Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தெரியாத பாதை தெளிவானபோது
சந்தியா Wrote:[quote=Niththila]நன்றி சாத்திரி அங்கிள் அடுத்த பகுதி எப்ப போடுவீங்க[/quote




ம்;ம் நித்திலாக்காவின் கேள்வி தான் என்னுடையதும் ஆவலாக உள்ளோம் தங்கள் கதையைப் படிக்க


எனக்கும் இதே கேள்வி தான் சாத்திரி. அடுத்த தொடரை படிக்க ஆவலாய் உள்ளோம். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

Reply
கதை நல்லாப் போகுது.. வாழ்த்துக்கள்....! சரி பொறுத்திருந்து பாக்கிறம் ... எப்ப சொல்லுவார்.. எப்படி சொல்லுவார் எண்டு ...:wink: அடுத்த தொடரையும் பார்க்க ஆவாலாய் இருக்குறம் .... சீக்கிரம் எழுதி போடுங்க,..... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
பிரான்சின் பாரிஸ் விமான நிலையத்தில் ஊருக்கு போவதற்கு தயாராக சாந்தி ஒரு சிறிய பையுடன் அவளை வழியனுப்ப சிறியும் சிவாவும் வந்திருந்தனர். வாங்கோ போடிங்பாஸ் எடுத்திட்டு வந்த நிண்டு கதைப்பம் பிறகு சனம் கூடிடும் என்று சிவா சாந்தியை அழைத்து போனான்.

சாந்தியையும் சிவாவையும் தனியே கதைக்க விட்ட விட்டு சிறி ஒரு பக்கமாக வந்து நின்று அங்கு வரிசையாக நிறுத்தி வைத்திருந்த விமானங்களை வேடிக்கை பாத்து கொண்டு நிண்டான்;.வழைமையாக வளவளவென்று கதைக்கும் சிவாவும் சாந்தியும் அன்ற கதைக்க வார்த்தைகள் வராமல் வசனங்களை தேடித் தேடியே கதைத்தனர்.

சாந்தி புறப்படும் விமானத்திற்கான உள்நுளைவு அனுமதி ஒலி பெருக்கியில் அறிவிக்கபட்டதும் சாந்தி சிவாவிடம் சரி சிவா நான் போக போறன் நேரமாயிட்டுது. நீஙகள் இதுவரை எனக்கு செய்த உதவிகளிற்கு எல்லாம் வெறும் வாயாலை நன்றி என்று சொல்லி போட்டு போக எனக்கு மனம் இல்லை. எண்டாலும் என்னாலை அதைத்தான் இப்ப செய்ய முடியும் என் வாழ்நாளில் உங்கடை உதவியளை மறக்கமாட்டன்:.

சிறி எங்கை காணெல்லை கூப்பிடுங்கோ சொல்லிட்டு உள்ளை போறன்.என்ற சிறிய விசும்பலுடன் கூறிகொண்டாலும் இதுவரை ஊருக்கு போக வேண்டும் என்கிற எண்ணத்தில் இருந்தவளிற்கு ஏனே இப்போது சிறிய தடுமாற்றம்.

சரி சரி அழாதையுங்கோ இதென்ன குழந்தை பிள்ளை மாதிரி இப்ப என்ன நான் ஊருக்கு வருவன் தானே அப்ப சந்திக்கலாம் தானே அந்தா சிறியும் வாறான். சரி நேரமாச்சு நீங்கள் போட்டு வாங்கோ என்ற சாந்தியை தேற்ற முயன்ற சிவா. சிறியும் அருகே வந்து சாந்தியிடம் என்ன நேரமச்சு அறிவிக்கிறாங்கள் சரி சந்தோசமா போட்டு வாங்கோ மறக்காமல் இடைக்கிடை கடிதம் போடுங்கோ என்ன என்றான்.

