Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
நான் இங்கே வேஷம் ஒன்றும் போடவில்லை. யதார்த்தத்தை தான் எழுதினேன். வேஷம் போடுவோர்களுக்குத் தான் நிஜங்கள் சுடும். வெளிநாடுகளிலிருந்து வேஷம் போடுவோர்களைத்தான் நான் குறிப்பிட்டேன். <b>நான் வெளிநாட்டிலுள்ள அனைவரையும் குறிப்பிடாமலேயே சிலருக்குச் சுடுகின்றதென்றால் முகமூடிகள் பொருந்தி விட்டதோ??</b>
<i><b> </b>
</i>
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
அகிலன்
உம்மைப்போல் ஒருமையில் பதிலெழுத எனக்கும் தெரியும். ஆனால் அப்படி எழுதி உமைப்போல் தாழ்ந்து போக நான் விரும்பவில்லை. என்னைக் களத்தில் தெரிந்தவர்களுக்குத் தெரியும் நான் சுவிசில் இந்நாட்டு மக்கள் என்னைக் கேவலமாக அழைக்கும் அளவிற்கு நான் வாழவில்லை. அப்படி ஒருவன் அழைக்க முற்பட்டால் அவனை அதற்காக மன்னிப்பு கேட்க வைத்தே தீருவேன். அடுத்தவனைப் பற்றி எழுதும் தங்களைப் போன்றோரே ஒருவரின் கருத்துக்களுக்கு பதில் சொல்ல முடியாது தரக்குறைவாக எழுதி பின் இது பற்றி எழுதுவது நல்ல நகைச்சுவை. <b>நீர் வாழும் நாட்டில் உம்மைக் கேவலமாக அழைத்தும் அங்கு தொடர்ந்து இருப்பதன் மர்மம் என்னவோ?? இதுவும் ஒருவகை முகமூடியே. தயவு செய்து ஏற்கனவே சிலர் தாம் தாயகத்திலிருந்து தான் எழுதுகின்றோம் என்று விடும் ரீல் போல் விட முயல வேண்டாம்.</b>
<i><b> </b>
</i>
Posts: 312
Threads: 4
Joined: Sep 2005
Reputation:
0
வசம்பு என்ன மப்பா.? எங்கு ஒருமையில் எழுதி இருக்கிறது எண்று காட்ட முடியுமா.? முடியவில்லை எண்றால் பொய்யான குற்றச்சாட்டா.??????
நீர் வீரன் தான் ஐயா. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
(லக்கிலுக் சொன்னது. றிப்பீட்டு.)
Posts: 114
Threads: 3
Joined: Jan 2006
Reputation:
0
புலம்பெயர்ந்து வாழும் தமிழ் உறவுகள் மத்தியில் தாம் புலம் பெயர்ந்து வாழ்வதா அல்லது புலத்தில் வாழ்வதா என்பதில் வேறு வேறு கருத்துக்கள் காணப்படலாம். அது அவரவர் மனநிலையைப் பொறுத்தது. ஆனால் இங்கு பகிரப்பட்ட கருத்துக்கள் பலரது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை ஒரு சமூகத்தின் விருப்பு வெறுப்பாகப் பாவித்து எழுதப்பட்ட கருத்துக்களினால் தானே தவிர வேறில்லை. நானே அல்லது வேறு ஒருவரோ புலத்தில் வாழ்வதா அல்லது புலம் பெயர்ந்து வாழ்வதா என்பது எனது தனிப்பட்ட முடிவு. அதனை தடுக்க யாராலும் முடியாது. அதற்காக எனது அல்லது இன்னுமொருவரது சூழலை வைத்து அல்லது மன நிலையை வைத்து அப்படித்தான் மற்றவர்களும் இருப்பார்கள் என்று கூறுவது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளமுடியாது. என்னைப்பற்றிய முடிவு பற்றியே என்னால் கூறமுடியும். இன்று பல புலம் பெயர்ந்து வாழ்பவர்களிடம் இரு கருத்துக்களும் நிலவுகின்றன.
சிலர் தாயகம் சென்று வாழ ஆவலுடன் இருக்கிறார்கள். சிலர் இல்லை நாம் அங்கு செல்லவில்லை. அதைவிட நாம் தமிழருடன் இணைந்து வாழவே விரும்பவில்லை என்று தமிழர்கள் இல்லாத ஒரு சூழலைப்பார்த்து அங்கு வசிக்கிறார்கள். ஆனால் அவர்களின் பிள்ளைகள் தமிழருடன் சேர்ந்து வாழ விரும்புகிறார்கள். இப்படி பல காரணங்கள் காணப்படலாம். புலம் பெயர்ந்து பல மாணவர்கள் தாம் தமது சொந்த தாய் மண்ணிற்கு போய் பணியாற்றவேண்டும் என்று விருப்புடன் இருக்கிறார்கள். இப்படியானவர்களையும் உங்கள் கருத்துக்களால் நீங்கள் காயமடைய வைக்கிறீர்கள். ஆதலால் உங்கள் தனிப்பட்ட கருத்துக்களால் ஒரு சமூகத்தின் வாழ்வை அஸ்தமனமாக்காது தொடர்ந்து வளமான கருத்தாடலைத் தொடர்வது நன்மை பயக்கும்.
