Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அரச குடும்பம் ஆண்டியர் மடமான கதை..!
#1
சமகால சமூகமாற்றங்கள் நடவடிக்கைகளை தாங்கிய வாறு இந்த தொடர் வருகிறது. முற்று முழுதாக நகைச்சுவையை கருத்திக்கொண்டு தயாரிக்கப்படுகிறது. சிரிக்கும் வேளை சிந்திக்கவும் தூண்டினால் மகிழ்ச்சியே. முடிந்தவரை பல பாத்திரங்களை உருவாக்கியுள்ளேன்.. இன்னும் பல பாத்திரங்கள் உள்வாங்கப்படும். உறுப்பினர்கள் சம்மதத்துடன் பெயர்கள் பயன்படுத்தப்படுகிறது. இதில் இணைய விருப்புவோர் தாராளமாய் இணையலாம். யாரையும் புன்படுத்தும் நோக்கம் எனக்கில்லை. முடிந்தவரை சிரிக்கவும் ரசிக்கவும் செய்வதற்கே இந்த முயற்சி.. ஆதரவுக்கு நன்றிகள். முடிந்தவரை ஒரு வாரத்தில் ஒரு நாள் அரசசபை கூடும். வாசித்து கருத்தை வைத்து மகிழுங்கள். பாத்திரங்கள் சித்திகரிக்கப்பட்ட முறையில் உடன்பாடு இல்லையெனின் உறுப்பினர்கள் தெரியப்படுத்தலாம் உரிய திருத்தம் செய்ய எப்பொழுதும் தயாராக இருக்கின்றேன். இந்த தொடருக்கு ஊக்கம் தந்த அனைவருக்கும் நன்றிகள். தொடருக்கு முன்னால் பின்னால் என்று காரணமாக இருக்கும் அனைவருக்கும் நன்றிகள்.


<b>அறிமுகம்</b>

மன்னர் ஹரியின் ஆட்சி ஏறியதில் இருந்து கதை ஆரம்பமாகிறது. அதுற்கு முதலானவை தவிர்க்கப்படுகின்றன. (இந்தப்பாகம் கதையில் வரும் பாத்திரங்களை அறிமுகம் செய்வதற்காக உருவாக்கப்பட்டது)

<b>பாகம் 1</b>

மன்னர் சபைக்கு வருகிறார் இது தான் மன்னர் ஹரி முடி சூட்டிய பின்னர் நடைபெறும் முதலாவது அசர ஒன்று கூடல். எல்லோரும் எழுந்து நிக்கிறார்கள். மன்னரிற்கு வாழ்த்து கூறுகிறார் அவையில் இருந்த ஒரு சேவகன்.

<b>சேவகன்1 :</b> மன்னாதி மன்னர்.. இன்னும் புறமுதுகு காட்டாதா.. தோல்வியைக்கண்டிராத.. ஏன் போர்க்களத்தை அறிந்திராத யாழ்களத்தின் மன்னர் ஹரி அவர்கள் வருக வருக.. வாழ்க வாழ்க வாழ்க வாழ்க!!!!!

மன்னர் ஹரி அவையோரிற்கு வணக்கம் கூறி அனைவரையும் அமரச்சொல்கிறார். எல்லோரும் அமர்கிறார்கள். தானும் அமர்ந்து அருகில் இருந்த மந்திரியின் காதலி எதையோ குசுகுசுக்கிறார்.

மன்னர்: மந்தி மந்திரிரி

மந்திரி: மன்னா என்ன பதறுகிறீர்கள்.

மன்னர்: யாரப்பா அந்த சேவகன் றொம்ப நல்லாவே பாராட்டிறார். புதிசாய் ஆட்சியேறிய மன்னர் என்று ஒரு வார்த்தை சொல்லவில்லை.. கேட்பவர்கள் என்னை தப்பாய் நினைக்கப்போகிறார்கள். <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

மந்திரி: கவலை வேண்டாம் மன்னா அவை உறுப்பினர்களை உங்களுக்கு அறிமுகம் செய்யும் நிகழ்வு இருக்கிறது அதில் நானே கூறிவிடுகிறேன்.