சாந்தி தனது கை பையை தூக்கி கொண்டு சரி போட்டு வாறதெங்கை போறன் கட்டாயம் உங்கடை இரண்டு பேரின்ரை வீட்டையும் போவன்.போய் சேந்த உடைனை போன் பண்ணுறன் பிறகு ஊருக்கு போனால் கடிதம் தான் போடலாம்.கட்டாயம் போடுறன்.யாரை மறந்தாலும் உங்கள் இரண்டு பேரையும் மறக்கமாட்டன்.

என்றவாறு புறப்பட்ட சாந்தியிடம் சாந்தி ஒரு நிமிசம் என்றவாற சிவா ஒரு கடிதத்தை நீட்டினான்.என்ன உங்கடை வீட்டை குடுக்க வேணுமே என்று கேட்ட சாந்தியிடம். இல்லை சாந்தி இது உங்களுக்குதான் எழுதினனான். நீங்கள் ஆறுதலாய் பிளேனுக்கை இருந்து படிச்சு பாருங்கோ சரி போட்டு வாங்கோ என்று சொல்லி அந்த கடிதத்தை அவளின் கையில் திணித்து விட்டு போய் கொண்டிருந்த சாந்தி மறையும்வரை கையசைத்து கொண்டிருந்தான்.

கையசைத்து கொண்டிருந்த சிவாவிடம.; டேய் சாந்தி போய் கன நேரமாச்சு இன்னுமேன் கையை அசைச்சு கொண்டு நிக்கிறாய். அடசே நானும் ஏதோ தமிழ்படங்களிலை வாற மாதிரி எயா போட்டிலை வைச்சு கடைசியிலை சாந்தி அய் லவ் யுயு........எண்டு கத்த அவாவும் படியாலை இறங்கி ஓடிவந்து உன்னை கட்டி பிடிக்க அதை நான் பாக்கலாமெண்டு அரை நேர லீவு வேறை போட்டிட்டு வந்தன்.

(அப்பிடி நடந்திருந்தா நானும் இதோடை கதையை முடிச்சிருப்பன்)

நீயென்னடா எண்டா கடிதத்தை எழுதி அதுவும் பிளேனுக்கை படிக்க சொல்லி குடுத்து விட்டிருக்கிறாய். பிளேனுக்கை பொழுது போக்க படிக்கதான் பேப்பர் குடுப்பாங்களே? பிறகேன் உன்ரை கடிதம் என்று சரித்தாவாறே கூறிக்கொண்டு சரி வா போவம் என்றபடி நடந்த சிறியிடம்.

சிறி நீயும் என்னை புரிஞ்சு கொள்ளேல்லை அதுதான் சிறிக்கிறாய். எற்கனவெ ரவியாலை சரியா பாதிக்கப்பட்ட சாந்திக்கு தானாகவே கலியாணம் எண்டாலோ ஆண்கள் எண்டாலோ ஒரு வெறுப்பு வந்திட்டிது அது பலதரம் நான் அவளோடை கதைக்கேக்கை கவனிச்சிருக்கிறன்.

நானும் இப்ப போய் நான் காதலிக்கிறன் எண்டு சொன்னா எல்லா ஆம்பிளையளும் இப்பிடித்தான் பெண்ணெண்டா உடைனை கலியாணமும் மற்ற தேவையளையும் தான் பெண்ணிட்டை எதிர்பாக்கினம் எண்டு ஆண்களைப்பற்றி ஒரு பொதுவான அபிப்பிராயம் வந்திடும்.அதோடை நான் இவ்வளவு காலமும் செய்த உதவியளாலை ஏதோ தன்னிலை ஒரு அனுதாபதம் வந்துதான் அப்பிடி சொல்லுறன் எண்டும் நினைக்கலாம்.

