Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உறவுகள் உறவுகள் தான்
#1
இன்றைய உறவுகள் பெரும்பாலும் மேலோட்ட நிலையிலேயே இருக்கின்றன. இதற்கு முக்கிய காரணம் உறவுகள் அங்கங்கே பிரிந்து கிடப்பது தான். வாழ்க்கைக்கான நிலைக்களம் ஒரே இடத்தில் அமையாத பட்சத்தில் உறவுகள் தொழிலின் நிமித்தம் திசைக்கொன்றாய் பிரிந்து விடவே செய்கிறார்கள்.

இந்தப்பிரிவு தான் பல உறவுகளின் வேர்களைத் தகர்த்து விடுகிறது. இருக்கிற இடங்கள் தொலைதூரமாகி விடுகிற பட்சத்தில் உறவுகள் இல்லாமலே வாழப் பழகி விடுகிறார்கள்,வாழ்க்கை சூழ்நிலை அந்த அளவுக்கு அவர்களை மாற்றி விடுகிறது என்பதே நிஜமான உண்மை.

இப்படி தனித்து துண்டாடப்படுகிற அந்த குடும்பத்தின் அடுத்த சந்ததி தங்கள் பெற்றோரின் உறவுகள் யாரென்று தெரியாமலே வளர வேண்டிய சூழ்நிலை.

சில உறவுக் குடும்பங்கள் திசைக்கொன்றாய் இருப்பார்கள்.குடும்ப விழாக்கள் என்றால் மட்டும் அழைப்பு வரும்.சிலர் நேரில் வந்து அழைப்பார்கள்.வருஷம் ஒரு முறையோ,நாலைந்து வருஷங்களுக்கு ஒரு முறையோ கூட இப்படியான அழைப்புக்கள் வந்து, விட்டுப்போக இருந்த குடும்ப உறவுகளை தளிர்க்க வைக்கப்பார்க்கும். இந்த மாதிரியான அழைப்புகளுக்குக்கூட போக முடியாத சூழ்நிலை சிலருக்கு அமைந்து விடும்.இதுவே இதுமாதிரியான உறவுக்குடும்பங்களின் கடைசி ஆணிவேரையும் இற்றுப்போகப்பண்ணி விடும்.

இதனால் தலைமுறை இடைவெளி நிரந்தரமாகி விடும்.காலப்போக்கில் உறவுகள் யார்யாரோ என்றாகி விடக்கூடும். சிலர் இருக்கிறார்கள். உறவுகளை விட்டு தொலைதூரத்தில் இருந்தாலும் தங்கள் பிறந்த ஊர்களில் நடக்கிற கோவில் திருவிழாக்களுக்கு எப்படியாவது போய் விடுவார்கள். ஒருவிதத்தில் இது உறவைப் புதுப்பித்துக்கொள்கிற முயற்சி தான்.

இன்னும் சிலர் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் வருஷத்தில் பத்து நாளாவது சொந்த ஊருக்கு வந்து விடுவார்கள்.பறவைகள் எவ்வளவு உயரத்தில் பறந்து இரை தேடினாலும் தங்கிப்போக தனது கூட்டுக்கு வந்து போகிற மாதிரிதான் இதுவும். இந்த நிலைப்படுத்துதலில் உறவுகள் விட்டுப்போகாமல் தொடரும் வாய்ப்புண்டு.

சிலர் மட்டும் தூரத்தே புலம் பெயர்ந்த நிலையில் உறவுகளுக்கும் இவர்களுக்கும் தொடர்பே இல்லாத மாதிரி ஆகி விடுகிறார்கள். இவர்கள் உறவுகளின் எந்த பலமுமின்றி எப்படியோ பேலன்ஸ் செய்து கொண்டு தங்கள் காலில் நிற்கப் பழகி விடுகிறார்கள். இருக்கிற இடத்தைச்சுற்றி முடிந்தவரை ஒரு நட்பு வட்டத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள்.இப்படிப் பட்ட நிலையில் உறவு இவர்களுக்கு இரண்டாம் பட்சமாகி விடுகிறது.இப்படிப் பட்டவர்களுக்கும் ஒருவித சிக்கல் இருக்கிறது. உறவுகளை தொலைத்த இவர்களுக்கு அவர்கள் வீட்டுப்பிள்ளைகளின் திருமணம் என்று வரும்போது தங்கள் கவுரவத்தை நிலைநாட்ட உறவுகள் அவசியமாகத் தோன்றுகிறது.