மன்னர்: அப்பாடா கவலை தீர்ந்திச்சு.. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

இருவரும் என்ன பேசுகிறார்கள் என்று குடிமக்கள் பிரதிநிதிகளில் ஒருவருக்கு சந்தேகம் வர.. நாங்களும் இங்கால இருக்கிறம் என்று கத்துகிறார். அந்த குடிமகன் யார் என்பதை பின்னால் பாருங்கள். இப்போது சுதாரித்த மன்னரும் மந்திரியும் அசடு வழிகிறார்கள்.

மந்திரி: (கையில் ஒரு ஏட்டை எடுத்து.) மன்னருக்கு அவை பிரமுகர்களை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு நடக்கப்போகிறது. நான் பெயர் கூறி அழைக்க ஒவ்வொருவரும் எழுந்து அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்.

மன்னர்: யோவ் மந்திரி மன்னர் இருக்கட்டும்.. புதிய மன்னர் என்று கூறும் ஐயா.. (இந்த மந்திரி சேவகனோட சேந்திட்டார் போல)

மந்திரி: மன்னா கவலைவிடுங்கள் இதோ பல்டி அடிக்கிறேன்.

மந்திரி: முதலில் நமது புதிய மன்னருக்கு என்னை நானே அறிமுகம் செய்து கொள்கிறேன்.
எனது பெயர் கவிதன் அந்த அரசசபையின் ஒரே ஒரு அறிவுள்ள திறமையுள்ள ஆற்றல் உள்ள அற்பணிப்புள்ள பட்டியல் நீள..

குடிமக்கள் பிரதிநிதி: ஓய் கவிதன் இதை எல்லாம் பின்னாடி வாற குடிமக்கள் பிரதிநிதிக்கு சொல்றதுக்கு இப்ப எதுக்கு சொல்றீர்

மந்திரி: சரி சரி நான் தான் கவிதன் இந்த நாட்டின் மந்திரி. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> (பொறாமை பிடிச்சவங்க என்ர அருமை பெருமையை இப்படி எடுத்துவிட்டாத்தான் உண்டு)

மன்னர்: ஓய் மந்திரி உம்மட வண்டவாளம் தண்டவாளம் எல்லாம் தெரியும் அடுத்தாளை கூப்பிடும் எத்தனை நேரமாய் இதையே ஓதுவீர்.

மந்திரி: உங்கள் சித்தம் என் பாக்கியம் மன்னரே. அடுத்ததாக எங்கள் தளபதி தல அவர்களை அறிமுகப்படுத்திறன்.

தல: வணக்கம் மன்னா.. நான் தான் இந்நாட்டு தளபதி இந்நாட்டில நடக்கிற வீரதீர செயல்களிற்கு சொந்தக்காரன். நானே நானே தானே.... (மந்திரி தளபதியைப்பார்த்து ஒரு வாறு முறைக்க தளபதி அமருகிறார்)

மந்திரி: அடுத்து அறிமுகமாக இருப்பர். புலநாய்களின் நண்பர். புலனாய்வாளர் டண் அவர்கள். இவரது புலனாய்வானது... உலக புலனாய்வு இயந்திரங்களுடன் போட்டி போடுது. எங்கள் நாட்டில் இப்படி ஒரு புலனாய்வாளர் இருப்பது மகிழ்ச்சி. (கொஞ்சம் கனக்கவே ஐஸ் வைப்பம் பிறகு பிரியோசனப்படும் என்று மனதுக்குள் எண்ணுகிறார்.)

டன்: வணக்கம் மன்னா... நன்றி கவிதன். (ரொம்ப ஓவராய் ஐஸ் வைக்கிறீர் எதுக்கென்று தெரியல) மன்னா எனது புலனாய் அறிக்கையின் படி உங்கள் அரண்மனையில் வெகுவிரைவில் கெட்டிமேளம் கொட்ட இருப்பதாய் அறிந்தேன்.............. (இழுக்கிறார்..)