அதாலை தான் அவளுக்கும் ஒரு குறிப்பிட்ட காலஅவகாசம் குடுத்திருக்கிறன் மன காயங்களிற்கு காலம்தான் சரியான மருந்து காலம் கட்டாயம் அவள் மனதையும் மாத்தும். அப்ப அவளா என்னட்டை வருவாள் அப்பிடி இல்லாட்டியும் கூட பரவாயில்லை. இது என்ன உலகத்தின் இறுதி சுழற்சியா??இல்லை தானே.

என்ற கூறி கொண்டு போன சிவாவை சிறி பாத்து சரி சரி பகிடிக்குதான் சொன்னனான் அதுக்கு போய் நீ இப்பிடி தத்துவம் எல்லாம் கதைப்பாய் எண்டு நினைக்கேல்லை காதலிச்சா கவிதைவரும் எண்ட கேள்விப்பட்டிருக்கிறன் ஆனால் தத்துவமும் வருமெண்டு இப்பதான் தெரியிது என்ற சிறியை செல்லாமாய் அடிக்க சிவா துரத்த அப்படியே வீடு போய் சேர்ந்தார்கள்.

விமானத்தில் ஏறி தனது இருக்கை இலக்கத்தை சரி பார்த்து இருந்து கொண்ட சாந்தி தனது பாது காப்பு பட்டியை அணிந்து கொண்டதும் அங்கு சிறிய திரையில் போய்கொண்டிருந்த முதலுதவி பாதுகாப்பு பற்றிய விளக்கங்களைகூட பாக்க விருப்பம் இல்லாதவளாய் சிவா அப்படி என்ன தான் தனக்கு எழுதியிருப்பான் அதை படித்துவிட வேண்டும் என்கிற அவாவில் அவசரமாக தனது கைப்பையை திறந்து சிவா குடுத்த கடிதத்தைதிறந்து பிரித்தாள்

Arrow Arrow
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
கமராண்ணாவின்ர கதையில கில்லி வாசனையடிக்குது..
:?:
8
Reply
கமரண்ணா ? கில்லி வாசனை அப்பிடியெண்டா என்ன தயவு செய்து விளக்கவும் விளங்கவில்லை மற்றபடி உங்கள் விமர்சனங்களை முன்பே கூறியது போல தாராளமாக முன் வைக்கவும் புரியாத மொழியில் எழுதுவதை விட விமர்சனம் மேலல்லவா??
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
<b>அதொண்டும் இல்லை வாங்கிக் குடுதவங்கள் 8ம் வகுப்பு அண்ணாக்கு பழசா வாங்கிக் குடுதுட்டாங்கள். அதான் புசத்துறார்.</b>

சாத்திரியார் உங்கட கதையில சீரியலில வாறமாதிரி ஒரு வில்லி இல்லையே ஏன்.?

சஸ்பண்ஸ் வைக்காமல் எழுதுங்கோ சாத்திரியார் கதை சூடுபிடிகேக்க கவுத்து விட்டீங்கள். :evil:
:::::::::::::: :::::::::::::::
Reply
சாத்திரி கதை விறுவிறுப்பாக போகின்றது. அந்த கடிதத்தை படித்தவுடன் சாந்தி அடுத்த பிளைட்டில் திரும்பி வருவாவ :roll: ? அடுத்த தொடரை எதிர்பார்க்கின்றேன்.

Reply
சாத்திரியாரே.. நல்லாய் இருக்கு சிவா எடுத்தமுடிவு நல்லாய் இருக்கு. . சாந்தி இலங்கை போய் சேர்வாவா இல்லை.. விமானம் பறகக முதல் இறங்கீடுவாவா ஆவலுடன். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
நமது சுகுமாரனா ?
Reply
ஊமை Wrote:நமது சுகுமாரனா ?

