02-12-2006, 06:11 AM
<span style='color:brown'><b>பிளவுக்குக் காத்திருக்கும் ஜே.வி.பி. </b>
சிறிலங்கா உள்ளுராட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது என்று ஜே.வி.பி. முடிவெடுத்துள்ள நிலையில் அக்கட்சியில் பாரிய பிளவு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
உள்ளுராட்சித் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து போட்டியிடலாம் என்ற யோசனையை ஜே.வி.பி.யின் மத்திய குழுவின் சோமவன்ச அமரசிங்க, விமல் வீரவன்ச, நந்த குணதிலக்க மூவரும் முன்வைத்துள்ளனர்.
இம்மூவரும் முன்னதாக மகிந்தவுடன் நடத்திய ஆலோசனையில் கூட்டாக தேர்தலைச் சந்திக்க ஒப்புக்கொண்டதாகவும் அது தொடர்பில் மத்தியக் குழுவின் ஒப்புதலைப் பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
தீர்மானத்தின் மீது பேசிய ஜே.வி.பி.யினர் கட்சியுடன் செய்து ஒப்பந்தத்துக்கு நேர் எதிராக மகிந்த அரசாங்கம் செயற்படுகிறது. அதனால் உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிட வேண்டுமானால் பெரும் எண்ணிக்கையிலான ஆசனங்களை கேட்டுப் பெற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து 26 உள்ளுராட்சி சபைகளில் ஜே.வி.பி.யின் சின்னத்தின் கீழ் சுதந்திரக் கட்சியினருடன் இணைந்தும் இதர பகுதிகளில் மூன்றில் ஒரு பங்கு ஜே.வி.பி. வேட்பாளர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சின்னத்திலும் போட்டியிடுவது என்றும் இறுதியாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் ஜே.வி.பி.யின் இந்தத் தீர்மானத்தை மகிந்த ராஜபக்ச நிராகரித்தமையால் தனித்துப் போட்டியிட அக்கட்சி முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில் மத்தியக் குழுவின் தீர்மானத்தை நிராகரித்து ஜே.வி.பி.யின் சில மூத்த தலைவர்கள் சுதந்திரக் கட்சியுடன் இணைய உள்ளதாகவும் இது தொடர்பான பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் சுதந்திரக் கட்சியினர் கூறுகின்றனர்.
இதனிடையே சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் தனது வலுவை உருவாக்கிக் கொள்ளும் வகையில் மேலும் சில மாதங்களுக்குத் தேர்தலை ஒத்திவைக்கும் யோசனையில் மகிந்த இருப்பதாகவும் கூறப்படுகிறது</span>
<i><b>தகவல் மூலம் - புதினம்.கொம்</b></i>

"
"
"