எல்லாரும் முனுமுனுக்கிறார்கள்.

மன்னர் : ஓய் மந்திரி உவரைக்கொஞ்சம் சும்மா அடக்கி வாசிக்கச்சொல்லும் இப்பான் அடிமடியிலையே கையை வைக்கிது..

மந்திரி எழுகிறார் டன் அமர்கிறார்.

மந்திரி: மன்னா அடுத்து வருபவர் சிறுவர் பிரதிநிதி வெண்ணிலா.. எங்கள் நாட்டு சிறுவர்கள் பற்றி இந்த சுட்டியிடம் அறிந்து கொள்ளலாம். குறுக்காக கேள்விகேட்பார்.. குறுக்கெழுத்துப்போட்டி வைப்பார். மூளைக்கு வேலை வைப்பர். பார்த்து பிறகு அவஸ்த்தைப்பட வேண்டி வரும் கவனத்தில் கொள்ளுங்கள்.

மன்னர்: என்ன மந்திரி மானத்தை வாங்கிறீர்.

வெண்ணிலா: வணக்கம் மன்னா நான் தான் சுட்டி வெண்ணிலா.. சுட்டித்தனம் பண்ணும் சுட்டிகளின் சார்பில் அவை வந்திருக்கிறேன். நன்றி வணக்கம்.


மந்திரி: அடுத்ததாக நான் அறிமுகப்படுத்த இருப்பவர்.... எங்கள் அரசசபையின் சட்டத்தரணி.. நித்திலா அவர்கள்...

நித்திலா: வணக்கம் மன்னா... நான் நித்தி என்று அழைக்கப்படும் நித்திலா.. எங்கள் அரசசபை சட்டத்துறையை பொறுப்பெடுத்துள்ளேன். வாழ்த்துக்கள் மன்னா என அமர்கிறார்.

மந்திரி: நன்றி நித்திலா.. அடுத்து அறிமுகமாக இருப்பவர்.. தூயா.. தூயா பபா என்று செல்லமாக அழைக்கப்படும் இவர் தான் எங்கள் கதாசிரியர் பல கதைகளை எழுதி எம்மக்களிடம் பாராட்டுப்பெற்றவர்.

தூயா: வணக்கம் மன்னா. நான் தூயா.. இப்பொழுது.. புலத்துப்புலம்பல்கள் என்ற தொடரை எழுதிக்கொண்டிருக்கிறேன்.. பல்வேறுபட்ட அனுபவங்களையும் கதையாக மாற்றிக்கொண்டிருக்கிறேன். நன்றி வணக்கம்.

மந்திரி: அடுத்து அறிமுகமாக இருப்பவர்.. எங்க ஊருப்பாட்டுக்காரன். பந்தும் கையுமாய்திரிந்தாலும். இளையராஞா தேவா ஏர் ரகுமான் தரதத்தில் பாடல்களை எடுத்துவிடுவார்.

மன்னர்: நிஜமாகவா..??
மந்திரி: சொல்ல மறந்திட்டன் அவர்களின் பாடல்களை வாரி வழங்குவார் என்று சொல்லவந்தன்.

விஸ்ணு: கவிதன் அண்ணா காலை வாருறியளே.... வணக்கம் மன்னா நான் தான் உங்க ஊருப்பாட்டுக்காரன் விஸ்ணு உங்களுக்கு போரடிக்காமல் இருக்க.. சுட்ட பாடல்களை பகிர்ந்து கொள்ள முடியும் தேவைப்பட்டால் கூறுங்கள்.

மன்னர்: நன்றி விஸ்ணு

மந்திரி: மன்னா அடுத்து அறிமுகமாக இருப்பவர் பிரச்சார பிரதிநிதி தூயவன்.

மன்னர்: ஓய் மந்திரி இப்படி எல்லாம் எங்க நாட்டில இருக்கா என்ன..??