ஊமை நீங்கள் மாறி இங்கே பதில் அளித்து விட்டீர்கள். உண்மையில் நீங்கள் அவுஸ்திரேலியாச் செய்திகளில் பதில் அளிக்கவேண்டும்
,
,
Reply
<span style='font-size:25pt;line-height:100%'>அன்புடன்: சாந்திக்கு

கடிதத்தை தொடருமுன் முதலில் உங்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். காரணம் இக்கடிதத்தில் நான் எழுதியிருக்கும் விடயத்தில் உங்களிற்கு உடன்பாடு இல்லாமலிருந்தால் நீங்கள் தயவுசெய்து என்னை தப்பாய் நினைத்துகொள்ளகூடாது. அல்லது என்னை போலவே சில நேரம் உங்கள் சிந்தனையும் இருந்திருந்தால் அது இருவருக்குமே மகிழ்ச்சிதான் என்ன குழப்புகிறேன் என்று யோசிக்கிறீர்களா? தொடர்ந்து படியுங்கள்.

சாந்தி நான் உங்களை விரும்புகிறேன் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன். அதுவும் எனது மற்றும் உங்கள் வீட்டாரினதும் முக்கியமாக உங்களின் புூரண சம்மதத்துடன்.இது நான் திடீரென ஏதோ உங்கள் மீது ஏற்பட்ட அனுதாபத்திலேயோ அல்லதுஇதுவரை நாள் உங்களுடன் பழகியதால் ஏற்பட்ட வெறும் இன மன கவர்ச்சியிலேயோ எடுத்தமுடிவல்ல.

பலநாட்கள் பலதடைவை நன்றாக யோசித்து எடுத்தமுடிவுதான். ஆனால். ஆறுதலாய் யோசித்து எடுத்த முடிவை அவசரப்பட்டு தெரிவித்துவிடாமல் ஆறுதலாய் அதுவும் இப்போது தெரிவிப்பதற்கு பல காரணங்கள் உண்டு.என்னைப்பொறுத்தவரை நீங்கள் ரவியை திருமணம் செய்ததென்பது உங்களையேயறியபமல் அது உங்கள் வாழ்க்கைப்பாதையில் நடந்ததொரு விபத்தே .

அந்த கணங்கள் ஒவ்வொன்றின் ரணங்களும் இன்னும் முழுதாய் மாறவில்லையென்பதும் எனக்கு தெரியும்.மனதின் காயங்களிற்கு காலமே சிறந்தமருந்து.இந்த உங்கள்ஊர் நோக்கிய பயணம் உங்கள் குடும்பத்தினருடனான சந்திப்பு என்பன உங்களை அந்த நினைவுகளிலிருந்து நிச்சயம் மீட்டெடுக்கும்.

அப்போது நீங்கள் உங்கள்குடும்பத்தாருடனும் கதைத்து நீங்களும் யோசித்து ஒரு நல்ல பதிலை தாருங்கள்.அதற்காக நானும் வழைமையாக காதலில் சொல்லப்படும் பொய்களைப்போல காலமெல்லாம் காத்திருப்பேன் என்று சொல்லவில்லை கொஞ்சம் நடைமுறை வாழ்க்கையையும் யோசித்து உங்களிற்காக ஒரு வருட அவகாசம் தருகிறேன்.

இந்த ஒருவருட அவகாசம் உங்களிற்கு நன்றாக யோசித்து முடிவெடுக்க போதுமானது என்று நினைக்கிறேன்.நீங்கள் சம்மதித்தால் உண்மையில் நான் அதிஸ்ர சாலி ஏனெனில் உங்களைப்போல ஒரு வேறு பெண் எனக்கு மனைவியாக கிடைப்பார்களா என்பது சந்தேகமே.

இனி இதைப்பற்றிய முடிவு உங்களின் கைகளில்தான். நீங்கள் சம்மதித்தால் நாங்கள் புதியவாழ்வை ஆரம்பித்து ஒரு புதிய பாதையில் இணைந்து செல்லலாம். இல்லை சம்மதம் இல்லையென்றால் என்ன செய்வது கொஞ்சம் கவலைதான். ஆனாலும் என் இதயதுடிப்பு உள்ளவரை என் மூளையின் ஞாபக மடிப்புகளில் ஏதோ ஒரு மடிப்பில் உங்களுடன் பழகிய ஞாபகங்களை பதிந்து அவ்வப்போது அவற்றை மீட்டெடுத்து சந்தோசபட்டுக் கொள்வேன்.

