அய்ரோப்பிர்களிற்கும் எடுத்து சென்று அந்த ஊர்வலத்தின் சரியான பலாபலனை அறுவடை செய்ய தவறியதற்காகவும் இந்த ஒன்றியத்தின் மீதும் அதன் தலைமை மீதும் பலரின் கண்டனங்கள் எழுந்ததும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.
இன்று சாதாரணமாக பொழுது போக்குவதற்காகவே பலர்தங்களிற்கு என்று இணையத் தளங்களை உருவாக்குகின்ற காலமிது இந்த காலத்தில் இப்படியான ஒரு பொறுப்புவாய்ந் ஒரு அமைப்புதனக்கென்று ஒரு இணைய தகவல் தளம்ஒன்றை கூட இதுரை அமைக்கவில்லை. நமதுஇலக்கு என்று ஒரு பத்திகை மட்டும்மாதாந்ம்வெளிவருகிறது அமரத்துடைந்வருக்கு அடிக்கிற அஞ்சலி பத்திகை மாதி ஒரு பக்க பத்திகை அதன் விலை ஒரு யுரோ. பலபக்கங்களில் பல்சுவை நிகழ்ச்சிகளையும்தாங்கி பல ஆயிம்பிரதிள் விற்ற பத்திகைகளே இன்று இணைய பத்திகைகளின் இலவச வரவால் பணம்பார்கா விட்டாலும்பரவாயிலை பத்திரிகை படுத்துவிட கூடாதுஎன்பதற்காக அனுசரனையாளர்ளின் விளம்பர ஆதரவுடன் இன்று இலவச பத்திகைகளாய்மாறிவிட்ட காலத்தி. இவர்கள் பத்திகைக்கு ஒரு யுரோ என்றால் எவன் ஏறெடுத்துபார்பான்.
எனவே இந் ஒன்றியத்தி பெறுப்பாளர்தான் தாங்கி நிற்கும்பாரிய கடமையை கருத்தில் கொண்டு இனிமேலும்கதை எழுதுவதும் கவிதை வெளியிவதோடும்மட்டும் தனதுப ணி முந்துவிட்டதுஎன்று எண்ணிவாழாவிருந்துவிடாமல் உலகத்திள்ள பும்nபயர்தமி எழத்தாளர்கள் மற்றும்ஊடகவியலாளர்ளை ஒன்றிணைத்துஅரவணைத்துஅவர்ளதுஅத்தனை அறிவாற்றலையும் எமதுதாயகம்நோக்கியதாய் இழுத்து செல்ல வேண்டியது இவரதுபணியாகும் தற்சமயம்எமதுதாயகத்திகான போராட்டம்வெறும்ஆயுத போராட்டமாக மட்டுமிறி தகவல் தொழில்நு.ட்ப போராட்டமாக மாறிவிட்ட கால கட்டம் இந் சந்ர்ப்பத்தை சரியாக நாம்பயன் படுத்திகொள்ள வேண்டும் இதனை இந்த ஒன்றியம்தக்கரீதியில் பயன்படுத்துமா?? தவற விடுமா??
என்பதுபொறுத்திந்துபார்போம்
நன்றிகள்: ஒருபேப்பர்
http://www.orupaper.com/issue44/pages_K__34.pdf