மந்திரி: மன்னா உங்களுக்குத்தெரியாது இவரிடம் வாய் கொடுத்தால் தப்பவே முடியாது பிரச்சாரம் பண்ணியே கலைச்சிடுவாங்க.. ஆக்கள.. நாட்டப்பற்றி யாராவது கதைச்சா கதை கந்தல் தான்.

மன்னர்: அப்ப நான்கொஞ்சம் கவனமாய் இருக்கணும் என்றீர்.

தூயவன்: வணக்கம் வந்தனம் மன்னா. சதிகள் நடக்கும் அடுத்த கணம் தடுத்து நிறுத்துவேன். ஓடி ஒழியேன் ஒதுங்கிப்போகேன்.. போர் போர் போர்.. சொற்போர்..

மன்னர்: பாத்து பாத்து உங்கட சொற்போர்.. அப்பாவி மக்களை விட்டு வைக்கட்டும். எதிரிகளோட தொடரட்டும்.
(உங்கட சொற்போர்ல சிக்கியிருப்பவர்கள் அப்பாவிகள் என்று அறிஞ்சன்)

மந்திரி: அடுத்து அறிமுகமாக இருப்பவர் வினித். சினிமாத்துறையின் சிங்கம்.. சினிமாத்துறையை குத்தகைக்கே எடுத்து விட்டார் அப்பப்ப பிரச்சாரத்துறையிலும் களம் இறங்குவார்.

மன்னர்: அரண்மனைக்க எப்படி சினிமா போஸ்டர் வந்தது என்று இப்பான் புரிஞ்சிச்சு.. யாரு அந்த பொண்ணு..??

மந்திரி: மன்னா அது வந்து வந்து.. அழகுராணி அசின்.

வினித்: வணக்கம் மன்னா வணக்கம். எஙகள் மக்களிற்கு பொழுது போக்கும் வேணும் அல்லவா அது தான் சினிமா.. அது தான் வீணாய்ப்போன நான் வினித்தாக மாறி சேவை செய்கிறேன். மன்னர்ளிற்கெல்லாம் சினிமா இல்லை.. அந்த பொண்ணு பற்றிய விசாரணை காணும்.

மன்னர்: மந்திரியின் காதில்.. என்னையா இவரு நமக்கே கட்டளை இடுறார் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> .

மந்திரி: அசினின் தீவிர ரசிகராம் நீங்க அவாவைப்பத்தி விசாரிக்க கோவம் வந்திட்டு.. கீழாழ விட்டிடுங்க..

மந்திரி: அடுத்து அறிமுகமாக இருப்பவர் எங்கள் அருவி.. தகவல் தொழில்நுட்பத்துறையில் இருக்கிறார்.

மன்னர்: தகவல் தொழில் நுட்பமா ??? எதுக்கையா நமக்கு அது

மந்திரி: இன்னும் புறாவிலையும் கழுகிலையும் நில்லுங்கோ.. இவர் புதிய தொழில்நுட்பங்களை நம்மட நாட்டிற்கு அறிமுகப்படுத்துவார்.

மன்னர்: பொறுத்திருந்து பார்ப்பமே

அருவி: வணக்கம் மன்னா நன் அருவி.. உங்களுக்கு என் வாழ்த்துக்கள் அருவி பேசிக்கொண்டு அமர்கிறார்.

தொடரும்..!
<b>அடுத்த பகுதியும் அறிமுகமே</b>
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#2
<b>அவையில் எல்லோரும் ஏதோ முனுமுனுக்கிறார்கள்.</b>

மன்னர்: அங்கே என்ன கூச்சல் அமைதி!! அமைதி!!

"குடி"மக்கள் பிரதிநிதி ஒருவர் தள்ளாடி தள்ளாடி வருகிறார். அவையில் இருந்த ஒரு பெண் பிரதிநிதி முறைக்கிறார்.

மன்னர்: மந்திரி யாரது அவை மரியாதை தெரியாத அந்த நபர் யார்? ஏன் தாமதமாய் வந்திருக்கிறார்.