முக்கிய விடயம் எனக்காக நான் செய்த உதவிகளிற்காகவோ மற்றும் நான் தவறாய் நினைத்து மனமுடைந்து விடுவேன் என்கிற எந்தவித வற்புறுத்தலுமின்றி நீங்களாக சுயமாக எடுக்கும் எந்த முடிவையும் நான் ஏற்று கொள்வேன். அதுவரை வழைமை போல நாங்கள் தொடர்புகளை பேணலாம். ஊர் போய் சேர்ந்ததும் கடிதம் போடவும்.

மற்றபடி உங்களிற்கு என்னை திருமணம் செய்து கொள்ள பிடிக்காவிட்டாலும் கூட இப்படியொரு கடிதம் உங்களிற்கு எழுதியது தவறாயின் இறுதியாகவும் மன்னிப்பு கேட்டு கொண்டு முடிக்கிறேன்

அன்புடன்

சிவா</span>
கடிதத்தை படித்து முடித்த சாந்தி அப்படியெ சிறிது நேரம் கண்களை மூடியவாறு யோசித்தாள். இதுவரை நாளும் ஊருக்கு போக வேண்டும் என்று பிவாதமாய் இருந்தவளிற்கு இறுதியாக விமான நிலையத்தில் போகலாமா? விடலாமா? என்கிற தடுமாற்றம் வந்தது ஏன்???சிவா எழுதியது போல எனக்கு அவனில் காதல் இருந்ததா?

தனது வகுப்புகளிற்கு கூட போகாமல் ஓடியோடி எனக்காக உதவியபோது நான் ரவியையும் சிவாவையும் எனது மனதராசில் எத்தனை தடைவை நிறுத்து பாத்:திருப்பேன். அப்போதே நான் சிவாவை மனதில் நிறுத்தி பார்க்க தொடங்கி விட்டேனா??

இப்படியே சாந்திக்குள்ளும் பல விடை தெரியாத கேள்விகள். எதற்கும் ஊருக்கு போய் ஆறுதலாய் பாக்கலாம் எண்று எண்ணியவள் அவன் கடிதத்தை மீண்டுமொரு முறை படிக்கதொடங்கிய போது விமானம் பிரான்ஸ் நாட்டின் தரையை விட்டு மேலெழும்பி கொண்டிருந்தது. Arrow Arrow


உறவுகளே சாந்தி சிவாவுடன் சேர்ந்து வாழ்ந்தாளா?? இல்லையா என்பதற்கு அடுத்த தொடரில் விடை கிடைத்து விடும்
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
சாத்திரியண்ணா கதையின் முடிவு வரமுன்னம் இங்கை கனபேரின் மூச்சு நின்றுவிடும்போலிருக்கு. விரைவில் முடிவைத் தாங்கோ.
கதையோட்டம் எழுத்து எல்லாம் நன்றாகவும் யதார்த்தத்துடன் ஒட்டியதாகவும் இருக்கிறது. வாழ்த்துக்கள். விரைவில் முடிவை எதிர்பார்த்தபடியிருக்கும் கள உறவுகளுடன் நானும்.
:::: . ( - )::::
Reply
அடுத்த பாகத்தை மிகககக ,,,,,, விரைவில் எதிர்பார்க்கின்றேன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
Quote:ஆனாலும் என் இதயதுடிப்பு உள்ளவரை என் மூளையின் ஞாபக மடிப்புகளில் ஏதோ ஒரு மடிப்பில் உங்களுடன் பழகிய ஞாபகங்களை பதிந்து அவ்வப்போது அவற்றை மீட்டெடுத்து சந்தோசபட்டுக் கொள்வேன்.

