02-25-2006, 08:29 PM
தமிழர் பகுதிகளில் அமைதி நிலவுவது இந்தியாவின் ஸ்திரத்தன்மைக்கு ஏதுவானது: அன்ரன் பாலசிங்கம்
[ஞாயிற்றுக்கிழமை, 26 பெப்ரவரி 2006, 00:15 ஈழம்] [ம.சேரமான்]
இலங்கையில் தமிழர் பகுதிகளில் அமைதி நிலவுவது இந்தியாவின் ஸ்திரத்தன்மைக்கு ஏதுவாக அமையும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பி.பி.சி. தமிழோசை வெளியிட்டுள்ள செய்தி விவரம்:
ஜெனீவாவில் நடைபெற்ற இலங்கை சமாதானப் பேச்சுவார்த்தைகள் திருப்தி அளிக்கின்றன.
வடக்கு கிழக்கில் அரச ஆதரவில் இயங்கும் துணைப் படைகளின் ஆயுதங்கள் களையப்பட்டு வன்முறைகள் நிறுத்தப்படும் பட்சத்தில் தமிழர் பகுதிகளில் அமைதி நிலை ஏற்படும். இது தொடர்பில் அரசாங்கம் உறுதியளித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
அரச இராணுவமும் அதன் புலனாய்வுத்துறையினரும், தமிழ் மக்களுக்கெதிராகவும் விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும் நடத்தும் தாக்குதல்களை நிறுத்தும் போது அதற்குப் பதிலாக தமிழர் பகுதிகளில் நடைபெறும் வன்முறைகளை நிறுத்தக் கூடிய அதிகாரமும் செல்வாக்கும் விடுதலைப் புலிகளுக்கு உண்டு. ஏனென்று சொன்னால் மக்கள் எழுச்சிப் படைகளோ அல்லது மற்றவரோ விடுதலைப் புலிகளின் ஆணையை மீறி செயல்பட மாட்டார்கள்.
தமிழர் பகுதிகள் முழுவதும் விடுதலைப் புலிகளின் ஆதிக்கத்தின் கீழும் மற்றும் அவர்களின் அதிகார கட்டுப்பாட்டின் கீழும் செயல்படுகிறது.
இலங்கையில் தமிழர் பகுதிகளில் அமைதி நிலவுவது இந்தியாவின் ஸ்திரத்தன்மைக்கு ஏதுவாக அமையும். மேலும்இ இந்திய அரசுடன் மறைமுகமாக விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு இருக்கிறது. இது குறித்து மேலும் பகிரங்கமாக கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றார் அன்ரன் பாலசிங்கம்.
நன்றி: புதினம்

[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>