மந்திரி: (ரகசியமாய் அவை மரியாதையா அப்படி என்றால் என்ன புதுசு புதுசா சொல்றாங்கப்பா) மன்னா இவர் சபையில் ஒரு முக்கியமான நபர் இவர் குடிமக்கள் பிரதிநிதிகளில் ஒருவர். இவர் பொய் முகத்தார்.

மன்னர்: "குடி" மக்கள் பிரதிநிதியில் ஒருவரா..?? பார்க்கவே தெரிகிறது. முகத்தாரே சபைக்கு ஏன் தாமதம்..??

முகம்ஸ்: வணக்கம் மன்னா.. நான் தான் "தீ கிறேரட் முகத்தார்". நமது யாழ்தேவி சே எனது கழுதை காலைவாரி கல்லுக்கொட்டிலுக்குள் தள்ளிவிட்டது அதுதான் லேட் . உங்களுக்கு என் வாழ்த்துக்கள். மன்னாதி மன்னர் புறூஸ்லி சுந்தரர் எங்கள் மன்னர் ஹரி வாழ்க வாழ்க வாழ்க!!

மன்னர்: வாழ்த்துக்கள் இருக்கட்டும் நீர் குடிமக்கள் பிரதிநிதி என்பதால் சபைக்கு குடித்துவிட்டு வரவேண்டும் என்பது அர்த்தமில்லை அடுத்த முறை பார்த்துக்கொள்கிறேன்.

முகம்ஸ்: சோ வாழ்த்துக்கள் என்ற பெயரில பொய் பொய்யா அள்ளிவிட்டும் அந்த மனிசன் குளிரேல்ல.. ம் ம் பாத்திக்கிறன்.

மந்திரி: அடுத்ததாக நாங்கள் அறிமுகப்படுத்த இருப்பது.. "ஒரு யென்டில் அப்பு" அவர் ஒரு குடிமகன் அதைவிட குடிமக்கள் பிரதிநிதி அவர் தான்.. சீ சீ சீ சீ சின்னப்பு..

மன்னர்: இந்த மந்திரிக்கு வேறை வேலையில்லை.. அர்ஜீன் கோவிக்கப்போறர். (மனசுக்குள்)

சின்னப்பு : ஓய் கவி நன்றி மேன். வணக்கம் மன்னா... நான் நான் நான் நான்.. தான் சின்னப்பு குடி குடியைக்கெடுக்கும் என்ற பழமொழியை பொய்யாக்க வந்த குடிமக்கள் பிரதிநிதி. என்னைப்பத்தி நானே சொல்லக்கூடாது பிறர் சொல்வார் கேட்டு அறிந்து கொள்ளும். மன்னர் வாழ்க குடி வாழ்க குடிமக்கள் வாழ்க.!!
<b>
அமர்கிறார் குடிமகன். பெண்கள் பகுதியில் இருந்து ஒருவர் மகிழ்ச்சி பொங்க சின்னப்புவை வியந்து பார்த்துக்கொண்டிருக்கிறார். .. காரணம் சினனப்பு நேராக அரச சபை எப்படி வந்தார் என்ற கேள்வி அவரை குடைந்து கொண்டிருந்தது. அவர் தான் சின்னாச்சி.... முகத்தாரைப்பார்த்து ஒரு பெண்மணி பல்லைக்கடிக்கிறார் அவர் தான் பொன்னம்மா..முகத்தாரின் மனைவி. </b>

<b>குடிமக்கள் பிரதிநிதிகள் கும்மாளமிட்டுக்கொண்டிருக்க.. காவலாளி ஓடி வருகிறார். மன்னரின் நண்பரும் பக்கத்து மாந்தோப்பு இராச்சிய குருவிகள் பறந்து வருகிறார்கள். வந்து அவருக்காய் ஒருக்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்து. தாமதத்திற்கு வருத்தம் தெரிவிக்கிறார்.</b>