இந்தப் பட்டியலில் உறவுகளின் எந்தப்பின்னணியும் இல்லாமல் தங்களை வளர்த்துக் கொண்டவர்களும் இருப்பார்கள்.இவர்கள் தங்கள் பெருமையை உறவுகளுக்கு பறை சாற்றவாவது தேடிப்போய் தங்கள் இல்ல விழாக்களுக்கு அழைப்பார்கள்.ஒருவர் தனது உறவின் பெருமையை ஊரறிவதைவிட, உறவறிய விரும்புவதன் விளைவே இதற்குக் காரணம்.இந்த சமயத்தில் உறவுகள் பார்க்கும் ஆச்சரியப்பார்வைகள் தான் இவர்களுக்குக் கிடைத்த மகுடம். இப்படி விட்டுப் பிடித்தாலும் பெருமைபெறுவது உறவுகளின் சங்கமத்தில் தான்.அதை இவர்களும் உணர்ந்தே இருக்கிறார்கள்.

இப்படி தேவைக்கும் பெருமைக்கும் மட்டுமே உறவுகள் வேண்டும் என்பது அத்தனை சரியல்ல. இன்றைய விஞ்ஞான தொழில்நுட்பத்தில் தூரம் ஒரு பொருட்டல்ல. தொலைத் தொடர்பு வசதிகள் சர்வ சாதாரணமாகி விட்ட நிலையில் போன் தொடர்புகள் மூலம் உறவு களை தக்க வைத்துக்கொள்ள முடியும்.அலட்சியமும், அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்ற மனநிலையுமே உறவுகளை கிடப்பில் போட்டு விடுகின்றன என்பதே நிஜம். நட்பை நேசியுங்கள்.

சொந்த சகோதரனிலும் அதிகமாய் சிநேகிப்பவருமுண்டு என்று பைபிளே நட்புக்கு மகுடம் சூட்டுகிறது. அதே நேரம் நீங்கள் வேர்களாகவும் கிளைகளாகவும் வெளிப்பட்ட உறவுகளை தொலைத்து விடாதீர்கள்.அங்க அடையாளங்கள் மூலம் உங்களை நீங்கள் அடையாளம் காட்டுவது உலகப்பிரகாரமான அடையாளம்.உறவுகள் வழியாக நீங்கள் வெளிப்படுவது தான் மிகச்சரியான அடையாளம்.

Thanks:Thanthi...
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#2
நல்லதொரு கட்டுரை சுண்டல். இப்ப நமக்கு எல்லாம் அரைவாசி சொந்தகாரரை தெரியாது., இந்த நிலமை நீடிக்க விடக்கூடாது. இந்த கட்டுரை ஆசிரியர் சொன்னமாதிரி பஞ்சியை பார்க்காது தொலைபேசி ஊடாகவாவது உறவுகளுடன் கதைக்க வேண்டும்
Reply
#3
Quote:சிலர் மட்டும் தூரத்தே புலம் பெயர்ந்த நிலையில் உறவுகளுக்கும் இவர்களுக்கும் தொடர்பே இல்லாத மாதிரி ஆகி விடுகிறார்கள்.

தம்பி எனக்கு நடந்த ஒரு சோகத்தைக் கேளப்பு சவுதிலையிருந்து விடுமுறைக்கு ஒவ்வொரு வருஷமும் போறது வழக்கம் போணமுறை போக வெளிக்கிடேக்கை என்ரை அண்ணன் முறையானவர் ஊரிலையிருந்து கோல் எடுத்தான் சரி பாசத்திலை எடுக்கிறான் எண்டு சந்தோஷப்பட்டுக் கொண்டு என்ன விசயம் எண்டு கேட்டன் அவன் சொன்னான் "போணமுறை என்ரை மனுசிக்கு கொண்டு வந்த சாறி மாதிரி 2 கொண்டு வா " எண்டு ஏன் இப்பிடி ஒரே மாதிரி 2கேக்கிறான் என அவனையே கேட்டு விட்டன் அதுக்கு அவன் சொல்லுறான் மச்சாள்காரி(மனைவியின் தங்கை) சரியா ஆசைப்பட்டாளாம்
அப்ப.........மனுசின்ரை தங்கச்சியை இவன் மடக்கிறதுக்கு நான் இஞ்சையிருந்து சாறி கொண்டு போக வேண்டிக்கிடக்கு........
சும்மா சொல்லக்கூடாது உறவுகள் உறவுகள்தான்
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
இப்போ உறவுகளை விட நண்பர்கள் தான் மிகவும் உதவியாக இருக்கின்றார்கள். கூடுதலான உறவுகள் சுயநலத்துடனே பழகின்றார்கள். நண்பர்கள் என்றால் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லமால் பழகின்றார்கள். உறவுகள் என்றால் நான் அவர்களுடன் கதைப்பதில்லை நீ ஏன் கதைக்கின்றாய் என்பார்கள். என்னை மதியதா இடத்திற்கு நீ போகலமா? என்றும் கேட்பார்கள். கொஞ்ச அவசர தேவைக்கா சிறு உதவி என்று கேட்டால் நீ உழைக்கும் காசு எல்லாம் என்ன செய்கிறாய்? என்று தான் முதல் கேள்வி வரும். நண்பர்கள் அப்படியல்ல. தங்களிடம் இல்லாவிடினும் கிறாடிற் கார்ட்டில் என்றாலும் எடுத்து தருவார்கள்.
ஆகவே என்னுடைய அனுபவத்தின்படி உறவுகளுடன் அளவாக பழகுவது தான் இன்றைய காலகட்டத்தில் எனக்கு சந்தோசமாக இருக்கின்றது. உதவி தேவை என்றால் முன் நின்று எல்லாம் செய்து கொடுப்பேன். மற்ற விடயங்களில் பின்னுக்கு தான் நிற்பேன்.