அழகான வரிகள் சாத்திரி அண்ணா..
ரொம்ப விறுவிறுப்பா இருக்கு..அடுத்த தொடர் எப்போ போடுவீர்கள்..அதை சொல்ல வில்லையே...சரி.. விரைவில் எதிர் பார்க்கிறேன்.. :roll:
..
....
..!
Reply
சாத்திரியார், பல பகுதிகளை படிக்காமல் விட்டுவிட்டேன். இன்று தான் படித்தேன். நன்றாக உள்ளது. விரைவில் அடுத்த பகுதியை எழுதுங்கள்.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
ம்.... கதை முடியிதா சாத்திரியாரே.. நான் நினைச்சன் பிளேன்ல இருந்து ஓடி வருவாங்க என்று.. சரி பாப்பமே. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

aswini2005 Wrote:சாத்திரியண்ணா கதையின் முடிவு வரமுன்னம் இங்கை கனபேரின் மூச்சு நின்றுவிடும்போலிருக்கு. விரைவில் முடிவைத் தாங்கோ.
கதையோட்டம் எழுத்து எல்லாம் நன்றாகவும் யதார்த்தத்துடன் ஒட்டியதாகவும் இருக்கிறது. வாழ்த்துக்கள். விரைவில் முடிவை எதிர்பார்த்தபடியிருக்கும் கள உறவுகளுடன் நானும்.
ஹாய் அஸ்வினி அக்கா நலமா என்ன கனநாளாய் காணலை.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
சாந்தி ஊருக்கு போனதன் பின்னர் சில கடிதங்கள் சிவாவற்கு வந்தன சிவாவும் வழைமைபோல பதில் அனுப்பியிருந்தான்; அந்த காலகட்டத்தில்தான் மாபெரும் அவலமான யாழ்ப்பாண் இடப்பெயர்வு நடந்தது...

அந்த இடப்பெயர்வின்போது சிவாவின் குடும்பமும் இடம்பெயர்ந்து வன்னிவந்து பின்னர் கொழும்பிற்கு வந்து விட்டனர். அந்த இடப்யெர்வின் பின்னர் சாந்தியிடமிருந்து சிவாவிற்கு எந்த விதமான தொடர்புகளும் கிடைக்கவில்லை

சிவாவும் ஒவ்வொரு நாளும் கடிதப்பெட்டியை திறக்கும்போதெல்லாம் சாந்தியின் கடிதம் வந்திருக்காதா என்கிற ஒரு எதிர் பார்ப்புடன் திறந்து ஏமாந்து கொண்டிருந்ததே வாடிக்கையாகி விட்டது.

சில நேரங்களில் சிவாவின் கற்பனைகளும் வேறு விதமாக ஓடியது சாந்திக்கு ஏதாவது நடந்திருக்குமா??என்று ஒருவித தவிப்பு அவனுக்குள் அதனால் ஒவ்வொரு நாளும் தமிழ் செய்திகள் மற்றும் பத்திரிகை என்பனவற்றையெல்லாம் தவறாமல் பார்த்து வந்தான்அனாலும் சிவாவிற்கு ஒரு நம்பிக்கை சாந்தி எங்கிருந்தாவது தான்னிடம் தொடர்பு கொள்வாள் என்கிற நம்பிக்கை மட்டும் அவனிடமிருந்தது.

அவனது நம்பிக்கை வீண்போகவில்லை சுமார்பத்து மாதங்கள்கழித்து அன்று சாந்தியிடமிருந்து ஒரு கடிதம் அவனுக்கு வந்திருந்தது. நடுங்கும்கைகளுடன் அக்கடிதத்தை பிரித்தான்