மந்திரி: மன்னா அவையில் இருந்தவர்களை அறிமுகப்படுத்தி விட்டேன். இன்று தவிர்க்க முடியாத காரணத்தினால் அவை வராத உறுப்பினர்களை பின்னர் அறிமுகப்படுத்தி வைக்கிறேன். இத்தோடு அறிமுகப்படலம் முடிவடைகிறது. அப்பப்ப புதியவர்களை அறிமுகப்படுத்தப்படும். அரச சபையில் இன்னும் சில உறுப்பினர்களின் அறிமுகம் பின்னால் வரும்.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#3
ஜோரா இருக்கு...சிந்திக்க மட்டுமில்ல சிரிக்கவும் வைப்பீங்க...ம்ம்..தொடர்ந்து எழுதுங்கோ...! வாழ்த்துக்கள்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
அடி சக்கை எண்டானாம் தமிழும் தூள் கிளப்பப்போறா போல கிடக்கு ...........அறிமுக அரச சபையே நல்லா இருக்கும் தொடர் நல்லா இருக்கும் என நினைக்கிறன் ( சா முகத்தார் வீட்டுக்கு வேலை இல்லாமல் போட்டுது பரவாயில்லை)
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
முகம்ஸ் நக்கல் தானே வேணாங்கிறது.. முகத்தார் வீட்டிற்கு கிட்டவும் வராது நம்ம அரசசபை.. நக்கல் பண்ணாமல் முகத்தார் வீட்டை தொடருங்கோ.. எல்லாம் நீங்கள் கொடுத்த தைரியம் தான்.. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#6
ஆரம்பமே அசத்தலாயிருக்கு தமிழ் அக்கா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

எங்க மன்ரின் தங்கையையும் மகள் மழலையையும் சபைக்கு அறிமுகப்படுத்தேல்ல அடுத்த பகுதியில வருவார்களா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

தொடருங்கள் அடுத்த பகுதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறம் (மன்னரின் தங1;கை காசி போன காட்சிக்காக பலர் காத்துக் கொண்டிருக்கினம் 8) <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> )

என்ன இருந்தாலும் மன்னர் ஆரம்பத்திலேயே மந்திரியை மந்தி மந்திரி எண்டு உண்மையான பெயரை சொல்லியிருக்காரே தைரியம் தான் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
. .
.
Reply
#7
ஆகா... தமிழினி அக்கா,அறிமுகமே அமர்களமாயிருக்கு..."அரச குடும்பம் ஆண்டியர் மடமான கதை..." தலைப்பும் வித்தியாசமாய் இருக்கு.... சிரிப்புடன் சிந்திக்கவும் வைப்பீங்க ,,,, தொடருங்கள்... வாத்துக்கள்....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#8
ஆகா தமிழினியும் தொடர் எழுத ஆரம்பித்து விட்டாரா.
முகத்தார் தொடர் போல் இந்த தொடரும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
தொடர்ந்து எழுதுங்கள் தமிழினி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#9
உங்கள் நகைச்சுவை தொடர் நன்றாக உள்ளது தொடர்ந்து தாருங்கள்
<b> .. .. !!</b>
Reply
#10
ஆகா வந்துடங்கப்பா வந்துடாங்கப்பா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அது சரி எப்ப இளவரசி அரன்மனைக்கு வருவா? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#11
ஆகா தொடர், அதுகும் அரச குடும்பம், நல்லா இருக்கே அக்கா தொடருங்க.

மன்னர தான் களத்திலை காணக்கிடைக்குதில்லை, உங்கட சபையிலையாவது வாறரே <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#12
அக்கா அசத்திட்டீங்கள் தொடர்ந்து எழுத வாழத்துக்கள்

அப்புறம் மன்னரின் தங்கையான நீங்களே இப்படியெல்லாம் மன்னரைப் பற்றி சொல்லலாமா? :?: :?: :?: :roll: :roll:


பாவம் மன்னர் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
>>>>******<<<<
Reply
#13
ஆகா அரச குடும்பத்தின் தாண்டவளங்கள் எல்லாத்தையும் தமிழினி தரப்போகின்றா. எல்லோரும் கேட்பதற்கு தயராகுங்கள்.