தகவலுக்கு நன்றி சுண்டல்

Reply
#5
எனக்கும் அப்படித்தான் ரமா உறவுகள் எல்லாம் ஒரு எதிர் பார்ப்போடுதான் பழகுவார்கள். நண்பர்கள் தான் இந்தக்காலத்தில் மிக மிக உதவியாக இருக்கிறார்கள்.
<b> .. .. !!</b>
Reply
#6
எனக்கு உறவுகள் நிறைய..முடிந்த வரை எல்லோரோடும் தொடர்புகள் இருக்கு..பழைய காணி, பூமி சண்டைகளை தவிர்த்து.

ஆனாலும். சிலர் மேல் எனக்கு தீராத ஒரு வெறுப்பு..அவர்ளின் சுயநலம் தான் காரணம். அவர்களோடு நான் கதைப்பதை விட்டு விட்டேன்.. அதையொட்டி நான் கவலையும் படுவதில்லை.

ரசி அக்கா..உண்மை தான்..நண்பர்கள் பலர் எதுவுமே எதிர் பார்க்காமல் பழகுவார்கள்..ஆனாலும் சிலர்..மாறுபட்டும் இருக்கத்தான் செய்கிறார்கள்..

Quote:தம்பி எனக்கு நடந்த ஒரு சோகத்தைக் கேளப்பு

பாவம் அங்கிள்..சரி அங்கிள்..இனி ஆன்டியை தவிர யாருக்கும் சாறி எடுக்காதைங்கோ.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
..
....
..!
Reply
#7
MUGATHTHAR Wrote:
Quote:சிலர் மட்டும் தூரத்தே புலம் பெயர்ந்த நிலையில் உறவுகளுக்கும் இவர்களுக்கும் தொடர்பே இல்லாத மாதிரி ஆகி விடுகிறார்கள்.

தம்பி எனக்கு நடந்த ஒரு சோகத்தைக் கேளப்பு சவுதிலையிருந்து விடுமுறைக்கு ஒவ்வொரு வருஷமும் போறது வழக்கம் போணமுறை போக வெளிக்கிடேக்கை என்ரை அண்ணன் முறையானவர் ஊரிலையிருந்து கோல் எடுத்தான் சரி பாசத்திலை எடுக்கிறான் எண்டு சந்தோஷப்பட்டுக் கொண்டு என்ன விசயம் எண்டு கேட்டன் அவன் சொன்னான் "போணமுறை என்ரை மனுசிக்கு கொண்டு வந்த சாறி மாதிரி 2 கொண்டு வா " எண்டு ஏன் இப்பிடி ஒரே மாதிரி 2கேக்கிறான் என அவனையே கேட்டு விட்டன் அதுக்கு அவன் சொல்லுறான் மச்சாள்காரி(மனைவியின் தங்கை) சரியா ஆசைப்பட்டாளாம்
அப்ப.........மனுசின்ரை தங்கச்சியை இவன் மடக்கிறதுக்கு நான் இஞ்சையிருந்து சாறி கொண்டு போக வேண்டிக்கிடக்கு........
சும்மா சொல்லக்கூடாது உறவுகள் உறவுகள்தான்

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#8
SUNDHAL Wrote:

எல்லாப் பக்கத்திலும் என்ன சிரிப்பு ஆ... :evil:
சுண்டல் அண்ணா இப்ப நித்தா.. ஆள் எழும்பி வாரத்துக்குள்ள நான் எஸ்கேப் :wink:
Reply
#9
Quote: அவன் சொல்லுறான் மச்சாள்காரி(மனைவியின் தங்கை) சரியா ஆசைப்பட்டாளாம்
அப்ப.........மனுசின்ரை தங்கச்சியை இவன் மடக்கிறதுக்கு நான் இஞ்சையிருந்து சாறி கொண்டு போக வேண்டிக்கிடக்கு........

ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் தானே <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அது பொருகளில் மட்டும் இல்லையாக்கும் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)