<span style='font-size:25pt;line-height:100%'>அன்புள்ள சிவாவிற்கு

நீண்ட நாட்களின் பின்னர் நான் எழுதும் நீண்டகடிதமிது. எனக்குத்தெரியும் நீங்கள் எனது கடிதத்தை எதிர்பார்த்து காத்திருந்திருப்பீர்கள் ஆனால் என்ன செய்வது எங்கள் ஊர்பிரச்சனைகள் அறிந்திருப்பீர்கள் தானே. அந்த இடப்பெயர்வினை பற்றி நான் இங்கு எழுத்திலோ ஏன் வார்த்தைகளால் கூட விபரிக்க முடியாது சிவா. அப்படியொரு அவலம்.பிணஊர்வலங்கள் பார்த்திருப்பீர்கள் அன்று நாங்களே பிணங்களாய் ஊர்வலமாய் போனோம்.

எனக்கு இதுவரை நடந்த பிரச்சனைகளின்போதெல்லாம் நான் கடவுள் இருக்கிறார் பார்த்து கொள்வார் என்று அமைதியாய் இருந்திருக்கிறேன் ஆனால் அன்று அந்த அவலத்தை பாத்து கொண்டிருந்தவரின் பெயர் கடவுள் என்றால் அப்படியொரு கடவுள் தேவையில்லை. எல்லாருமே கையில் அகப்பட்டதை எடுத்து கொண்டு மாற்று துணிகூட எடுத்து கொள்ளாமல் நாங்களும் மற்றவர்களை போலவே அவசர அவசரமாய் எல்லாவற்றையும் விட்டு விட்டு வன்னி போவதற்காய் கிளாலி கரைக்கு வந்தோம்.

ஆனால் நான் அந்த அவசரத்திரலும் நான் நீங்கள் கடைசியாய் விமான நிலையத்தில் தந்த கடிதத்தையும் மீண்டும் உங்களிடம் வரும் நோக்குடன் எனது கடவு சீட்டையும் மறக்காமல் பத்திரமாய் எடுத்து கொண்டே வந் தேன். அங்கே கிளாளி கரையில்தான் இன்னொரு பயங்கரம் நடந்தேறியது அதை நினைத்தால் இன்னமும் எனது இதயம் நடுங்குகிறது. ஏதுமின்றி அகதிகளாய் அபலைகளாய் ஓடிய மக்களைநேக்கி இரக்கமேயில்லாத இராணுவத்தினர் செல்லடித்தும் ஆகாயத்திலிருந்து கெலிகள் மூலமும் சுடதொடங்கி விட்டனர்.

எங்கும் ஒரே மரண ஓலம் மனித அவலம் நீலமாய் இருந்த கடல் எம்மக்களின் இரத்தத்தால் சிவப்புகடலாகி விட்டது.நாங்கள் எப்படியோ உயிர்தப்பிவிட்டோம். அன்று மாலை வரை ஒரு பற்றை பகுதியில் மறைந்திருந்து விட்டு மாலையானதும் அங்கு வந்த போராளிகளின் உதவியுடன் ஒரு வள்ளத்தில் ஏறி வன்னிக்கு வந்து விட்டோம்.அன்று அந்த நிகழ்ச்சி என்னை சரியாகவே பாதித்து விட்டது அன்று எம்மக்கள் பட்ட துன்பத்தை பார்த்போது அதற்கு முன்னால் நான் பட்ட துன்பங்கள் எல்லாம் வெறும் தூசிக்கு சமானம்.

அதனால் நானும் உங்களிடம் வருவதற்காய் பத்திரமாய் எடுத்து வந்த எனது கடவுசீட்டை அன்று அந்த கிளாலி கடலிலேயே கிழித்து கரைத்து விட்டேன்.ஆம் எனது இனம் பட்ட இப்படியொரு துன்பத்தை பார்த்தபின்னும் நான் வெளிநாடு வந்து உங்களுடன் உல்லாசமாய் எனது காலத்தை கழிக்க எனக்கு மனம் இடம் கொடுக்கவில்லை அதற்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.