<b>
...</b>
Posts: 312
Threads: 4
Joined: Sep 2005
Reputation:
0
சுடர் அதை எல்லாவற்றையும் விடவும் மக்கள் வசதியான சொந்த நாட்டுக்கு போவார்களா மாட்டார்களா.?
:::::::::::::: :::::::::::::::
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
அகிலன்
அது சரி ஜதார்த்த வாதி எண்ற பேர் போதும். BLACK ,PAKKI எண்று நல்ல மரியாதை கிடைக்கிற இடம் உனக்கு சொர்க்கம்தான்.
இது யார் எழுதியது? இப்போது புரிகின்றதா யாருக்கு மப்பு என்று???
<i><b> </b>
</i>
Posts: 312
Threads: 4
Joined: Sep 2005
Reputation:
0
மற்றது வசம்பு நான் ஓடி வந்து பதுங்கியது இங்கிலாந்தின் லண்டனில் தான் ஆனால் கடந்த 4 மாதமாக யாழ்ப்பாணம் வன்னி எல்லாம் திரிந்த பின் இப்போ எனது வியாபார நடவடிக்கைக்காக இன்னும் ஒரு நாட்டில் இருக்கிறேன். இப்போ காலை வேலை.
:::::::::::::: :::::::::::::::
Posts: 361
Threads: 16
Joined: Sep 2004
Reputation:
0
ஊரிலே என்னை -
பள்ளன் பறையன் என்றார்கள்.
குறைந்த சாதி - தள்ளிப் போ
நானும் வெளிநாடு வந்தேன்.
இங்கே என்னை கறுப்பன், பாக்கி
என்றார்கள் - நானும்
முடியட்டும் சண்டை - போகிறேன்
ஊருக்கு என்றிருந்தேன்.
சண்டையும் நின்றது -
சமாதானம் என்றார்கள் - நானும்
கட்டினேன் பெட்டியை
ஏறினேன் விமானம் - எந்தன் நாட்டுக்கு
அகதியாய் வந்தவனை - ஆள் மாறி ஆள்
கேளாத கேள்வி கேட்டார்கள் - இங்கே
எந்தன் நாட்டிலுமா?? - கேளாத கேள்விகள்!!!!!
விடுதலை வரி கட்டினீங்களா?
இல்லைத் தம்பி அவ்வளவு பணம் இல்லை
அங்கே என்ன வேலை? -
கோப்பை பீங்கான் கழுவுறது - சாப்பாட்டுக் கடையில
இங்கே என்ன செய்யிற நோக்கம்?
தெரிஞ்ச வேலை உது தானோ?
எங்களுக்கு இதுக்கு நிறையப்பேர் இருக்கினம் இங்க!
நாட்டுக்கு உங்களால என்ன பயன்?
ம்.... கேளாத கேள்விகள்...
கேட்டால் என்ன செய்வேன்?
''
'' [.423]
Posts: 312
Threads: 4
Joined: Sep 2005
Reputation:
0
ஜதார்த்தமான கவி ஜூட்.
ஆனால் அவர்களும் எங்க போவார்கள் எங்களை தவிர. நாங்கள்தானே எங்களின் எதிர்காலத்துக்கு பொறுப்பு. எங்களின் கேளிகைகளில் நாங்கள் குரைவிடுவதில்லையே. அல்லது கோயில்களைத்தான் விடுகிறோமா.? சாமியா எங்களை காப்பாத்துகிறது.?
எப்படியானாலும் எங்கள் எதிர்காலம் எங்களின் கைகளில்.
Posts: 312
Threads: 4
Joined: Sep 2005
Reputation:
0
நேர்மையாக ஐரோப்பாவில அரசாங்கத்துக்கு 80% மான உண்மையான உழைப்பை வரியாகவும், பில்லுகளாகவும் குடுப்பினம். அதோட வாடகையும் சேத்து குடுப்பினம் . இங்க வெள்ளைக்காறனின் அரசாங்கத்துக்கு குடுக்கிறது கௌரவம் இல்லையா.?
ஆனால் ஊரில காவல் காக்கிறதுக்கு ஏற்படும் செலவாய் கொஞ்சம் கேட்டால் ஒப்பாரி வைப்பினம். எல்லாத்தையும் ஓசிலயே வாங்கின சனம் பாருங்கோ. எங்களுக்கு யார் வீட்டுப்பிள்ளையாவது உழைச்சுபோட்டால் சப்புக்கொட்டி சாப்பிடுவம், எங்களிட்ட காசும், போராட பிள்ளைகளையும் கேக்ககூடாது பிறகு நாங்கள் பொல்லாதவை ஆகீடுவமில்லை.
அப்பிடி ஐரோப்பால வரி செலுத்தாமல் வாழுறம் எண்டு சிலர் சொல்லுறவை அவை கள்ளமட்டை போடுறவையாலதான் இருக்கும் இல்லாட்டா வங்கி மோசடி இல்லாட்டா எங்கட சனத்தை ஏமாத்துறவை.
இல்லாட்டால் வெள்ளைக்காறன் உழைச்சு அரசாங்கத்துக்கு குடுத்தவரியை அரசாங்கத்திட்ட வாங்கி சாப்பிடுறவை, அவைக்கு ஊருக்கு போக எப்பிடி காசு வந்தது எண்டு கேட்டால் அடக்கி வாசிப்பினம்.