தமிழினி தொடக்கமே நகைச்சுவையாக இருக்கின்றது. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்

Reply
#14
þо¡ý ¦º¡øÖÈÐ ±ó¾ôÒò¾¢ø ±ó¾ôÀ¡õÒ þÕ츢ñÎ ¦¾Ã¢Â¡..Â째¡ õ........
.....

<img src='http://img423.imageshack.us/img423/5060/sabi40ck4xv.gif' border='0' alt='user posted image'>
Reply
#15
Quote:எங்க மன்ரின் தங்கையையும் மகள் மழலையையும் சபைக்கு அறிமுகப்படுத்தேல்ல அடுத்த பகுதியில வருவார்களா
வருவாங்க வருவாங்க பின்னாடி வருவாங்க <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

Quote:ஆகா... தமிழினி அக்கா,அறிமுகமே அமர்களமாயிருக்கு..."அரச குடும்பம் ஆண்டியர் மடமான கதை..." தலைப்பும் வித்தியாசமாய் இருக்கு.... சிரிப்புடன் சிந்திக்கவும் வைப்பீங்க ,,,, தொடருங்கள்... வாத்துக்கள்....!
நன்றி அனி.. எழுதிப்போட்டுப்பாத்தன் இதை பொறுமையா வாசிக்க முடியுமா என்று.. நினைத்தேன். <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

Quote:ஆகா தமிழினியும் தொடர் எழுத ஆரம்பித்து விட்டாரா.
முகத்தார் தொடர் போல் இந்த தொடரும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
தொடர்ந்து எழுதுங்கள் தமிழினி
முகத்தார் தொடர்போல அற்புதமாய் வராது.. ஏதோ சிரிக்க பழைய நினைவுகளை மீட்ட ஒரு தொடர்.. நன்றி மதன். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

Quote:உங்கள் நகைச்சுவை தொடர் நன்றாக உள்ளது தொடர்ந்து தாருங்கள்
நன்றி ரசிகை.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

Quote:அது சரி எப்ப இளவரசி அரன்மனைக்கு வருவா
நானே இப்பான் தேடிறன் அவா எங்கை என்று வருவா வருவா.. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

Quote:மன்னர தான் களத்திலை காணக்கிடைக்குதில்லை, உங்கட சபையிலையாவது வாறரே
நன்றி குளம்.. இதைப்படிக்கவாவது வரணும்ல.. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

Quote:அப்புறம் மன்னரின் தங்கையான நீங்களே இப்படியெல்லாம் மன்னரைப் பற்றி சொல்லலாமா?
அட நீங்க வேறை அண்ணாவைப்பத்தி தங்கை எடுத்தி விட்டா ஒரு மகிழ்ச்சி தானே..??
:wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Quote:ஆகா அரச குடும்பத்தின் தாண்டவளங்கள் எல்லாத்தையும் தமிழினி தரப்போகின்றா. எல்லோரும் கேட்பதற்கு தயராகுங்கள்.

தமிழினி தொடக்கமே நகைச்சுவையாக இருக்கின்றது. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்
நன்றி றமா.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