வன்னி வந்த பின்னர் ஏற்கனவே நேய்வாய் பட்டிருந்த எனது தாயாரும் இறந்து விட்டார். தங்கை கனடா போன விடயம் உங்களிற்கு எற்கனவே தெரியும்தானே.அம்மாவின் மரணத்தின் பின்னர் அப்பாவும் ஏதோ இறுதிகாலத்தை கடத்தினால் போதும் என்கிற நிலைமையில் வழ்ந்து கொண்டிருக்கிறார்.இந்த பிரச்சனைகளாலேயே உங்களிற்கும் கடிதம் போட முடியவில்லை. நீங்கள் எனக்கு எனது விருப்பத்தை தெரிவிக்க எனக்கு தந்த ஒரு வருட கால கெடு முடைவடைகிற காலம் நெருங்கி விட்டதால் வன்னியின் ஒரு காட்டுபகுதியில் போராளிகளின் பயிற்சி பாசறையில் இருந்து இக்கடிதத்தை எழுதுகிறேன்.

ஆம் சிவா இப்போ நான் எனது மக்களிற்காய் போராட பயிற்சி எடுத்து கொண்டிருக்கும் ஒரு போராளி. எனது பயிற்சி இன்னும் சில மாதங்களில் முடிவடைந்து நான் இப்பபோது தொடர்ச்சியாய் நடந்து கொண்டிருக்கும் ஜெயசுக்குறு களத்திற்கு போய்விடுவேன் பின்னர் உங்களுடன் தொர்பு கொள்ளமுடியாமல்போய்விடலாம். இதுவே எனது இறுதிக்கடிதமாகவும்கூட இருக்கலாம். எனவே உங்கள் நல்ல குணத்திற்கு என்னைவிட ஒரு நல்ல பெண் கிடைப்பாள் எனவே நீங்கள் திருமணம் செய்து நல்லபடியாக சந்தோசமாக வாழுங்கள் அதுவே எனது விருப்பம்.

எனது இந்த முடிவால் நீங்கள் என்னில் கோபிக்கமாட்டீர்கள் என நினைக்கிறேன் எனது நிலைமை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன்.நீங்கள் திருமணமாகி உங்கள் மனைவி பிள்ளைகளுடன் இங்கு வரும்நாளை எதிர்பார்த்து உயிருடனோ அல்லது இந்த மண்ணிறகாய் உயர்நீத்த ஆயிரமாயிரம் மாவீரர்களின் கல்லளைகளினுடே ஒரு கல்லறையாகவோ காத்திருப்பேன். இதுவரை காலமும் தெரியாத பாதையில் பயணித்து கொண்டிருந்த நான் இப்போது தான் தெளிவான பாதையில் பயணிக்கிறேன்

அன்புடன் உங்கள் நினைவுகளை உயிருள்ளவரை சுமந்து நிக்கும் சாந்தி</span>
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
உறவுகளே கதை இறுதி கட்டத்தையடைந்து விட்டது அடுத்த பாகத்தில் கதை முடிவடைந்து விடும் இதுவரை எனக்கு உற்சாகம் தந்து இக்கதையை தொடர்ந்து எழுத தூண்டிய அனைத்து உள்ளங்களிறகும் நன்றி கூறிக் கொள்வதுடன் சாந்தி இப்போ எங்கே சிவா என்ன செய்கிறார் என்று அறிய உங்களிற்கு விருப்பமா?? அடுத்த பாகத்தில் அவர்கள்பற்றி சிறிய விழக்கங்களுடன் கதையை முடிக்கிறேன்
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply
கதை என்ன உண்மைச் சம்பவமா சாத்திரியார்,..?? பலபேருடைய சுவாசம் ஊருகாய் திரும்பிய கருப்பொருள் தெறிக்கிறதே.....????
::
Reply
கதையின் கரு உண்மை சம்பவம் அதை எனது கற்பனைகளுடன் கலந்து எழுதினேன் தலை எனது எல்லா கதைகளும் அப்படியானவையே
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
Reply


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)