Quote:þо¡ý ¦º¡øÖÈÐ ±ó¾ôÒò¾¢ø ±ó¾ôÀ¡õÒ þÕ츢ñÎ ¦¾Ã¢Â¡..Â째¡ õ........
என்ன விது திட்டிறியளா..?? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#16
þÇÅú¢Â¢ý ÍÂõÅÃò¾¢üÌ ¾Â× Ü÷óÐ µ¨Ä «ÛôÀ×õ. þÐ측¸ Å£ðÄ ¿õÀ ¾¡ò¾¡ ¦Ã¡õÀ ¿¡Ç¡ ¸¡òÐì ¸¢¼ì¸¢È¡Õ! Å¢øÖ ´Ê츢Ⱦ Å¢ðÊðÎ, ÒØì¦¸¡ÊÂø ´Ê츢ÈÁ¡¾¢Ã¢ ²¾¡ÅÐ §À¡ðÊ Åí¸ñ½¡ ¿õÀ ¾¡ò¾¡ ±ôÀÊÔõ ¦ƒÂ¢îº¢ÎÅ¡÷! ¡÷ «í§¸? «¨ÆòÐ Å¡Õí¸û þÇÅú¢¨Â!
I don't agree with a damn thing you say, but I will defend to death for your right to say it!
Reply
#17
[quote=Saanakyan]þÇÅú¢Â¢ý ÍÂõÅÃò¾¢üÌ ¾Â× Ü÷óÐ µ¨Ä «ÛôÀ×õ. þÐ측¸ Å£ðÄ ¿õÀ ¾¡ò¾¡ ¦Ã¡õÀ ¿¡Ç¡ ¸¡òÐì ¸¢¼ì¸¢È¡Õ! Å¢øÖ ´Ê츢Ⱦ Å¢ðÊðÎ, ÒØì¦¸¡ÊÂø ´Ê츢ÈÁ¡¾¢Ã¢ ²¾¡ÅÐ §À¡ðÊ Åí¸ñ½¡ ¿õÀ ¾¡ò¾¡ ±ôÀÊÔõ ¦ƒÂ¢îº¢ÎÅ¡÷! ¡÷ «í§¸? «¨ÆòÐ Å¡Õí¸û þÇÅú¢¨Â!
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->



நல்லா இருக்கு அக்கா....அடுத்தது எப்பொ வரும்..? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#18
SUNDHAL Wrote:[quote=Saanakyan]þÇÅú¢Â¢ý ÍÂõÅÃò¾¢üÌ ¾Â× Ü÷óÐ µ¨Ä «ÛôÀ×õ. þÐ측¸ Å£ðÄ ¿õÀ ¾¡ò¾¡ ¦Ã¡õÀ ¿¡Ç¡ ¸¡òÐì ¸¢¼ì¸¢È¡Õ! Å¢øÖ ´Ê츢Ⱦ Å¢ðÊðÎ, ÒØì¦¸¡ÊÂø ´Ê츢ÈÁ¡¾¢Ã¢ ²¾¡ÅÐ §À¡ðÊ Åí¸ñ½¡ ¿õÀ ¾¡ò¾¡ ±ôÀÊÔõ ¦ƒÂ¢îº¢ÎÅ¡÷! ¡÷ «í§¸? «¨ÆòÐ Å¡Õí¸û þÇÅú¢¨Â!
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->



நல்லா இருக்கு அக்கா....அடுத்தது எப்பொ வரும்..? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


ஆமா சாணக்ய அக்கா நல்லா பேசுறா 8)
-!
!
Reply
#19
அக்கி, அருமை அருமை <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> தொடருங்கள். பாரட்டுக்கள் & வாழ்த்துக்கள் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b][size=15]
..


Reply
#20
அக்கா அறிமுகப்படலம் சூப்பர்.
ஆமா அக்கா இனி காசி யாத்திரை படலம் , இளவரசி இளவரசனை தேடிய சுயம்வர காண்டம் எல்லாம் எப்ப அக்கா? அக்கா நல்லாக சிரிக்க வைத்து பழையனவற்றை மீண்டும் ஞாபகப்படுத்தியமைக்கு நன்றி. பழைய இனிய நினைவுகள் தாலாட்டை விட சுகமாக இருக்கிறது. தொடர வாழ்த்துக்கள் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

ஆமா அவைக்கு ஏன் குருவியண்ணா தாமதமாக வந்தவராம்? மலர் அண்ணி விடல்லையாமோ? :roll:
----------
Reply


[-]
Quick Reply
Message
Type your reply to this message here.

Image Verification
Please enter the text contained within the image into the text box below it. This process is used to prevent automated spam bots.
Image Verification
(case insensitive)

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)